இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், @ashwinravi99! 🎂🇮🇳
இந்திய கிரிக்கெட்டின் மகத்தான சாம்பியன்களில் ஒருவர். உங்கள் அறிவு, துல்லியம், போராட்ட குணம் மற்றும் சாதனைகள் இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் அழியாத தடம் பதித்துள்ளன. உங்கள் கிரிக்கெட் பாரம்பரியம் தலைமுறைகளை என்றும் ஊக்குவிக்கட்டும்! 🏏💙
பிறந்தநாள் வாழ்த்துகள், அஷ்வின்! 🙏
CSK fans insult Deepak Chahar when they say 'We won a trophy with him' Lol, when he was with us, he was the best young swing bowler in IPL. He was guaranteed to take a wkt or 2 in PP of every match, his pace was higher, he was fitter and even contributed with the bat.
💡A shout out to @pmanojprabakar for whatever he's been doing for years. He always comes up with some gutsy sets👌
In his latest political set, he went after all leaders, Modi, MKS, Edappadi etc. Sharing one he did on Udhay na.
For full video: https://t.co/2ruPNCyHIU
"சூரியன் மறையாத பேரரசு" என்று பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை ஒரு காலத்தில் சொன்னார்கள். அதற்கு அவர்கள் வைத்திருந்த ஒரே ஆயுதம் - துல்லியம் (Precision) மற்றும் வேகம். 200 ஆண்டுகளுக்கு முன்பே, புறாக்களையும் பாய்மரக் கப்பல்களையும் வைத்துக்கொண்டு உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் போரிட்டு வென்றார்கள்.
ஆனால் இன்று? கையில் அதிநவீன தொழில்நுட்பம், சூப்பர் கம்ப்யூட்டர்கள், 5G இணையம் என எல்லாம் இருந்தும்... நம் ஊர் TNPSC என்ன செய்கிறது?
பிப்ரவரி 8, 2026. Group IIA Mains தேர்வு. ஒரு வருட கால உழைப்பு, ஆயிரக்கணக்கான கனவுகள், தூக்கமில்லா இரவுகள்... இவை அனைத்தையும் ஒரு "Technical Glitch" (தொழில்நுட்பக் கோளாறு) என்ற ஒற்றை வார்த்தையில் தூக்கி எறிந்துவிட்டது இந்த 100 ஆண்டுகால நிறுவனம்.
இங்கே கவனிக்க வேண்டிய சில கசப்பான உண்மைகள்:
தொழில்நுட்பத் தோல்வி: இன்று ஒரு பள்ளி மாணவன் கூட சில மணி நேரங்களில் ஒரு செயலியை (App) உருவாக்கி விடுகிறான். ஆனால், பல கோடி ரூபாய் பட்ஜெட் கொண்ட ஒரு அரசு அமைப்பு, மாணவர்களுக்குச் சரியான தேர்வு மையத்தை ஒதுக்கீடு செய்யத் தெரியாமல் திணறுவது வேடிக்கை அல்ல, வேதனை!
பொறுப்பற்ற போக்கு: இது முதல் முறையல்ல. TNPSC ஆகட்டும், TRB அல்லது TNUSRB ஆகட்டும் - தேர்வு முறைகேடு, வினாத்தாள் குளறுபடி, மைய ஒதுக்கீடு குழப்பம் என ஒவ்வொன்றிலும் ஒரு 'சறுக்கல்' அரங்கேறுகிறது. ஆனால் இதுவரை எந்த உயர் அதிகாரியாவது இதற்குப் பொறுப்பேற்று பதவி விலகியது உண்டா? 'Accountability' என்பது இவர்களின் அகராதியிலேயே இல்லை.
மனசாட்சியுள்ள அதிகாரி: இந்த இருட்டிலும் ஒரு சிறிய ஒளிக்கீற்று. தேர்வு மையத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் வலியைப் புரிந்து கொண்ட அந்த அதிகாரிக்கு நன்றிகள். "இன்று தேர்வை நடத்திவிடலாம், ஆனால் அது ஒரு வருடம் உழைத்த மாணவர்களின் மனநிலையைப் பாதிக்கும்" என்று அவர் சொன்ன அந்த வார்த்தைகளில் இருந்த 'Empathy' (பரிவு), TNPSC-யின் மொத்த சிஸ்டத்திலும் இருந்திருக்க வேண்டும்.
ஒரே ஒரு கேள்வி: 200 ஆண்டுகளுக்கு முன்பு பாய்மரக் கப்பலில் சென்ற பிரிட்டிஷாரால் சரியாகத் திட்டமிட முடிந்தது. ஆனால், டிஜிட்டல் இந்தியாவில், தமிழ்நாட்டின் தலைசிறந்த அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கும் ஒரு அமைப்பால் ஒரு தேர்வு மையத்தைக்கூட ஒழுங்காக ஒதுக்க முடியவில்லையா?
இது வெறும் 'தொழில்நுட்பக் கோளாறு' அல்ல; இது நிர்வாகத்தின் அலட்சியக் கோளாறு! @TNPSC_Office@CMOTamilnadu
அமெரிக்கா செல்வதற்கு கொடுக்கும் மறைமுகமான விலைகள் சில உண்டு.
அவற்றைப் புரிந்துகொண்டு செல்லுங்கள்
அவை:
1. திரும்ப வரமாட்டீர்கள்.
இது கட்டாயம், நூறு சதவிகிதம் நிகழும் ஒரு விளைவு போய்விட்டு படிப்பு முடித்துவிட்டு உடனே வருகிறேன் என்று சொல்வதெல்லாம் பொய்.
அந்த நாடு உங்கள் மேல் படரும் நாடு. ஒரு ஆக்டோபஸ், அல்லது மலைப்பாம்பின் இறுக்கம் போல அது உங்களை விடாது. அதன் கிரெடிட் கார்டு சமூகத்தில் உங்களை மூன்றாவது தலைமுறை வரை கடன் வாங்க வைத்துவிடுவார்கள்.
மீளவே முடியாத கடன் சொர்க்கம் அது. அதைத் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.
2. அங்கே போனபின் உறவு, பாசம் இவற்றுக்கெல்லாம் புதிய அர்த்தங்கள் தோன்றும்.
எதற்காக அப்பா அம்மாவைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கடமையைச் செய்தார்கள்.
வருஷம் ஒரு முறை ஃபாதர்ஸ் டே, மதர்ஸ் டே கார்டு அனுப்பினால் போதும் அல்லது அவ்வப்போது நூறு டாலர், இருநூறு டாலர்,
இப்படித் தோன்றும் இந்த எண்ணத்தையும் தவிர்க்க முடியாது.
குறிப்பாக, பிசுநாரித்தனம் அங்கு கொஞ்சம் அதிகமாகும்.
3. அங்கே போய் நிறைய சம்பாதிக்கத் தொடங்கியதும் இந்திய விஷயங்கள் மேல் ஒரு ஏளனம் உங்களுக்கு தோன்றும்.
என்னப்பா உங்க ஊர்ல சரியா ஒரு டாய்லெட் கட்டமாட்டாங்களா.
வாட் ட்ராஃபிக் ?
ஐம் கெட்டிங் ம்யாட்.
ரோடுல ஒண்ணுக்கு போறவரைக்கும் உங்க தேசம் உருப்படாது… (கவனிக்கவும் உங்க ஊர்....உங்க தேசம்)
4. தமிழ் பேசும் வழக்கத்தையும் மெல்ல இழக்க வேண்டியிருக்கும்.
நாங்கள் தமிழில் பேசினால் நீங்கள் இங்கிலீஷில் பதில் சொல்வீர்கள்.நாளடைவில் தமிழ் படிக்கவே மறந்து போய்விட்டது என்று புளுகுவீர்கள்.
இந்தப் பக்கவிளைவுகள் எல்லாம் பரவாயில்லை என்றால் தாராளமாக வெளிநாடு செல்லுங்கள்.
அண்மையில் நான் ஹாசன் சென்றிருந்தேன்.
கர்நாடக மாநிலத்தின் மத்தியில் உள்ள சிறிய டவுன்.
அங்கே இன்சாட் 2-இ செயற்கைக்கோளின் கட்டுப்பாட்டுக் கேந்திரம் உள்ளது.
பல இளம் இன்ஜினீயர்களைச் சந்தித்தேன்.
24 மணி நேரமும் இந்தியாவின் செயற்கைக்கோளை திசை பிசகாமல் கட்டுப்படுத்தும் ஷிஃப்ட் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கேட்டேன்.
அமெரிக்கா போயிருக்கலாமே
அவர், போயிருக்கலாம். அட்மிஷன் கூட கிடைத்தது, ஸ்காலர்ஷிப்புடன் என்றார்.
ஏன் போகலை?
எல்லாரும் போய்ட்டா எப்படி? ஒன்றிரண்டு பேர் தங்கி நாட்டுக்கு சேவை செய்ய வேண்டாமா என்றார்.
கார்கிலிலிருந்து துவங்கி நம் பிற்பட்ட கிராமங்களில் வயற்புறங்கள் வரை பணிபுரியும் இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மேல்தான் எனக்கு மரியாதை.என்னைக் கேட்டால் இங்கேயே இருந்துகொண்டு எல்லா அசௌகரியங்களுக்கு மத்தியிலும் எதாவது சாதிக்கும் இளைஞர்கள் இந்நாட்டின் கண்கள்,
நீங்களோ,நீங்கள் அனுப்பப்போகும் டாலரோ அல்ல,தாராளமாக செல்லுங்கள்.
சம்பாதியுங்கள்.
ஆனால், இந்தியாவைக் கேலி செய்யாதீர்கள்.
-இது,
எழுத்தாளர் சுஜாதா.
எழுதியது....
படித்ததில் என்னை மிகவும் பாதித்தது.
எத்தனை தலைமுறைக்கும் இது பொருந்தும்.

#பகிர்வு
ஆங்கிலத்தில் Logical Thinking என்றொரு பதம் உண்டு. தமிழில் சொல்வதானால் தர்க்க ரீதியான சிந்தனை. எந்த ஒரு விஷயத்தை பற்றி முடிவுக்கு வரும் முன்னர் அதன் காரண காரியங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
ஆனால் வெறுப்பை பரப்புவதற்கு மூளையே தேவையில்லை என்கிற போது, திராவிட கொத்தடிமைகளுக்கு மூளையே இல்லை என்கிற போது அவர்களிடத்தில் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது.
1960-70 காலகட்டங்களில் தமிழர்கள் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தோம். குடும்ப கட்டுப்பாடு பற்றிய கவலையே இல்லாமல் ஒவ்வொரு வீட்டிலும் 9, 10 குழந்தைகளை பெற்றெடுத்த காலம். என் தந்தையுடன் பிறந்தவர்கள் 9 பேர். என் வயதை சேர்ந்தவர்களின் தந்தை, தாய், தாத்தா பாட்டி குடும்பங்கள் கணக்கெல்லாம் இப்படித்தான் இருக்கும்.
இன்று நம்மிடம் கேஸ் அடுப்பு, மிக்சி, கிரைண்டர் எல்லாமே இருக்கிறது. அப்படி இருந்தும் 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு தோசை ஊற்றுவதற்கு குறைந்தது அரைமணி நேரமாகும். தோசைக்கு தொட்டுக்கொள்ள சட்னி சாம்பார் என்றால் அதற்கும் கூடுதல் நேரமாகும். 4 பேருக்கே இப்படி என்றால், வீட்டில் 10-15 உருப்படிகளுக்கு சமைத்து போடுவதென்பது எவ்வளவு பெரிய வேலை. அதுவும் 15 பேருக்கு தோசை ஊற்றுவதை கற்பனை செய்து பாருங்கள். பஜ்ஜி. சொஜ்ஜி, வடை, இட்லி எல்லாவற்றுக்கும் இதே பிரச்சினை தான்.
கிரைண்டர் இல்லாத காலத்தில் 15 பேர் இட்லி தோசை சாப்பிட ஆட்டாங்கல்லில் மாவாட்ட வேண்டும் என்பதை நினைத்து பாருங்கள். அதே போல் அம்மிக்கல்லில் சட்னிக்கு அரைக்க வேண்டும். அல்லது குண்டான் நிறைய சாம்பார் வைக்க வேண்டும். எப்பேர்ப்பட்ட பணக்காரன் வீடாக இருந்தாலும் இது தான் நிதர்சனம்.
அதனால் தான் பண்டிகை நாட்களில் இட்லி, தோசை,பலகாரம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள். பண்டிகை, திருவிழா காலங்களில் சொந்த பந்தங்கள் ஒன்றாக கூடுவார்கள். வேலைகளை பகிர்ந்து கொள்ள முடியும். எளிமையாக யோசித்தால் இதற்கு பின்னாலிருந்த காரணம் புரியும். இவ்வளவு தான் விஷயம்.
கூட்டு குடும்பத்தில் இருந்து வெளியேறி நியூக்கிளியர் பேமிலி ஆன பிறகு, கேஸ், மிக்சி, கிரைண்டர் அனைத்தும் தொழில் நுட்ப வளர்ச்சியில் எல்லோருக்கும் கிடைக்கும் நிலை வந்த பிறகு தான், நினைத்த நேரத்தில் இட்லி, தோசை, மழை பெய்தால் பஜ்ஜி, காபி வித் இளையராஜா என்று வாழ்கிறோம்.
அதே போலத்தான் அசைவம் சாப்பிடுவதும். தீபாவளி அல்லது ஊர் திருவிழா காலங்களில் வருடத்துக்கு ஒருமுறை கறிசோறு சாப்பிட்டாலே அதிகம். காரணம் அப்போது ஆடு, கோழி வீட்டு பிராணிகளாக மட்டுமே இருந்தன. நினைத்த நேரத்தில் சிக்கனோ, மட்டனோ கிடைக்காது.
poultry சிக்கன் வந்த பிறகு தான் தமிழர்களின் அசைவ நுகர்வு மாறியது. அதுவும் டெக்னலாஜி கொடுத்த மாற்றம்.
டெக்னலாஜி➡️ ப்ரொடக்ஷன் ➡️ டிஸ்ட்ரிபியூஷன் ➡️மக்களின் வாங்கும் திறன் இவையெல்லாம் ஒரே நேர்கோட்டில் வரும் போது சமூக மாற்றம் நிகழ்கிறது. இதெற்கெல்லாம் யாருக்கும் கிரெடிட் கொடுக்க முடியாது.
சிந்திக்கும் திறனற்ற திராவிட கொத்தடிமைகளுக்கு பிராமண எதிர்ப்பை தவிர வேறொன்றும் தெரியாது. பிராமணர்கள் எல்லோரும் செல்வச்செழிப்புடன் வாழ்ந்தார்கள் என்று கட்டுக்கதைகளை பரப்பி வெறுப்பு பிரச்சாரம் செய்வது மட்டும் தான் இவர்களுக்கு கைவந்த கலை. திமுகவால் தான் இங்கே கோமணம் கட்டினோம், திமுக வந்த பிறகு தான் பல்லு விளக்கினொம் என்று மக்களை அடிமைப்படுத்தும் வேலையை தான் இந்த திராவிட கொத்தடிமைகள் செய்கிறது.
என் அம்மா திருமணமாகி வரும் வரை தினசரி இரண்டு வேளை சாப்பாடு கிடைத்தாலே அதிசயம் தான். அன்றாடங்காய்ச்சியாக இருந்த தாத்தா ஒரு அனா இரண்டு அனா சம்பாதித்து கொண்டு வந்தால் அதை வைத்து தான் 5 பேர் சாப்பிட வேண்டும். இள வயதில் மின்சார வாரியத்திற்கு கம்பம் தூக்க சென்றவர் தான் என் தந்தை. அப்படி ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி பின்னாளில் அரசு வேலை பெற்றவர்கள் தான் தமிழகத்தில் அதிகம். அதனால் யாரும் இங்கே கஷ்டமே படாமல் வந்து விட முடியாது.
இங்கே எல்லோருக்கும் ஒரு கதை இருக்கிறது .
இது போன்ற முட்டாள்தனமான பிரச்சாரத்தை நம்பாமல் ஏன் ? எதற்கு? என்று கேள்விகள் கேட்டு வரலாறை புரிந்து கொள்ளுங்கள்.
எப்பவாச்சும்... உங்க வாழ்க்கையில உங்க அப்பாவுக்கு பாதி வயசுக்கு இளையவன் உங்க அப்பாவ பெயர் சொல்லி, வா போ னு பேசுறத கேட்டுருக்கிங்களா? அப்படி கேட்டும் ஒன்னும் சொல்ல முடியாம நின்னுருக்கிங்களா? 1/n
If a media agency does something like this in Europe or US, they will be slapped out of existence with multiple legal suits for sharing PII data.
We have the most chutiya media on this planet.