சேலம் மாவட்டம் பழைய சூரமங்கலம் பகுதியில் கரண்ட் போய் நாலு மணி நேரம் ஆச்சு இன்னும் வரைக்கும் வரல நாளைக்கு காலைல குழந்தைகளுக்கு எக்ஸாம் இருக்கு இதெல்லாம் கவனத்தில் எடுத்துக்கவில்லையா அரசாங்கம்
கார்த்திகா கடினமாக உழைத்தால் இன்னும் பெரிய ஸ்டார் ஆகலாம். அடுத்த வருட Asian Gamesல் கூட ஆடலாம் என அவருடைய இந்திய அணி பயிற்சியாளர், Arjuna award winner & கபடி legend மம்தா பூஜாரி சொல்லுகிறார். #கார்த்திகா#Kabaddi
பஹ்ரைனில் நடைபெற்றுவரும் மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகள் தொடரின் கபடி போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இதில் குறிப்பாக, தமிழகத்திலிருந்து சென்று இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்த, ‘கண்ணகி நகரைச் சேர்ந்த’ வீர மகள் கார்த்திகாவிற்கு வாழ்த்துகள்.
கண்ணகி நகர் என்றாலே ஒருவித ஒவ்வாமையுடன் பார்க்கும் சிங்காரச் சென்னையில், இன்றைக்கு ‘கண்ணகி நகர்’ என்கிற பெயரை உச்சரிக்காதவர்கள் யாரும் இல்லை எனும் அளவிற்கு இந்த வெற்றி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தகுதிக்கும் திறமைக்கும் எந்த வரையறையோ படிநிலையோ இல்லை என்பதையும் கார்த்திகா மெய்ப்பித்துள்ளார்.
பொதுவாக, இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்குத் தமிழக அரசுப் பரிசுப் பொருட்களையும் அரசுப் பணியையும் வழங்கி கௌரவிப்படுத்திவருகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. பஹ்ரைனில் வெற்றி பெற்ற இந்திய கபடி அணியில் இடம்பெற்ற ஹரியானவைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு தலா 3 கோடி ரூபாய் வழங்குவதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. முன்னதாக, சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த தமிழக அரசு, கபடி போட்டியில் இந்தியாவின் வெற்றிக்காக அயராது உழைத்த கண்ணகி நகர் கார்த்திகாவிற்கும் ஏனைய தமிழக வீராங்கனைகளுக்கும் அரசுப் பணியோடு கூடிய பரிசுத்தொகையை வழங்க முன்வர வேண்டும்.
மேலும், கண்ணகி நகரிலேயே அதிநவீன கட்டமைப்பு வசதி கொண்ட, சிறந்த கபடி மைதானத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கபடி வீரர், வீராங்கனைகளின் உடல் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து உணவையும், விளையாட்டு உபகரணங்களையும் வழங்க வேண்டும். @CMOTamilnadu@mkstalin@Udhaystalin
"சாப்பாட்டுக்கே வழியில்லாத அருந்ததியர்" - கொத்தடிமை பெண்களை மீட்டு Entrepreneur ஆக மாற்றிய சேலம் அலமேலு!
சேலம் மாவட்டம் வனவாசியில் கொத்தடிமையாக இருந்த அலமேலு, தான் மீண்டு வந்ததோடு தனது சொந்த முயற்சியால் Rural women development trust என்ற அமைப்பை உருவாக்கி, தனது கிராமத்திலுள்ள 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பொருளாதாரத்தில் முன்னேற உதவியுள்ளார்.
பட்டியலினத்தில் பொருளாதாரம் குறைவாக உள்ளவர்கள் இதுபோன்று சிந்தித்து செயல்படவும் வேண்டும்.
இவ்வளவுதான் வாழ்க்கை....
Cast Away திரைப்படத்தில், டொம் ஹாங்ஸும் அவரது சகாக்களும் சென்ற விமானம் எதிர்பாராத விதமாக கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகிறது.
தனது சகாக்கள் அனைவரும் விபத்தில் இறந்து போக, டொம் ஹாங்கஸ் மாத்திரம் அதிஷ்டவசமாக உயிர் தப்புகிறார். கடல் அவரை மனித நடமாட்டம் எதுவுமே இல்லாத ஒரு தொலைதூர தீவில் கொண்டு வந்து
கரை ஒதுக்குகிறது.
ஆம்... யாருமில்லாத தீவு.... வாழ்வதா...? அல்லது சாவுக்கு சரணடைவதா? என்ற மனப் போராட்டம் ஹாங்கிஸிடம் ஆரம்பிக்கிறது. சாவுக்கு சரணடைய மறுக்கிறார். தன் மனைவி, பிள்ளைகள் நண்பர்கள் மற்றும் தான் வாழ்ந்த உலகம் மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவரிடம் பிறக்கிறது.
உயிர் வாழ வேண்டுமென்ற உள்ளுணர்வு
ஏற்படுகிறது. ஆனால் மனித நடமாட்டம் அற்ற தீவில் எப்படி உயிர் பிழைத்து வாழ்வது...? மரங்களில் ஏறி இருந்த கனிகளை சாப்பிடுகிறார். கடலில் இறங்கி கிடைத்த மீன்களை பிடித்து பசியை போக்குகிறார்.
தன் பார்ஸிஸ் இருந்த மனைவி, பிள்ளை குட்டிகளின் படத்தை எடுத்து அவ்வப்போது பார்த்துக்கொள்கிறார். ஒரு கைப்பந்தில் ஒரு முகத்தை வரைந்து அதற்கு "வில்ஷன்" என்று பெயரிட்டு அதனை தனது உற்ற நண்பனாக்கி, அவருடன் பேசி மகிழ்கிறார்.
அங்கே மலை உச்சியில் ஏறி ஒரு கொடியை நாட்டுகிறார். நெருப்பை மூட்டிப் பார்க்கிறார்
வருகின்ற, போகின்ற கப்ல்கள் அவரை அடையாளம் கண்டு, அவரை காக்க வரும் என்று நம்புகிறார்.
நாட்கள் உருண்டோடுகின்றன. இப்படியே அங்கே சில வருடங்களைக் கழிக்கிறார். ஆனாலும் நம்பிக்கை இழக்க வில்லை. அன்பு மனைவி, பாசமான பிள்ளைகள் உயிர் நண்பர்கள் மறு பக்கத்தில் தனக்காக இருப்பார்கள் என்ற நம்பிக்கை அவரை உற்சாகப் படுத்துகிறது.
இந்த நம்பிக்கை அவரை உயிர் வாழ ஊக்குவிக்கிறது. கடைசியாக பல நாள் பாடுபட்டு மரக்கட்டைகளால் ஒரு படகு செய்கிறார். அதில் ஏறி நம்பிக்கையோடு கடலில் குதிக்கிறார். கடல் அலைகள் தரும் மரண பயத்தை மீறிப் பயணிக்கிறார். பிறகு அதிஷ்டவசமாக வந்த ஒரு கப்பல் அவரை இனங்கண்டு பாதுகாத்து மீட்கிறது. மட்டற்ற மகிழ்ச்சியுடன் தான் வாழ்ந்த உலகம் நோக்கிச் செல்கிறார்.
ஆனால் அங்கே அவருக்கு ஏமாற்றம் காத்திருந்தது. அவரது அன்பு மனைவி கொஞ்ச காலம் அழுது விட்டு, அவர் இறந்ததாக நினைத்து மறு மணம் செய்துகொண்டிருப்பதைக் காண்கிறார். அவரது பிள்ளைளும், நண்பர்களும் அவர் இறந்ததாக நினைத்து சில நாட்கள் துக்கம் அனுஷ்டித்துவிட்டு, மறந்து வாழ்வதைப் பார்க்கிறார்.
யாரும் அவரை அங்கே தேடிக்கொண்டோ, நினைத்துக்கோண்டோ இருக்கவில்லை.
உலகம் அதன் பாட்டில் ஆரவாரமின்றி
ஓடிக்கொண்டிருப்தைக் காண்கிறார்.
◼ நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!
நீங்கள் பல்லாண்டுகளாக படும் கஷ்டங்கள்
இன்னல்கள்.பலவற்றக்கும், இவ்வளவு பாடுபடத் தேவையில்லை என்பதை ஒரு நாள் தெரிந்து கொள்வீர்கள்
◼ நீங்கள் உலகை விட்டும் மறைந்த பிறகு உங்கள் முயற்சிகள் பலவற்றுக்கு மதிப்போ மரியாதையோ இருக்காது.
◼ முதலில் நீங்கள் உங்களுக்காகவும், உங்கள் ஆத்தும நலனுக்காகவும் வாழப் பழகுங்கள்.
◼ நீங்கள் மறைந்த பிறகு இந்த உலகம் உங்களுக்காக அதன் ஓட்டத்தை நிறுத்தாது.
அடுத்த பாட்டு-10 தலை🔥10 கலை
இராவணப் பெரும்பாட்டனை குறித்து, ராமனை தெரியாது 🔥 இராவணனைத் தான் தெரியும்
இந்தப் பாட்டு வரும்போது என்னை இவர்கள் வெடிவைத்துக் கொல்லலாம்- #வேடன்
@tnrags பலரின் வாழ்க்கையை மாற்றியவர். பல வீரர்கள் விளையாட்டு துறையின் கீழ் வேலை வாய்ப்பு பெற்று இருக்கிறார்கள் அதில் புரோ கபடி விளையாடிய பிரபஞ்சன் போன்ற தலைசிறந்த விளையாட்டு வீரர்களும் அடங்குவார்கள். அண்ணா
@tnrags சேலம் மாவட்டத்திற்கு கிடைத்த பொக்கிஷம் அண்ணன் #சாமியப்பன் அவர்கள் குறித்து நீங்கள் பதிவு செய்யும் பதிவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறோம் அண்ணா.. எத்தனையோ விளையாட்டு வீரர்களுக்கு அவருடைய வாழ்க்கை மாற்றிய மகத்தான மனிதர் குடிசையில் இருப்பவரை கோபுரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும