தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டிய முருகப்பெருமானின் அருளால், சஷ்டி விரதத்தை சூரசம்ஹார தினமாகிய இன்றுடன் நிறைவு செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
நாளை நடைபெறவிருக்கும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, சஷ்டி விரதத்தை நிறைவு செய்யும் பக்தர்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள். முருகப்பெருமானின் அருள் அனைவருக்கும் என்றும் துணை நிற்கட்டும்!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
வீரவேல் முருகனுக்கு அரோகரா!
செம்மல் வ உ சி அவர்கள்
ஆங்கிலேயருக்கு எதிராகக் கடலில் “நாவாய்” செலுத்தி….
வெள்ளையனை வெளியேற்றியவர்….
செயல் வீரர் அண்ணாமலை அவர்கள் ஊழல் திராவிடத்தை வீழ்த்தி, தன் அறிவார்ந்த நா, வாய் வீச்சினால் கொள்ளையனை வெளியேற்றியவர்….
செக்கிழுத்த செம்மலுக்கு
செயல் வீரர் @annamalai_k செய்கிறார்
வீர வணக்கம்…..
தமிழகம் எங்கும் முழங்குவோம்…. தலைவர் குரலாக… @WTLFoundation
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது என்பது காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டு மரபு. மக்களின் மத நம்பிக்கையோடும், பாரம்பரியத்தோடும் தொடர்புடைய இந்த நடைமுறையை, அரசியல் காரணங்களுக்காகத் தடுத்து நிறுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
கடவுள் மறுப்பு என்ற போலியான பிம்பத்தைக் கட்டமைப்பதற்காக, முந்தைய திமுக அரசு கையாண்ட அதே அணுகுமுறையை தற்போதைய தவெக அரசும் தொடர்வது முற்றிலும் ஏற்புடையதல்ல.
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெளிவான உத்தரவு பிறப்பித்த பிறகும், அந்த உத்தரவைச் செயல்படுத்துவதற்குப் பதிலாக மேல்முறையீடுகள் மூலமும் நிர்வாகத் தாமதங்கள் மூலமும் விவகாரத்தைத் தொடர்ந்து இழுத்தடிப்பது நீதித்துறையின் உத்தரவுகளுக்கும், பக்தர்களின் உரிமைகளுக்கும் எதிரானது. அரசின் பொறுப்பு பிரச்சனையை நீட்டிப்பதல்ல, சட்டத்தின் அடிப்படையில் தீர்வை உறுதிப்படுத்துவதே.
அனைத்து மதங்களையும் சேர்ந்த மக்கள் சகோதரத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வரும் திருப்பரங்குன்றத்தில், தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி அமைதியைக் குலைக்கும் நடவடிக்கைகளுக்கு மாநில அரசே காரணமாகிவிடக் கூடாது. வருடம் ஒரு நாள், பக்தர்கள் ஒரு குழுவாக அமைதியாகச் சென்று, தீபம் ஏற்றுவதில், யாருக்கு என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது.
காலங்காலமாகத் தொடரும் வழிபாட்டு உரிமையை இனியும் அரசியல் மற்றும் நிர்வாகக் காரணங்களைக் கூறி முடக்காமல், உயர்நீதிமன்ற உத்தரவை மதித்து, இந்த விவகாரத்திற்கு தவெக அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இன்றைய தினம் கோவையில் நமது APJ Centre for Ethics and Politics மையத்தில், மாணவர்களின் கனவுகள், அவர்களின் குடும்பப் பொருளாதாரச் சூழலால் ஒருபோதும் தடைபடக்கூடாது என்ற உயரிய நோக்கத்துடன், TNPSC aspirants முன்னிலையில் நமது @WTLFoundation சார்பில், ஏற்றம் அகாடமி (Etram Academy) https://t.co/i4qZlhMoN4 என்ற புதிய கல்வித் தளத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இதன் தொடக்கமாக, தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான TNPSC Group 4 தேர்வு மற்றும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய அளவிலான TN NMMS உதவித்தொகைத் தேர்வு என இரண்டு முக்கியத் தேர்வுகளுக்கும், தரமான பயிற்சியை முற்றிலும் இலவசமாக இந்தத் தளம் மூலம் வழங்கவிருக்கிறோம். தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் பாடங்கள், சிறு காணொளிப் பாடங்கள், பயிற்சி வினாக்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள், மாதிரித் தேர்வுகள் என மாணவர்கள் முழுமையாக தயாராவதற்கு, இந்தத் தளம் உதவும்.
தரமான கல்வி என்பது வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே உரிய வாய்ப்பாக இருக்கக்கூடாது; ஒவ்வொரு மாணவரின் உழைப்புக்கும் திறமைக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கிய எங்களின் மற்றுமொரு முன்னெடுப்புதான் நமது ஏற்றம் அகாடமி. மாணவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் கனவுகளை நனவாக்க நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
https://t.co/i4qZlhMoN4 (1/2)
திமுக ஆட்சிக்கு வந்த உடனே போட்ட உத்தரவு ஞாபகம் இருக்கா உங்களுக்கு..
தினகரன், குங்குமம், தமிழ்முரசு ஆகிய நாளிதழ்களை அனைத்து நூலகங்களும் கட்டாயம் பெற வேண்டும் என்பது தான்..
அவர்கள் கோவை பெரியார் நூலகத்தில் மட்டும் தான் ஊழல் செய்துள்ளார்கள் என்பது அவர்களை அவமானப்படுத்துவதாகும்..
திமுக என்றாலே ஊழல், ஊழல் என்றாலே திமுக தான்..
என்னை பின் தொடரும்
தொடராமல் இருக்கும் நட்புக்கள் அனைவருக்கும் வணக்கம்🙏🏼💐
நான் ஏற்கனவே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்து காவல் துறையில் சேர்ந்து
சென்னை
தூத்துக்குடி கன்னியாகுமரி என்று பல மாவட்டங்களில் நல்லபடி வேலை செய்து கொண்டிருந்தேன்.. அண்ணாமலை ஜி அவர்கள் பாஜக கட்சியில் சேர்ந்த போது அந்த உந்துதலில் நானும் வேலையில் விருப்ப ஓய்வு கொடுத்து பாஜக கட்சியில் சேர்ந்தேன்..
நான் பல சமூக ஊடகங்களில் பாஜக நன்றாக இருக்க வேண்டும் என்றும், பாஜக தமிழகத்தில் நல்ல வளர்ச்சி அடைய வேண்டும் என்றும் பல பதிவுகளை போட்டிருக்கிறேன் தற்போது போடுகிறேன்..
நான் காவல்துறையில் இருக்கும் போது தாமரைச் சின்னத்தையும் கொடியையும் பார்த்து மக்கள் கேட்பார்கள் சார் இது எந்த கட்சி என்று
அப்போது நான் கூறுவேன் இதுதான் பாஜக கட்சி என்று. அப்படி ஒரு கட்சி இருக்கிறதா என்று அன்று மக்கள் என்னிடம் கேட்பார்கள் அதன் பிறகு பாஜக கட்சி தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சம் வளர ஆரம்பித்தது ஆனாலும் திராவிட கட்சிகளுக்கு நிகராக அந்தக் கட்சியால் வளர முடியாமல்...
அதன் பிறகு விஜயகாந்த் போன்றவர்களும் கட்சி ஆரம்பித்து வளர்ந்தார்கள் ஆனால் பாஜக தமிழகத்தில் வளரவில்லை
பெரிய தலைவர்கள் ஆட்சியில் இருந்து பல தொகுதிகளில் நோட்டாவுக்கு கீழே தான் வாக்குகளை வாங்கிக் கொண்டிருந்தார்கள் மக்கள் பல பேர் என்னை பார்த்து கிண்டல் அடிப்பார்கள் பாஜக கட்சி பார்த்தீர்களா நோட்டா பாஜக கட்சியை தோற்கடித்து விட்டது.. ஒத்த ஓட்டு பாஜக அப்படியெல்லாம் கேவலமாக பேசி வந்தார்கள்
அந்த நேரத்தில் தான் அண்ணாமலை என்று ஆளுமை பாஜக தலைவராக தமிழகத்தில் பொறுப்பு ஏற்றார்.
அதன் பிறகு இரவும் பகலும் அவரது விடாமுயற்சி அவரது பேச்சு
அவரது உழைப்பு பாஜக கட்சியை பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சென்றது அதற்கு முன்பும் நல்ல தலைவர்கள் இருந்தார்கள் இல்லை என்று சொல்லவில்லை பொன்னர் போன்றவர்கள் நன்றாக தான் கட்சியை வழிநடத்தினார்கள் ஆனாலும் அவர்களால் பாஜகவை மக்கள் அனைவரிடமும் கொண்டு செல்ல முடியவில்லை. பாஜகவை பேசும் பொருளாக கொண்டு செல்ல முடியவில்லை அதற்கு மாற்றாக தான் அண்ணாமலை இருந்தார்
பல சமூக ஊடகங்கள் 2026 இல்லை என்றால் 2031 ஆம் வருடம் தமிழகத்தில் கண்டிப்பாக பாஜக ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கள் கூறினார்கள்
அந்த நேரத்தில் தான் பாஜக கட்சிக்குள் இருக்கும் பச்சோந்திகளால் மத்திய அரசுக்கு தவறான வழியை காட்டிக் கொடுத்து அதிமுகவுடன் கூட்டணி வைத்து போன தேர்தலில் தமிழக பாஜகவை மண்ணுக்குள் புதைப்பது போல் புதைத்து விட்டார்கள்...
அண்ணாமலை ஜி அவர்களும் முடிந்த அளவு முயற்சித்தார்கள் அந்த கட்சியை தூக்கிப் பிடிக்க ஆனால் என்னை போல் உள்ள தொண்டர்களால் அண்ணாமலைக்கு செய்த துரோகத்தை மன்னிக்க முடியவில்லை
ஏனென்றால் எல்லையை நோக்கிச் சென்ற ராக்கெட் எல்லையை தொடாமல் போனால் அந்த ராக்கெட்டால் எந்த பிரயோஜனமும் இல்லை. அதுபோல்தான் தற்போது தமிழக பாஜகவின் நிலைமையும்
அண்ணாமலை ஜி அவர்கள் இந்த கட்சியை விட்டு வெளியே வந்தார் அதுவும் கௌரவமாக பாஜகவை எந்த குறையும் அவர் கூறவில்லை.
அவர் வெளியே வந்து தனியாக ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார் அந்த இயக்கத்தை சிறப்பாக வழி நடத்தி வருகிறார்
ஆனால் தமிழக பாஜக மண்ணுக்குள் புதைந்து கிடந்தாலும் அவர்கள் கட்சியை வளர்க்க பார்க்கவில்லை.. காங்கிரஸ் பப்புவை போல் தமிழக பாஜக தலைவர்கள் அண்ணாமலையை குறை கூறுவதையே 24 மணி நேர வேலையாக வைத்திருக்கிறார்கள், தொண்டர்களை தூண்டிவிட்டு பாஜக தலைவர்கள் எப்போதும் அண்ணாமலைக்கு எதிராகத்தான் பேசுகிறார்கள்.
அந்த கட்சியை வளர்க்க அவர்கள் முயற்சிக்கவே இல்லை
பப்பு ஆதாரம் இல்லாமல் மத்திய அரசுக்கு மீது புகார் கூறுவது போல் தமிழக பாஜக தலைவர்களும் சில தொண்டர்களும் அண்ணாமலை மீது குற்றத்தை சுமத்துகிறார்கள் அவர் பெரிய தவறு செய்தது போல்
அவர் குற்றவாளி என்றால் மத்திய அரசு வழக்கு பதிவு செய்ய வேண்டும் இல்லையென்றால் தமிழக பாஜக தலைவர்கள் மாநில அரசிடம் புகார் கொடுக்கலாம் காவல்துறையிடம் கொடுக்கலாம் நடவடிக்கை எடுக்கட்டும் தவறில்லை
அதை விட்டுவிட்டு இல்லாத பொய் குற்றச்சாட்டை கூறி ஏன் அவர்கள் அழுகிறார்கள் என்று தெரியவில்லை
தமிழக பாஜக தொண்டர்களே தயவுசெய்து தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நீங்கள் கட்சியை வளர்க்க பாருங்கள் அண்ணாமலை ஜி அவர்களை குறை கூறி மீண்டும் மீண்டும் நாசமாக போகாதீர்கள்
என் தாய்க்கழகம் பாஜக அந்த ஆதங்கத்தில் தான் நான் இப்படி பேசுகிறேன் உங்களுக்கு முடிந்தால் கட்சியை வளருங்கள் அண்ணாமலை தவறு செய்தால் அதை நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டுங்கள் அதை விட்டுவிட்டு கேவலமாக பேசுவதை நிறுத்துங்கள் இது என் வேண்டுகோள்
வாழ்க தமிழகம்
வளர்க பாரதம்
வந்தே மாதரம்
ஓங்குக மோடிஜி புகழ்
ஓங்குக அண்ணாமலை ஜி புகழ்.. 🙌🙏🏼💐
நீங்க அரசியலுக்கு
வந்ததிலிருந்து இப்ப
வரைக்கும் உங்கள சப்போர்ட்
பன்றது Pro Nationalism பேசுற
எங்கள மாதிரி ஆட்கள் தான்.
அதனால தான் உங்க பின்னாடி
strong ah நின்னோம்.
மோடி அரசு கேள்வி கேளுங்க
அதை யாரும் தடுக்கல ஆனா
Yet another leftist ah irukkathinga.@annamalai_k
இன்று மாலை, நமது @WTLFoundation சார்பில், பழனி நகரின் ஆன்மிகத்துடனும் மக்களின் வாழ்வாதாரத்துடனும் தொடர்புடைய, புனிதமான சண்முகா நதியைத் தூய்மைப்படுத்தி, மக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கும் விழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை மக்கள் இயக்கமாக முன்னெடுத்து நாம் செய்து வரும் பணிகளில், வைகை நதி, சண்முகா நதி போன்ற நீர்நிலைகளைப் பாதுகாப்பதும், தூய்மைப்படுத்துவதும், இயற்கையையும் நமது பாரம்பரியத்தையும் பாதுகாப்பதற்கான முக்கியமான பணியாகும். நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்திப் பாதுகாப்பதில் சகோதரர் திரு. நிமல் ராகவன் அவர்களின் பங்களிப்பும், அர்ப்பணிப்பும் குறிப்பிடத்தக்கவை.
எந்த எதிர்பார்ப்புமில்லாமல், நமது சமூகப் பணிகளை மக்கள் இயக்கமாக மாற்றி, இயற்கையைப் பாதுகாத்து, எதிர்காலத் தலைமுறைக்கு வளமான தமிழகத்தை உருவாக்கும் நமது பயணம் தொடர்ந்து வெல்லட்டும்.
@Palanikanagaraj@being_nimal (1/2)
Kudos to both Avinasi & Tiruppur @WTLFoundation team for this amazing & well organised event ! It’s a tough job or organise a flawless marathon for 10000 runners .
Thank you @annamalai_k taking this much needed initiative! Kudos!
நமது @WTLFoundation சார்பாக இன்று காலை அலகுமலையில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை போற்றும் விதமாக, நம் சகோதர சகோதரிகள் உற்சாகமாக கலந்து கொண்ட மாபெரும் மாரத்தான் போட்டியை துவக்கி வைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
பெண்கள் ஆரோக்கியமாகவும், அதிகாரமிக்கவர்களாகவும் மாறுகிற போது மட்டுமே இந்த சமூகம் உண்மையான வளர்ச்சியைப் பெறுகிறது. உடலினை உறுதி செய்வதன் மூலம் மனதினையும், சிந்தனையையும் பலப்படுத்தும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் முழு ஊக்கத்துடன் மக்கள் கலந்து கொள்வது மனநிறைவாக உள்ளது.
நீங்கள்தான் தமிழகத்தின் நம்பிக்கை ஊட்டம்
உங்களுக்காக ஒன்றுபடும் தமிழர் கூட்டம்
மகளிரின் சுயமுன்னேற்றமே தங்கள் நாட்டம்
அலைகடல் பாய்வதுபோல் சாதனை ஓட்டம்
அதிர்ந்தது அவிநாசியில் பூமியின் ஆட்டம்
தமிழகம் ஆனது @annamalai_k கோட்டம்
காத்திருக்கிறோம் காணத்தங்கள் மகுட சூட்டம்…
தாராபுரம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரம் செய்ய முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் செல்வதால், நாளை, கோயம்புத்தூர், அவிநாசி, தாராபுரம் என பல பகுதிகளில், நாள் முழுவதும் ஏராளமான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஒரு முதலமைச்சரின் பாதுகாப்பு முக்கியமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளின் பெயரில் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் இயல்பான பயணத்தையும், அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கும் வகையில், ஒரு நாள் முழுவதும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.
மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியவர்கள், வேலைக்குச் செல்ல வேண்டியவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் என ஒவ்வொரு நாளும் அந்தச் சாலைகளை நம்பியிருக்கும் மக்கள், முதலமைச்சரின் சில நிமிட தேர்தல் பிரச்சாரத்துக்காகப் பாதிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மக்களைச் சந்திப்பதற்காக செல்லும் ஒரு முதலமைச்சரின் பயணம், அதே மக்களுக்கே பல மணி நேர சிரமத்தை ஏற்படுத்துவது எந்த வகையான மக்கள் ஆட்சி?
மக்களை சந்திக்க வரும் முதலமைச்சர், முதலில் மக்களின் சிரமத்தை புரிந்துகொள்ள வேண்டும். மக்களைப் பாதிக்காத வகையில் நிகழ்ச்சிகளை அமைத்துக் கொள்வதே, நல்ல நிர்வாகத்தின் அடையாளம். தேர்தல் பிரச்சாரத்துக்காக, அரசு நிர்வாகத்தின் முழு இயந்திரமும் பொதுமக்களை கட்டுப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
தவெக அரசு ஆட்சிக்கு வந்த கடந்த ஐந்து மாதங்களில், அரசு எடுத்த பல முடிவுகள், பின்னர் திரும்பப் பெறப்படுவது, உண்மையில் தமிழக அரசில் என்ன நடக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.
முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி நியமனம் முதல், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் மாற்றம், ஆவின் பால் மொத்த விற்பனையாளர்களுக்கான விலை உயர்வு, மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்பதற்கான கட்டுப்பாடு, மற்றும் தற்போது சட்டம் ஒழுங்கு தொடர்பான RTI விலக்கு வரை, ஒரு முடிவு எடுக்கப்படுகிறது, அந்த முடிவுக்கு எதிர்ப்பு எழுந்ததும், உடனே அந்த முடிவு திரும்பப் பெறப்படுகிறது.
இந்த ஒவ்வொரு முடிவும் முதலமைச்சர் திரு. விஜய் அவர்களின் கவனத்திற்கும், ஒப்புதலுக்கும் சென்றுதான் எடுக்கப்படுகிறதா? இல்லை, முதலமைச்சருக்கு தெரியாமல் அரசு நிர்வாகத்தில் இத்தகைய முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றனவா?
அவசர அவசரமாக முடிவுகளை அறிவித்துவிட்டு, எதிர்ப்பு வந்த பிறகு திரும்பப் பெறுவது, நிர்வாகத்தில் தெளிவின்மையையும், இந்த முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.
ஒரு அரசு கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு முன், அதன் சட்டரீதியான, நிர்வாகரீதியான மற்றும் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை முழுமையாக ஆய்வு செய்வது அவசியம். தவெக அரசு, இத்தகைய முடிவுகளை அவசரமாக எடுத்து, பின்னர் எதிர்ப்பு எழுந்தவுடன் திரும்பப் பெறுவதற்குப் பதிலாக, முடிவெடுக்கும் முறையில் அதிக கவனமும், வெளிப்படைத்தன்மையும், பொறுப்புணர்வும் காட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
Delighted to have had the opportunity to interact with young entrepreneurs at Signograph 4.0, organised by Young Indians in association with CII in Tiruppur today.
Urged our Indian entrepreneurs to invest more in innovation and personal fulfilment. India’s next phase of growth will be driven not just by the scale of our businesses, but by the ambition, innovation and courage of our entrepreneurs to solve tomorrow’s problems today.
மதுரை மண்ணை ஆளும் அன்னை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் இந்தத் திருநாளில், அன்னையின் திருவருளைப் போற்றி வணங்குகிறேன்.
கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துகள். அன்னையின் அருளால் உலகெங்கும் வாழும் பக்தர்களின் வாழ்வில், நலமும், வளமும், அமைதியும், மகிழ்ச்சியும் பெருகட்டும்.
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த வரலாற்றையும், ஆன்மிகப் பெருமையையும், நமது பண்பாட்டின் அழகையும் தன்னகத்தே கொண்ட மதுரை மாநகரம், அன்னை மீனாட்சி அம்மனின் திருவருளால் என்றும் சிறந்து விளங்கட்டும். மதுரையின் புகழும், பெருமையும் உலகெங்கும் மேலும் உயரட்டும்.
Heartiest birthday greetings to our Hon. PM Thiru @narendramodi avl.
His tireless service to our nation, visionary leadership, and relentless drive to uplift every section of our society continue to inspire millions. Praying for his good health and long life.