#BREAKING | தேர்தல் அறிவிப்பால் மின்சார வாரியத்தில் பணி ஆணை வழங்குவதும், பதவி உயர்வு வழங்குவதும் செய்யமுடியாமல் போனது - முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி
#SunNews | #SenthilBalaji | #TNEB | #TVK
RSS சித்தாந்த அரசியல் ஆதரவு கொண்ட , Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு நடத்தும் தென்காசி பகுதி கிராமப்புற கல்விக்கு விஜய் அரசு ஆதரவு கொடுத்து இருக்கிறது .
கலைவாணி கல்வி மையம் என்ற “இலவச கல்வி” என்ற ஒற்றை வார்த்தையால் இங்கு மூடி மறைக்கப்படும் மிக முக்கியமான விசயம் என்ன தெரியுமா?
இங்கு இதை சொல்லிக்கொள்கிறேன் , கிராமப்புற குழந்தைகளுக்கு இலவச கல்வி கிடைப்பதை யாரும் எதிர்க்கவில்லை.அது அரசு செய்யவேண்டும் என்பதை விரும்புகிறேன். அரசு பள்ளியாகவே இருக்கவேண்டும்.
ஆனால் “இலவச கல்வி” என்ற பெயரில் RSS/இந்துத்துவ சித்தாந்தம் பள்ளிக்குள் நுழைந்தால், அதை எதிர்ப்பது தமிழ்நாட்டின் கடமை.
Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு RSS சித்தாந்த அரசியலுக்கு வெளிப்படையான ஆதரவு கொண்டவர் என்பது புதிதல்ல.
அவரது கல்வி முயற்சிக்கு விஜய் அரசு வேகமாக அனுமதி கொடுப்பது சாதாரண நிர்வாக முடிவு அல்ல; அது கவனிக்க வேண்டிய அரசியல்.
வடஇந்தியாவில் RSS பல ஆண்டுகளாக கல்வியை ஒரு சித்தாந்த ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது.
1978 ஜனதா ஆட்சிக் காலத்தில் “வித்யா பாரதி சிக்ஷா சன்ஸ்தான்” என்ற பெயரில் கல்வி முயற்சிகளை விரிவுபடுத்தினார்கள்.
“பண்பாடு கற்றுக்கொடுக்கிறோம்” என்ற பெயரில் மாணவர்களுக்கு வரலாற்று திரிபுகள், மத அடையாள அரசியல், முஸ்லிம் எதிர்ப்பு கதைகள் சொல்லிக்கொடுக்கப்பட்டன.
“சம்ஸ்கிருதி ஞான் பரீக்ஷா” போன்ற பாடப்பிரிவுகள் வழியாக,
பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார்,
அந்த இடத்தை காப்பாற்ற இந்துக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டார்கள், 77 முறை படையெடுப்புகள் நடந்தன
என்ற ஆதாரமற்ற கட்டுக்கதைகள் மாணவர்களின் மனதில் விதைக்கப்பட்ட வரலாறு இருக்கிறது.
இதுதான் நம்முடைய கவலை.
இன்று தமிழ்நாட்டில் இவர்களுக்கு ராமர் மட்டும் தேவையில்லை.
முருகர் இருக்கிறார். திருப்பரங்குன்றம் விவகாரம் இருக்கிறது.
தமிழ்நாட்டின் அமைதி சூழலை சீர்குலைக்க மத அரசியல் பல வழிகளில் நுழைய முயற்சி செய்கிறது.
அதனால் கேள்வி நேராக விஜய் அரசிடம்:
கலைவாணி கல்வி மையத்தில் எந்த syllabus?
எந்த பாடத்திட்டம்?
எந்த textbooks?
எந்த subjects?
யார் teachers?
NCERT / State Board / NIOS வழிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா?
அங்கு மதச்சார்பற்ற கல்வியா?
அல்லது “பண்பாடு” என்ற பெயரில் இந்துத்துவ அரசியல் பயிற்சியா?
கடந்த ஆட்சியில் அனுமதி கிடைக்கவில்லை, காரணம் இந்த சிந்தனைக்கு திராவிட மாடல் அரசு நேரடி எதிரியாக இருந்தது. அவர்கள் கொள்கையை உள்வாங்கியவர்களாக இருந்தார்கள்.
இப்போது விஜய் அரசு அவ்வாறு இல்லை.
விஜய் அரசு, அனைத்து file notes, inspection reports, syllabus details, approval conditions — அனைத்தும் பொதுமக்களுக்கு வெளியிடப்பட வேண்டும்.
இது தனியார் கல்வி மையம் பற்றிய கேள்வி மட்டும் அல்ல.
இது தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற கல்வி சூழலை பாதுகாக்க வேண்டிய கேள்வி.
இப்போது முக்கியமான கேள்வி திருமாவளவன், IUML, கம்யூனிஸ்ட் கட்சிகளிடம்.
RSS சிந்தனை நெருக்கம் கொண்டவர்களின் கல்வி முயற்சிக்கு விஜய் அரசு ஆதரவு கொடுக்கும்போது உங்கள் குரல் எங்கே?
குழந்தைகளின் மனதில் சிந்தனை விதைப்பது சாதாரண விஷயம் அல்ல.அது எதிர்கால சமூகத்தை உருவாக்கும் அரசியல்.
அதனால் தெளிவாக சொல்லுங்கள்.
தமிழ்நாட்டு பள்ளிக்குள் இந்துத்துவ சித்தாந்தம் வரக்கூடாது என்று பேசுவீர்களா? அல்லது கூட்டணி அரசியலுக்காக மௌனமாக இருப்பீர்களா?
@thirumaofficial@CMOTamilnadu@IUMLTNOfficial@Shanmugamcpim@tncpim@mkstalin@Udhaystalin@Anbil_Mahesh@imrajmohan
தமிழ்நாடு சட்டப்பேரவை விதிப்படியும் மரபு படியும் பேரவையில் இல்லாத ஒருவரை பற்றி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சட்டமன்ற உறுப்பினர்கள் வாய்மொழியாகவோ அல்லது உடல் மொழியாகவோ விமர்சனமோ அல்லது கிண்டலோ, கேலியோ செய்யக்கூடாது என்பது சட்டப் பேரவை தலைவருக்கு தெரிந்திருக்கும்.
இது தொடர்பாக 22.6.2026 அன்று சட்டப்பேரவைத் தலைவர் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உடல் மொழியாக அல்லது வாய்மோழியாக யாரையும் கிண்டலும், கேலியும் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்த அடுத்த நாளே, (23.6.2026) இதே போல் வாய்மொழியாகவும், உடல் மொழியாகவும் அவையில் இல்லாத (முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்) குறித்து தமிழக முதலமைச்சர் கிண்டலும், கேலியும் செய்தது அவை உரிமை மீறல் இல்லையா ? அவ்வாறான செயலில் ஈடுபட்ட முதல்வர் மீது தாமாக முன்வந்து அவை உரிமை மீறல் நடவடிக்கையை பேரவைத் தலைவர் எடுப்பாரா? தானே முதலமைச்சருக்கு இதுபோல் செயல்பட அனுமதித்து நியாயமா? பதிலை எதிர்பார்த்து தமிழ்நாடே காத்திருக்கிறது பேரவை தலைவர் அவர்களே!
@arivalayam@CMOTamilnadu
சென்னை மாநகராட்சி கீழ் உள்ள பள்ளிகளுக்கு மக்கள் பிரதிநிதிகளான கவுன்சிலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர்த்து வேறு யாரும் உள்ளே செல்லக்கூடாது; இதனை மீறி வெளியாட்கள் சென்றால் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - மேயர் பிரியா
#ChennaiCorporation#MayorPriya #News18TamilNadu ▶️WATCH NOW || https://t.co/mgy6HYOKjD
தமிழக முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளையொட்டி புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குவதற்கான தொடக்கவிழாவுக்கு தமிழகமெங்கும் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்ட 300 அரசுப் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மூன்றாவது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முதலமைச்சர் பிறந்தநாளுக்காக போக்குவரத்துத்துறை அதிகாரிகளின் மூலம் கடந்த 22 ஆம் தேதி சென்னைக்கு வரவழைக்கப்பட்ட பேருந்துகளை இயக்குவது குறித்தோ, மீண்டும் அனுப்புவது குறித்தோ இதுவரை எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படாத காரணத்தினால், அப்பேருந்துகளை இயக்கி வந்த ஓட்டுநர்களும், நடத்துனர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்கள் ஏற்கனவே பல்வேறு விதமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், முதலமைச்சரின் பிறந்தநாள் எனும் பெயரில் கூடுதல் நிதி இழப்பை ஏற்படுத்தும் வகையில் 300 அரசுப் பேருந்துகளையும், அதன் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களையும் தேவையின்றி சென்னைக்கு அழைத்து வந்து காத்திருக்க வைத்திருப்பது எந்த வகையில் நியாயம்?
தமிழகம் முழுவதும் காலாவதியான நிலையில் எப்போது வேண்டுமானாலும் விபத்துக்குள்ளாகும் என்ற ஆபத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அரசுப் பேருந்துகளை சீரமைப்பது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும் பேருந்துகளையும் சென்னைக்கு வரவழைத்து நிறுத்தி வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, முதலமைச்சரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்னைக்கு வரவழைக்கப்பட்ட அனைத்து பேருந்துகளையும் உடனடியாக புதிய வழித்தடங்களில் இயக்கிடுவதோடு, போக்குவரத்துக் கழகத்திற்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலான இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போக்குவரத்துத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
கல்பாக்கம் அருகே சமூகவிரோதிகளால் 14 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தியும், கோவை - சுகுணாபுரத்தில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட இளம்பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட செய்தியும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கின்றன.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ள நிலையில், அதற்குப் பொறுப்பேற்காமல், அனைத்திற்கும் திமுகவின் மீது பழி போடுவதில் மட்டுமே குறியாகவுள்ளது, தவெக அரசு.
இத்தனை ஆண்டுகளாக திரைப்படங்களில் தொடங்கி பல்வேறு தளங்களிலும் பெண்களுக்கு எதிராகக் கலாச்சார வகுப்பெடுத்தவர்களும், பெண்கள் மீதான வன்முறைகளுக்கு அவர்களே காரணம் என்றவர்களும், சுய ஒழுக்கம் இச்சமூகத்தில் ஆண்களுக்குத் தேவையில்லை என்ற மனநிலை மேலும் வளரவே வழிவகுத்தனர். முதலமைச்சர் திரு. @TVKVijayHQ அவர்களும் தனது திரைப்படங்கள் மூலமாகவும் அதைத் தானே சொன்னார்.
At the @IndianExpress Adda, I spoke about how politics can be unforgiving. We competed fiercely with the previous DMK government in Tamil Nadu for investments - won some, lost some.
But I never heard an investor complain of being asked for money by the government. Credit where it's due: the DMK government ran a clean and professional investment process and that deserves appreciation.
One guy is looting money by forcing Ethanol
Another is land grabbing for his real estate empire
One is making money from leaking exam papers
Another is looting by selling the Nicobar Island
Top to bottom, everything is corrupt and compromised in this Modi govt.
1 பவுன் தங்க மோதிரம் விஜய் ஆட்சிக்கு வந்தா போடுவார் என்று தானே விஜய் ரசிகர்கள் சொல்லி வந்தனர்... விஜய் தேர்தல் வாக்குறுதி கொடுக்கும் போதும் தங்க மோதிரம் என்று தான் சொன்னார்... 1 கிராம் மோதிரம் என்று யாரும் சொல்லவில்லை.. இது என்ன அடுத்த பித்தலாட்டம்..
பெண்களுக்கு வேற ஒரு சவரன் தங்கம் தருவதாக கூறியிருந்தார். அதையாது ஏமாற்றாமல் கொடுத்தால் சரி..
இல்லை வெளிப்படையாகவே ஏமாற்று வாக்குறுதிகள்...
தமிழக முதலமைச்சர் விஜய்யின் அரசியல் தனிச் செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டு உள்ளதாகத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. கடந்த மே 12-ஆம் தேதியிடப்பட்ட இந்த அரசாணை, அவர் நியமிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகியும் வெளியில் வரவில்லை. தற்போது ஜெகதீஷ் பழனிசாமியின் தனிப்பட்ட அறிவிப்புக்குப் பிறகே இந்த அரசாணை பொதுவெளிக்கு வந்துள்ளதால், இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
#CMVijay | #TNGovt | #JagadishPalanisamy
"குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது. செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும். ஆகவே, நடிகர் என்பதை மறந்து, இனியாவது தமிழ்நாட்டின் முதலமைச்சராக நடந்து கொள்ள வேண்டும்." - உதயநிதி ஸ்டாலின்
#UdhayanidhiStalin | #Vijay | #DMK | #TVK
6 மாதமோ, 1 வருடமோ உழைத்து பிளாக் டிக்கட் விற்றால் தான் உச்சம் கிடைக்கும், ஆனால் 1 மாதத்தில் CMDA approval மூலம் 100 கோடி, ஸ்கேனர் மிஷின் ஊழல் 100 கோடி, இதற்காகத்தான் உச்சத்தை விட்டு வருகிறார் என்று குறிப்பிட்டது சரியாக நடக்கிறது.
#TVKVijayFails
கொஞ்சம் 2025 நவம்பர்-டிசம்பர் பதிவுகளுக்கு போய், சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடந்த போது காலைல இருந்து நள்ளிரவு வரை கூச்சலிட்ட வாய் வியாபாரிகளும் அவங்கள தூண்டி விட்ட புளியந்தோப்பு மோகன்களும் யார் யார் என்று பார்த்துவிட்டு வாங்க...
அதுல ஒரு டாகும் இப்போ வாயை திறக்காது..
விசிலடிச்ச தூய்மை பணியாளர்களே உங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்கள்
- இந்த பக்கம் வந்துடாதீங்க😡
#TVKFails