When *Petrol prices were increased by 7 Paise per litre in 1973*, opposition leaders led by *Bajpaiji, had travelled to the Parliament on a bullock cart.* A rare video of that event. 😊
https://t.co/o1LvEl6web
அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. முதல்வரின் அரசியல் பிரிவு செயலாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ள ரிக்கி ராதன் பண்டிட் என்பவர் அடிப்படையில் ஒரு ஜோதிடர்.
அரசுச் செலவில் அதிகாரியாக இத்தகைய ஒருவரை நியமித்திருப்பது, மக்கள் மத்தியில் ஜோதிடம் தொடர்பான நம்பிக்கையை அதிகப்படுத்தவே உதவும். "ஜோதிடம் தனை இகழ்" என்றார் பாரதியார். அரசின் இந்தப் பணி நியமனம் ஏற்புடையதல்ல!
இவர் அரசியல் ஆலோசனைகளை கூறுவார் என்பதும் ஏற்புடையதல்ல.
@CMOTamilnadu
"நீட்" தேர்வு ரத்து!
கேள்வித் தாள் கசிவு!
சி.பி.ஐ விசாரணை!
எத்தனை முறை குழப்பம்?
எவ்வளவு முறைகேடு?
இருந்தாலும்,
"நீட்"டிய வாளை
உறைக்குள் போட மாட்டோம்
என ஏன் இந்த பிடிவாதம்?
மாநில உரிமைகள் மீது,
மாணவர் எதிர்காலம் மீது,
வீசப்படும் கொடுவாள் -
இந்த "நீட்டை" முறிப்போம்!
#BanNEET #StopNEET #EducationRights #StateRights #SaveStudentsFuture #NEETScam #TamilNaduAgainstNEET #JusticeForStudents #நீட்_தேர்வை_ரத்து_செய் #கல்வி_உரிமை
இந்திய அரசியலமைப்புச் சட்டம், மக்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று சொல்கிறது.
சட்டம் சொல்வதற்கு எதிர்மறையாக இவரையா உங்களுடைய ஆலோசகராக நியமிப்பீர்கள் @CMOTamilnadu ?
தனிப்பட்ட முறையில் குடிமக்களுக்கு ஜோசியத்தின் மீது நம்பிக்கை இருக்கலாம், ஆனால் அரசு அப்படி இராசிபலன்கள் மீது நம்பிக்கை கொண்டதாக இருக்க முடியாது.
@TVKVijayHQ
இன்று த.வெ.க அரசால் நியமிக்கப்பட்டுள்ள முதல்வர் விஜயின் சிறப்புப்பணி அதிகாரி (Officer on Special Duty (OSD) எனும் பதவி தற்காலிக அலுவலக பணிகளையும், அரசு மேல்மட்ட நிர்வாகிகளான செகரட்டரி, அண்டர் செகரட்டரி போன்றோருக்கு இடையே செயல்படும் தொடர்பாளராக, நிர்வாகியாக செயல்படும் பதவியாக முதல்வருக்கு உதவியாளராக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பணிகள் என்பன சிறப்பு முடிவுகள், கவனத்திற்குரிய முடிவுகள், அவசர முடிவுகள் என பலவற்றை பொறுப்பேற்கும் பணியாகவும் அமைகிறது. முதல்வருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே செயல்படவும், முதல்வரின் தனிப்பட்ட பணிகளுக்கானவராகவும் இயங்குபவர் சோதிடராக இருப்பவர் என்பது அதிர்ச்சியளிப்பது.
காலத்தால் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள், குறிப்பிட்ட சூழலுக்கு எடுக்கப்பட வேண்டிய முடிவுகள், ஆலோசனை வழங்கும் நிலையிலுள்ள பதவி இவ்வாறான சோதிடர் கையில் சென்றிருப்பதற்கான காரணம் சோதிடம் மீதுள்ள நம்பிக்கையா அல்லது சோதிடர் மீதுள்ள நம்பிக்கையா... எப்படியாகினும், சோதிடர் எனவர் அறிவியல் பூர்வமானவர் அல்ல, மேலும், சோதிடர் பிற துறைகளைச் சார்ந்த அறிவுத்திறனை வளர்த்துக் கொண்டவருமல்ல.
சோதிடரையும், சோதிடத்தையும் நம்பிக் கெட்டவர்களின் பட்டியல் மிகநீளமானது. அதில் குறிப்பிடத்தக்கவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார். மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்துவிடுகிறேன்னென்று சொல்லி பெங்களூர் வழக்கிற்கு சென்றவர் பரப்பன அக்கிரகார சிறையில் அடைபட்டார். அவரது உடல்நிலை மோசமடையுமென எந்த சோதிடத்திலும் சொன்னதால தெரியவில்லை. அப்பல்லோ மருத்துவமனைக்கு அவசரத்திற்கு சென்றாரா, அல்லது சோதிடர் குறித்து சென்றாரா என அவருக்கு மட்டுமே தெரிந்த விடயம்.
சோதிடர்களால் காலத்தை கணிக்க முடியுமெனில், காலம்-நேரம்-நடப்பு என்பது முன்னரே நிர்ணயம் செய்யப்பட்டதென அர்த்தமாகிறது. ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது என்றால் அது மாற்றப்பட முடியாதது என அர்த்தம். அப்படியாக இருந்தால் மட்டுமே எதிர்காலத்தை-நடப்பை கணித்து சொல்ல முடியும். 'மாற்ற முடியாததை' கணித்து என்ன ஆகப்போகிறது? அல்லது சோதிடரால் மாற்றத்திற்குரிய முடிவுகளை எடுக்க ஆலோசனை கொடுக்க முடியுமெனில் மொத்த சிஸ்டமும் தற்காலிகமானதென அர்த்தமாகிறது. இப்படி குழப்பத்திற்குரிய நபர்களால் எப்படி நிர்வாக முடிவுகளில் சரியான வகையில் தலையிட முடியும்?
2026 தேர்தலில் அனைத்து கட்சியை சார்ந்த சில-பல முக்கிய வேட்பாளர்களும் சோதிடர்களிடத்தில் காலத்தை கணித்துதான் வேட்புமனு தாக்கல் செய்வதில் ஆரம்பித்து வீட்டு படிதாண்டுவது வரை செய்திருப்பார்கள். அவர்களின் தேர்தல் முடிவுகளை கணித்த சோதிடர் எவராவது திரு.விஜய் முதல்வராவார் என சொல்லி இருந்தால் அதிமுக-திமுக-பாஜக வேட்பாளர்களில் சோதிட நம்பிக்கையுள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட்டிருப்பார்களா? காரைக்குடியில்.கட்டுத்தொகை இழந்த, சங்கரமடத்திற்கு சென்ற 'கடப்பாரை' சோதிடரை பார்க்காமலா இருந்திருப்பார். தன் மீது நம்பிக்கையில்லாதவரே சோதிடரை நம்புவார்கள்.
ஆகவே சோதிடம் என்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் சூதாட்டம். அந்த சூதாட்டத்தை வைத்து தொழில் செய்யும் சோதிடரை மிகமுக்கிய பொறுப்பில் அமர்த்துவது த.வெ.க கட்சிக்கு அவமானத்தை தேடித்தரும், தமிழ்நாட்டு மக்களுக்கு கேட்டை கொண்டுவரும், முதல்வர் விஜய் மீது அவநம்பிக்கையை கொண்டுவரும். பாஜக-சங்கிகளின் சோதிடம் எனும் பித்தலாட்ட சூதாட்டத்தை தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக திணிப்பது தவறான முடிவு.
முக்கியமான அரசு பொறுப்பினை ஒரு சோதிடர் கையில் கொடுப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
@drjanakiramofl வணக்கம். மின் நுகர்வோரின் மின் இணைப்பினை ஆய்வு செய்வதில் மின்சாரமானது நமது மின் மீட்டர் வரை சரியாக உள்ளது. மேற்படி மின் நுகர்வோரின் வீட்டுக்குள் வயரிங் பிரச்சனை இருக்கின்ற காரணத்தால் அதனை சரி செய்ய மின் நுகர்வோர் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளார். நன்றி.
1. 1967–1969 : Sathyavani Muthu
(ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்)
2. 1971–1976: Sathyavani Muthu (சமூக நலத்துறை)
3. 1988: V. N. Janaki (தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர்)
4. 1991–1996: J. Jayalalithaa
(முதலமைச்சர் + பல துறைகள்)
5. 1991–1996:
S. Kannappan அமைச்சரவையில்: Indira Kumari
6. 2001–2006: J. Jayalalithaa (முதலமைச்சர்)
7. 2001–2006: B. Valarmathi (சுற்றுலா / சமூக நலத்துறை)
8. 2001–2006: Gokula Indira (வாணிப வரி / பிற துறைகள்)
9. 2006–2011: Poongothai Aladi Aruna
(தகவல் தொழில்நுட்பத்துறை)
10. 2011–2016: J. Jayalalithaa (முதலமைச்சர்)
11. 2011–2016: S. Gokula Indira (வாணிபவரி / சுற்றுலா)
12. 2011–2016: B. Valarmathi (பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை)
13. 2016–2021:
• V. Saroja (சமூக நலத்துறை)
• V.m Rajalakshmi ( ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை)
• Nilofar Kafeel (தொழிலாளர் நலத்துறை )
14. In the previous M. K. Stalin government (2021–2026), there were two main women ministers in the Tamil Nadu cabinet:
•P. Geetha Jeevan – Minister for Social Welfare and Women Empowerment.
•N. Kayalvizhi – Minister for Adi Dravidar Welfare.
இந்த வரிசையில, 2026 : S. Keerthana...
முடிஞ்ச அளவு data collect பண்ணிருக்கேன்... இன்னும் சில பெயர்கள் கூட விடுபட்டிருக்கலாம்....
இந்த லட்சணத்துல கூசாம அடிச்சு விட்டுட்டு இருக்கானுக😒😒😒
#TVK சார்பாக போட்டியிட்ட @leftpandi
மக்களுக்கா சேவை செய்த போது👇
பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் அச்சத்தில் உறையும் வகையில் அராஜகப் போக்கில் ஈடுபட்ட #TVK -வினர்கள்👇
இன்னும் என்ன என்ன கண்றாவிதி எல்லாம் நடக்கப்போகுதோ👇
I mean the entire state budget is available online on the government website in an easy to understand manner - https://t.co/Y3UNqR5ems all you have to do is look. Google the definitions. Econ 101 is a good idea before jumping up and declaring all debt is bad #TNStateBudget