குழந்தையை சுமக்கும் கர்ப்பிணி பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறான் ஒரு தவெக நபர்.
தனி மனித ஒழுக்கம் பற்றி முதலில் உங்க கட்சிக்காரர்களுக்கு தனியா பாடம் நடத்துங்க டம்மி முதல்வரே.
#TVKFails
எதுவும் தெரியாத மாடர்ன் மங்குனி 24ஆம் புலிகேசி அரசே!
அரசியல் அரிச்சுவடி கூடத் தெரியாமல், மூக்கு சீந்தி, Victim Card எடுத்து அழுது, குழந்தைகளிடம் பிச்சை எடுத்து, அப்படியும் pass mark வாங்க வக்கற்று, கடைசியில் Sofa அனுப்பி கட்சிகளிடம் ஆதரவு பெற்று பதவி வெறியில் பொறுப்புக்கு வந்த புறம்போக்குகள் எல்லாம் தி.மு.கழகத்தை விமர்சிப்பது நகைப்பிற்குரியது.
ஸ்ரீவைகுண்டத்தில் தவெக கட்சி நிர்வாகிகளே தவெக கட்சியின் பெண் தொண்டரை வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பாலியல் வன்கொடுமை செய்ததை மூடிமறைக்க முடியாமல்,
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்களின் கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்க வக்கில்லாத தொடை நடுங்கி தவெக தலைவர் IT Wing மூலம் அறிக்கை விட்டு, அசிங்கத்தை மறைக்கப் பார்க்கிறார். The Joke is on you, Coward!
இந்த மண்ணாங்கட்டிக்கு 'மார்டன் சோழன்' பில்டப் ஒன்று தான் குறைச்சல்!
"புகார் பெறப்பட்ட உடனே அதிரடியாகக் கைது செய்தோம்" என்று மார்தட்டுகிறீர்களே, பாலியல் வன்கொடுமை செய்தது யார்? உங்கள் கட்சியின் இளைஞரணியினர் தானே! குற்றம் செய்தவனைத் தட்டிக்கேட்க வேண்டிய உங்கள் கட்சியின் எம்.எல்.ஏ சரவணன், "அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி வேலை வாங்கித் தருகிறேன்" என்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேரம் பேசியது தான் உங்கள் லட்சணமா?
"மேலிடத்துக்கு எல்லாம் தெரியும்" என்று குற்றவாளிகளே வாக்குமூலம் அளித்த பிறகு, #யார்_அந்த_மேலிடம் என்ற கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா? இல்லை!
அதற்குப் பதிலளிக்க வக்கற்ற நீங்கள், மற்றவர்களைப் பார்த்துப் பொங்குகிறீர்கள்.
உங்கள் அறிக்கையில் அண்ணா பல்கலைக்கழகச் சம்பவம் பற்றி ஏதோ நீங்கள் தான் இன்று புதிதாகக் கண்டுபிடித்தது போலப் பிதற்றியுள்ளீர்கள். கடந்த டிசம்பர் 2024-ல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தில், குற்றவாளி ஞானசேகரனைச் சில நாட்களிலேயே கைது செய்து, சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைத்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, விரைவாக 5 மாதத்தில் தண்டனை பெற்றுத் தந்தது கழக அரசு! "குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தந்ததில் காவல்துறையின் செயல்பாடு பாராட்டுக்குரியது" என்று உயர்நீதிமன்றமே பாராட்டியது.
இது கூடத் தெரியாத உங்கள் அறிவுத் திறன் எதிரிக்கு கூட கிடைக்கக் கூடாது பாவம் என நினைத்துத் தமிழ்நாடே சிரிக்கிறது!
பொள்ளாச்சி வழக்கிலும் திமுக ஆட்சி அமைத்தது முதல் தொடர்ந்து களத்திலும் நீதிமன்றத்திலும் போராடியது திராவிட முன்னேற்றக் கழகம். கழகத்தின் தொடர் அழுத்தத்தாலும், சட்டப் போராட்டத்தாலும் தான், சிபிஐ (CBI) விசாரணை முடுக்கிவிடப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனையும் பெற்றுத் தரப்பட்டது.
அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 85 லட்ச ரூபாய் இழப்பீடும் பெற்றுத் தந்தது.
ஆகவே, கழகத்தை நோக்கி விரல் நீட்டும் தார்மீக உரிமை, "சிங்கப்பெண்" என்ற பெயரில் வீடியோ போட்டுவிட்டு, நிஜத்தில் பெண்களைச் சீரழிக்கும் சொந்தக் கட்சிப் பொறுப்பாளர்களைப் பாதுகாக்கும் உங்களுடைய 'சோஃபா மாடல்' கத்துக்குட்டி அரசுக்குச் சிறிதும் கிடையாது.
ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பஞ்சாயத்து செய்த எம்.எல்.ஏ சரவணனையும், அதற்கு உடந்தையாக இருந்த "மேலிடத்தையும்" விசாரிக்கும் தைரியம் உங்கள் மாடர்ன் மங்குனி அரசுக்கு இருக்கிறதா? அதை முதலில் சொல்லுங்கள்!
#யார்_அந்த_மேலிடம்
நேர்லயும் சோஷியல் மீடியாக்கள்லயும் உடன்பிறப்புகளான நீங்க வெளிப்படுத்துற உணர்வுகளைக் கவனிக்குறேன். தேர்தல் முடிவுகளைக் கடந்து, தலைவர் கலைஞர் ஊட்டிய உணர்வோட பயணிக்குற நமக்கு, புத்தெழுச்சி ஊட்டக் கூடிய நாளா, தலைவர் கலைஞரின் பிறந்தநாள் வருது!
ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் வழங்கி, தலைவர் கலைஞரின் பிறந்தநாளைக் கொண்டாடுற அதேவேளையில், சோஷியல் மீடியாவுலயும் தலைவர் கலைஞரின் வரலாற்றுச் சாதனைகளைப் பரப்புவோம்! இளைய தலைமுறைக்கு நம்மோட வரலாற்றையும் – தேவையையும் எடுத்துச் சொல்வோம்!
தமிழ்நாட்டின் எதிர்காலம் சிறக்கணும்னா அதுக்கு தி.மு.க.தான் தேவை என்பதை இளைஞர்களுக்குச் சொல்ல தலைவர் கலைஞரின் பிறந்தநாளில் உறுதியேற்று உழைக்கத் தொடங்குவோம்!
#LetterToBrethren #Kalaignar103 #KalaignarForever
Cockroach is back!
இந்திய அளவில் நிலவி வரும் வேலைவாய்ப்பின்மையை பா.ஜ.க.விற்கு உணர்த்த தொடங்கப்பட்ட காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) X - சமூக வலைதளப் பக்கத்தை முடக்கிய நிலையில், ‘Cockroach is back’ என்ற புதிய பக்கத்தைத் தொடங்கியுள்ளார் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் அபிஜீத் திப்கே!
#CJP #CockroachJanataParty #India #KalaignarSeithigal
போலிகளின் முழு உருவம் தவெக!
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் திரு.விஜய் அவர்கள் டிபன் பாக்ஸிலிருந்து மதிய உணவு சாப்பிடுவது போலியாக AI மூலமாக தயாரிக்கப்பட்டப் படத்தை தவெகவின் social media mafia வைரல் செய்தது.
#TVKLies
வரலாற்றுச் சிறப்புமிக்க ஆனைமங்கலம் செப்பேடு மீண்டும் இந்தியா திரும்புகிறது, வரவேற்போம்!
விரைவில் தமிழகம் வரவேண்டும், வலியுறுத்துவோம்!
சு. வெங்கடேசன் எம்.பி.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இராஜராஜ சோழனால் வழங்கப்பட்ட கொடை உத்தரவு, முதலில் ஓலையில் எழுதப்பட்டுப் பின்னர் இராஜேந்திர சோழனால் செப்பேட்டில் பதிக்கப்பட்டது. அதுவே வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஆனைமங்கலம் செப்பேடு’ என்று அழைக்கப்படுகிறது.
சைவ சமயத்தின் தீவிரப் பற்றாளர்களாக விளங்கி, பிரம்மாண்டமான தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய சோழ மன்னர்கள், பௌத்தப் பள்ளிகளுக்கும் பெரும் கொடை வழங்கினார்கள் என்பதும்; சோழ நாட்டில் குடியேறியிருந்த வெளிநாட்டு பௌத்த வணிகர்களின் மத உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலமே பன்னாட்டு வணிகம் செழிக்கும் என்ற சோழர்களின் பொருளாதாரத் தொலைநோக்குப் பார்வைக்குச் சான்றாகவும் இந்த ஆனைமங்கலம் செப்பேடு விளங்குகிறது.
டச்சுக் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக நாகப்பட்டினம் இருந்த காலத்தில், இந்தச் செப்பேடு கிறித்தவ மறைப்பணியாளர்களால் பாதுகாக்கப்பட்டு, நெதர்லாந்தில் உள்ள லெய்டன் பல்கலைக்கழக ஆவணக் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வரலாற்றுப் பெட்டகம் மீண்டும் தமிழகத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலிமையாக எழுந்தது. இந்த பின்னணியில், யுனெஸ்கோவின் (UNESCO) கலாச்சாரப் பொருட்களை மீட்டெடுக்கும் குழுவின் (ICPRCP) 24-ஆவது கூட்டத்தில், இச்செப்பேடுகளைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக முன்வைத்தது.
தொடர்ந்து பல ஆண்டுகள் வலியுறுத்தியதன் பயனாக, நேற்றைய தினம் இந்தியப் பிரதமரிடம் இந்தச் செப்பேடு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்காக இரு நாட்டு அரசுகளுக்கும், இந்தியப் பிரதமருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வரலாற்று ஆவணத்தை அறிவுசார் பணிக்கான ஒத்திசைவோடு, தொடர்ந்து பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எமது நன்றி!
இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், கடந்த பத்து ஆண்டுகளில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து மீட்டுவரப்பட்ட 656 தொல்பொருட்களை டெல்லியில் உள்ள “புரானா கிலா” கோட்டையில்தான் ஒன்றிய அரசு வைத்துள்ளது. அவற்றுள் பெரும்பான்மையானவை பொதுமக்களின் பார்வைக்குக் கூட காட்சிப்படுத்தப்படவில்லை.
ஆனைமங்கலம் செப்பேட்டிற்கும் அந்த நிலை வந்துவிடக் கூடாது. தமிழக மற்றும் இந்திய வரலாற்றின் சர்வதேச பரிமாணத்தை, மதம் சார்ந்த அரசியல் போக்கிற்கு மாற்றான பன்மைத்துவ அரசியல் மாண்பை, உள்ளூர் அரசாட்சியின் தேர்ந்த கட்டமைப்பு விபரங்களை ஒருங்கே பறைசாற்றும் இந்த ஆவணம் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்; தமிழகத்தில் சிறப்பான முறையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும். இதற்குத் தமிழக அரசும் உரிய முன்முயற்சி எடுக்க வேண்டும்.
சோழர்களின் வழித்தோன்றல் மரபைத் தெளிவுறக் கூறும் “அன்பில் செப்பேடு” இந்திய அரசின் தொல்லியல் துறையால் (ASI) பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனால், இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க செப்பேடு இப்போது எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை. அதனைக் கண்டறிய வேண்டிய பொறுப்பு இந்தியத் தொல்லியல் துறை சார்ந்தது. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் 300 ஆண்டுகளாக நமது வரலாற்று ஆவணத்தைப் பாதுகாத்து வைத்துள்ளன. ஆனால், இந்திய அரசின் தொல்லியல் துறையோ நமது சிறப்புமிக்க வரலாற்று ஆவணத்தைத் தொலைத்துவிட்டு நிற்கிறது. இதனை மீட்க ஒன்றிய அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்.
நெதர்லாந்திலிருந்து இந்தியா கொண்டுவரப்படுவது வெறும் செப்பேடு அல்ல... செம்மாந்த தமிழக வரலாற்றின் ஆகச்சிறந்த ஆவணமாகும்! அதுமட்டுமல்ல, பிரதமர் மோடியிடம் கையளிக்கப்பட்டுள்ள இந்த ஆவணம், அவர் பின்பற்றும் ஒற்றை மத அரசியலுக்கு எதிராகப் பன்மை மத ஒழுங்கைப் பேணிக்காத்த சோழர்களின் ஆகச்சிறந்த வரலாற்றுச் சான்றாகும்!
வரலாறே வருக!
@PMOIndia@MinOfCultureGoI@ASIGoI@LeidenUniv@UNESCO@CMOTamilnadu@TVKVijayHQ
#ஆனைமங்கலம்செப்பேடு / #AnaimangalamCopperPlates
#சோழர்வரலாறு #CholaHistory
#தமிழகவரலாறு
#TamilHistory
#SaveTamilHeritage