க்ரேசி மோகன் இறந்து போன அன்னிக்கு நடந்ததை மாது பேட்டி கொடுத்திருக்கார். அதிகாலையில கோயிலில் இருக்கும் போது க்ரேசி அவருக்கு கால் செய்திருக்கார். வயிறு வலிக்குதுன்னு கம்ப்ளைண்ட் பண்ணிருக்கார். இனிமே வெத்தலை போட மாட்டேன்னு சொல்லிருக்கார்... வலி தாங்கலைன்னு சொல்லிட்டு வீட்லையே எதையோ சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுன்னு இவர் சொல்லிட்டு போயிருக்கார்....
மறுபடியும் ஒன்னு இரண்டு மணி நேரத்துக்குள்ள கால் செய்து வலி அதிகமாகுது மூச்சு விட முடிலன்னு சொல்லிருக்கார். காரை எடுத்துட்டு ஹாஸ்பிடல் போய் அட்மிட் செய்த கொஞ்ச நேரத்தில உயிர் பிரிந்திருக்கு.
என்னுடைய கணிப்பு க்ரேசிக்கு வலி வந்து அவர் மாதுக்கு கால் செய்றதுக்கு முன்னாடியே 1 மணி நேரத்துக்கு அவரா சமாளிச்சு பார்த்திருப்பார். சமாளிக்க முடிலன்ன உடனே கால் செய்திருப்பார். அதில ஒரு மணி நேரம், மாது வந்து பார்த்தப்போ 1 மணி நேரம், அடுத்த போன் கால், ஹாஸ்பிடல் போனதுன்னு 2 மணி நேரம் போயிருக்கு. மாரடைப்புக்கு முதல் 3 மணி நேரம் கோல்டன் டைம். ஒரு வேளை காலையில முதல் முறை வயிறு வலின்னு ஆரம்பிச்ச உடனே ஹாஸ்பிடல் போயிருந்தா இன்னிக்கு க்ரேசி நம்ம கூட இருந்திருக்கலாம்...
முதல் விசயம் அதிகாலையில் வலி. பெரும்பாலான இதய பிரச்சனை & ஸ்ட்ரோக் அதிகாலையில தான் வருது. வயிற்று வலி, தாடை வலி, நெஞ்சு வலி, பிடறி வலி, கழுத்து வலி, நெஞ்சு கரிப்பு என எதுவா இருந்தாலும் அதிகாலையில வருவதற்கு கூடுதல் கவனம் கொடுக்கணும். உடனடியா இரத்தக் கொதிப்பை பார்க்கணும், 90க்கு கீழேயோ 170க்கு மேலேயோ இருந்தால் உடனடியாக மருத்துவமனை போகணும்.
இரண்டாவது புகையிலை பழக்கம். வெற்றிலை பாக்கு, சிகிரெட், பீடி, ஹான்ஸ், பாக்கு, மூக்குப்பொடி என எந்த விதமான புகையிலை பழக்கம் இருந்தாலும் உடம்பில எங்க வலி வந்தாலும் நேரா கிளம்பி ஹாஸ்பிடல் போய்டுங்க.. பிபி அங்க போய் பார்த்துக்கலாம்.
அடுத்தது உழைப்பில்லாத வாழ்க்கை முறை. நிச்சயமா பெரும்பாலோனோருக்கு இது பொருந்தும். அதிக உழைப்பில்லை, அதிகாலை வலி.. கிளம்பு ஹாஸ்பிடலுக்கு...
அடுத்து சர்க்கரை நோய்.. ஒழுங்கா மாத்திரை எடுக்கலியா?? அதிகாலை வலியா? ஹாஸ்பிடல் தான்...
மிக முக்கியமானது பிபி.. மாத்திரை போடல, உடனடியா கிளம்பனும். ஹாஸ்பிடலுக்கா பரந்தாமனை பார்க்கவா என்பது எவ்ளோ சீக்கிரமா கிளம்பறீங்க என்பதை பொறுத்தது.
கவனிக்க வேண்டிய இன்னொன்னு... வயது. 40 வயசுக்கு மேல, அதிகாலை வலி... கிளம்புங்க ஹாஸ்பிடலுக்கு.
ஒரு வேளை மேலே சொன்ன காரணத்துல ஒன்றுக்கு மேல உங்களுக்கு இருந்தா அதிகாலை வலி வந்தாலே அது கண்டிப்பா ஹார்ட் அட்டாக் தான்.. உடனடியாக ஹாஸ்பிடல் போங்க.
முதல் 3 மணி நேரம் தான் முக்கியம். வலிக்குது ஒரு சோடா குடிப்போம்ன்னா சோடா முடியறதுக்கு முன்னாடி சோலி முடிஞ்சுரும். கார்டியாக் அரெஸ்ட் வேற வகை. அது யாருக்கும் எப்பவும் வரலாம்... காப்பாற்றுவது கடினம் ஆனால் ஹார்ட் அட்டாக் 99% பெரும்பாலும் 3 மணி நேரம் டைம் கொடுக்கும்... சுதாரிச்சுக்கணும்.
அதுக்கு தேவை ஓரளவு விழிப்புணர்வு தான். அதுக்கு இந்த பதிவை படிச்சிருந்தாலே போதும்.
#Shared
🚨அதிர்ச்சியூட்டும் காணொளி: அருகில் எந்தப் பராமரிப்பாளரும் இல்லாத நிலையில், ஒரு சிறு குழந்தை மற்றொரு குழந்தையைத் தொடர்ந்து 10 நிமிடங்கள் கொடூரமாகத் தாக்குகிறது! 💔
ஃபர்ஸ்ட்கிரை இன்டெல்லிடாட்ஸ் (மகாராஷ்டிரா 📍) நடந்த இந்த மனதை உலுக்கும் காணொளி
ஒரு பெரிய கேள்வியை எழுப்புகிறது:
என்ன மாயம்
சர்க்கரையை முற்றிலும் தவிர்த்து, 6 மாதங்கள் தொடர்ந்து பின்பற்றினால் சுமார் 10 கிலோ வரை எடை குறைகிறது உள்ளது.
சர்க்கரை சேர்த்த உணவுகள் எதையும் சாப்பிடக்கூடாது.
பேக்கரி பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடக்கூடாது.
தினமும் குறைந்தது 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
இந்த பழக்கங்களை ஒழுங்காக கடைப்பிடித்தால் உடல் எடை 10 கிலோ குறைவதோடு, உடல்நலமும் மேம்படுகிறது ஆனால் தவ வாழ்க்கை வேனும் .
கல்யாண மாப்ளயே அவர் கல்யாணத்தை வீடியோ எடுக்குறாரு.
Rayban Meta AI கண்ணாடி மூலமா எடுத்த வீடியோ, பாக்கவே சூப்பரா இருக்குல்ல எல்லாம் டெக்னாலஜி.
கண்ணாடி விலை மட்டும் ₹42000.
மனோஜ்-நந்தனா பற்றி யாரும் அறியாத சில தகவல்கள் ...
முதல் குழந்தை பாரதிராஜாவின் மனைவியின் வயிற்றிலிருந்து கருவாகி, பிறந்தது வரை பாரதிராஜா அசிஸ்டண்ட் டைரக்டர் தான்.
குழந்தை பிறந்த அடுத்தநாள் அந்த வீட்டுக்குள் நுழைகிறார் ராஜ்கண்ணு. "என் முதல் படத்தை நீ தான் இயக்கணும்"னு சொல்லி ஷூட்டிங்குக்கான அட்வான்ஸ் தொகையை தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் தொட்டிலில் வைக்கிறார் ராஜ்கண்ணு.
அடுத்த நாள் காலையே 'இயக்குனர் பாரதிராஜா' உருவாகிறார். அப்படி ஒரு லக் கொண்டது அந்தக்குழந்தை. பாரதிராஜாவுக்கு பிடித்த நடிகர் ஹிந்தி ஹீரோ மனோஜ்குமார். அவர் பெயரையே குழந்தைக்கு வைக்கிறார் பாரதிராஜா. பின்னாளில் பாரதிராஜாவின் மனைவி சந்திரலீலாவின் சகோதரர் மனோகரன் திரையுலகில் நுழைந்ததும் மருமகனின் பெயரை வைத்துக்கொண்டு மனோஜ்குமார் என்கிற பெயரில் 'மண்ணுக்குள் வைரம்' படம் மூலம் இயக்குனரானார்.
மனோஜ் இரண்டு வருடம் சென்னையில் படித்தார். சேட்டை அதிகமாக அவரை பாரதிராஜா ஊட்டியில் தள்ளி விட்டார். மூன்று வருடம் அங்கு படித்துவிட்டு சென்னைக்கே வந்த மனோஜை அன்று பள்ளிக்கு கொண்டு போய் விட்டவர்கள் மணிவண்ணன், மனோபாலா, இளவரசு போன்றவர்கள். வளர்ந்ததும் "படிப்பெல்லாம் வேண்டாம். நான் இயக்குனராகணும்" என அடம்பிடிக்க பாரதிராஜா தன்னோடு தன் யூனிட்டில் வைத்துக்கொண்டார். கொடிபறக்குது, நாடோடி தென்றல், கிழக்குச்சீமையிலே படங்களில் பணிபுரிந்த மனோஜை மணியிடம் சேர்த்துவிட்டார் பாரதிராஜா. பம்பாய் படத்தில் மணிரத்னத்தோடு பயின்ற மனோஜை "நீ நடிகனாக வேண்டியவன்" என இழுத்து வந்தார் பாரதிராஜா.
தன் மோதிரக்கையால் யார்யாரோ வளரும் போது மகனும் வரட்டுமே என நினைத்தது தந்தையுள்ளம். ஃப்ளோரிடாவில் ஆக்டிங் கோர்ஸ் படித்து விட்டு வந்த மனோஜை 'தாஜ் மஹால்' படத்தில் நாயகனாக்கினார் பாரதிராஜா. தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே என அந்தப்படத்தை தமிழ் ரசிகர்கள் ஒதுக்கித்தள்ளினர். சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் பெயர் வாங்கித்தந்தன.
சாதுர்யன் படத்தில் நடிக்கும் போது நாயகி நந்தனாவை சந்திக்கிறார் மனோஜ். நந்தனா கோழிக்கோட்டைச்சேர்ந்தவர். அஷ்வதி என்கிற பெயரை நந்தனா என மாற்றி திரையில் அறிமுகமாகிறார்.(மற்றொரு அஷ்வதி நடிகர் ஜெயராம் மனைவி பார்வதி). அண்ணாத்தே படத்தில் ரஜினியின் தாயாகவும், புலிமுருகன் படத்தில் மோகன்லாலின் தாயாகவும் நடித்த, சமீபத்தில் கேரளத்தில் பாஜக கூட்டணியில் தேர்தலில் போட்டியிட்ட அஞ்சலி நாயர்(த்ருஷ்யம்2 போலீஸ்) நந்தனாவின் தாயாரின் சகோதரி மகள்.
ஸ்நேகிதன் என்கிற முதல் படம் நல்ல பெயரை வாங்கித்தந்தது. அடுத்த வருடமே தமிழில் அழைப்பு வந்தது. சிவாஜியின் மகன் ராம்குமாரின் மகன் துஷ்யந்த் அறிமுகமாகும் படத்தில் வாய்ப்பு. சக்ஸஸ் என்கிற படம் சக்ஸஸாகவில்லை. சிட்டிசன் சரவணசுப்பையாவின் ABCD நல்ல பெயரை வாங்கித்தந்தது. சாதுர்யன் என்கிற கதையை இயக்குனர் கே.சுபாஷின் உதவியாளர் t.j.குமார் என்பவர் பாரதிராஜாவிடம் சொல்ல மனோஜை நாயகனாக்கி நந்தனாவை நாயகியாக்குகிறார் பாரதிராஜா.
சாதுர்யன் பாரதிராஜாவால் இருவரும் காதலில் விழ பாரதிராஜாவே கோழிக்கோடு சென்று "என் மகன் நல்லவன். கடைசி வரை உன்னைப்பார்த்துக்கொள்வான்" எனச்சொல்லி திருமணம்முடித்து வைக்கிறார். இரண்டு மகள்கள். மூத்தது ஆர்த்திகா. இரண்டாவது மகளுக்கு மதிவதனி என பெயர் வைத்தது பாரதிராஜா தான்.
மனோஜ்-நந்தனா வாழ்வு சிறப்பானதாகவே சென்று கொண்டிருந்தது. மனோஜின் எதிர்பாராத பிரிவு அந்த மொத்தக்குடும்பத்தையும் ஆட்டி வைத்து விட்டது.
ஆயிரம் தான் சொல்லுங்கள். கணவன் என்கிற ஒரு ஆள் இருக்கும் வரை மனைவிகளின் தெம்பே தனி தான்.
மனோஜ் இல்லையென்றதும் மனோஜின் தங்கை ஜனனி கூட அந்த நல்லடக்க நிகழ்ச்சியில் பிரச்சினை செய்திருக்கிறார். இத்தனைக்கும் தாஜ்மஹால் தயாரிப்பு ஜனனி பெயரில் தான்.
எல்லா உறவுகளும் இருக்கும் போது ஒரு மாதிரி. இல்லாத போது வேறு மாதிரி.
நந்தனா குடும்பம் படித்த குடும்பம். அது ஒரு போதும் நந்தனாவை கை விடாது. கடவுளும் துணை புரியட்டும்...
--- செல்வன் அன்பு என்பவரின் முகநூல் பதிவு...
துணை இல்லாமல் இந்த உலகில் பயணிக்கலாம் என பல உதாரணங்கள் இங்க சொன்னாலும்...
துணை இல்லைன்னா துணைக்கு நிக்க வேண்டிய சொந்த காரனுங்களே நம்மை கீழ தள்ள தான் எல்லா வேலையும் பார்ப்பானுங்க என்பதற்கு உதாரணம் இந்த சம்பவம் தான்...
30,000 hours of footage, equivalent to 3 years and 7 months, were filmed to capture the blooming of 77 types of flowers, and the result is spectacular.