திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் எனக்காக ஒதுக்கப்பட்டுள்ள புதிய அலுவலக அறையை கழகத் தலைவர் - முதலமைச்சர் அண்ணன் திரு. @mkstalin அவர்கள் நேற்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. @thamoanbarasan, துணை பொதுச் செயலாளர் - நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @dmk_raja, கழக அமைப்புச் செயலாளர் திரு. @RSBharathiDMK, கழக செய்தி தொடர்பு தலைவர் திரு. @Elangovantks, இணை அமைப்புச் செயலாளர் திரு. @AnbagamKalaiDMK, துணை அமைப்புச் செயலாளர் திரு. @SAustinDMK, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் திரு. துறைமுகம் காஜா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் திரு. பூச்சி எஸ்.முருகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நாடாளுமன்ற ஜனநாயக அரசியலில் என்னுடைய வழிகாட்டி, முன்னாள் ஒன்றிய அமைச்சர் அண்ணன் முரசொலி மாறன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, முரசொலி வளாகத்தில் உள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய போது.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில்
இன்று நடைபெற்ற 75-வது அரசியலமைப்பு தினக் கொண்டாட்டத்தில் மாநிலங்களவை குழுத்தலைவர் திரு. திருச்சி சிவா, மாநிலங்களவை உறுப்பினர்கள் திரு. எம்.எம். அப்துல்லா, டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு ஆகியோருடன் கலந்துகொண்டபொழுது
#ConsitutionDay@arivalayam
வக்பு சட்டத் திருத்த மசோதா குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்குக் காலநீட்டிப்பு வழங்க வேண்டும் என்று திரு @dmk_raja அவர்கள், திரு @pudugaiabdulla அவர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (26-11-2024), மக்களவைத் தலைவர் மாண்புமிகு ஓம் பிர்லா அவர்களிடம் கடிதம் அளித்துள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:
வக்பு சட்டத்திருத்த மசோதா மீது ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் காலம் நீட்டிக்கப்பட வேண்டும் எனக் கோரி இக்கடிதத்தை எழுதுகிறோம். ஆகஸ்ட் 22, 2024 அன்று முதல் கூட்டம் நடந்த நிலையில், இதுவரை 25 அமர்வுகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. அவற்றில், இதற்குத் தொடர்பில்லாத அமைப்புகள் சான்றுகளையும்/கோரிக்கைகளையும் அளித்தவையும் அடக்கம். அதேவேளையில், பீகார், புது டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் இன்னும் இந்தக் குழுவிடம் தங்கள் அறிக்கையினை அளிக்கவில்லை. மேலும், தொடர்புடைய பல அமைப்புகள் இக்குழுவிடம் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க நேரம் கோரி வருகின்றனர்.
வக்பு சட்டத் திருத்த மசோதா என்பது தற்போதைய சட்டத்தில் பல பெரிய மாற்றங்களைக் கொண்டுள்ள மிகவும் விரிவான சட்டம் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும். இந்த மாற்றங்கள் இந்திய மக்கள்தொகையில் பெரும்பிரிவினரை பாதிக்கக் கூடியவை ஆகும். ஆகவே, இக்குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ள மூன்று மாத காலம் என்பது போதாது என்பது மட்டுமின்றி, அது தவறான பரிந்துரைகளை அளிக்க வழிவகுத்துவிடும் அபாயமும் உள்ளது. முறையான கலந்துரையாடல் மற்றும் ஆய்வினை மேற்கொள்ள இக்குழுவுக்கு நியாயமான அளவு காலநீட்டிப்பு வழங்கப்பட வேண்டும்.
மக்கள் தங்கள் கருத்துகளைக் கூற வாய்ப்பு வழங்காமல். சட்டங்கள் வெறும் சம்பிரதாயத்துக்கு விவாதிக்கப்பட்டால், அது சட்டமியற்றும் வழிமுறையின் சட்டத்தகுதியையே பாதிக்கும். இது நாடாளுமன்றத்தின் மாண்புக்கும் தீங்கு விளைவிக்கும்.
எனவே, எங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு, நல்ல முடிவு எட்டப்படும் என நம்புகிறோம்.
***
’அந்தப்புரத்து சேவகர்கள்’ என்று ஒரு பெண்ணே பெண் இனத்தையே கேவலமாகச் சித்தரிப்பவர்களுக்கு மற்ற இனத்தைப் பற்றி என்ன கவலை இருக்கப் போகிறது?
- கழக துணைப் பொதுச்செயலாளர் திரு@dmk_raja எம்.பி., அவர்கள் அறிக்கை
நமது #திருப்பூர் மாநகராட்சியின் அரசு நத்தம் புறம்போக்கு பகுதியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் மக்களுக்கு,
மக்கள் நலன் காத்திடும் தலைவர்; மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களால், "தி.மு.கழகம் ஆட்சியமைந்தவுடன் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்ற வாக்குறுதியின்படி,
பட்டுக்கோட்டையார் நகர், கொங்கனகிரி, மிலிட்டரி காலனி ஆகியவற்றில் வசிக்கும் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் என்னை சந்தித்து பட்டா விஷயமாக என் கவனத்திற்கு மனு அளித்ததை தொடர்ந்து,
துறையின் மாண்புமிகு அமைச்சர் @KKSSRR_DMK அவர்களை நேரில் சந்தித்து கள ஆய்வு மேற்கொண்டு விரைவில் பட்டா வழங்கிட ஏதுவாக பணிகளை தொடர்ந்திட வலியுறுத்தி கடிதம் அளித்தேன்.
அதனையடுத்து, மாண்புமிகு அமைச்சர் அவர்களும் விரைவில் பணிகள் மேற்கொண்டு உடனடியாக பட்டா வழங்கப்படும் என்ற உறுதியை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 🙏🏻
#திருப்பூர்_நலன்_காப்போம்
#Watch | நீலகிரி மாவட்டம் கூடலூரில் கடந்த வாரம் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தார் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா.
காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ₹3 லட்சம் நிவாரணத் தொகையுடன் சேர்த்து திமுக சார்பில் ₹1 லட்சம் என மொத்தம் ₹4 லட்சத்தை குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறி வழங்கினார்.
#SunNews | #Nilgiris | #TNRains | @dmk_raja
இன்று, அவிநாசிக்கு வருகைபுரிந்த #நீலகிரி பாராளுமன்றத் தொகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை; கழக துணைப் பொதுச்செயலாளர் @dmk_raja அவர்களை வரவேற்று மகிழ்ந்தோம்….
#DMKWins#திருப்பூர்வடக்கு_திமுக
கடவுள் குழந்தையின்
கைகளில் பிச்சை பாத்திரம் !
அட்சயப்பாத்திரத்தோடு
ஆந்திராவும் பீகாரும் ;
கடவுளை மற
மனிதனை நினை !
பெரியார் வாழ்கிறார் !!
@arivalayam@dmk_youthwing@DMKITwing
2,39,052 வாக்கு வித்தியாசத்தில் அபாரமான வெற்றி.
சென்ற முறையை விட கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வென்று வர வேண்டும் என்ற கழகத் தலைவர் தளபதியின் உத்தரவு நிறைவேற்றப்பட்டது.
நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட கழகத்தின் ஒவ்வொரு தொண்டருக்கும் இந்த வெற்றியின் பெருமை சாரும்.
@mkstalin 🙏