#கோவைமாவட்டம்
சூலூர் வட்டம்,
எஸ்.குமாரபாளையம் ஊராட்சி,செஞ்சேரியில் தொடரும் இரட்டை சுடுகாடு முறையை ஒழிக்க கோரி நமது நீண்ட நாள் போராட்டத்தின் முதல் வெற்றி, பொது சுடுகாட்டில் அமைக்கப்பட்டுள்ள தீண்டாமை வேலியை 7-நாட்களுக்குள் அகற்றும் படி வட்டாச்சியர் உத்தரவு!
சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்.
#ஜெய்பீம்✊✊
இப்படிக்கு:
கோவை நீலம் பண்பாட்டு மையம்
செயல்வீரர், திரு.செ.சூர்யகுமார்.M.A.B.L.,
வழக்கறிஞர்,நீலம் சட்ட மையம்.!
@beemji
#சென்னையில் பள்ளி மாணவருக்கு நிகழ்ந்த சாதிய தீண்டாமையை
#நீலம்பண்பாட்டுமையம் வன்மையாகக் கண்டிக்கிறது!
#கோடம்பாக்கம், புலியூர் கிராமம் 134வது வார்டு,பதிப்பக செம்மல் கா.கணபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் தமிழ்வாணனை சாதிரீதியாக ஆசிரியர்களே (S.மீனாட்சி கணித ஆசிரியர், R.சீனிவாசன் விளையாட்டு ஆசிரியர்) இழிவுபடுத்திய சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாதது.
தொடர்ந்து ஆறு மாதங்களாக வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் மைதானத்தில் அமர வைத்திருப்பதற்கான காரணத்தை மாணவரின் வாயிலாக அறியும்போது அதிர்ச்சி அளிக்கிறது. அதாவது, மாணவர் வெட்டியான் மகன் என்கிறது ஒரு காரணத்திற்காகவே ஆசிரியர்கள் வகுப்பறைகுள் அனுமதிக்காமல் வெளியில் அமர வைத்திருக்கிறார்கள். அதோடு அம் மாணவரை சக மாணவர்கள் முன்பு அவமானப்படுத்தும் விதமாகக் கொச்சையான வார்த்தைகளால் பேசியும் அரைநிர்வாண நிலையில் நிற்க வைத்தும், வகுப்பறைக்குள் அனுமதித்தாலும் தனி இருக்கையில் அமர வைத்து அவரின் சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுத்தி பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறார்.
அவர் பள்ளியின் கலைத்திருவிழாவில், பறையிசை அடித்தற்காக "நீ பறை அடிக்கத்தான் லாயக்கு. உன் அப்பா மயானத்துலதானே வேலை பாக்குறாரு. அங்கேயே வேலைக்குப்போ' என்றெல்லாம் சொல்லி சாதி ரீதியாக தொடர்ந்து
துன்புறுத்தியும் வந்திருக்கிறார்கள் என்று மாணவரே உண்மை வாக்குமூலம் அளிக்கிறார்.
எனவே, இவ்விசயத்தில் பள்ளி கல்வித்துறை விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவருக்கும் அவருடைய குடும்பத்திருக்கும் தகுந்த பாதுகாப்பையும் வழங்க வேண்டும்.
@CMOTamilnadu@Anbil_Mahesh
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணன் கே.ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலைக்கு நீதி வேண்டி வரும் சனிக்கிழமை 20 ஆம் தேதி மதியம் 3 மணி அளவில் சென்னை எழும்பூரில் நினைவேந்தல் பேரணி. அனைத்து தலித் கூட்டமைப்பின் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்வேறு சங்கங்கள் மற்றும் கலைஞர்கள் கலந்துகொள்ளும் எழுச்சிமிகு பேரணியில் ஆயிரமாயிரமாய் அணிதிரள்வோம், வாருங்கள். ஜெய் பீம்!
#MarchforJustice #Rallyforjustice #Dalitlivesmatter #Jaibhim
திரு.இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு மண்டபத்தின் பெயர் பலகையில் அவருக்கான சிறப்பு பெயர்களான திவான் பகதூர், இராவ் பகதூர், திராவிடமணி உள்ளிட்ட பெயர்களை சூட்ட தமிழக அரசு முன்வரும் என்று நம்புகிறோம்.
#நீலம்பண்பாட்டுமையம்@CMOTamilnadu@mkstalin@evvelu
மீண்டும் அட்டூழியம்.
சென்னை பூர்வகுடி மக்களின் வீடுகளை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அகற்றுவது கண்டனத்துக்குரியது. #சென்னை_அனகாபுத்தூர் அடையார் பகுதியில் வாழும் மண்ணின் மைந்தர்களை அகற்றி விட்டு அவர்களை கைது செய்வதுதான் நீதியா?
மீண்டும் அட்டூழியம்.
சென்னை பூர்வகுடி மக்களின் வீடுகளை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அகற்றுவது கண்டனத்துக்குரியது. #சென்னை_அனகாபுத்தூர் அடையார் பகுதியில் வாழும் மண்ணின் மைந்தர்களை அகற்றி விட்டு அவர்களை கைது செய்வதுதான் நீதியா?
பணம், பட்டம், பதவிகளுக்காக நாம் போராடவில்லை, நம் வாழ்வின் அடிப்படை உரிமைகளுக்காகவும் மனிதர்களாக வாழ்வதற்காகவுமே நாம் போராடுகிறோம்.
- டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்
#CivilRights #Birthrights #Lands
#StopEvacuation
@NCSC_GoI@Collr_Chn
மீண்டும் அட்டூழியம்.
சென்னை பூர்வகுடி மக்களின் வீடுகளை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அகற்றுவது கண்டனத்துக்குரியது. #சென்னை_அனகாபுத்தூர் அடையார் பகுதியில் வாழும் மண்ணின் மைந்தர்களை அகற்றி விட்டு அவர்களை கைது செய்வதுதான் நீதியா?
பணம், பட்டம், பதவிகளுக்காக நாம் போராடவில்லை, நம் வாழ்வின் அடிப்படை உரிமைகளுக்காகவும் மனிதர்களாக வாழ்வதற்காகவுமே நாம் போராடுகிறோம்.
- டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்
#CivilRights #Birthrights #Lands
#StopEvacuation
@NCSC_GoI@Collr_Chn