JUST IN 🚨
If you have a good Bachelor’s degree, apply for University of Melbourne Graduate Research Scholarship 2027 for Master & Ph.D and they will sponsor ALL your expenses to study in Australia.
விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய 'சிக்மா'திரைப்படம் ஆரம்பிக்கும்போது வரும் பாடல் வரிகள் :
'புத்தியுள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலியில்லை'.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல், வெறும் 107 MLA-க்களுடன், மைனாரிட்டி ஆட்சி நடத்தும் கட்சியின் கொள்கையும் செயல்பாடும் என்னவென்று பார்ப்போமா?
பிச்சை:
தீயசக்தி தீயசக்தி என்று வாய்கிழிய பேசிவிட்டு, அந்த கட்சிக்கு அளித்த வாக்குகளால் வெற்றி பெற்ற அவர்களின் கூட்டணி கட்சிகளை, அதான்…. கல்லாப்பெட்டி கூட்டணி என்று கூறிய அதே கட்சிகளில் அலுவலகங்களுக்கு “யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே” என்பது போல, “சோபா வந்தது முன்னே, தவெக வந்தது பின்னே” என்று படியேறி பிச்சை எடுத்து ஆட்சி அமைத்தது.
திருட்டு:
சொந்தமாக நின்று ஜெய்க்க வக்கில்லாமல், அடுத்த கட்சி MLA-க்களை “கீழே ராஜினாமா, மேலே இணைப்பு” என தலைமைச் செயலகத்தை குதிரை பேரக் கூடாரமாக மாற்றி, திருட்டுத்தனமாக ஆட்சியை காப்பாற்ற நினைப்பது.
ஓட்டம்:
செய்தியாளர்களைக் கண்டால் ஓட்டம்,
சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால் ஓட்டம்,
கரூரில் மக்கள் கொத்து கொத்தாக மடிந்த போது ஓடு ஓடு ஓடு ஓடு என்று ஓட்டம் பிடித்தது எல்லாம் தமிழ்நாடு மறக்குமா?
தமிழினத்தை அழிக்கத் துணிந்து, ஒன்றரை லட்சம் தமிழ் உறவுகளை இலங்கையில் கொன்றுக் குவித்த வரலாற்றுத் துரோகி காங்கிரசோடு,
நீட் என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப் படுத்தியதோடு, சுப்ரீம் கோர்ட் வரை அதை நிலைநாட்டி, என்று தமிழக மாணவர்கள் படும் இன்னல்களுக்கெல்லாம் முதல் காரணமான காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்து நிற்கும் நீங்கள் எல்லாம், எங்கள் கூட்டணியைப் பற்றி பேச கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா என்பதை யோசியுங்கள் தற்குறிகளே!
நேருக்கு நேர் நின்று பிரச்சனைகளை சந்திக்க துணிவு இல்லாமல், 72 நாட்கள் வீட்டுக்குள் முக்காடு போட்டு ஒளிந்துகொண்ட சூரரின் சுண்டெலிகள்… மன்னிக்க… அணில்கள் சற்று ஓரமாக போய் விளையாடவும்!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
Will the Honourable Supreme Court tell Navodaya schools in Hindi States to compulsorily teach any one of the South Indian languages? Can Three language formula be modified to the extent that third language should be a modern Indian Language of a different language family instead of Sanskrit? Then, we will see a real opposition for three language formula from the linguistic majority. Factual evidence of language education in India based on the past 75+ years’ experience clearly shows that the three language formula is effectively a colossal failure. It is high time to have a fresh look on language issue considering the advancement in technology that enables real time high quality translation. Let us not burden the children with more languages in the formative years (school education).
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம்;
தேவைப்பட்டால், சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடர் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றுவோம்!
#StopHindiImposition#தமிழ்_வாழ்க
பேரறிஞர் அண்ணாவின் படைப்புகள் இணையத்தில் அதிகமாக ஒரே தளத்தில் தொகுத்து வைக்கப் பட்டிருக்கும் இடம் https://t.co/Oo9FvwGzMc
மிகவும் சிறப்பாக கால வாரியாக தொகுக்கப் பட்டுள்ள இதைப் போன்ற ஒரு தளத்தை நிர்வகித்து வரும் திரு VSR செம்பியன் அவர்கள் பாராட்டுக்குரியவர்.
Anton Chekhov எழுதிய பந்தயம் (The Bet) – (ஆன்டன் செக்காவ் 1864ல் பிறந்து 1904ல் இறந்து விட்டார். புதுமைப்பித்தன், பாரதி போல் குறைந்த ஆயுள் – ஆனால் சிறுகதை மன்னன் என்ற பட்டத்தை வாங்கியிருக்கிறார்)
கதையின் லிங்க் முதல் கமெண்டில்
கதைச் சுருக்கம்
ஒரு பெரிய வங்கி அதிபர் வீட்டில் விருந்து. பேச்சு எங்கெங்கோ போய் கடைசியில் “மரண தண்டனை நல்லதா? ஆயுள் தண்டனை நல்லதா?” என்ற இடத்துக்கு வந்தது.
25 வயதுள்ள, ஒரு இளம் வழக்கறிஞர் சொன்னார்: “எப்படியாவது உயிரோட இருக்கிறதே நல்லது. நான் ஆயுள் தண்டனையைத்தான் தேர்வு செய்வேன்!”
வங்கியாளர் உடனே டேபிளை தட்டி: “அப்படியா? உன்னால 5 வருஷம் கூட தனியா இருக்க முடியாது! 2 மில்லியன் ரூபிள் பந்தயம்!”
வக்கீல்: “5 வருஷமா? சின்னப் பிள்ளை விளையாட்டு! 15 வருஷம் இருப்பேன்!”
வங்கியாளர்: “Done! ” அந்த ஒரு “Done” தான் இரண்டு பேருடைய அடுத்த 15 வருடத்தையும் காலி செய்தது.
வக்கீலை தோட்டத்தில் இருந்த தனி அறையில் அடைத்தார்கள்.
மனிதர்களைப் பார்க்கக் கூடாது. பேசக் கூடாது. செய்தித்தாள் கிடையாது. வெளியுலகத் தொடர்பு கிடையாது
ஆனா…
புத்தகம்
இசை
மது
சுருட்டு
எழுதுவதற்கு காகிதம்
எல்லாம் கிடைக்கும்.
முதல் வருஷம் அந்த ஆள் நல்லா குடிக்கறான். இரண்டாவது வருஷத்தில பியானோ கத்துக்க ஆரம்பிச்சு, கண்ட நேரத்தில் வாசிச்சு எல்லோரையும் கொல்றான்.
பின் அதுவும் போர் அடிச்சு, புத்தகங்கள் படிக்க ஆரம்பிக்கிறான். முதல் வருடம் காதல் கதைகள், நாவல்கள். இரண்டாம் வருடம் இலக்கியம். ஐந்தாம் வருடம் திரும்ப wine… கொஞ்சம் depression… கொஞ்சம் piano.
ஆறாம் வருடத்திலிருந்து வக்கீல் full upgrade! மொழிகள், வரலாறு, தத்துவம், அறிவியல், மருத்துவம், மதம், Shakespeare… அடுத்த சில வருடங்களில் 600 புத்தகங்கள்!
வெளில இருக்கறவங்களுக்கு, புதிய மொழிகளில் கடிதம் எழுதி, அது சரியா, தப்பு இல்லாம இருந்தா, ஒரு Gun Shot கொடுங்கன்னு சொல்ல, அது போலவே அவர்கள் செய்ய, அவன் சந்தோஷத்தில்.
15 வருடம் முடிவதற்கு முந்தைய இரவு… வங்கி அதிபருக்கு திடீரென்று கணக்கு நினைவுக்கு வந்தது. 15 வருடங்களுக்கு முன் கோடீஸ்வரர். இப்போது பங்குச்சந்தை, தவறான முதலீடுகள் எல்லாம் சேர்ந்து நிலைமை: “2 மில்லியன் கொடுத்தா நான் காலி – ரோட்ல தான் நிக்கணும்!”
அப்போதுதான் அவர் மூளையில் ஒரு “financial planning” idea: “வக்கீல் நாளைக்கு உயிரோட இருந்தாத்தானே பணம் கொடுக்கணும்…”
இரவு 3 மணிக்கு சாவியை எடுத்துக்கொண்டு வக்கீலின் அறைக்குப் போகிறார். வக்கீல் மேசையில் தூங்கிக் கொண்டிருக்கிறார். அருகில் ஒரு கடிதம்.
வங்கியாளர் அதை வாசிக்கிறார். அதில் வக்கீல்: “15 வருடம் புத்தகங்கள் மூலம் உலகத்தையே பார்த்துவிட்டேன். பணம், புகழ், செல்வம், சுகம் — எல்லாமே நிலையற்ற மாயை. உங்கள் 2 மில்லியன் எனக்கு வேண்டாம். பந்தயம் முடிவதற்கு 5 மணி நேரத்திற்கு முன்பே நான் வெளியேறுகிறேன். அதனால் நான் தோற்றதாக வைத்துக்கொள்ளுங்கள்.”
வங்கியாளருக்கு அதிர்ச்சி! அவரைக் கொல்ல வந்தவர்…
கடைசியில் அழுதபடி வீட்டுக்குத் திரும்புகிறார். மறுநாள் வக்கீல் உண்மையிலேயே வெளியேறிவிட்டார்.
15 வருடம் சிறையில் இருந்தவர் பணத்தை விட்டார். 15 வருடம் வெளியே இருந்தவர் பணத்துக்காக கொலை செய்யத் தயாரானார்.
கதையின் நீதி: வக்கீல் 15 வருடத்தில் ஞானத்தை சம்பாதித்தார். வங்கியாளர் 15 வருடத்தில் பங்குச்சந்தையில் பணத்தை இழந்தார்.
அதனால்… கோபத்தில் பந்தயம் கட்டாதீர்கள். பேராசையில் முதலீடு செய்யாதீர்கள்
₹2 மில்லியனை விட மனநிம்மதியே பெரிய செல்வம்!
திமுக ஏன் எதிர்க்க வேண்டும்?
எந்தச் சிக்கலுமின்றி, அரசின் சொந்த இடத்தில் இந்தியாவின் மிகச் சிறந்த சட்டமன்ற /தலைமைச் செயலக வளாகத்தை கட்டி முடித்தது திமுக.
அதை வெறும் 20% இடத்தை மட்டுமே பயன்படுத்துமளவு அப்படியே வீணடித்து அதிமுக.
இப்போது கருத்து சொல்லும் அரசியல் தலைவர்கள் ஒரு சலனமும் இன்றி அதைக் கடந்து சென்றனர்.
இந்த விஷயத்தில் திமுக ஒரு victim.
இப்போது திமுக எதிர்த்தால் இந்தத் திட்டம் நிறுத்தப்படும். இந்த தவெக அரசு தலைமைச் செயலகமோ, விமான நிலையமோ கட்டவே போவதில்லை. கட்டப்போகிறோம் என்று ஜஸ்ட் அறிவிக்கிறார்கள்.
அவ்வளவுதான்!
திமுக எதிர்த்தால் இவைகளை சட்டென நிறுத்திவிட்டு, பழியை திமுக மீது போட்டு ரீல்ஸ் போட்டு வைப் பண்ணுவார்கள்.
உப்பை அள்ளி அள்ளி தின்றது யாரோ, அவர்களே விக்கல் அடங்கும்வரை தண்ணீர் குடிக்கட்டும்.
பொதுவாக எக்கனாமி மந்தமாக இருக்கிறது என்ற பேச்சு வரும்போதெல்லாம் முதலில் அடிவாங்குவது லாரி பிசினஸ் தான் என்று நாம் நம்புகிறோம். ஆனால் இப்போது நடப்பதைப் பார்த்தால் அந்த நம்பிக்கை கொஞ்சம் உடையத் தொடங்குகிறது. லாரி வாங்குவது என்பது ஏதோ ஒரு பண்டிகை காலத்துக்கான தற்காலிக முடிவு கிடையாது. இது ஒரு பெரிய ஸ்ட்ரக்சுரல் மாற்றம்.
இந்த ஆகஸ்ட் மாசம் டெல்லி டூ கொல்கத்தா ரூட்டில் லாரி வாடகை 15 சதவீதம் உயர்ந்து 1.82 லட்சம் ரூபாயாக இருக்கிறது. பெங்களூரு டூ மும்பை மற்றும் கொல்கத்தா டூ கௌஹாத்தி ரூட்டுகளில் தலா 11 சதவீதம் அதிகரித்திருக்கிறது. வாடகை அதிகமாக இருக்கும்போது தான் ஒரு டிரான்ஸ்போர்ட் பிசினஸ் செய்பவர் புது வண்டி வாங்குவதை பற்றி யோசிப்பார்.
இங்கே தான் ஒரு முக்கியமான விஷயம் நடக்கிறது. பழைய வண்டிகளை வைத்து ஓட்டுவதை விட, அதிக டன் பாரம் ஏற்றக்கூடிய மல்டி ஆக்ஸில் டிரக்குகளுக்கு மாறினால் தான் லாபம் என்று ஓனர்கள் நினைக்கிறார்கள். இதனால்தான் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் ஹெவி டிரக் விற்பனை மட்டும் இந்த ஆகஸ்ட் மாசம் 60 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
வெறும் பண்டிகை கால டிமாண்ட் மட்டும் இதற்குக் காரணம் என்று சொல்ல முடியாது. டீசல் நுகர்வு 6.4 சதவீதம் உயர்ந்து 7 மில்லியன் டன்னாக இருக்கிறது. ஃபாஸ்டேக் வசூல் 7,185 கோடி ரூபாயைத் தொட்டிருக்கிறது. சாலையில் வண்டிகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன என்பது தான் உண்மை. பழைய வண்டிகளின் மெயின்டனன்ஸ் செலவு அதிகமாகும்போது, அதை மாற்றிவிட்டு புது டெக்னாலஜிக்கு மாறுவது தான் புத்திசாலித்தனம் என்று இந்த டேட்டா சொல்கிறது.
பொருளாதாரம் வேகம் எடுக்கிறதா இல்லையா என்கிற விவாதத்தை விட, ரோட்டில் ஓடும் லாரிகளின் எண்ணிக்கையும் அவற்றின் டன்னேஜ் திறனும் தான் உண்மையான நிலவரத்தைக் காட்டுகிறது. இந்த ரீப்ளேஸ்மென்ட் சைக்கிள் இன்னும் சில வருடங்களுக்கு நீடிக்கும் போலிருக்கிறது.
#Logistics #AshokLeyland #Economy
வரலாறு பேச வேண்டுமென்றால், நீதிக்கட்சி காலத்திலிருந்து தொடங்க வேண்டும். இந்தத் தமிழ்ச் சமூகத்துக்காக நாங்கள் என்ன செய்தோம் என்பதிலிருந்து தொடங்க வேண்டும். ஆனால், தவெகவிற்கும், அதன் முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கும் அந்த வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தலைவர் கலைஞரைப் பற்றியோ, தி.மு.க.வைப் பற்றியோ அவதூறாகப் பேசுவதையே அரசியல் தகுதியாக இன்னும் எத்தனை காலத்திற்கு நினைத்துக் கொள்ளப்போகிறார்கள் என்று தெரியவில்லை. எல்லாவற்றையும் நம்புவதற்கு ஒரு கூட்டம் இருக்கும் வரை, எதை வேண்டுமானாலும் பேசுவதற்கு ஒரு கூட்டமும் இருந்துகொண்டுதான் இருக்கும்.
காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலுரை அளிக்க வேண்டிய முதலமைச்சர், எழுதிக் கொடுத்ததைப் படிப்பதைத் தவிர, கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல், நீண்ட சொற்பொழிவை நிகழ்த்திவிட்டு, எதிர்வினை வந்துவிடுமோ என்ற பயத்தில் விவாதத்தையே சபாநாயகர் தவிர்த்திருக்கிறார்.
கடந்த மூன்று நாட்களாக காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்க ஒத்திகை பார்த்தும், அந்த மானியக் கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் பேசியது சொற்பமே. மற்றவை எல்லாம் காலம் காலமாகப் பரப்பப்பட்ட வதந்திகளையும், சமீபத்திய WhatsApp factory பொய்களையும் கலந்து, முதலமைச்சருக்கு ஒரு பிரதியைக் கொடுத்துவிட்டார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
சட்டம்-ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் & பெண்களின் பாதுகாப்பு குறித்தும், பிற மக்கள் பிரச்சனைகள் குறித்தும் பேச வேண்டிய சபை, இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக்கிறது.
ஒன்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது...
Not everything loud is true
@CMOTamilnadu