🔸தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற பொறுப்பில் உள்ள நண்பர் துரைமுருகன் இல்லத்தில் சமஸ்கிருத மந்திரங்களுடன் புரோகிதத் திருமணமா?
🔸தி.மு.க. தலைவர் தலைமையில் திருமணம் என்று அழைப்பிதழ்!
🔸தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் படங்களும் அழைப்பிதழில்!
🔸தி.மு.க.வுக்கும், தலைவருக்கும் இழுக்கல்லவா?
🔸இரட்டை நிலை இனி தொடராமல் தி.மு.க. தலைவர் தடுத்திட வேண்டும்!
தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சில ஆண்டுகளாகப் பதவி வகித்துவரும், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அவர்களுடைய பேத்தியும், வேலூர் தொகுதி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் அவர்களின் மகளுமான செந்தாமரை திருமணம், மானமிகு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடத்தி வைப்பதாக அழைப்பிதழ் அனுப்பப்பட்டு, அத்திருமண அழைப்பிதழில் பெரியார், அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின், அவரது துணைவியார், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் படங்களும் அச்சிடப்பட்டுள்ளன.
🔸தி.மு.க. பொதுச் செயலாளர் இல்லத்தில் சமஸ்கிருத வேத மந்திரம் முழங்க புரோகிதத் திருமணமா?
1.11.2026 அன்று காலை நடைபெற்ற ஆடம்பரத் திருமணத்தில், ‘சமஸ்கிருத வேத மந்திரம் முழங்க நடந்த துரைமுருகன் இல்லத் திருமணம்’ என்ற செய்தி இன்றைய ‘நாளேடு ஒன்றில்’ வந்திருப்பதுடன், சமூக வலைத்தளங்களையும் ஆக்கிரமித்துள்ளது.
இப்படி இரட்டை நிலைப்பாட்டுடன் கொள்கைக்கு அவமதிப்பு ஏற்படுத்திய நடப்புக்காக திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், டாக்டர் செந்தில்குமார் (முன்னாள் எம்.பி.) ஆகியோர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் ‘இதயம் வலிக்கிறது’ என்றும், ‘கொள்கைப் பிடிப்புள்ள ஓர் இயக்கத்தில், இப்படி நடப்பதற்கு மனம் உடன்படவில்லை’ என்றும் தமது கருத்துகளை மென்மையாக தெரிவித்துள்ளனர்!
இதன்மூலமே இச்செய்தி அறிந்த நாம், பெரிதும் வேதனையும், வெட்கமும் அடைகிறோம்.
🔸புரோகிதத் திருமணம் என்றால் தி.மு.க. தலைவர் தலைமையில் என்று அழைப்பிதழ் போடுவானேன்?
புரோகித முறையில்தான் தங்கள் வீட்டுத் திருமணம் நடைபெறும் நிலை உள்ளது என்றால், அதற்கேன் தி.மு.க. தலைவர் தலைமையில் அவர் நடத்தி வைப்பதுபோல், திராவிட இயக்கத் தலைவர்கள் படமும் போட்ட அழைப்பிதழ் எதற்காக?
அதுவும், தி.மு.க.வில் இரண்டாவது பொறுப்பில் உள்ள நமது அன்பிற்குரிய பொதுச்செயலாளர் இல்ல நிகழ்வில், தி.மு.க. தலைவருக்கும், இயக்கத்திற்கு இந்த இரட்டை செயல்முறை மூலம் இழுக்கைத் தேடித் தரலாமா?
நண்பர் துரைமுருகன் சுமார் 45 ஆண்டுகளுக்குமேல் தி.மு.க.வில் உள்ளவர். நாடறிந்தவர். அவரது பொது வாழ்க்கைக்கே இது ஒரு தீராத களங்கம் அல்லவா? ஒரு குடம் பாலானால் என்ன? ஒரு துளி (ஆரிய) விஷம் பட்டால்! ‘பாலின் வெண்மையா பேசப்படும்! சற்று சிந்தித்திருக்க வேண்டாமா?
தனி மனிதர்களைவிட இயக்கம் முக்கியம், இயக்கத்தைவிட கொண்ட கொள்கை, லட்சியம் மிக முக்கியம் அல்லவா? கட்டு்ப்பாடு அவற்றைவிட மிக முக்கியம்.
புரோகிதத் திருமணம்தான் என்றால், அதனை அறிவு நாணயத்துடன் தலைவரிடம் தெரிவித்து, அந்த வழியில் வெளிப்படையாக நடத்தியிருக்கலாமே!
75 ஆண்டுகால திராவிட முன்னேற்றக் கழகம், வெறும் அரசியல் கட்சி அல்ல; பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகளைச் செயல்படுத்திட, ஆட்சியைப் பயன் படுத்துவது என்ற உறுதியுடன் உருவான தனித்தன்மையான ஒன்றாகும். அறிஞர் அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் பாதை போட்டுத் தந்த இயக்கம்.
🔸சுயமரியாதைத் திருமண முறையைத் தந்தை பெரியார் அறிமுகப்படுத்தினார்; முதலமைச்சர் அண்ணா சட்ட வடிவம் கொடுத்தார்
பார்ப்பனப் புரோகிதர்களை, சமஸ்கிருத மந்திரங்களைத் தவிர்த்து, சுயமரியாதைத் திருமண முறையை அறிமுகப்படுத்தியவர் தந்தை பெரியார். தாம் முதலமைச்சராகப் பொறுப்பிலிருந்த குறுகிய ஆட்சிக் காலத்திலும் அதற்குச் சட்ட அங்கீகாரம் பெற்றுத் தந்து, அதனைத் தம் முத்தான மூன்று வரலாற்றுச் சாதனைகளுள் ஒன்றாக நிறுவியவர் அறிஞர் அண்ணா. அவர்களைத் தலைவர்களாகக் கொண்ட இயக்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருப்பவர், அக்கொள்கையில் இருந்து வழுவலாமா?
எனவே, இதனை திராவிடர் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. எது கிடைக்கும், தி.மு.க.வைத் தாக்க என்று காத்திருக்கும் எதிரிகளுக்கு, இப்படிப்பட்ட செய்தி, வெறும் வாய்க்குக் கிடைத்த அவல் போன்றதுதானே?
🔸தி.மு.க. தலைவரின் கவனத்துக்கு
தி.மு.க. தலைவரும், இயக்கமும் இதுபோன்ற இரட்டை நிலை நடவடிக்கைகள் இனி தொடரா வண்ணம் கவனத்துடன் பார்ப்பது – தடுப்பது மிகவும் அவசியம், அவசரம்!
- கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
3.11.2026
என் பெருமதிப்பிற்குரிய -
என்னிடம் பேரன்பு காட்டும் -
திமுகழகத்தின் பொதுச்செயலாளர், அண்ணன் துரைமுருகன் இல்லத் திருமணத்தில் பார்ப்பனர்களின் சமஸ்கிருத மந்திர ஒலி கேட்டு,
இப்போதும் வலிக்கிறது என் இதயம்!
புரோகித பார்ப்பனர்களின் வேத மந்திரம் முழங்க அஷ்டலட்சுமிகள் வரவேற்க திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்களின் பேத்திக்கு "விவாஹ சுப முகூர்த்தம்" ஷேமகரமாய் மங்களத்துடன் தேவாதி தேவர்களின் அருள் ஆசியுடன் நடந்து முடிந்து இருக்கிறது.
இந்த "கன்னிகாதானத்"தை நேரில் ஆசீர்வதிக்க அண்ணாவும் கலைஞரும் இல்லையே என்று துரைமுருகன் அவர்களின் இதயம் கண்ணீர் வடித்திருக்கும்.
அண்ணா இருந்திருந்தால்" நான் கொண்டு வந்த சுயமரியாதை திருமண சட்டத்தையே இப்படி அவமதிக்கிறாயே! நீ தான் எனக்கு தம்பியா? என்று நிச்சயம் கேட்டிருப்பார்.
கலைஞர் இருந்திருந்தால் வடமொழியான சமஸ்கிருதத்தை எதிர்த்து நான் எவ்வளவு எழுதி இருப்பேன்; பேசி இருப்பேன் ; அதை நீ தேவ பாஷை என்று ஏற்றுக்கொண்டு உன் வீட்டு திருமணத்தில் ஓத வைத்திருக்கிறாயே; இதுதான் நீ எனக்கு காட்டும் மரியாதையா? என்று உரத்த குரலில் கேட்டிருப்பார்.
அண்ணாவும் கலைஞரும் "உனக்கு அதிகாரத்திற்கு வருவதற்கு மட்டும்தான் நாங்கள் தேவை; கொள்கைக்கு வேண்டாமா? என்று நிச்சயமாக கேட்டிருப்பார்கள்.
ஒரு கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்து கொண்டு கழகத்திற்கு ஊறு
விளைவிக்கும் என்று தெரிந்திருந்தும், கொள்கை உணர்வுள்ள கழகத் தோழர்கள் இதை ஏற்க மாட்டார்கள் என்பதை உணர்ந்திருந்தும், இப்படி ஒரு வைதீகக் கூத்தை அரங்கேற்றியே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்து நிகழ்த்திக் காட்டிவிட்டார் தமிழை "உயர்மூச்சாக "க் கொண்டு வாழும் மதிப்புக்குரிய துரைமுருகன்.
அவரிடம் பெரியார் கொள்கையை நாம் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை.
அண்ணா, கலைஞர் கொள்கைகளுக்காவது துரோகம் செய்யாமல் இருந்திருக்கக் கூடாதா?
அவர்களின் வழியாக கிடைத்த அதிகாரத்தை ஆரியத்திடம் அடமானம் வைப்பது வரலாற்றுத் துரோகம் அல்லவா?
என்ற கேள்வியை திராவிட இயக்க கொள்கைப் பற்றாளர்கள் ஒவ்வொருவரும் கேட்கத்தான் செய்வார்கள்.
கட்சி கட்டுப்பாட்டை மீறியவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அறிவிப்பை ஒவ்வொரு நாளும் "முரசொலி"யில் துரைமுருகன் தான் அறிவித்து வருகிறார்.
இப்போது துரைமுருகன் அவர்கள் செய்திருப்பது கழகக் கட்டுப்பாட்டை காப்பாற்றும் செயல் தானா?
#BREAKING | ரூ.5000 கோடி முதலீட்டைச் சுருட்டித் தன் சொந்தக் கணக்கில் பதுக்கிய மாபெரும் மோசடிப் பேர்வழியான BLM பிரேம்குமாருடன் என்ன ரகசியக் கூட்டணி?
#Tvkfails | #Vijayfails | #KalaignarSeithigal
அது எப்படி திமிங்கலம் பாண்டிச்சேரில இருந்து ஒரு MLA சென்னைக்கு வந்து தன்னோட மச்சான் பண்ணுற அத்தனை திருட்டு தனத்தையும் மேடை போட்டு இந்த கிழி கிழிக்கிறான்
அப்படினா இந்த லாட்டரி மாஃபியா அமைச்சுக்கு மாமனார் வீட்டுல இவ்வளவு தான் மரியாதையா
#tvkfraud