அலட்சியத்தோடும் - ஆணவத்தோடும் விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்து, கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதல்படி, கழக உடன்பிறப்புகள் - தோழமை இயக்கத்தினர் - விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இணைந்து தஞ்சை மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்தினோம்.
ஆடிப்பெருக்கு நாளன்று கூட அகண்ட காவிரி, வறண்ட காவிரியாக காட்சி அளிப்பதற்கு இந்த Dummy ஆட்சியாளர்களே கா���ணம்.
சோறு போடும் விவசாயிகள் கண்ணீரில் மிதக்கும்போது Reels போடும் முதலமைச்சருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினோம்.
விவசாயக் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்,
மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைத் தடுக்க வேண்டும்,
டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்,
ஆகிய கோரிக்கைகளை இந்த முதலமைச்சர் உடனே நிறைவேற்ற வேண்டும் என உரையாற்றினோம்.
சட்டமன்றம் – நீதிமன்றம் – மக்கள் மன்றம் என அனைத்து இடங்களிலும் விவசாயிகள் பிரச்னைகளுக்காக தி.மு.கழகத்தின் குரல் என்றைக்கும் ஒலிக்கும்!
#விவசாயவிரோதிவிஜய்
பயிர்க்கடன் தள்ளுபடியில் மோசடி - மேகதாது பிரச்சினையை கைக்கட்டி வேடிக்கை பார்ப்பது - மேட்டூர் அணையில் இருந்து ஜுன் 12 அன்று தண்ணீர் திறக்காதது - காவிரி பிரச்சினையில் அனைத்��ுக்கட்சிக் கூட்டத்தை கூட்ட மறுப்பது - கர்நாடக முதல்வரை சந்திக்கப் போவதாக Unofficial தகவல்களை உலவவிட்டு ஆழம் பார்ப்பது,,,
இப்படி தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு துரோகத்துக்கு மேல் துரோகம் செய்யும் #ShootingModel த.வெ.க. அரசைக் கண்டித்து,
கழகத்தலைவர் @mkstalin அவர்கள் வழிகாட்டுதலின்பேரில், கழகத்தின் சார்பில் தஞ்சை மாநகரில் வரும் ஆகஸ்ட்-3 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளோம்.
தஞ்சையில் கூடுவோ���் - விவசாய விரோத #CallSheet Government-க்கு தக்க பாடம் புகட்டுவோம்!
தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் #Census2027-இல் பங்கேற்று என்னுடைய விவரங்களை இணைய வழியில் பதிவு செய்தேன்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தம��ழ்நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்று அவரவர் விவரங்களை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் - தஞ்சை மத்திய மாவட்டம், திருவோணம் வடக்கு ஒன்றிய கழக செயலாளருமான சகோதரர் @KTMaheshDMK அவர்களின் அன்புத்தந்தையார் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் கே.தங்கராசு அவர்கள் அண்மையில் ���றைந்தார்.
சில்லத்தூர் கிராமத்தில் உள்ள அவர்களது இல்லம் சென்று, அண்ணன் தங்கராசு அவர்களின் திருவுருவப்படத்துக்கு இன்று மலர் தூவி மரியாதைச் செலுத்தினோம்.
திராவிட இயக்க கொள்கைகள் மீதும் - முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீதும் மாறா பற்றோடு, திருவோணம் பகுதியில் கழகம் வளர்த்த அண்ணன் தங்கராசு அவர்களின் பணிகளைப் போற்றுவோம்!
@durai944 @Anbil_Mahesh @murasoli_tnj @Govichezhian @RVaithilingamdm
மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா.
இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்.
“தொட மாட்டேன் - தொட்டா விட மாட்டேன்” என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?
#SofaModel அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.
திணிக்��ப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
முன்னாள் அமைச்சர் அண்ணன் @ARROffice அவர்களை காவல்துறை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழ்நாடெங்கும் சீர்கெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கக் காட்டாத வேகத்தை, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை கைது செய்வதில் காட்டியிருக்கிறது #SofaModel அரசு.
அவதூறு பேசி - பொய் பழிகளை அள்ளி வீசுவது மட்டும் தான் அரசியல் என்று செயல்படும் ஆளுங்கட்சியின் இந்த அராஜக��் போக்கை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பொய் வழக்காலும் - கைது நடவடிக்கைகளாலும் கழகத்தை முடக்கலாம் என்று நினைக்கும் இந்த Reels அரசின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.
'ஆளுநர் ஆய்வு செய்தார்' என்ற கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, தற்போதைய குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது.
மதுரை சென்றிருந்த ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், தான் நியமன பதவியில் - அதுவும் கூடுதல் பொறுப்பில் தமிழ்நாடு ஆளுநராக இருப்பதை மறந்து, மக்கள் பிரதிநிதி போல ஆய்வு நடத்தி இருக்கிறார்.
அரசியலமைப்புக்கும் - மாநில உரிமைக்கும் எதிரான இந்த செயலில் ஈடுபட்ட ஆளுநருக்கும், இதை அனுமதித்த #SofaModel அரசிற்கும் கடும் கண்டனங்கள்.
ஆளுநர் மாளிகையின் பராமரிப்பே தமிழ்நாடு அரசிடம் இருக்கும் போது, வைகையை அரசு சீரமைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை களம் இறங்கும் என்று அடாவடியாக பேசி இருக்கிறார். ஆளுநரின் இந்த அசட்டுத் துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்.
ஆளுநர் பங்கேற்ற அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம் குறைக்கப்படும் அளவுக்கு, என்ன Compromise செய்யப்பட்டது என்று சட்டமன்றத்தில் கேட்டிருந்தோம்.
அதற்கு உரிய பதிலைச் சொல்லாத ஆளுங்கட்சியினர், இன்றைக்கு ஆளுநரை ஆய்வு செய்யவிட்டு, மாநில உரிமைகளை compromise செய்திருப்பது வெட்ட வெளிச்��மாகியிருக்கிறது.
சட்டத்துக்குப் புறம்பாக அடுத்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களை Panic buying செய்யும் ஆளுங்கட்சி, ஆளுநர் நடவடிக்கை எடுத்துவிடுவாரோ என்ற anxiety-யில் அவரது ஆய்வை அனுமதிக்கிறதா?
முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய ஆளுநர் ஆய்வுகளில் ஈடுபட்ட போது, அவர் சென்ற இடங்களில் எல்லாம் கழகத்தினர் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தோம். கழகத்தலைவர் @mkstalin அவர்கள் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை நாங்கள் அனுமதித்ததில்லை.
ஆகவே, மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளைத் தாரை வார்க்காமல், ஆளுநர் ஆ��்வு செய்யும் நடைமுறையை உடனே நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும் - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.@GGPonnambalam அவர்களை இன்று நேரில் சந்தித்து உரையாடினோம்.
போருக்குப்பின் இலங்கையில் நிலவும் சூழல் – அ��்குள்ள தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் உள்ளிட்டவைக் குறித்து அவர் நம்மிடம் எடுத்துரைத்தார்.
அவரது கருத்துக்களை கழகத்தலைவர் @mkstalin அவர்களிடம் எடுத்துச்சென்று, இலங்கையில் வாழும் தமிழ்மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் என்று உறுதியளித்தோம்.
இந்த சந்திப்பின்போது, நம்முடைய இளைஞரணி சார்பில் முத்தமிழறிஞர் பதிப்பகம் வெளியிட்டுள்ள 'க���லத்தின் நிறம் கருப்பு சிவப்பு' நூலைப் பரிசளித்தோம்.
நம் உயிரோடும் – உணர்வோடும் கலந்திருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை தென் மேற்கு மாவட்டக் கழகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சென்ற ஜுன் மாதம் முழுவதும் சுமார் 256 நலத்திட்ட நிகழ்ச்சிகளை கழக நிர்வாகிகள் நடத்தி இருக்கிற��ர்கள்.
அவர்களுக்கான பாராட்டு விழா அடையாறு முத்தமிழ் மன்றத்தில் இன்று நடைபெற்ற போது, அதில் பங்கேற்றோம்.
ஆட்சிப்பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்றும் மக்களுக்கான களத்தில் தி.மு.கழகம் முன்வரிசையில் நிற்கும் என்பதை உறுதி செய்கிற வகையில் கலைஞர் பிறந்த நாள் நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்திய சென்னை தென் மேற்கு மாவட்டக் கழக நிர்வாகிகளைப் பாராட்டி உரையாற்றினோம்.
கலைஞர் புகழ் ஓங்கட்டும்
@mylaivelu @ThamizhachiTh
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் - ஆலந்தூர் தெற்குப்பகுதி - 164-வது வட்டக்கழக செயலாளராகவும், மாமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய நங்கநல்லூர் நேரு காலனியைச் சேர்ந்த அண்ணன் ஏசு (எ) ஜேசுதாஸ் அண்மையில் மறைந்தார்.
இன்றைய தினம் அண்ணனின் இல்லம் சென்று அவரது திருவுருவப்படத்தைத் திறந்து வைத்து மலர்தூவி மரியாதைச் செலுத்தினோம்.
மாவட்டக்கழகம் சார்பில் அண்ணன் ஏசு அவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.11 லட்சத்தை நிதியுதவியாக வழங்கினோம்.
அவரது துணைவியாரும் - மாமன்ற உறுப்பினருமான அக்கா தேவி உள்ளிட்ட கு���ும்பத்தார் - நண்பர்களுக்கு நம்முடைய ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்தோம்.
அண்ணன் ஏசு அவர்களின் கழகப்பற்றும் - க���ைஞர் மீதும், கழகத்தலைவர் அவர்கள் மீதும் அவர் கொண்டிருந்த பாசமும் போற்றுதலுக்குரியவை.
கழக நிகழ்ச்சிகளில் கருப்பு - சிவப்புக் கொடியோடு அண்ணன் ஏசு எழுப்பிய கொள்கை முழக்கங்கள் உடன்பிறப்புகளின் செவிகளில் என்றென்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
அண்ணன் ஏசுவின் பணிகள் என்றும் நிலைத்திருக்கும்!
@thamoanbarasan
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்���ிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School
ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காகப் போராடிய திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாள் இன்று.
தீண்டாமைக் கொடுமைகளை உல��ிற்கு உணர்த்த முதலாம் வட்ட மேசை மாநாட்டில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கே கைக்கொடுக்க மறுத்தத் துணிச்சலுக்குச் சொந்தக்காரர்.
தன் வாழ்நாள் எல்லாம் ஒடுக்கப்பட்ட – விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்துக்காகவும் – சம வாழ்வுக்காகவும் உழைத்த இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பணிகளைப் போற்றும் வகையில், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஓட்டேரி பகுதியில், ‘இரட்டைமலை சீனிவாசன் சாலை’ என்று நம்முடைய தலைவர் @mkstalin அவர்கள் பெயர் சூட்டினார்கள்.
தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் புகழ் ஓங்கட்டும். அவர் லட்சியங்களை வென்றெடுக்க அயராது உழைப்போம்.
#RettamalaiSeenivasan
I extend my warmest birthday wishes to former Indian cricket team captain Thiru @msdhoni.
Whether on the cricket field or in real life, the way you handles every situation with calmness, composure, and humility is truly inspiring.
Wishing you good health, happiness, and many more years of success.
#MSDhoni #HBDDhoni
தமிழ்நாடு சட்டப்பேரவையில��� #SofaModel அரசு அளித்த அறிக்கையை Comma, Full Stop கூட மாறாமல் ஆளுநர் அப்படியே வாசித்திருப்பது பாஜக - த.வெ.க-வின் மறைமுக கூட்டணியை அம்பலப்படுத்தி இருக்கிறது.
ஆளுங்கட்சியினர் Reels போடுவதற்கான Content Material-ஆக அமைந்துள்ள ஆளுநர் உரையில் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏதும் இல்லை.
தொடர் மின்வெட்டு - பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கெடு - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
கழகத்தலைவர் @mkstalin அவர்கள் ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளுக்கு Sticker ஒட்டியும், த.வெ.க அரசின் சறுக்கல்களுக்கு கழகத்தின் மீது பழிபோடும் வகையிலும் அமைந்துள்ள ஆளுநர் உரையை கண்டிக்கிறோம். #TNAssembly
தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்���ும் கர்நாடகாவின் செயலுக்கு எதிராக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானத்தை தி.மு.கழகம் சார்பில் ஆதரித்து உரையாற்றினோம்.
கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, மேகதாதுவில் அணை கட்ட முயல்வது New Dispute ஆக இருப்பதால், The Inter-State Water Disputes Act 1956-ன்படி புதிய தனி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற திருத்தத்தைத் தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என்றும்,,
இந்த தீர்மானத்தை ��டிதமாக ஒன்றிய அரசுக்கு அனுப்பாமல், தமிழ்நாட்டு சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு குழுவாகச் சென்று நேரில் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.
நாம் அளித்தத் திருத்தத்தை இணைத்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
காவிரி மீதான தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தி.மு.கழகம் துணை நிற்கும்!
#Mekedatu #CauveryRights
பத்திரிகைச் ச���ய்தி
மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் அவர்களுக்கு கடிதம்
இன்று (20-06-2026), மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற நேரலை குறித்து, மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம்:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களுக்கு, வணக்கம்.
தமிழ்நாடு சட்டப்ப���ரவையின் நடவடிக்கைகள் நேரலை செய்யப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, தற்போது நடைபெற்று வரும் மாண்புமிகு ஆளுநர் உரை மீதான விவாதம் நேரலை செய்யப்படுவதில்லை என்பதைத் தங்களது மேலான கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.
"கொடுத்த வாக்கைக் காப்பாற்றியுள்ளார் முதலமைச்சர். இரண்டு, மூன்று ஆண்டுகளாக இருட்டடிப்பு��் செய்யப்பட்ட சட்டப்பேரவை நேரலை, மீண்டும் தொடங்கியிருக்கிறது. இனி சட்டப்பேரவை நேரலை தொடரும். இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு. வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையான நிர்வாகத்திற்கு இன்றைய நிகழ்வு மிகப்பெரிய எடுத்துக்காட்டு" என மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகன் குறிப்பிட்டுச் சொன்ன அன்றே நேரலை துண்டிக்கப்பட்டிருக்கிறது.
நேற்றைய தினம் (19.06.2026) மேகதாது அணை கட்டுவதைக�� கண்டித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்த அரசினர் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நேரலை செய்யப்பட்டன.
அடுத்து, உடனடியாக இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு ஆளுநர் உரை மீதான விவாதங்கள் தொடங்கிய நிலையில் அவை இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன. ஆளுநர் உரை மீதான விவாதம் நேரலை செய்யப்படவில்லை.
இது இன்றைய ஆளுங்கட்சி கொடுத்த வாக்குறுதிக்கு மாறானது ஆகும்; மக்கள�� பிரதிநிதிகளின் குரலை மறைப்பது ஆகும்; சட்டமன்ற மாண்பைக் குலைப்பதாகும்.
நேரலை நிறுத்தப்பட்டது மிகப்பெரிய தவறு என்றால், அதைவிடப் பெரிய தவறு பின்னர் இழைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினரின் விவாதங்கள் முற்றிலும் இருட்டடிப்புச் செய்யப்பட்டு, ஆளுங்கட்சியினருக்கு வேண்டிய விவாத வீடியோக்கள் மட்டும் Edit செய்யப்பட்டு மாலையில் வெளியிடப்பட்டுள்ளன. பேச்சுரிமையை, அதிலும் குறிப்பாகச் ச���்டமன்ற உறுப்பினர்களுக்கு அவைக்குள் இருக்கும் பேச்சுரிமையை நகக்கும் செயலாகும். இது நல்லதொரு ஆக்கப்பூர்வமான சட்டமன்ற ஜனநாயகத்திற்கு உகந்தது இல்லை.
'மாற்றம்' என்ற சொல்லை மையமாக வைத்துத் தேர்தலைச் சந்தித்தவர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் குரலை நசுக்குவதுதான் அவர்கள் செய்ய நினைக்கும் மாற்றமா? மக்கள் பிரதிநிதிகளின் பேச்சை மறைப்பது மக்களையே அவமானப்படுத்துவது ஆகும்.
இந்த அரசு வெளிப்படைத்தன்மை உடைய அரசு என்ற பொருள்பட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பலமுறை பேசிய நிலையில், இப்போது அதற்கு முரணாக அவை விவாதங்களை, குறிப்பாக எதிர்க்கட்சியினரின் விவாதங்களை, வாக்களித்த மக்கள் தெரிந்துகொள்ள விடாமல் செய்வது ஜனநாயகத்தையே இருட்டில் தள்ளுவதற்குச் சமம்.
மேலும், ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப் போற்றப்படும் ஊடகங்களுக்குச் செய்திகளை வழங்க மறுப்பதும், அரைக���றைச் செய்திகளை அளிப்பதும், "நாங்கள் தருவதை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும்" என்று சொல்வதும் பாசிச நடவடிக்கைகள் ஆகும்.
ஒரே நேரத்தில் சட்டசபை, மக்கள் பிரதிநிதிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தையும் அவமானப்படுத்தும் செயல் செய்யப்பட்டுள்ளது. உடனடியாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுகிறேன். வரும் திங்கட்கிழமையன்று (22.06.2026) ��திர்க்கட்சித் தலைவரான நானும், பிற தலைவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் உரையாற்ற உள்ளதால், தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடவடிக்கைகளை நேரலை செய்வதற்குத் தங்களுக்கு உள்ள பேரவைத் தலைவர் அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இல்லாவிட்டால் சட்டமன்றம் கூடுவதற்கான அர்த்தமே இல்லாமல் போய்விடும்; மக்கள் அளித்த வாக்குக்கே மரியாதை இல்லாமல் ப��ய்விடும். சட்டமன்றத்தையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் அவமானப்படுத்தும்இதுபோன்ற செயல்களை இனியும் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளை���ம் அருகே தனியார் இறால் ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், மருத்துவமனையில் உள்ள தொழிலாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க��்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்.
இதுபோன்ற துயரச் சம்பவங்கள், இனியும் ஏற்படாமல் இருக்க, தொழிற்சாலைகளில் உரிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் (SoP) முறையாக பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வுகளை நடத்துவதோடு, தேவை ஏற்படின், புதிய SoP-ஐ வெளியிட அரசு முன்வர வேண்டும்.
தொழிலாளர் நலனிலும் - பாதுகாப்பிலும், எந்தவொரு சமரசத்திற்கும் இந்த அரசு இடம் கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
#Gasleak #Labours
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளையொட்டி கழகத் தலைவர் திரு @mkstalin அவர்களின் நிகழ்ச்சிகள்!
- தலைமைக் கழக அறிவிப்பு
#DMK#KalaignarForever