அவ்வை சண்முகம் என் ஆசான். ஆறு வயதில் சங்கரதாஸ் சுவாமிகளிடம் தன்னை நாடகத்துக்காகவே ஒப்படைத்த பெருமகன். ஆணாகவும் பெண்ணாகவும் வேடம் கட்டி அத்தனை ரசிகர்களின் உள்ளங்களிலும் இடம் பிடித்தவர்.
திரைக்கலையின் முன்னோடியான நாடகக் கலையின் தந்தையாக அளப்பரிய பங்களிப்பைச் செய்த டி.கே.சண்முகம் அண்ணாச்சி அவர்களை நன்றியோடு நினைவு கூர்கிறேன்.
நகைச்சுவை நடிப்பில் தனித்துவம் மிக்க மேதையாகத் திகழ்ந்த நாகேஷ் அவர்களின் நினைவு நாள் இன்று. அவரது பெயரை நான் உச்சரிக்காத நாளென ஒன்று இருந்ததில்லை.
கதாபாத்திரத்தின் அகமும் புறமும் அறிந்து, ஆழமும் அகலமுமாக வெள்ளித் திரையில் நிலைநிறுத்திக் காட்டுகிற ஆற்றலால் என்னை ஆட்கொண்ட ஆசிரியர் அவர்.
காலத்தால் அழியாத கலைஞனின் நினைவுகளைப் போற்றுகிறேன்.
Thiru V.K. Pandian, as an IAS officer, your honest and diligent administration epitomised the motto of your service - “Excellence in Action”. Under the capable leadership of Hon. CM Thiru Naveen Patnaik Ji, Odisha will further thrive and prosper, with such a formidable team at the helm of state affairs. I wish you the best as Chairman of 5T Initiative and Nabin Odisha.
மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைநகர் சென்னையில் பொதுச்செயலாளர் @Arunachalam_Adv தலைமையிலும், காஞ்சிபுரத்தில் துணைத்தலைவர் @MouryaMNM தலைமையிலும், கோயம்புத்தூரில் துணைத்தலைவர் @Thangavelukovai தலைமையிலும், மதுரையில் இளைஞரணி மாநிலச் செயலாளர் @KavingarSnekan தலைமையிலும்,சேலத்தில் மாநிலச் செயலாளர் @rtielango தலைமையிலும், நாகப்பட்டினத்தில் பொறியாளர் அணி மாநிலச் செயலாளர் @VaitheeswaranSR தலைமையிலும், திருநெல்வேலியில் நெல்லை மண்டலச் செயலாளர் மருத்துவர் D. பிரேம்நாத் தலைமையிலும், திட்டக்குடியில் விழுப்புரம் மண்டலச் செயலாளர் @Sripath95995662 தலைமையிலும் நடந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்ட மய்ய உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.
வன்முறையைக் கட்டுப்படுத்த இயலாத மணிப்பூர் மாநில அரசை உடனடியாகக் கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அங்கு அமல்படுத்தவேண்டும். இரு தரப்பிற்கும் நம்பிக்கை தரக்கூடிய தலைவர்களைக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும்.
#SaveManipur
தேசியத்தின் மேல் பெரும்பற்றும் மாநில வளர்ச்சியில் மாளாத அக்கறையும் கொண்டு மிக நீண்டகாலம் வெற்றிகரமான அரசியல் பணி செய்து மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற தலைவர் உம்மன் சாண்டியின் மறைவு நாட்டிற்கும், கேரளத்திற்கும் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
I wish my friend @RahulGandhi a joyous birthday. You have faced adversity with a smile and responded to hate with love. May you have a long life with continued happiness and health.
நாங்கள் ஏன் திராவிடம் பேசுகிறோம் ??
இது தான் பதில்...👇👇
நாங்கள் என்பது மய்யம்..
நாங்கள் தான் மய்யம்....
எங்கள் தலைவர் கமல் ஹாசன்!!
திராவிடத்தை ஒன்னும் செய்ய முடியாது... #KamalHaasan𓃵
சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது.
அவருக்கு என் அஞ்சலி.
#RIPSarathBabu #SarathBabu
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் @EVKSElangovan அவர்களுக்காக வாக்குகள் சேகரிக்க இன்று மாலை ஈரோடு வருகிறேன். மதவாதத்திற்கு எதிராக ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம். #ErodeByElection
தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்த கிருஷ்ணா மறைந்துவிட்டார். அவருக்கு என் அஞ்சலி. அன்னை, சகோதரர், தந்தை என அடுத்தடுத்து இழப்புகளைச் சந்தித்து துக்கத்தில் வாடும் தம்பி @urstrulyMahesh துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
An icon of Telugu cinema Krishna gaaru is no more, an era ends with his demise. I wish to share the grief of brother @urstrulyMahesh who has to bear this third emotional trauma of losing a mother, brother and now his father. My deepest condolence dear Mahesh gaaru.
மாநில அரசின் முடிவுகளில் குறுக்கீடு செய்யும் ஆளுநர்களுக்கு உச்சநீதின்றத்தின் தீர்ப்பு ஒரு படிப்பினை. நியமனப் பதவியில் இருப்போர் மாநில அரசின் முடிவுகளுக்கு இடையூறு செய்வதை நிறுத்திக்கொள்ளவேண்டும். (2/2)
5 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் நடந்த கலாச்சார நிகழ்வில் அரண்மனையில் அவரை சந்தித்துப் பேசியது இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது. தங்கள் பிரியத்திற்குரிய ராணியை இழந்து வாடும் இங்கிலாந்து மக்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். (3/3)
25 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களது அழைப்பை ஏற்று மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினார். அனேகமாக அவர் கலந்து கொண்ட ஒரே திரைப்பட படப்பிடிப்பு அதுதான். (2/3)
எழுபதாண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக திகழ்ந்த இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்திய செய்தியைக் கேட்டு துயருற்றேன். ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது, அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவராக அவர் விளங்கினார். (1/3)
வேர்களின் மேலான விடாப்பிடிப் பற்றின் மீதமிருக்கும் அடையாளம் கைத்தறி. அந்நியமாதல், எந்திரமயமாதல் என உலகம் மாறுகையில், சுயசார்பின் அறைகூவல். மனித மனமும் கைகளும் மாத்திரமே இயங்கி உருவாக்குவதால் கலை நிலைக்கு உயர்ந்த தொழில் கைத்தறியை ஆதரிப்போம்.