தற்குறி: அந்த கலெக்டர் திமுக ஆளு!
:- அதெல்லாம் நீ சொல்ல வேண்டிய அவசியமே இல்லடா…
🗣️ : படிச்சு கலெக்டர் ஆகுற அளவுக்கு அறிவு இருந்தா, எப்படி டா தவெகா ஆதரவாளரா இருப்பங்க.? 🥶📈🔥
தலித் ஆசிரியர்கள் அறையில் மனித மலம் வீச்சு - த. கீழவெளி அரசு மேல்நிலைப்பள்ளியில் சாதிவெறியாட்டம் - 2 வாரங்களாகியும் நடவடிக்கை இல்லை.
எவ்ளோ கமுக்கமா இருக்கானுங்க எல்லா போராளிகளும். இதுவே திமுக ஆட்சியில் நடந்து இருக்கனும். நேஷனல் மீடியா வரைக்கும் விவாதம் நடத்தி இருப்பானுங்க.
உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரியுமா, தெரியாதா?
தேசிய மகளிர் ஆணையமும், உயர்நீதிமன்ற நீதிபதியும் தலையிட்ட பின்னர்தான் ஒரு மாவட்ட ஆட்சியரின் புகாரே பதியப்படும் என்றால் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா?
போடாத கமெண்டுக்காக, பேராசிரியரின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து அதிகாலையில் கடத்திச் செல்லத் தெரிந்த காவல்துறைக்கு, முதலமைச்சர் விஜய் அவர்களின் பொடனிக்குப் பின்னாலேயே இருந்துகொண்டு தவறிழைத்த MLA-வைக் கைது செய்யத் தெரியவில்லையா?
கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் சிக்கிய ஸ்ரீவைகுண்டம் MLA மீதும், மைதானத்தில் போதை மாத்திரை நசுக்கிய அமைச்சர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் த.வெ.க.வில் மற்றவர்களுக்கு பயம் இருந்திருக்கும்.
மாறாக, என்ன செய்தாலும் நாம் காப்பாற்றப்படுவோம், புகார் அளித்த பெண்களைத்தான் கட்சியில் இருந்து நீக்குவார்கள் என்ற மோசமான முன்னுதாரணங்களை முதலமைச்சர் விஜய் அனுமதித்துவிட்டார். அந்த தைரியத்தில்தான் ஒட்டுமொத்த மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அதிகாரியிடமே எல்லை மீறியிருக்கிறார் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்.
'த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று, த.வெ.க.வினரின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தேடிப் பெண்கள் ஓடும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
இந்த வழக்கிலாவது உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் இப்படியான சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க முடியும்.
நான்கு மாதகாலமாக ஒரு குற்றவாளியைப் பாதுகாக்க எல்லா வழிகளையும் பயன்படுத்திய மாநில அரசு - இப்படிப்பட்ட MLA-வை அழைத்து “தீபாவளி பரிசு” கொடுத்த முதலமைச்சரின் தலைமையில் உள்ள மாநில அரசு இனி இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, மாநில அரசு தாமாகவே இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்.
சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனம் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்த பின்பும் நடவடிக்கை எடுக்காமல் மூடிமறைத்த தலைமைச் செயலாளர் மீதும், மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் தந்த அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.
#TVKFails #Arrest_ArulVignesh
இதற்கு மேலும் தவெக MLA வை பாதுகாக்க நினைத்தால்
தமிழ்நாடு முழவுதும் மிக பெரிய போராட்டத்தை முன்னெடுப்பார் எங்கள் கழக @mkstalin தலைவர்
இதை பற்றி Parliament லும் பேசுவோம் 🔥🔥
அக்கா @KanimozhiDMK அவர்கள் 🖤❤
இது சாதாரண Running shoe review வீடியோ கிடைகாது
திமுக என்ற கட்சி சத்தமே இல்லமால் தமிழ்நாட்டில் செய்த சாதனையின் ஒரு கீற்று
உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் Asics, Nike, New balance, Adidas போன்ற top brandகளின் Shoeவை தயாரிப்பது தமிழ்நாட்டு பெண்கள்
அதை உருவாக்கியது திமுக.
கவர்ச்சி அரசியல் தமிழ்நாட்டின் சாபக்கேடு
செஞ்சத முதல்ல மக்கள்ட போய் சேருங்கையா @arivalayam
தந்தை பெரியாரையும் புரட்சியாளர் அம்பேத்கரையும் பெயருக்குக் கொள்கைத் தலைவர்களாக அறிவித்துவிட்டு, ஜோசியக்காரரை உண்மையான கொள்கைத் தலைவராகக் கொண்டு செயல்படுகிறது ஆளும் த.வெ.க.!
“ஆறு மாசம், எல்லாமே நாசம்” எனத் தமிழ்நாட்டைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கும் த.வெ.க., அரசியல் பிணி மட்டுமல்ல; அதுவொரு சமூகப் பிணி!
எனவே,
“தமிழா! விழிப்புணர்வு கொள்!”
“தமிழா! இனஉணர்வு கொள்!”
“மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு!”
என்ற தந்தை பெரியாரின் முழக்கங்களை மீண்டும் மக்களிடம் எடுத்துச் செல்வது காலத்தின் கட்டாயத் தேவை!
@tpdk2020@kuratpdk
ஆளுங்கட்சியின் பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்க தான் ஆட்சி நடத்துகிறாரா Dummy CM?
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுங்கட்சி MLA அருள் விக்னேஷ் ஆபாச Message-ஏ அனுப்பவில்லை என்று பச்சைப்பொய் சொல்லி வந்த இந்த கையாலாகா ஆட்சியாளர்களின் முகத்தில் கரி பூசி இருக்கிறது இன்றைய The Hindu நாளிதழ் செய்தி.
இந்த சம்பவத்தில் ஒரு மாதம் முன்பே தலைமைச் செயலாளரிடம் தொலைபேசி வாயிலாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் புகார் அளித்த நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதுமட்டுமின்றி, ஆட்சியரிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை என்று உயர் நீதிமன்றத்திலேயே இந்த அரசு நேற்று பொய் சொல்லியிருக்கிறது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர், தலைமைச் செயலாளரிடம் தொலைபேசியில் புகார் அளித்துள்ளார் என்பது முதலமைச்சருக்கு தெரியாதா?
அதை முதலமைச்சரிடம் தலைமைச் செயலாளர் மறைத்தாரா? அல்லது அது தெரிந்தும் எம்.எல்.ஏ- வையும் தனது அரசையும் காப்பாற்றுவதற்காக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லையா?
இதில் எது உண்மை என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.
ஒருவேளை அந்த செய்தி மறைக்கப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட ஆட்சியருக்கு துணையாக நிற்காமல், குற்றத்தை மறைத்து, குற்றவாளியை பாதுகாக்க துணை போன தலைமைச் செயலாளர், பொது துறை செயலாளர், முதலமைச்சர் அலுவலக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும், முதலமைச்சர் உடனே விடுப்பில் அனுப்ப வேண்டும்.
அப்போது தான், இந்த புகாரின் மீது நியாயமான முறையில் விசாரணை நடைபெறும்.
இந்த சம்பவத்தில் இனியும் தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட MLA-வை உடனே கைது செய்து விசாரிக்க வேண்டும்.
முன்னாள் ஒன்றிய அமைச்சர் திரு.முரசொலி மாறன் அவர்களின் நினைவு நாள் இன்று!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் மனசாட்சி என போற்றப்பட்டவர்.
திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் சிந்தனையாளர்.
பத்திரிகை - எழுத்து - திரையுலகம் - அரசியல் என பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்.
கொள்கை உறுதியோடு கழகம் வலுப்பெற உழைத்தப் பெருமைக்குச் சொந்தக்காரரான முரசொலி மாறன் அவர்களின் பணிகளை என்றென்றும் போற்றுவோம்.
வாழ்க அவர் புகழ்!
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் ஏந்திய அறிவாயுதம் – குடி அரசு இதழ்!
‘தந்தை பெரியார் திராவிடர் கழகம்’ உருவாக்கியுள்ள குடி அரசு இதழின் முழுத் தொகுப்பை, நம்முடைய கழகத் தலைவர் @mkstalin அவர்கள் அண்ணா அறிவாலயத்தில் இன்று வெளியிட்ட நிகழ்வில் பங்கேற்றோம்.
ஈராயிரம் ஆண்டு அநீதிக்கு எதிராக நூறாண்டுகளுக்கு முன்பு எதிரொலித்த குடி அரசின் கருத்து முழக்கம், டம்மி முதலமைச்சரின் சர்க்கஸ் ஆட்சிக்கு எதிராக இன்றைக்கும் தேவைப்படுகிறது என்று உரையாற்றினோம்.
திராவிட இயக்கத்தின் Intellectual Asset-ஆன இத்தொகுப்பை அடுத்த தலைமுறை இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்போம்.
Reels-க்கும் Views-க்கும் ஆட்சி நடத்தும் போலிகள் – டம்மிகளிடமிருந்து தமிழ்நாட்டை மீட்போம்!
இத்தொகுப்பைக் கொண்டு வந்த அண்ணன் கு.இராமகிருட்டிணன் உள்ளிட்ட தோழர்களுக்கு அன்பும் வாழ்த்தும்!
#குடிஅரசு #ThanthaiPeriyar
கண்ணீர் விடும் விவசாயிகளைக் கண்டும் காணாமல் இருக்கும் த.வெ.க. அரசு கைவிட நினைத்தாலும், தி.மு.க. அமைதியாக இருக்காது.
வேளாண் பெருங்குடி மக்களின் குரலைக் கேட்டு அவர்களது கண்ணீரைத் துடைப்பதற்கான தீர்வுகளைப் பெற்றுத்தர, வரும் 25-ஆம் தேதி முதல் டெல்டா மாவட்டங்களுக்கு வருகிறது, “காவிரி விவசாயிகள் கருத்து கேட்புக் குழு”.
விவசாயத் தோழர்களே… நம்பிக்கையுடன் வாருங்கள். உங்களது கோரிக்கைகளை அரசிடம் வலுவாக எடுத்து வைத்து, நீதி கேட்போம்!
#DeltaFarmers #CauveryIssue #MetturDam #Mekedatu
ஆளுங்கட்சியைச் சேர்ந்த MLA-வின் ஒழுங்கீனமான செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் முறையாகப் புகார் அளித்திருக்கும் செய்தி 'தி இந்து' நாளேட்டில் இன்று வெளியாகியிருக்கிறது.
இத்தகைய ஒரு சம்பவம் நடைபெற்றதாக பல வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவரத் தொடங்கியபோதே, முதலமைச்சரும் தலைமைச் செயலாளரும் மாவட்ட ஆட்சியரை அழைத்துப் பேசி இருக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக அரசு இருக்கும் என்ற நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும்.
தவறிழைத்த சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து, சட்டநடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
பெண்களின் பாதுகாப்பிற்கும், ஆட்சி மாண்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் எந்த ஒரு அரசும் இதைத்தான் செய்திருக்கும்.
ஆனால், தன் கட்சி சட்டமன்ற உறுப்பினரையும் தன் மைனாரிட்டி அரசையும் காப்பாற்றினால் போதும் என்ற நோக்கத்தில் இவர்கள் இந்த சம்பவத்தை மறைக்க அனைத்து வகைகளிலும் முயற்சித்ததால்தான், பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் முறையாகப் புகார் அளிக்கவே இத்தனை நாட்கள் ஆகியிருக்கின்றன.
ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் தமிழ்நாட்டில் வாழும் சராசரிப் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி கவலை அளிக்கிறது.
இதில், பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்காமல், MLA பாவம் என்று முட்டு கொடுத்தது கேவலத்தின் உச்சம்.
பல்வேறு வகைகளிலும் இந்த சம்பவம் அரசின் கவனத்திற்கு வந்த பிறகும், இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றத்திலும் பொய் சொல்கிறார்கள் என்பது கடும் கண்டனத்துக்குரியது.
பாலியல் குற்றங்களிலும், போதைப் பொருள் கடத்தலிலும், கொள்ளைச் சம்பவங்களிலும் த.வெ.க.வினர்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள் என நாங்கள் தொடர்ந்து சொல்லி வருவது ஒவ்வொரு நாளும் உண்மையாகி வருகிறது.
இனியும் தாமதிக்காமல், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்.
தந்தை பெரியாரின் எழுத்துகள், தமிழ்நாட்டின் சமூக வரலாற்றையே மாற்றிய பகுத்தறிவுச் சிந்தனைகள்!
வரலாற்றை மறப்பதும் மறுப்பதும், நாம் போராடிப் பெற்ற உரிமைகளை இழக்கக் காரணமாகிவிடும்!
ஒரு நூற்றாண்டின் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் வகையில், தந்தை பெரியாரின் #குடிஅரசு இதழின் முழுத் தொகுப்பை வெளியிட்டுள்ள அருமைச் சகோதரர் கோவை இராமகிருட்டிணன் அவர்களுக்கும் த.பெ.தி.க. இயக்கத் தோழர்களுக்கும் வாழ்த்துகள்!
@tpdk2020@kuratpdk