என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த வருடம்.
இதே நாள்.
அதாவது 2025 செப்டம்பர் 27.
என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்.
சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும்.
நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம்.
நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி.
தாராபுரம் நத்தப்பாளையத்தில் இன்று நடைபெற்ற உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்காக அழைத்து வரப்பட்டவர்களுக்கு தலா ₹200 வழங்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
#Dharapuram#VulgarUdhayanidhi
எதிர்க்கட்சித் தலைவராகப் பேச வேண்டிய பேச்சு இதுதானா?
பரம்பரை பரம்பரையாகக் கட்சியையும் ஆட்சியையும் தங்கள் குடும்பச் சொத்தாக நினைப்பவர்களுக்கு, மக்கள் நலனைப் பற்றி யோசிக்க எங்கே நேரம் இருக்கப் போகிறது?
மேடை கிடைத்துவிட்டால் போதும்...கொள்கை, சாதனைப் பற்றிப் பேசத் தெரியாது, கொச்சையாக, நாலாந்தரமாக பேசுவதுதான் வாடிக்கையாகிவிட்டது.
எனவே, ஆபாசமாகப் பேசுவதையும், தனிநபர் அருவருப்பான விமர்சனங்களை வைப்பதையும் மட்டுமே தங்கள் பழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
குடும்ப ஆட்சி நடத்தி, கொத்தடிமைக் கூட்டத்தை மேய்த்தவர்களின் உண்மையான முகமும் லட்சணமும் இதுதான் என்பதை மக்கள் இப்போது தெளிவாகப் புரிந்து கொண்டார்கள்.
உங்கள் ஆபாசப் பேச்சுக்களுக்கு இடைத்தேர்தல் முடிவில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்!
#VulgarUdhayanidhi