பகுதி 2. காவிரி நடுவர் மன்றம் உருவானது(1990):
1924 ஒப்பந்தத்திற்குப் பிறகு தமிழகத்தில் மேட்டூர் அணையும், கர்நாடகத்தில் கிருஷ்ணராஜசாகர் அணையும் கட்டப்பட்டது. இரு அணையும் முறையே 1934, 1932ம் ஆண்டில் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது.
1947ல் சுதந்திரம். 1956ல் மொழிவாரி மாகாணங்கள் பிரிப்பு. இதனைத் தொடர்ந்து, மைசூர் அரசு - கர்நாடகா ஆனது. சென்னை மாகாணம்- தமிழ்நாடு ஆனது. காவிரியில் கலக்கும் கபினி நதி இப்போது கேரளாவின் வசம் போனது. ஹைதராபாத்,பம்பாய் சமஸ்தானங்களின் பல பகுதிகள் கர்நாடகாவில் இணைந்தது. இப்படி மாநில எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டது. இதே காலகட்ட்த்தில் மாநிலக் கட்சிகளின் கை தமிழகத்தில் ஓங்கத் துவங்கியது.இந்த சூழலில்தான், காவிரியில் கிளை நதிகள் மட்டுமல்ல பல அசிங்கமான, அரசியல் நகர்வுகளும் கலக்கத் துவங்கின.
1960களில் பிரச்னை தலையெடுத்தது:
எதனால்..? 1960களின் பிற்பகுதியில் கர்நாடகம் தனது பகுதியில் சிறு நீர்த்தேக்கங்களைக்கட்டத்துவங்கியதால்தான். தனக்கு வரும் தண்ணீர் குறைந்துவிடும் என எதிர்ப்பு தெரிவித்தது தமிழகம். மத்திய அரசிடம் முறையிட்டது. மத்திய அரசு இருதரப்பையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியது. பயனில்லை. இருதரப்பும் பேசி தீர்வு கிடைக்கவில்லை என்பதால், இனி நடுவர்மன்றம்தான் பிரச்னையைத் தீர்க்கமுடியும் என்று கருதி 17-02-1970 அன்று தமிழக அரசு, மத்திய அரசிடம் முறையிட்டது.
உச்சநீதிமன்ற வழக்கு - காவிரி-உண்மை அறியும் குழு அமைப்பு:
தீர்வு எதுவும் கிடைக்காததால், 1971ல் தமிழக அரசு (கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது) உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. ஆனால், அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் நிர்பந்தத்தால் வழக்கு வாபஸ் பெறப்பட்டது (திரும்பத் தாக்கல் செய்யும் உரிமையுடன்). இச்சமயத்தில்தான் காவிரி-உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் பணி, கடந்த காலங்களில் காவிரி நீர் பயன்பாடு, பங்கீடு குறித்த விவரங்களைத் திரட்டுவதேயாகும். 1972ல் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்த இக்குழு, 1973ல் இறுதி அறிக்கையை அளித்தது.
50 ஆண்டு ஒப்பந்தம்(1924-1974) மறுவரையறை தொடர்பாக, அன்றைய மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சராக(1974-77) இருந்த பாபு.ஜெகஜீவன்ராம் அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட 4 மாநிலங்களும் (தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ) கிட்டத்தட்ட ஒத்துக்கொள்ளும் ஒரு நிலை இருந்தது. ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக வந்த ”எமெர்ஜென்சி” இம்முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையானது.
தமிழகத்தில் எமர்ஜென்சி முடிந்து எம்.ஜி.ஆர்.(அ.தி.மு.க) ஆட்சிக்கு வந்தார். அவரும், பலமுறை கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி நதிநீர் பங்கீட்டை முறைப்படுத்த முயன்றார். பிரச்னை தீரவில்லை.
இறுதியாக நடுவர்மன்றம்தான் தீர்வு என்ற நிலைக்கு வந்தார் எம்.ஜி.ஆர்.
காவிரி நடுவர் மன்றம் அமைப்பு ( 1990 )
பேச்சுவார்த்தை வளர்ந்தது. பயிர் வளரவில்லை. நாளுக்கு நாள் காவிரியில் வரும் தண்ணீர் குறைந்தது. (கர்நாடகத்தின் பாசன பரப்பு அதிகரித்துக்கொண்டே வந்தது.). கருகும் பயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கருதிய பொன்னுசாமி ரெட்டியார், மன்னார்குடி ரங்கநாதன் தலைமையிலான ”தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விளைபொருட்கள்,விவசாயிகள் நல உரிமைப் பாதுகாப்பு சங்கம்” இனி பொறுப்பதில்லை என்று முடிவெடுத்து. உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது(1983ல்). இரண்டு மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் பங்கீடு தொடர்பிலான விவகாரத்தில் விவசாயிகள் சங்கம் வழக்குத் தொடுக்க முடியாது என்ற சட்டச் சிக்கல் எழுந்தபோது இதைத் தமிழக அரசின் வழக்காகவே கருதுங்கள் என்று உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் அளித்தது எம்.ஜி.ஆர் தலைமையிலான தமிழக அரசு (1986ல்). கொளரவம் பார்க்காமல் கடிதமளித்து வழக்கைக் காப்பாற்றிய எம்.ஜி.ஆரின் பெருந்தன்மையைப் பாராட்ட வேண்டும்.
சட்டநுணுக்கங்களோடும், புள்ளிவிவரங்களோடும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வேறுவழியில்லை என்ற நிலை உருவாகிவிட்டதால், உடனே நடுவர்மன்றம் அமைக்க ஆவண செய்யுமாறு அப்போதைய பிரதமராக இருந்த வி.பி.சிங்கிற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதற்கிணங்க, காவிரி நடுவர்மன்றம் நீதிபதி.சித்ததோஷ் முகர்ஜி தலைமையில் 02-06-1990 அன்று அமைக்கப்பட்டது.
ஆளுநர் உரை: எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்!
தங்கள் அரசின் அடிப்படைப் பணிகள் என்னவாகயிருக்கும் என்பதன் தொகுப்பாகத்தான் ஆளுநர் உரை அமைந்துள்ளது. உரையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்த அரசானது கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவருதல், உச்சநீதிமன்றத்தின் அமர்வை சென்னையில் அமைத்தல், உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்குதல் போன்ற நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்ற முழுமூச்சுடன் பாடுபட வேண்டும். பன்னாட்டு முதலீடுகளை ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ‘‘தமிழ்நாடு முதலீட்டாளர் ஊக்குவிப்பு ஆணையம்’’ என்ற முன்னெடுப்பு வரவேற்கத்தக்கது.
ஒன்றிய அரசானது தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதிப்பகிர்வை சட்ட ரீதியாகப் போராடிப் பெறுவதற்கு சட்ட வல்லுனர்கள் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்படும் என்பது அவசியமானதொரு நடவடிக்கையாகும். அதேசமயத்தில் நிதிப்பகிர்வு உள்ளிட்ட ‘‘கூட்டாட்சி மற்றும் மத்திய மாநில உறவுகள்” குறித்து மறுஆய்வு செய்து தீர்வுகளைத் தருவதற்காக 2025ல் தமிழ்நாடு அரசால் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி. திரு.குரியன் ஜோசப் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் வழங்கிய பரிந்துரைகளை தவெக அரசு பரிசீலித்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
நகரமயமாதல், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில் குடிநீர், உள்கட்டமைப்பு உள்ளிட்ட சில திட்டங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் கிராம பஞ்சாயத்துகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்துவதற்காக கூடுதல் நிதி மற்றும் கிராம சபைகளுக்கு உரிய அதிகாரம் வழங்கப்படுவது, உள்ளாட்சித் தேர்தல் குறித்து எந்தக்குறிப்பும் இல்லாதது வருத்தமளிக்கிறது.
ஆளுநர் உரையில் காவிரிப்பிரச்னை, போதை கலாச்சாரம் ஒழிப்பு, பாலியல் வன்முறை போன்றவற்றைக் கையாள்வதில் மென்மையான போக்கே காணப்படுகிறது. இவற்றில் கடுமையான நிலைப்பாட்டை - செயல்பாட்டை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரின் ஆளுநர் உரை என்பதால் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் இருந்தது. அந்த எதிர்பார்ப்பை ஆளுநர் உரை நிறைவேற்றவில்லை.
ஆ. அருணாச்சலம் MA., BL., @Arunachalam_Adv
பொதுச்செயலாளர்,
மக்கள் நீதி மய்யம்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
இயற்கையோடு இயைந்து வாழும் தமிழருக்கு இளவேனில் தொடங்குகிறது. உலகத் தமிழர்களின் வாழ்வு உவந்து செழிக்கட்டும், தமிழினத்தின் பெருமையை உலகறியட்டும், தமிழ்ப் புத்தாண்டு நாளில் வாழ்த்தி மகிழ்கிறேன்.
The leak of #Jananayagan is not an accident - it is the result of systemic failure. Had due process been timely, we would not be here. Inordinate delays in certification created fertile ground for piracy. When legal access is stalled, illegitimate channels take over.
Piracy is beyond politics; it is an attack on the art and artist itself. It endangers the work of hundreds of artists and technicians, and the investments of honest tax paying producers, exhibitors and theatre owners, all who sustain the cinema we love.
Who protects the creator when the system fails? We need accountability, swift certification, strict enforcement, and real-time takedowns.
I trust true lovers of cinema will unite and give a befitting response by watching the film legally in theatres, as you stood with me in the past.
"... We have to choose a path. And the direction we choose will determine our character and our nation for generations to come".. says @ikamalhaasan in the book release event.
#HATRIOTISM@maiamofficial@MaiamOfficialIT
@ikamalhaasan@POTUS "பரஸ்பர மரியாதை மட்டுமே உலக அமைதிக்கான அடிப்படை. ஒரு சுதந்திர தேசமாக, நமது முடிவுகளை நாமே எடுக்கும் வலிமை நமக்கு உண்டு. தேச நலனே முதன்மையானது! உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள், எங்கள் பாதையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். 🤝✨"
@ikamalhaasan@maiamofficial
@ikamalhaasan@POTUS It is this guts for which we salute from our deepest core of our Heart Sir. We, the people, the common collectives, of our sovereign nation India, need the leaders like you, Sir. Respect and love for what you are doing and how you are.
ஏற்கனவே பீகார், காகிதங்களில் மட்டுமே உயிருடன் இருக்கும் பல “உயிருள்ள இறந்தவர்கள்” மாநில மாகிவிட்டது.
இந்த நோய் நாடு முழுவதும் பரவ விட வேண்டாம்
தமிழ்நாட்டில் காகிதங்களில் மட்டும்
1 கோடி ‘உயிருள்ள இறந்தவர்கள்’ இருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.2/3
#KamalHaasan_MP@maiamofficial
தேர்தல் ஆணையம்;
எங்களுக்கு வேண்டியது எங்கள் வாக்கை பதிவு செய்யும் உரிமை.
எழுத்துப் பிழைகள் மொழிகளுக்கான சாபமாக இருக்கலாம்.
ஆனால் நவீன இலக்கியம், இணையம் அவற்றை மன்னிக்கிறது.
தேர்தல் ஆணையம் மட்டும் பிழை ஏற்காது
EC என்றால் English Coach அல்ல.1/3
-#KamalHaasan_MP@maiamofficial
எங்கு ஆரம்பிப்பது என்ற குழப்பம் என்னுள்..மறக்க முடியாத நாள் இன்று..இத்திரைத் துறைக்குள் வர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உருவாக மிக முக்கிய காரணமாக அமைந்த ஒரு மாபெரும் மனிதர்..
"உலகநாயகனோடு" ஒரு மிக முக்கிய சந்திப்பு நல்ல முறையில் நடந்ததை எண்ணிப் பெருமை கொள்கிறேன்❤️
#KamalHaasan