@gowthaman_va
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பத்தாம் வகுப்பு மாணவர்கள் புகைத்துக் கொண்டிருக்க நான் திட்டி அறிவுறுத்திய நிலையில் தாங்கள் தனுஷை பார்த்து சிகரெட் புகைப்பதாக சொன்ன போது அதிர்ச்சி அடைந்தேன். ஒரு தந்தையாக நின்று தயவு செய்து புகைப்பிடிக்கும் காட்சிகளை தவிருங்கள்.
திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களின் உறவினர்களோடு அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் அவர்களுடனான சந்திப்பு பெரும் நெகிழ்ச்சிக்குரியது. கோரிக்கைகளை நிறைவேற்றுகிறேன் என்று வாக்குறுதி தந்ததோடு ஈழச் சொந்தங்களை தானே முன்னின்று உபசரித்து உணவளித்தது மகிழ்ச்சிக்குரியது.
@GingeeMasthan@VaGowthaman தங்களை சந்தித்தது பெரும் மகிழ்ச்சி ஐயா. ஈழத் தமிழ் உறவுகளை நீங்கள் உபசரித்த விதம் நெகிழ்வுக்குரியது. தொடரட்டும் உங்கள் அரும் பெரும் அமைச்சர் பணி.
எச்சரிக்கை.
தமிழ் வளர்ச்சித்துறை
சங்க இலக்கிய வாழ்வியல் நூலை "திராவிட கலை களஞ்சியம்" என வெளியிட்டால் தமிழ்ப் பேரரசு மிகக் கடுமையாக எதிர்க்கும்.தமிழ்நாடு அரசு உடனடியாக தனது நிலைபாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்.
காவிரி நீரை பிரித்து தரத்தான் ஆணையமே தவிர கட்டப்பஞ்சாயத்து நடத்தி கர்நாடகாவுக்கு மேக்கேதாட்டு அணையை கட்டிக்கொடுக்க அல்ல.பாஜக அரசின் முகத்திரையை கிழிக்க அனைத்து ஊடகங்களிலும் பகிருங்கள்.
- வ.கௌதமன்
@ArputhamAmmal அறம் மீறி அனுப்பிய கவர்னரின் கோப்பினை ஜனாதிபதி நேர்மையோடு திருப்பி அனுப்ப வேண்டும். தமிழ்நாடு அரசு அரியானா தீர்ப்பினை பின்பற்றி உடனடியாக எழுவர் விடுதலையை பிரகடனப்படுத்த வேண்டும்.
@JuniorVikatan தமிழ்நாடு அரசிடம் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஜனாதிபதி - பிரதமர் என்று போக்கை திருப்பி அதிமுக அரசு சொன்னதையே இவர்களும் சொன்னால் தாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதி சந்தர்ப்பவாதம் என்பது உறுதி பட்டுவிடும்.