When I reached the customer service in Flipkart asking so many questions and not taking a replacement. They only gave a refund. I purchased it during the Summer Sale with a bank discount. Now the discount is over, how do I get the tyre with the discount? #flipkart#scam
Flipkart scam:
Ordered four Continental UC6 tires from Flipkart, but received Cross Contact models! 😠 The invoice still says UC6, which makes me suspect this was an intentional error. 😡 What a scam! #Flipkart#Scam
சம ஊதியம் கேட்டு போராடியதற்காக இடைநிலை
ஆசிரியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்வதா?
சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 35 நாள்களாக போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை தமிழக அரசு பிடித்தம் செய்திருக்கிறது. பல ஆசிரியர்களின் ஊதியத்தில் 80% வரை பிடித்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அநீதியைக் களையக் கோரி போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களுக்கு திமுக அரசு மீண்டும், மீண்டும் அநீதி இழைப்பது கண்டிக்கத்தக்கது.
2009- மே மாதம் 31-ஆம் நாள் வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூன் 1-ஆம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 ஊதிய முரண்பாடு நிலவுகிறது. இதனால் 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை குறைவான ஊதியம் தான் கிடைக்கிறது. இந்த அநீதியை இழைத்த திமுக அரசே இந்த அநீதியைப் போக்க வேண்டும் என்று வலியுறுத்தி தான் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர்களுக்கு நீதி வழங்கும் எண்ணம் திமுக அரசுக்கு இருந்திருந்தால், ஆட்சிக்கு வந்த ஐந்தாண்டுகளில் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றியிருக்க வேண்டும். அவ்வாறு நிறைவேற்றியிருந்தால் அவர்கள் போராட வேண்டியிருந்திருக்காது. அவர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்ய வேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்காது. இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு காரணமே திமுக அரசு தான் எனும் போது ஆசிரியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்வது செய்யாத தவறுக்கு இரட்டை தண்டனை வழங்குவதற்கு ஒப்பானது ஆகும்.
2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படும் என்று வாக்குறுதி (எண். 311) அளித்த திமுக, ‘’பல்வேறு கோரிக்கைகளுக்காகப் போராடிய ஆசிரியர்கள் மீது 17பி பிரிவின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்ட ஊதிய உயர்வு மற்றும் பணி உயர்வு முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்குக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு, ஆசிரியர்களுக்குப் பாதிப்பிலிருந்து விரைவில் நிவாரணம் கிடைத்திட ஆவன செய்யப்படும் (வாக்குறுதி எண் - 312)” என்ற வாக்குறுதியையும் அளித்தது. பழிவாங்கலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக வாக்குறுதி அளித்த திமுக அரசு, இப்போது ஆசிரியர்களை பழிவாங்கத் துடிப்பது என்ன நியாயம்?
அறிவுசார் சமூகத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை போராட வைப்பதும், போராடியதற்காக தண்டிப்பதும் ஏற்க முடியாதவை. எனவே, 35-ஆம் நாளாக இன்றும் போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றுவதுடன், அவர்கள்இடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தையும் உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
தேர்தல் வாக்குறுதி-311-சம வேலைக்கு சம ஊதியம் நிறைவேற்றக் கோரி 19 ஆம் நாளிலும் உயிரை வருத்திப் போராடும் இடைநிலை ஆசிரியர்கள்.மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொங்கலுக்கு முன்பாக சம ஊதியம் வழங்கிட வேண்டுகிறோம்
#Police#equalpay_protest_day20@Anbil_Mahesh@TThenarasu@CMOTamilnadu
ஆசிரியர்களின் தொடர் போராட்டம்...
களத்துக்கு ஆதரவு கொடுக்க நாம் தமிழர் சீமான் வருகிறார் என்றவுடன் அவசர அவசரமாக காவல்துறையினரால் போராடிய ஆசிரியர்கள் கைது..
Seeman is More Dangerous ✍️
@Seeman4TN
போராடும் ஆசிரியர் பெருமக்களை அடக்கி ஒடுக்குவதுதான் கல்வியிற் சிறந்த தமிழ்நாடா? இடைநிலை ஆசிரியர்களின் நீண்டகால நியாயமான கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்!
@CMOTamilnadu@mkstalin
அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டும் தமிழ்நாடு அரசு குறைவான ஊதியம் வழங்கி வருவது சிறிதும் அறமற்ற செயலாகும். ஆட்சிக்கு வந்தவுடன் சம ஊதியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாமல் தொடர்ச்சியாக திமுக அரசு ஏமாற்றி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. தங்களின் நியாயமான உரிமைக்காக போராடும் ஆசிரியர் பெருமக்களை அதிகாரத் திமிரில் அடக்கி ஒடுக்குவது கொடுங்கோன்மையாகும்.
கடந்த 2009ஆம் ஆண்டு சூன் மாதம் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு, அதற்குமுன் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதைவிட 3000 ரூபாய் அளவிற்குக் குறைவானதாக அடிப்படை ஊதியத்தை வழங்க முடிவெடுத்தது ஐயா கருணாநிதி அவர்கள் தலைமையிலான அன்றைய திமுக அரசு. அடிப்படை ஊதியம் குறைவானதன் விளைவாக மொத்த ஊதியமானது ரூபாய் 15000 அளவிற்குக் குறைவாக இன்றளவும் வழங்கப்படுகிறது. அதன்பின் 10 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக ஆட்சியிலிருந்த அதிமுக அரசும், இடைநிலை ஆசிரியரிடையே நிலவும் ஊதிய முரண்பாட்டைக் களைய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரே அரசின் நிர்வாகத்தின் கீழ் ஒரே வகையான பணிபுரியும் ஆசிரியர் பெருமக்களில் குறிப்பிட்ட ஒரு பகுதியினருக்கு மட்டும் குறைவான ஊதியம் வழங்குவது எவ்வகையில் நியாயமானதாகும்?
ஆசிரியப் பெருமக்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர் பெருமக்கள் கடந்த 26.04.2018 அன்று சென்னை – வள்ளுவர்கோட்டம் அருகேயுள்ள மகளிர் பள்ளி வளாகத்தில் முன்னெடுத்த தொடர்போராட்டத்தில் தோள்கொடுத்துத் துணை நிற்கும் விதமாக நேரில் சென்று ஆதரவளித்தேன். அதன்பின்னர், அன்றைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வழங்கிய பரிந்துரைக் கடிதத்தையேற்று அப்போராட்டம் தற்காலிகமாகத் திரும்பப்பெறப்பட்டபோதிலும், எட்டு மாதங்களைக் கடந்தும் எவ்விதத் தீர்வும் வழங்கப்படாத நிலையில் மீண்டும் 27-12-2018 அன்று சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் ஆசிரியப் பெருமக்கள் முன்னெடுத்த அறவழிப்போராட்டத்திலும் நேரில் பங்கேற்று ஆதரவளித்தேன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில் அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஐயா ஸ்டாலின் அவர்கள் திமுக ஆட்சிக்கு வந்தால் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்ததும், அதே கோரிக்கையைத் தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்ததையும் நம்பி ஆசிரியப் பெருமக்கள் தங்களது முழுமையான ஆதரவினை அளித்து திமுகவினை ஆட்சியில் அமர்த்தினர். ஆனால், திமுக அரசு தான் அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, சம ஊதியம் வழங்காமல் ஏமாற்றி வருவதைக் கண்டித்து மீண்டும் ஆசிரியப் பெருமக்கள் கடந்த 2022 டிசம்பர் மாதம் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் முன்னெடுத்த தொடர்ப் போராட்டத்தின் போதும், 2023 அக்டோபர் மாதம் முன்னெடுத்த தொடர்ப் போராட்டத்தின் போதும், போராட்டக் கோரிக்கைகளுக்கு நேரில் சென்று ஆதரவளித்தேன். ஆனால், வழக்கம்போல் ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்ற வாக்குறுதியளித்துப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்த திமுக அரசு இன்றுவரை அதனை நிறைவேற்றவில்லை என்பது பெருங்கொடுமையாகும்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆராய திமுக அரசு அமைத்த குழு என்னானது? அக்குழு அமைத்த பரிந்துரைகள் என்ன? அதன் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? வழக்கம்போல் இக்குழுவும் கிடப்பில் போடும் நாடகமா?
ஆசிரியப் பெருமக்கள் தங்கள் வாழ்வாதார அடிப்படை உரிமையைப் பெறவேண்டி கடந்த 15 ஆண்டிற்கும் மேலாகத் தொடரும் இரு திராவிடக் கட்சிகளினது அரசுகளின் இத்தகைய பணியாளர் விரோதப் போக்கிற்கு எதிராக எத்தனை அறவழிப்போராட்டங்களை முன்னெடுத்தும் இன்றுவரை அவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை.
கடந்த முறை பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகத்தில் நடைபெற்ற ஆசிரியர் பெருமக்களின் போராட்டத்தில் பங்கேற்க நான் சென்றபோது அனுமதி மறுத்த திமுக அரசு, தற்போதும் நான் இடைநிலை ஆசிரியர் போராட்டத்தில் பங்கேற்க செல்வதை அறிந்து அவசர அவசரமாக ஆசிரியர் பெருமக்கள் மீது அடக்குமுறையை ஏவி கைது செய்துள்ளது அதிகாரத்திமிரின் உச்சமாகும்.
நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாமல் என்னைக் கண்டு அரசு ஏன் பயப்பட வேண்டும்? ஆசிரியர் பெருமக்களை நேரில் சந்தித்து அவர்கள் போராட்டத்திற்கு நான் துணை நிற்பதை திமுக அரசு தடுப்பது ஏன்?
மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் தருவதாக பெருமைப்படும் திமுக அரசு, மாணவர்களுக்கு நல்ல கல்வியை தரும் ஆசிரியர் பெருமக்களுக்கு உரிய ஊதியம் தர மறுப்பது ஏன்? மாணவர்களுக்கு மடிக்கணினி தருவதாக கூறும் திமுக அரசு, அறிவைப்புகட்டும் ஆசிரியர் பெருமக்களை அடக்கி ஒடுக்குவது ஏன்? இதற்கு பெயர்தான் கல்வியிற் சிறந்த தமிழ்நாடா? மாணவர்களுக்கு தேவை பணமல்ல நல்ல கல்விதான் என்பதை திமுக அரசு உணரப்போவது எப்போது?
தங்களின் நியாயமான உரிமைக்காகப் போராடிவரும் ஆசிரியப்பெருமக்களின் கோரிக்கை வெல்ல நாம் தமிழர் கட்சி தமது முழுமையான ஆதரவை அளிக்கிறது.
ஆகவே, நாட்டின் வருங்காலத் தலைமுறையைச் செதுக்கும் சிற்பிகளான ஆசிரியர் பெருமக்களை இனியும் வாட்டி வதைக்காமல், ஊதியப் பாகுபாட்டைக் களைந்து, அனைத்து இடைநிலை ஆசிரியப் பெருமக்களுக்கும் சம ஊதியம் வழங்க உடனடியாக அரசாணை வெளியிட வேண்டுமென்று தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி எண். 311 (சமவேலைக்கு சம ஊதியம்) நிறைவேற்றக் கோரி தொடர்ந்து 17-வது நாளாக போராடிவரும்
இடைநிலை ஆசிரியர்கள்.
சுமூகமான முறையில் போராட்டத்தை எதிர்கொள்ளத் தெரியாத கையாலாகாத பொம்மை முதல்வரின் அரசு, சட்டத்திற்கு புறம்பான வகையில் கைதுகளில் ஈடுபடுவதும், ஒரு செல்போன் போன்ற அடிப்படை உரிமைகளைக் கூட மறுப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#DMKFailsTN