ஆடியோ ஸ்டோரிகளின் Google Drive Link – பதிவின் இறுதியில் உள்ளது
ரம்யா வாசுதேவன் என்ற பெயர், Spotify-யில் ஆடியோக் கதைகள் கேட்கும் பலருக்கும் பரிச்சயமானது. அலுவலக வேலையையும் பார்த்துக்கொண்டே, முழுக்க முழுக்க ஆர்வத்தின் பேரில் இதுவரை சுமார் 2,500 எபிஸோட்களை உருவாக்கியிருக்கிறார். இவருடைய கதைகள் Tamil Short Stories - Under the Tree என்ற பெயரில் Spotifyல் இருக்கிறது. அதன் லிங்க்
https://t.co/V2MWB17n6g
அதில் மட்டும் சுமார் 250 ஆங்கில Motivational புத்தகங்களின் சுருக்கங்கள், 950 தமிழ் சிறுகதைகள், அதோடு சிறுவர் கதைகள், ஆன்மீகத் தொடர்கள், வாழ்க்கை அனுபவங்கள் என பல்வேறு வகையான பதிவுகள் கலந்து கட்டி உள்ளன.
இது அவருக்கு ஒரு தொழில் அல்ல; வியாபார நோக்கம் ஏதும் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு Passion (அதை பைத்தியம்னு கூட சொல்லலாம்). அவருக்கு இது ஒரு Passion Project. இந்த முயற்சியில் செலவுதான் அதிகம். நேரம் என்பது தான், நான் சொல்லும் பெரிய செலவு.
இருந்தாலும், "நான் படிச்சதை, எனக்குத் தெரிந்ததை, இவங்களும் கேட்டு விட மாட்டாங்களா?" என்ற ஒரே நோக்கத்துடன் தொடர்ந்து செய்து வருகிறார். அபாரமான அறிவும், அதைவிட அபாரமான அர்ப்பணிப்பும் கொண்டவர்.
அவர் என்னுடைய நண்பர் என்பதை விட நான் அவருடைய Well Wisher என்பது சரியாக இருக்கும். ஒருமுறை அவருடைய வீட்டிற்குச் சென்றிருந்தபோது, நல்ல சிறுகதைகளைத் தேர்ந்தெடுப்பதில் இருக்கும் சிரமத்தைப் பற்றிப் பேசினார். "பத்து கதைகள் படித்தால், ஒன்றோ இரண்டோதான் மனதைத் தொடுகிறது" என்றார்.
அதன்பிறகு, அன்று அவரிடமிருந்து 10 சிறுகதைத் தொகுப்புகளை வாங்கி வந்து, தேர்வுக்குப் படிப்பது போல படித்தேன்.
திரும்பக் கொடுக்கும் போது, சில கதைகளை பரிந்துரைத்து ஒரு ஷீட்டில் எழுதியும் கொடுத்தேன். அவருக்குப் பிடித்த சில கதைகளை சொல்லவும் செய்தார்.
அவருடைய அனைத்து எபிஸோட்களும் என்னுடைய Google Drive-ல் தான் இருக்கின்றன. அந்த வகையில், சொன்னால், நான்தான் அவருடைய "Database Administrator"!
இன்றைய காலத்தில், புத்தகம் வாசிக்கும் பழக்கம் பலரிடமும் (99%) குறைந்து வருகிறது. காரணம் என்னவென்று யாருக்குமே தெரியவில்லை. ஏதோ ஒரு அவசரம். ஒரு நிமிட வீடியோவைக் கூட ஓட்டிப் பார்க்கும் மனநிலையில் பெரும்பாலோர்.
புத்தகம் என்று வரும் போது, புத்தகத்தை எடுத்தவுடனே ஃபோனில், ஒரு Notification... அதைத் திறந்தால் இன்னொரு Link... அங்கிருந்து ஒரு Video... பிறகு இன்னொரு செய்தி... கடைசியில், புத்தகம் எடுத்த இடத்திலேயே அமைதியாகக் கிடந்து விடுகிறது!
அதனால்தான், சிலருக்கு ஆடியோ வடிவம் மிகவும் வசதியாக இருக்கிறது. நடக்கும்போதோ, பயணத்திலோ, வீட்டுப் பணிகளைச் செய்யும்போதோ கூட கதைகளைக் கேட்க முடிகிறது.
ஆடியோவைக் கேட்கவும் ஒரு மனநிலை வேண்டும் (நான் சில கதைகளைக் கேட்க ஆரம்பித்து, மனது எங்கெங்கோ போய், ஆடியோ முடிந்த விஷயமும் நடந்திருக்கிறது. ஆனால் எப்படியும் நல்ல கதையை ஒரு முறை கேட்டே தீருவோம்). கேட்ட கதைகளை தேடிக் கண்டுபிடித்து படித்தும் இருக்கிறேன்
ரம்யா வாசுதேவகனின் பெரும்பாலான எபிஸோட்களும் TED Talks பாணியில் சுருக்கமாக வடிவமைக்கப்பட்டவை. TED Talks-இல் ஒரு பேச்சு பொதுவாக 18 நிமிடங்களுக்குள் முடிவடைய வேண்டும் என்ற வழிகாட்டுதல் உள்ளது.
அதற்கு மேல் சென்றால், மனித மூளை இயல்பாகவே கவனத்தை வேறு விஷயங்களுக்குத் திருப்பத் தொடங்கும் என்பதுதான் அதன் அடிப்படை சிந்தனை.
அவருடைய ஆடியோ ஸ்டோரிகளின் Google Drive Link-ஐ கீழே இணைத்துள்ளேன்.
கேட்கும் ஆர்வம் உள்ளவர்கள் பதிவிறக்கம் செய்து, நேரம் கிடைக்கும் போது கேளுங்கள்.
https://t.co/Nqym9I2b5c
Offer your comments also.
.
23'ல கட்ட ஆரம்பிச்சோம், 4 வருசத்துல கட்டி முடிச்சுட்டோம். அப்போ salary 70K, எங்கண்ணாவும் நானும் சேந்து கட்டினது தான், Home loan போக முடியல ரெண்டு பேரும் PL தான், EMI 60K பக்கம் இருந்துச்சு, Loan weightage குறைக்க Equity'ய வித்தேன்.
30L பக்கம் கடன், Finace manage பண்ண ஒரு 2 வருசம் கஷ்டமா இருந்துச்சு ஆனா வேல பாக்குற Field அப்றம் financial planning'ம் கொஞ்சம் நல்லா வரும் அதனால ஒட்டுமொத்த கடனையும் போன 2025 டிசம்பர்ல கட்டி முடிச்சேன்.
Patriarchal டைப்ல கேள்வி அதனால சொல்றேன் என்ன தான் பசங்க நாங்க கட்டினாலும் இது கிட்டத்தட்ட 20வருச Process அதோட முதுகெலும்பு ஒரு பொம்பளயோடது, எங்கம்மாவோடது, ராதா நாய் மாதிரி பாடுபடுது , மூத்தவன் love failure னு மலேசியால போய் உக்காந்திருக்கான், சின்ன பையன் சினிமானு சுத்துறான்'னு பேசினது நானே கேட்டிருக்கேன் ஒரு தடவ.
மூனே வருசம் ராதாவோட பசங்க தூக்கி சொருவினானுங்க ஒரே சொருவா!.
வாழ்க்கையே கஷ்டப்படுற lifestyle'ல இருந்து privilege lifestyle நோக்கி போறது தான், கஷ்டப்பட்டாலும் எனக்கு privilege ஆகுற வாய்ப்பிருந்தது ஆனா அந்த வாய்ப்பு கூட இல்லாம இருக்கிறது தான் ரொம்ப கஷ்டமானது... கஷ்டமா இருந்தாலும் முட்டி மோதி வரப் பாருங்க... என்ன பொறுத்த வரைக்கும் வீடு ஒரு தேவையில்லாத முதலீடு தான் ஆனா அத கட்டி முடிச்சதும் உங்க வாழ்க்கையில ஒரு satisfaction கிடைக்கும் அத சாகறதுக்குள்ள ஒரு தடவ அனுபவிச்சிருங்க.
உடம்ப எங்க கொண்டுவந்து நிறுத்திருக்க பாத்தியா...!! 'ரீல்ஸ்' 'வெப் சீரிஸ்' பாக்க ஆரம்பிச்சதும் அத அத்தோட நிறுத்தாம இன்னும் இன்னும்னு நைட்டு முழுக்க முழிச்சு எபிசோட் பாத்து தூக்கத்த தொலைச்சு உடம்புல நிறைய பிரச்சனை வர ஆரம்பிச்சது.. செல்போன் அடிக்ஷனால் தனது வாழ்வில் உடல்நிலை பிரச்சனைகளை சந்தித்தாக அதிலிருந்து மீண்டு வந்த இளம்பெண் கூறிய பயனுள்ள தகவல்
#Chennai | #MobileUsage | #Reels | #HealthIssue | #PolimerNews
Excel Use பண்ணாம, Python மூலமாக மட்டுமே இந்த Excel Tableல இப்ப படிச்சிட்டு இருக்க ஒரு Intern உருவாக்கினார்.
இந்த ஒரு Tableல Create பண்றது மூலமா, அந்த Tableல இருக்க ஒரு 18 Parametersஐ Python மூலமா நீங்க Control பண்ணலாம்.
Like
Font Styles, Colors, Borders, Cell Height and Widths..Etc
Python Use பண்ணி Excel Automate பண்றத
- இப்ப படிச்சிட்டு இருக்க Students.
- வேலை தேடிட்டு இருக்க Students.
- Working Professionals
- PhD பண்ணிட்டு இருக்கிறவங்க.
கண்டிப்பா Excel Automation கத்துக்கோங்க.
"முதலமைச்சரின் பேச்சு போலவே இல்லை.."
திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேச்சு குறித்து தி.மு.க நிர்வாகி லியோனி கொடுத்த ரியாக்சன்..
#Leoni | #DMK | #TVK | #PolimerNews
என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம்.
நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன்.
அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தேன்.
ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது.
எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன்.
கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.
இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம்.
தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும்.
மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.