எவ்வளவு அறிவுப்பூர்வமான விளக்கம் லாரன்ஸ்... உங்க சித்தாந்தத்தில் மக்களை நீங்கள் தெருநாயாக சித்தரிப்பதையும் , பிஸ்கட்டும் பிரியாணியும் போட்டு மக்களை குறைக்கவிடாமல் பார்த்துக்கொள்ளனும் எனக்கூறி ஒரு வாக்காளனின் உணர்வை கேவலப்படுத்தும் உங்கள் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன்.. மக்களின் எதிர்ப்பு குரல்களுக்கு ஏதாவது போட்டு வாயை மூடவேண்டும் என நீங்கள் சொல்வதில் உங்கள் அரசியல் பயணம் எதை நோக்கி செல்கிறது என புரிந்துவிட்டது.. இதுவரை உங்களிடம் இருந்ததாக கருதப்பட்ட மனிதாபிமானத்தின் மீது சந்தேகம் கொள்ளச்செய்கிறது உங்கள் பேச்சு.. ஆனால் உங்களுக்கும் இந்த மக்கள் ஓட்டு போடுவார்கள்.. கவலை வேண்டாம்..
இப்படிக்கு..
பிஸ்கட்டு பிரியாணிக்காக கையேந்தி நிற்காத மக்களில் ஒருவன்..
‘சோஷியல் மீடியா மூலம் ஆட்சியைப் பிடிக்கலாம். ஆனால் சோஷியல் மீடியா மூலம் ஆட்சியை நடத்த முடியாது’ என்பதை இன்று விஜய் உணர்ந்திருப்பார்.
தயாரிக்கப்பட்ட உரையை ஒரு தலைவர் பொதுக்கூட்டத்தில் பேசலாம்; சட்டமன்றத்தில்கூட பேசலாம். ஆனால் சட்டமன்றத்தில் மாற்றுக்கட்சிகளின் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் சொல்ல டைமிங் சென்ஸ் வேண்டும்.
இன்று எப்படியும் தங்கள் அரசை யாராவது ‘மைனாரிட்டி கவர்ன்மென்ட்’ என்று சொல்வார்கள், குதிரை பேரம் என்று சொல்வார்கள் என்று யூகித்து அதற்கான அளவான இரண்டு பஞ்ச் டயலாக்குகளுடன் வந்துவிட்டார் விஜய். ஆனால் வன்னி அரசு உரையில் கல்புர்கி, கௌரி லங்கேஷ், தமிழீழம் தொடங்கி பிரேமலதா, உதயநிதி வரை சுற்றிவளைத்த தாக்குதல்களால் அவர் திணறிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.
‘குதிரை பேர’த்துக்கு ‘குதிரை வேகம்’ பஞ்ச் டயலாக். ஆனால் அவருடைய அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்றுதான் சொல்லப்பட்டதே தவிர, யாருமே ‘சிறுபான்மை அரசு’, ‘மைனாரிட்டி கவர்ன்மென்ட்’ என்றெல்லாம் சொல்லவில்லை. இருந்தாலும் எழுதி வந்த ஸ்கிரிப்டை வீணாக்க வேண்டாமே என்று பேசிவிட்டு, சிலமணி நேரங்களுக்குப் பிறகு உதயநிதிக்கு சோஷியல் மீடியாவில் பதில் அளித்திருக்கிறார்.
அவர் பேசிய ‘சிறுபான்மை அரசாங்கம்’ பஞ்ச் டயலாக்குக்கும் முன்னுதாரணம் கலைஞர்தான் என்பதையாவது விஜய் தெரிந்துகொள்ளவேண்டும்.
கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ ஒருவர் ‘’உங்கள் அரசு மூன்றாந்தர அரசு’’ என்று விமர்சித்தார். உடனே ‘’இது மூன்றாந்தர அரசு அல்ல; நாலாந்தர அரசு. வர்ணாசிரமப் படிநிலையில் நான்காவது வர்ணமான சூத்திரர்களின் அரசு’’ என்று பதில் அளித்தார். இந்த வரலாறு தெரிந்த ஒருவர்தான் விஜய்க்கு அந்த ‘சிறுபான்மை அரசாங்கம்’ பஞ்ச் டயலாக்கை எழுதிக்கொடுத்திருக்கிறார்.
ஆனால் கலைஞருக்கு இருந்த டைமிங் சென்ஸ்தான் அவரை அந்த பதிலைக்கூற வைத்தது. விஜய்க்கு டைமிங் சென்ஸ் இல்லாததால் சட்டசபையில் பதில் கூற முடியாமல் தோற்றிருக்கிறார்.
பனையூருக்கு எல்லோரையும் வரவைக்கலாம். ஆனால் சட்டசபையை சோஷியல் மீடியாவில் கூட்ட முடியாது சி.எம் சார்!
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
@rajakumaari தோழியே.. இந்த பதிவில் கூறியுள்ளதை அவர் சட்டமன்றத்தில் நேருக்குநேராக சொல்லியிருக்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றவில்லையா? வீட்டிற்கு சென்ற பின்பு டிவிட்டரில் பதிவிடுவது அவரது இயலாமையை காட்டுகிறது. அவரின் பெயருக்கும் புகழுக்கும் இதுபோன்ற செயல்கள் நிச்சயம் களங்கம் விளைவிக்கும்.
தவெகவை விட திமுக 10% குறைவாக வாக்கு பெற்றுள்ளதாக விஜய் வழக்கம் போல பொய் தகவலை பதிவிட்டுள்ளார்.
உண்மையில் திமுக - தவெக இடையேயான வாக்கு வித்தியாசம் வெறும் 3%
போட்டியிட்ட தொகுதிகள் & பெற்ற வாக்குகள்:
தவெக - 233 - 1,72,26,209
திமுக - 176 - 1,19,26,144
திமுக 233 தொகுதிகளில் போட்டியிட்டு இருந்தால் தற்போதைய வாக்கு நிலவரப்படி பெற்றிருக்கும் வாக்குகள் : 1,57,88,588
(233×1,19,26,144%176)
திமுக - தவெகவுக்கு இடையேயான வாக்கு வித்தியாசம் = 14,37,621
அதாவது 14.38 லட்சம்
மொத்த பதிவான வாக்குகள்: 4,93,24,125
233 தொகுதிகளில் திமுக நின்றிருந்தால் அதன் வாக்கு சதவிகிதம் = 32%
எனவே
TVK = 35%
DMK = 32%
வாக்கு வித்தியாசம் 3% மட்டுமே
விஜய் ப்ரோ வாய்க்கு வந்ததை அடிச்சு விடாமல் சரியான தரவுகளுடன் பேச எப்போது கற்பீர்கள்? @TVKVijayHQ
முதன் முறையாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதை முழுமையாக பார்க்கிறோம் !
இந்த ஜனநாயக முன்னெடுப்பிற்கு பாராட்டுக்கள் @CMOTamilnadu !
தயவு செய்து இதை மாற்றிவிட வேண்டாம் !
இந்திய அரசியலமைப்புச் சட்டம், மக்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று சொல்கிறது.
சட்டம் சொல்வதற்கு எதிர்மறையாக இவரையா உங்களுடைய ஆலோசகராக நியமிப்பீர்கள் @CMOTamilnadu ?
தனிப்பட்ட முறையில் குடிமக்களுக்கு ஜோசியத்தின் மீது நம்பிக்கை இருக்கலாம், ஆனால் அரசு அப்படி இராசிபலன்கள் மீது நம்பிக்கை கொண்டதாக இருக்க முடியாது.
@TVKVijayHQ
பெரியாரை கொள்கைத் தலைவராகக் கொண்டுள்ள த.வெ.க வின் அரசில் தனது ஜோதிடரை முதலமைச்சரின் சிறப்பு அதிகாரி பொறுப்பில் நியமித்துள்ளதை மாண்புமிகு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். புதிய அரசு பொறுப்பேற்றவுடன் இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்குவதை தவிர்ப்பது நல்லது.
ஜோசியருக்கு எதுக்கு அரசு பதவி @CMOTamilnadu ?
நீங்கள் வென்றது ஜோசியத்தால் அல்ல , ஜாதி மதங்கள் கடந்து வாக்களித்த ஏழை வர்கத்தால் !
உங்களுக்கு வாக்களித்தவர்களை அவமானப்படுத்தும் செயல் இது !!
Tamilnadu Elections வணக்கம் தமிழ்நாடு.. காமராஜர் தோற்றார். மு. க. ஸ்டாலின் தோற்றிருக்கிறார். சமூகம் ரசிகர் மயமாகி இருக்கிறது. அரசியல் மயமாகவில்லை என்பது நிரூபணமாகிறது. அரசியல் விழிப்புணர்வு செய்பவர்களின் பணி என்பது எப்போதும் எதிர்க்கட்சி பணிதான். தொடர்ந்து பயணிப்போம். வெற்றி பெற்றவர்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.. #justasking
There is only one caste - humanity
There is only one religion - Love
There is only one language - heart
There is only one God - Omnipresent
Aishwarya Rai said this in front of the Divider-in-chief 😂😂
2011 - A soft spoken revolutionary film maker and I stood helpless in a hospital literally in tears with a million dreams for the future with almost zero chances.
2018 - The film maker is one of India’s best already and produces one of the best Tamil films of all time. Director Ram sir and I stood in tears watching the film hoping it would be accepted by all. The film shakes the political system and wins big. A new legend in direction is born.
2025 - These 2 film makers meet yet again, now with tons of baggage on their heads. They are both constantly accused of playing caste politics, targeted at every little slip , constantly patronised to do other things and so on . Then comes #BisonKaalamadan - a true peak into what these 2 revolutionaries want to see in this beautiful world. I watched the film with tears of hope and am so proud of you my dearest babies @beemji and @mari_selvaraj . The way you hugged Mari with tears after the press show (I think) is a testament to what you should always remain as Ranjith.
Yes I argue a lot with you and constantly get agitated with certain things personally with the only intention of keeping the goal unchanged . Bison was a warm hug to me .
Dhruv , you did so well in this one man. It felt like all of cinema conspired to bless you with this. We are proud of what you have done . I am sure Appa will be jumping around by now 😜
I am so glad the world will experience @nivaskprasanna ‘s skill in a fitting movie. More to come .
For now , pichita Mame ❤️🩹❤️🩹❤️🩹
நடிகர் விஜய் வெளியிட்ட வீடியோவை பார்த்துவிட்டு அவரை ஆதரித்து கண்ணீர் மல்க பேசிய சில பெண்களுக்காக இந்த பதிவு.
உலகிலேயே கொடூரமானவன்,மகா கொலைகாரன் என்றால் நம் நினைவுக்கு உடனே வருவது ஜெர்மனி சர்வாதிகாரியான ஹிட்லர் தான். ஆனால்,இந்த ஹிட்லருக்கே குருவாக இருந்த மகா மகா கொலைகாரன்,கொடூரமானவன், பெண் பித்தன் யார் என்றால் அது இத்தாலியை 21 ஆண்டுகள் ஆண்ட கொடுங்கோலன் முசோலினி தான்.
இவ்வளவு கொடூரமானவனை ஒரு சிறுமி உயிருக்கு உயிராக காதலித்து அவனை கரம் பிடித்தாள் என்றால் நம்ப முடிகிறதா?
ரோம் நகரை சேர்ந்த ஒரு பணக்கார தம்பதிக்கு ஒரே மகளாக பிறந்தவள் தான் கிளாரா பெட்டாசி.
பள்ளி செல்லும் 16 வயது பருவத்திலேயே 49 வயதான முசோலினி மீது தீராத காதல் கொண்டாள்.
இதற்கு காரணம், பொதுவெளியில் முசோலினி ஆற்றிய புரட்சிகரமான உரைகள் தான்.அப்போதே, முசோலினி பல பெண்களுடன் உறவில் உள்ளவர் என்பது கிளாராக்கு தெரியும்.ஆனாலும், அவன் மேல் உள்ள காதலை அவள் விடவில்லை.
வரலாற்று ஆசிரியர்கள் இவ்வாறு கூறுகிறார்கள், 'He was a notorious womanizer. He had relationship with hundreds of women' என்கிறார்கள்.
முசோலினியே ஒருமுறை 'I believe power and sex are linked together and I need sex as much as I need food' என அவனே கூறியுள்ளான்.
சோ,இப்படியான ஒரு பொம்பள பொறுக்கி,அயோக்கியன், கொடூரனை தான் கிளாரா உயிருக்கு உயிராக காதலித்தாள்.
கிளாராக்கு 20 வயதானபோது ஒரு முறை காரில் சென்றுக் கொண்டு இருந்தபோது,அவள் கார் முன்னால் முசோலினியின் கார் செல்வதைக் கண்டு உற்சாகம் அடைந்து ஓட்டுனரை அந்த காரை ஓவர் டேக் செய்ய சொல்ல,ஓட்டுனர் அந்த காருக்கு அருகில் சென்றதும் கிளாரா மிகவும் உற்சாகமாக முசோலினியை பார்த்து கை ஆட்டினாள்.
கிளாராவின் அழகு,இளமை மற்றும் உற்சாகத்தை பார்த்த முசோலினி காரை நிறுத்தி கிளாராவை அழைத்து சிறிது நேரம் பேசியுள்ளார்.
இந்த சந்திப்பில் கிளாரா தன்னை ஒரு கடவுளாகவும்,உயிர் காதலனாகவும் பார்ப்பதை முசோலினி புரிந்துக் கொண்டான்.
இந்த சந்திப்பிற்கு பின்னர் கிளாரா அடிக்கடி அவனுக்கு கடிதம் எழுதி வந்தாள்.கிளாராவின் விசுவாசம், காதல், அற்பணிப்பைக் கண்ட முசோலினி அவளை தன்னுடனே வைத்துக் கொள்ள முடிவு செய்தான்.
முசோலினியை சுற்றியிருந்த மற்ற பெண்கள் தங்களது தேவைக்காகவும், அதிகாரத்திற்காகவும் இருக்க கிளாரா மட்டும் உண்மையான காதலுடனும் விசுவாசத்துடனும் இருந்ததால் முசோலினி அவளை மிகவும் நம்பினான்.
இப்படி உறவு சென்றுக்கொண்டுருந்தபோது 1945-ல் இரண்டாம் உலகப் போரின் முடிவில் இத்தாலிய போராளிகள் முசோலினியை கொல்ல துடித்தார்கள்.
இச்சூழலில் கிளாராவை தப்பித்து போக சொன்னான்.ஆனால், கிளாரா 'இறுதி வரை நான் உங்களுடனே இருப்பேன்' என மறுத்து விட்டாள்.
இறுதியாக போராளிகள் முசோலினியையும் கிளாராவையும் பிடித்து கட்டிப்போட்டனர்.
முசோலினியை கொல்ல மிலன் நகருக்கு இழுத்து சென்றனர். கிளாராவும் உடன் சென்றாள்.
ஓரிடத்தில் முசோலினியை துப்பாக்கியால் சுட்டு கொல்வதற்கு முன் ஒரு போராளி கிளாராவை பார்த்து, 'பெண்ணே,நீ அரசியல் ரீதியாக எங்களுக்கு எந்த குற்றமும் செய்யவில்லை.அதனால் நீ மட்டும் இங்கிருந்து புறப்பட்டு செல்' என்றான்.
இதற்கு கிளாரா,'இவர் இல்லாமல் வாழ்வதை விட இவருடன் இறப்பதையே நான் பாக்கியமாக கருதுகிறேன்.நான் போக மாட்டேன்' என மறுக்கிறாள்.
இப்போது தான் வரலாற்று ஆசிரியர்களை வியப்பில் ஆழ்த்திய அந்த சம்பவம் நிகழ்ந்தது.
போராளி துப்பாக்கியை தூக்கி முசோலினியை நோக்கி சுட்ட கண நேரத்தில் வெகு அருகில் நின்றுக் கொண்டுருந்த கிளாரா புயலாக முசோலினி முன் பாய்ந்து அந்த குண்டை தன் மார்பில் வாங்கிக்கொண்டு கீழே சரிந்து விழுந்து உயிரை விட்டாள்.
கிளாராவின் இச்செயல் புரட்சியாளர்களை திகைக்க வைத்தது. பின்னர்,அவன் முசோலினியையும் சுட்டுக் கொன்றான்.
இருவரும் இறக்கும்போது முசோலினிக்கு வயது 61. கிளாராவுக்கு வயது 28.
உலகிலேயே கொடூரமான ஒருவனை ஒரு இளம்பெண் இந்தளவிற்கு காதலிக்க முடியுமா?
முடியும்.ஏன்னா, ஒருவர் மீது அசைக்க முடியாத/ஆழமான காதல், அன்பை வைத்த பின்னர் அவருடைய இன்னொரு கொடூரமான பக்கம் தெரிந்தாலும்,உடனடியாக தவிர்ப்பது கடினமானது.ஏன்னா, இது மனசு சம்பந்தப்பட்டது.
ஆனால்,எவ்வளவு தான் ஒருவர் மீது ஆழமான காதலும் அன்பும் வைத்திருந்தாலும் கூட அவர் இந்த சமுதாயத்திற்கு ஆபத்து,கொடூர கொலைகாரன் என தெரியவந்தால், அவர் மீதான காதலையும் அன்பையும் உடனே தவிர்த்து விடலாம். இந்த முடிவு எடுப்பது மூளை சம்பந்தப்பட்டது.
முசோலினி விவகாரத்தில் கிளாராக்கு மனசு தான் இளகியதாக இருந்ததே தவிர, அவருக்கு மூளையை பயன்படுத்தி சிந்திக்கும் திறன் இல்லை.
ஆக, தவெக விஜய் விவகாரத்திலும் இப்போது அழுத்துக்கொண்டு வீடியோக்களை வெளியிடும் அத்தனை பெண்களும் மூளை இல்லா கிளாராக்கள் தான்!
Pc: prakash palani
TVK என்பது கட்சியல்ல, அது ஒரு influencer marketing என்று அந்த standup comedian சொன்ன போது எனக்கு முழுமையாக புரியவில்லை. நேற்று தான் அதன் பொருள் முற்றிலும் புரிந்தது. விஜய்யை பற்றி பேச ஒரு வீடியோவிற்கு 30000 ரூபாய் தருகிறார்களாம்.
அனைத்து கட்சிகளும் ஐடிவிங் நடத்துவார்கள். சம்பளத்திற்கு ஆட்கள் இருப்பார்கள். Paid promotions என்பது தேர்தலின் போது நடக்கும். தங்களது சாதனைகளை அல்லது பரப்புரைகளை காசுக்கொடுத்து செய்வார்கள்!
ஆனால், influencers வைத்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ திமுக அதிமுக even நாதகவால் கூட வீடியோக்களை போட முடியாது. ஏனெனில் அது அப்பட்டமாக தெரிந்துவிடும்.
ஆனால், தவெக இதை பல ஆண்டுகளாக செய்கிறது என்பது தெரிகிறது. விஜய் பட பிரோமசன், 1000 கோடி கலெக்சன் என பரப்புரை செய்வது, மற்ற நடிகர்களின் படம் வந்தால் அவர்களை காலி செய்ய பணம் தருவது என இவர்கள் செய்து இருக்கிறார்கள்.
ஆனால், இவர்கள் அரசியலிலும் இதே பாணியை தான் பயன்படுத்துகிறார்கள் என்பதும், 41 உயிர்கள் போனபின்னும் அவர்களால் இதே influencers வைத்து conspiracy theory க்களை பரப்ப முடிகிறது என்பதும், எவ்வித அறமும் இல்லாமல் இவர்களால் செயல் பட முடியும் என்பதும் நேற்று வெளியான அந்த ஆடியோவில் வெட்ட வெளிச்சமாக தெரிகின்றது!
Loop ல இருந்து ராகேஷ் பேசுறேன் ப்ரோன்னு கவின்னு ஒரு influencer கிட்ட பேசுற ஆடியோ. இன்னக்கி சாயங்காலம் தளபதியின் ஒரு வீடியோ வரும், அதுல அவர் எமோசனலா பேசியிருப்பாரு, அத வச்சி நீங்க - அவர் எமோசன்ஸ புரிஞ்சிக்குங்க, குடும்பத்துல 41 பேர் செத்து இருக்காங்கன்னு அவரு சோகத்துல இருக்காரு. போலீஸ் தான் அவரை கரூர் வரவேணாம், வந்தா கலவரம் நடக்கும்ன்னு சொல்லி தடுத்து இருக்காங்க, இது நம்ம யாருக்கும் தெரியலன்னு பேசி வீடியோ போடுங்கன்னு சொல்றார் ராகேஷ். இது சரியா வரும்னு தோணல ப்ரோ, பயமா இருக்கு என எதிரில் இருப்பவர் மறுக்கிறார்.
நாங்க யாருன்னு உங்களுக்கு தெரியும் ப்ரோ, நாங்க இருக்கோம், இன்னும் தளபதியோட ஜனநாயகன் வரப்போகுது, உங்கள கவனிச்சிக்கிறோம், இப்ப சின்ன சின்ன ஊர்ல இருக்குற ஐடிகளையும் நாங்க எடுத்துட்டு இருக்கோம், இந்த Payroll ல நீங்க வந்துட்டீங்கன்னா நல்லா சம்பாதிக்கலாம் என ராகேஷ் convince பண்ண முயல்கிறார்.
ஆனால் எதிரில் இருப்பவர் convince ஆகல. உடனே போன வீடியோக்கு 20000 தந்தோம் இந்த வீடியோ 30000 தருகிறோம். தளபதி வீடியோவை கீர்த்தி சுரேஷ்ல இருந்து பல நடிகர்கள் பகிர்வார்கள். இந்தியா முழுக்க நாங்க influence பண்றோம். Local லயும் இதை பரப்ப தான் உங்க கிட்ட பேசுறோம் என்கிறார் ராகேஷ்.
இந்த கவி என்பவர் மனசாட்சி உள்ளவர் போல. கடைசிவரை அந்த ஆடியோவில் அவர் ஒத்துக்கொள்ளவில்லை!
இவர்கள் loop, route என எத்தனை பேரில் எத்தனை பேருக்கு எவ்வளவு காசை கொடுத்து வீடியோ போடுகிறார்கள் என்பதை காணும் போது இவர்களிடம் இவ்வளவு காசும், இதை தமிழ்நாட்டில் இரைக்க நினைக்கும் மனநிலையும், தமிழ்நாட்டை பதட்டநிலையில் வைத்திருக்க நினைக்கும் முயற்சியும், 41 மனிதர்கள் இறந்ததை நேரில் கூட பார்க்க வராத ஒரு சைக்கோவிற்கு இவர்கள் தரும் நாடக முட்டும், இவர்கள் பாஜகவின் overall payroll ல் இருப்பார்களோ என்று வரும் சந்தேகத்தை தவிர்க்க முடியவில்லை.
இவர்களின் payroll ல் இருப்பவர்களை கணக்கெடுத்தால் அது ஆக்டோபஸ் கரங்களாக நீளும் என்கிறார்கள்.
முழுமையான உண்மைகள் வெளியாகி இதன் பின்னால் இருக்கும் சமூக விரோதிகளின் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். நிறைய இரத்தம் குடிக்க இந்த கூட்டம் காத்திருக்கிறது!
தமிழ்நாடு காக்கப்படட்டும்!