Keeping silent in the face of injustice is the easy way out, but it's a mistake. If you have a voice, use it | Embracing the digital era's limitless potential ✨
திமுக அரசில் இதே நிகழ்வுக்கு மக்கள் ஏதோ பசி பட்டினியால் சூறையாடி சென்றதைப் போன்ற தலைப்புகள் எல்லாம் நினைவிருக்கா?
தவெக அரசில் 'மகிழ்ச்சியுடன்" எடுத்து சென்றார்களாம்!
New age journalism is doomed.
‘விடியல்’ நீக்கினால் மாற்றம் வந்துவிடாது. மக்களின் பிரச்சினைகளை தீர்த்தால்தான் உண்மையான மாற்றம். செய்ய வேண்டிய வேலைகள் இன்னும் நிறைய இருக்கின்றன, Bro!
#MagalirVidiyalPayanam
That shall not be a freepass!
Intent won't justify humiliation!
Btw, on unrelated note, ஆகப்பெரும் உளவியல் வன்முறைகள் இந்திய குடும்ப, சமூக முறையில் அன்பின் பெயரால் தான் நிகழ்த்தப்படுகிறது.,
"Hands off to all of you" அல்ல.
அது "Hats off to all of you".
"Stand such a wonderful" அல்ல.
அது "Stand in front of such a wonderful...".
மூன்று பேரின் பெயர்களைச் சொன்னால், அதற்கடுத்து பயன்படுத்த வேண்டியது 'has' அல்ல, 'have'.
"Any of the sports minister" அல்ல.
அது "Any of the sports ministers".
"have a breakfast" அல்ல.
அது "have breakfast".
அமைச்சர் @Keerthana4VNR அவர்கள் மேடைகளில் பேசும் ஆங்கிலத்தில் பல அடிப்படைப் பிழைகள் இருந்தாலும், திமுக தரப்பில் இருந்து யாரும் அதை ஒரு குறையாகச் சுட்டிக்காட்டி விமர்சிக்கவில்லை. ஏனென்றால், மொழி என்பது வெறும் தொடர்பு சாதனம் மட்டுமே. ஒருவருக்கு மொழியை விடச் செயல்பாடுகளே முக்கியம் என்பது எங்களுடைய நம்பிக்கை.
ஆனால், இவ்வளவு பெரிய பொறுப்பில் இருக்கும் ஒரு அமைச்சர், பள்ளிகளுக்கு ஆய்வுக்குச் செல்லும்போது குழந்தைகளிடம் எப்படிப் பேச வேண்டும் என்கிற அடிப்படைப் பக்குவம் கூட இல்லாமல் நடந்துகொள்வதுதான் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பள்ளிகளுக்குச் செல்லும்போது மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்குக் கல்வியின் அவசியத்தை உணர்த்தி அவர்களின் எதிர்காலத்திற்குத் தன்னம்பிக்கை கொடுக்க வேண்டும்.
அதை விடுத்து, மாணவர்களின் தன்னம்பிக்கையை உடைக்கும் வகையிலும், அவர்கள் பள்ளிக்கே வர பயப்படும் வகையிலும் நடந்துகொள்வது ஒரு அமைச்சருக்கு அழகல்ல. மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்கும் இதுபோன்ற அமைச்சர்கள் பள்ளிகளுக்குள் செல்லாமல் இருப்பதே நல்லது.
குழந்தைகளிடம் எப்படிப் பேச வேண்டும், அவர்களுக்கு எவ்வாறு நம்பிக்கை கொடுக்க வேண்டும் என்பதை தவெக அமைச்சர்கள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்!
தங்களின் தவறை சுட்டிக்காட்டியதால், எனக்கு பதில் சொல்கிறேன், நேரடியாக கேள்வி கேட்கிறேன் எனும் பெயரில் மறுபடியும் அரசுப் பள்ளிகள் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகிறீர்கள். மீண்டும் கார்ப்பரேட் மனநிலை வெளியே வருகிறது.
“அரசுப் பள்ளிகள் என்பது வறுமையின் அடையாளம் அல்ல! அது பெருமையின் அடையாளம்” எனும் நம்பிக்கையை ஐந்தாண்டுகளாக விதைத்துள்ளோம். அதை பல்வேறு வகைகளில் நிரூபித்தும் உள்ளோம். Reels-ஐ மட்டும் பார்க்காமல் எங்கள் மாணவச் செல்வங்களின் சாதனைகளையும் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். அரசுப் பள்ளிகள் மீதான வன்மம் இதோடு நிற்கட்டும்! இது தமிழ்நாட்டு கல்விச் சூழலுக்கு உகந்தது அல்ல.
“புகை நமக்கு பகை” அதன் தாக்கம் நம்மைத் தொட்டால்தான் பலருக்கு புரியும்; பிறர் வலியை உணரும் சில இதயங்களுக்கே அது முன்பே புரியும்.
புகைப்பழக்கத்தை கைவிடுவோம்; வெளியில் குப்பைகளையும் டயர்களையும் எரிப்பதைத் தவிர்ப்போம்; பட்டாசு பயன்பாட்டைக் குறைப்போம். தூய காற்றை பாதுகாப்பது நம் உடல்நலத்திற்கும், சுற்றுச்சூழலிற்கும், வருங்கால சந்ததியினருக்கும் நாம் ஏற்கும் பொறுப்பாகும்.
#SmokeIsOurEnemy #CleanAir #StopSmoking #NoOpenBurning #DontBurnGarbage #DontBurnTyres #ReduceCrackers #GreenFuture
கே.வி. ஆனந்த் ஒரு இயக்குநர் மட்டுமல்ல… காலத்தை முன்கூட்டியே வாசித்த தீர்க்கதரிசி! 🎬👏
அவர் படத்தில் எச்சரித்த காட்சிகளை இன்று தமிழ்நாடு நிஜமாகப் பார்க்கிறது… ஆட்சிகள் மாறலாம், ஆனால் உண்மையைச் சொன்ன கலை நிலைத்தே நிற்கும்!
த வேகா ஆட்சியை கவிழ்ப்பதற்கான முயற்சிகளில் இறங்கி
தன்னிடம் பேரம் பேசியதாக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் காவல்துறையில் புகார் கொடுக்கிறார் உடனே காவல்துறை மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டது புகார் மனுவை தவிர வேறு எந்த சான்றும் இதற்கு இல்லை கைது செய்யப்பட்டுள்ளவர்கள் செந்தில் பாலாஜி உடன் நெருக்கமானவர்கள் என்று துணைக் கதை ஒன்றும் எழுதப்படுகிறது
சட்டமன்ற உறுப்பினர்களை இழுப்பதற்கு முயற்சி செய்தாலே வழக்கு சிறை ; ஆனால்
திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றமதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை பதவி விலகச் செய்து ஆதரவு தர வேண்டும் என்று
முதல்வர் விஜய் தன்னிடம் கூறினார் என்று வைகோ ஒப்புதல் வாக்கு மூலமே கொடுத்தாரே;
இதற்கு முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கலாமா? இது சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்கும் வேலை தானே?
இன்று முடி திருத்தம் செய்வதற்காக சென்றிருந்தேன்
வழக்கமாக செல்லும் கடை தான் ஆனால் புதிதாக ஒருவர் இருந்தார் 30 வயதுக்குள் தான்.
நான் அலைபேசியில் பேசுவதை கேட்டு விட்டு தமிழ்நாடா என்றார்
ஆமாம் என்றேன்!
உடனே யோசிக்காமல் தளபதி விஜய் என்றார்!
எனக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது.
முதல்வர் விஜய் அவர்கள் சம்பந்தமான இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போன்றவற்றை திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பகடி செய்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவருமே கவனிக்க தவறுவது விஜய் அவர்களது reach!
அது அபரிவிதமானது அசுரத்தனமானது!
They are still underestimating him, but he is beyond their imagination!
நிறைய பேர் கடித்து வைக்க வருவீர்கள் ஆனால் கள யதார்த்தம் இதுதான்!
#tvk
#vijay #tamilnadu
நான் மும்பையில் தமிழில் பேசக்கூடிய, தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய விஷயம் என்னவென்றால், தி.மு.க. அரசுக்கு பிறகு தமிழ்நாட்டில் எல்லாமே அற்புதமாகவும், சிறப்பாகவும் நடைபெறுகிறது என்ற ஒரு எண்ணம் அவர்களிடம் இருந்தது. அவர்கள் அப்படிப்பட்ட தகவல்களைப் பெற்றிருக்கிறார்கள் போலத் தோன்றியது.
இது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. ஏனெனில், தமிழ்நாட்டிற்குள் உண்மையில் என்ன நடக்கிறது என்பது வெளிமாநிலங்களில் சரியாக பிரதிபலிக்கப்படவில்லையோ, அல்லது முற்றிலும் வேறுபட்ட வகையில் வெளிப்படுத்தப்படுகிறதோ என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.
அதே நேரத்தில், தமிழ்நாட்டை அவர்கள் இன்னும் இருமொழிக் கொள்கைக்கான நிலைப்பாடு மற்றும் மாநில உரிமைகளுக்காக ஒன்றிய அரசை எதிர்த்து குரல் கொடுக்கும் மாநிலமாகவே நினைவுகூர்கிறார்கள்.
எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் அரசியல் பிம்பம் எப்படியிருக்கும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு விஷயம் மிகவும் முக்கியமானது. TVK தலைமையிலான அரசைப் பற்றிய உருவாகியிருக்கும் பிம்பமும், மக்களிடையே ஏற்பட்டிருக்கும் எண்ணமும் நம்மை அனைவரையும் கவலைப்பட வைக்க வேண்டிய ஒன்று என்று நான் உணர்கிறேன். ஏனெனில், என் பார்வையில் அவர்கள் பா.ஜ.க.வை விடவும் மோசமானவர்களாக இருக்கக்கூடும் என்ற உணர்வு எனக்கு உள்ளது.
#MumbaiStory
முதலமைச்சராக இருந்தவர் இதற்கு முன் தோற்று இருக்கிறாராவா.?!
பக்தவச்சலம் ஸ்ரீபெரும்புதூரில் 1967-ல் தோற்றதும்
சுகவனம் 1996-ல் ஜெயலலிதாவை வென்றதும்,
ஆளும் கட்சியின் (முன்னாள் முதல்வர்) காமராஜர், விருதுநகரில் சீனிவாசனிடம் வெற்றியை இழந்ததும்
என்ன கணக்கு.?!
எந்த ஊர் வரலாறு.?!
எல்லாமே அன்று இன்று என்று படம் போட்டு நினைவூட்டனும் போல! அவங்க ரசிகர்கள், influencers இந்த திட்டங்களால பாதிக்கப்படப் போறாங்களா? பிம்ப அரசியலின் ஆபத்து இதுதான் they will not be held accountable for their promises or ideology that they portrayed!
மக்களின் உயிர்காக்கும் மகத்தான மனிதநேயத் தொண்டில் அர்ப்பணிப்போடு ஈடுபடும் மருத்துவர்கள் அனைவரையும் #NationalDoctorsDay-இல் போற்றுகிறேன்.
இந்தியாவின் சிறப்பான மருத்துவக் கட்டமைப்பைத் தமிழ்நாடு கொண்டிருப்பதிலும், மருத்துவத் தலைநகராகத் திகழ்வதிலும் நம் மருத்துவர்களின் பங்கு தலையாயது.
#NEET போன்ற சதிகளால் இதனைத் தகர்த்திடப் பார்க்கும் முயற்சிகளை வெற்றிகொள்ள இந்நாளில் உறுதியேற்போம்.
@MedicalwingDMK
ஆரம்பத்தில் உங்கள் ஆட்சியின் நிர்வாக திறன் குறித்து மக்கள் கேள்வி எழுப்புவார்கள், ஆட்சி மாற்றமும் ஏற்படலாம் என்று நினைத்தேன். ஆனால் இப்போது தெளிவாக புரிகிறது – மற்ற அரசியல் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்கும் அரசியல் நடைமுறையே, இறுதியில் உங்கள் அரசியல் பயணத்தின் இறுதி அத்தியாயமாக அமையக்கூடும்.
மக்களின் நம்பிக்கையைப் பெறுவதுதான் நிலையான அரசியல்; பிற கட்சிகளின் ஆதரவைச் சார்ந்து ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வது நீண்ட கால வெற்றியை அளிக்காது.
#JustSaying