எனக்கு அங்க யாரையுமே தெரியாது. எப்படி கல்யாணத்துக்கு போயி முறை செஞ்சிட்டு வர சொல்றீங்க? தனியா எப்படி போவேன்? என ஒரு முறை நான் பெற்றவர்களிடம் கேட்டு கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆகி இருக்கும்.
அப்போது என் அண்ணன் சொன்னான். நம்ம செல்லம் பெரியப்பா இருக்காரு இல்ல.. அவர் எப்படியும் அங்கு இருப்பாரு. அவர போய்ப் பாரு அவரு எல்லாம் பாத்துக்குவாரு என்றான்.
செல்லம் பெரியப்பா, எனக்கு தூரத்து உறவு முறையில் பெரியப்பா. ஆனால் சொல்லப்போனால் மற்ற பெரியப்பா சித்தப்பாக்களிடம் பேசிய, பழகிய நேரங்களை விட அவரிடம் பழகியது அதிகம். நான் மட்டுமல்ல எங்கள் உறவில் எல்லோருமே அவரிடம் பேசியது தான் அதிகமாக இருக்கும்.
அவர் ஒரு காய்கறி கமிஷன் மண்டியில் வேலை பார்த்து வந்தார். எங்கள் ஊரைச் சுற்றி இருக்கும் கிராமங்களில் இருந்து, தக்காளி, வாழை என்ற எந்த விளைச்சலாக இருந்தாலும், அங்கே வரும்.
சாயந்திர நேரத்திலிருந்து உள்ளூர் வெளியூர் வியாபாரிகள் அங்கே வருவார்கள். தக்காளி போன்றவை ஏல முறையில் விற்கப்பட்டு, வாங்கிக் கொண்டு போவார்கள். வெளியூர் வியாபாரிகள் அங்கு இருந்து வண்டிகளில் ஏற்றிக்கொண்டு போவார்கள்.
இவர் அந்த மண்டியில் ஒரு மேனேஜர் போல இருந்தார். கை சுத்தமானவர் என்பதால், கமிஷன் மண்டி உரிமையாளரிடம் நல்ல பெயர். வழக்கமாக காய்கறி கொண்டு வரும் விவசாயிகள், களை எடுக்க, மருந்து அடிக்க என கடன் கேட்டால் உரிமையாளரிடம் சொல்லி வாங்கித் தருவார். வியாபாரிகளிடம் நைச்சியமாக பேசி அட்வான்ஸ் பணத்தை வாங்குவார். எந்த சூழலிலும் கடுகடுவென இருக்க மாட்டார். அதனால் அவருக்கு அந்த வட்டாரத்தில் நல்ல பெயர்.
அதைவிட அவர் திருமண வீடுகளில் நடந்து கொள்வது. பொதுவாக நிறைய பேர் மணமேடை ஏற, சாப்பிடச் செல்ல கொஞ்சம் சங்கோஜப்படுவார்கள்.
ஆனால் பெரியப்பா அப்படி வருபவர்களிடம் கலகலவென பேசி மணமேடையில் ஏற்றி, போட்டோ எடுக்க வைத்து, அங்கே ஒரு சுமூகமான சூழலை உருவாக்குவார்
அதேபோல பந்தி தொடங்கியதும் அங்கே நடு நாயகமாக நின்று கொள்வார். எப்பா ரசம் இங்க ஊத்து. என் மருமகனுக்கு பாயாசம் ஊத்துப்பா.. ராசக்கா பேரன், சின்ன பையன் அவன் இந்த காயெல்லாம் வச்சு சாப்பிடுவானா இன்னொரு அப்பளம் வைப்பா.. என பந்தி விசாரித்துக் கொண்டே இருப்பார்.
துக்க வீடுகளிலும், பலருக்கு எப்படி கேட்பது, என்பது போன்ற சங்கடங்கள் இருக்கும். பெரியப்பா அவர்களை அழைத்துச் சென்று அவரே பேசத் துவங்கி விடுவார். உடன் சொல்பவர்கள் முகத்தை கொஞ்சம் சோகமாக வைத்துக் கொண்டு தலையாட்டிக் கொண்டிருந்தால் போதும்.
இதே போல உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனைகளில் இருப்பவர்களை பார்க்க போகவும் அவர் ஒரு பெரிய துணை. Ice breaking என்கிற வார்த்தை எல்லாம் பின்னாளில்தான் கேட்டது. ஆனால் அவர் சொந்தங்களுக்கு இடையே ஒரு மிகப்பெரிய ஐஸ் பிரேக்கராக இருந்து வந்திருக்கிறார்.
கமிஷன் மண்டியில் மாலையில் இருந்து இரவு வரை தான் என்பதால் பகல் நேரங்களில் பெரிதும் இந்த மாதிரி உதவிகர வேலைகளைச் செய்வார்.
தீபாவளி நேரங்களில் பட்டாசு கடை போடுபவர்கள், பண்டு பொருள்களை பிரித்துக் கொடுப்பவர்கள் என எல்லோரும் அவர் வந்தால் நல்லா இருக்குமே என்று உதவிக்கு அழைத்துக் கொள்வார்கள். அவ்வளவு ஏன் ஞாயிற்றுக்கிழமை கறிக்கடை போடும் ஒருவர் கூட அவரை துணைக்கு வைத்துக் கொள்வார். கலகலவென பேசி வியாபாரம் பார்த்துக் கொடுத்து விடுவார்.
மனித மனம், எங்கு சென்றாலும் ஒரு அங்கீகாரத்தை தேடிக் கொண்டே இருக்கிறது. என்னப்பா நல்லா இருக்கியா, வீட்ல யாரும் வரலையா, என எந்தவித உள்குத்தலும் இல்லாமல் சரளமாக பேசத் துவங்கும் ஒருவரிடம் அவர் சொல்வதை கேட்டுக் கொள்வோம் என்று சரணடைந்து விடுகிறது.
அன்றும் அப்படித்தான். என்னைப் பார்த்ததும் பேசி மணமேடைக்கு அழைத்துச் சென்று, யார் தெரியும்ல இன்னொரு பேரன்.. என்று அறிமுகப்படுத்தி நிற்க வைத்து போட்டோ எடுத்து, பந்தி துவங்கும் போது அழைத்துச் சென்று உட்கார வைத்து, வேற என்னய்யா வேணும் பால் கூட்டு கொஞ்சம் வைக்க சொல்லவா என்றெல்லாம் அவ்வப்போது வந்து கேட்டு.. மிகவும் எளிதாக கடந்தது அந்த நாள்..
அதிலிருந்து, எந்த நிகழ்வானாலும் அவரிடம் போய் நின்று விடுவது. ஆனால் அவருடைய பையன், அவருக்கு அப்படியே ஆப்போசிட். இப்போதுதான் இன்டரவெர்ட் என்கிற சொல்லை எல்லாம் கேள்விப்படுகிறேன். அப்போது ஊமை கோட்டான் என்று சொல்வார்கள். யாரிடமும் மிகவும் பழக மாட்டான். எங்கே சென்றாலும் தன் இருப்பைக் காட்டாமல் இருந்து கொள்வான்.
என் பாட்டியிடம் ஒரு முறை இதைப் பற்றி நான் கேட்டபோது. இப்பத்தான்டா உன் பெரியப்பன் சோழிய உருட்டி விட்ட மாதிரி கலகலன்னு இருக்கான். சின்ன வயசுல அவனும் அவன் மகன் மாதிரி தான் இருந்தான். எதுக்கும் ஒரு காலம் வரணும் இல்ல என்றார். இன்னொரு விஷயம்
@Piramachari https://t.co/E6gmF4rTNH
இந்தியாவில் உடல் உறுப்பு தானம் செய்றவங்க பெரும்பாலும் பெண்கள். அத பெறுபவர்கள் ஆண்கள். ஒரு ஆணுக்கு உறுப்பு தானம் செய்றது பெரும்பாலும் அவங்க அம்மா/மனைவி. தியாகம் செய்றது குடும்ப கடமைகளில் ஒன்னொன்னு பெண்களை நம்ப வெச்சதோட பலன். இதையும் பேசலாமே.
மனிதர்கள் பெரும்பாலும் நேர்மையானவர்கள் தான். அவர்கள் குறைந்த அளவு முயற்சியாவது எடுப்பார்கள் என கட்டாயம் நம்பலாம். பர்ஸ் கிடைக்காமல் போனால் அது தொடர்பு பிரச்சினையால் இருக்கும்
நாலு நாள் ஆகிருச்சு, பர்ஸ் தொலைஞ்சு. நானும் அதுல இருக்க விபரங்கள் வச்சு யாராவது போன் பண்ணுவாங்க, அட்ரஸ் வச்சு தந்துருவாங்கனு பாத்தேன் 😑 ATM, Credit cards அ முடக்கிட்டாலும் original DL,இன்னும் எல்லா cards ம் இருக்கு. ATM ல பணம் எடுத்துட்டு, டூ வீலர்க்கு பெட்ரோல் போட்டு வீட்டுக்கு வர்றப்ப விழுந்துருச்சு போல. வீட்டுக்கு அருகில் தான். ஆனாலும் கிடைக்கும்ன்ற நம்பிக்க போய்ருச்சு 🤞 எதுக்கு இந்த ட்விட்னா, ஆதார்ல மொபைல் நம்பர ஏன் ப்ரிண்ட் பண்ண மாட்றானுகங்க? Pan,DL ,எதிலயும் இல்ல. ஆனா ஆதார்ல மொபைல் நம்பர் முகவரியோட ப்ரிண்ட் பண்ணலாம்.
:)
இதுல நான் பண்ண unusual event, schooty க்கு பெட்ரோல் போடப்போனது..நார்மலா வீட்ல பண்ணிருவாங்க. ஒரு வேலை சொன்னாங்களேனு பண்ணது 😏😑😁 இதுக்குத்தான் சும்மாவே இருந்துர்றது.
பெங்களூர்ல பஸ்ல நான் தொலைத்த பர்ஸ்ட்அ ஒரு மாதம் முயற்சி செய்து என்னிடம் ஒருவர் ஒப்படைத்தார். பர்ஸ ஆதார்ல இருக்க என் அட்ரஸீக்கு அனுப்பி அது ஏதோ காரணத்தால் திரும்பி போய் பின்னாடி என் card இருக்க பேங்க தொடர்பு கொண்டு என் போன் நம்பர் வாங்கி என்னை கூப்பிடு கொடுத்தது ஒரு நல்ல உள்ளம்.
நாலு நாள் ஆகிருச்சு, பர்ஸ் தொலைஞ்சு. நானும் அதுல இருக்க விபரங்கள் வச்சு யாராவது போன் பண்ணுவாங்க, அட்ரஸ் வச்சு தந்துருவாங்கனு பாத்தேன் 😑 ATM, Credit cards அ முடக்கிட்டாலும் original DL,இன்னும் எல்லா cards ம் இருக்கு. ATM ல பணம் எடுத்துட்டு, டூ வீலர்க்கு பெட்ரோல் போட்டு வீட்டுக்கு வர்றப்ப விழுந்துருச்சு போல. வீட்டுக்கு அருகில் தான். ஆனாலும் கிடைக்கும்ன்ற நம்பிக்க போய்ருச்சு 🤞 எதுக்கு இந்த ட்விட்னா, ஆதார்ல மொபைல் நம்பர ஏன் ப்ரிண்ட் பண்ண மாட்றானுகங்க? Pan,DL ,எதிலயும் இல்ல. ஆனா ஆதார்ல மொபைல் நம்பர் முகவரியோட ப்ரிண்ட் பண்ணலாம்.
:)
இதுல நான் பண்ண unusual event, schooty க்கு பெட்ரோல் போடப்போனது..நார்மலா வீட்ல பண்ணிருவாங்க. ஒரு வேலை சொன்னாங்களேனு பண்ணது 😏😑😁 இதுக்குத்தான் சும்மாவே இருந்துர்றது.