கொஞ்சம் கொஞ்சமா எங்களை சாவடிக்க ஒரே அடியா குண்டு போட்டு சாவடிச்சுடுங்க. எங்கயோ குண்டு போட்டு சாவடிக்குறாங்கள் எங்களையும் அப்படி சாவடிங்க - அனகாபுத்தூர் மக்கள்
@CMOTamilnadu@mkstalin@KarunanithiMla
புலிகள் அழிக்கப்பட்டு 14 ஆண்டுகள் கடந்தும் தமிழருக்கு எதிரான சிங்கள பௌத்த இனவெறி தலைவிரித்தாடுகிறது.
ஈழ இனப்படுகொலைக்கு புலிகளே காரணம் என்பவர்கள் தான் இன்று காசா இனப்படுகொலைக்கு காரணம் ஹமாஸ் என்கிறார்கள்.
ஒடுக்கப்படுபவன் திமிரி எழுந்தால் அவனையே குற்றவாளியாக்கும் பார்ப்பனியம்!!
பாலஸ்தீனம் மீதான இனப்படுகொலையை கண்டித்து மே 17 இயக்கம் ஒருங்கிணைத்த பேரணி. தமிழர்கள் நாங்கள் பாலஸ்தீன மக்களுடன் நிற்கின்றோம் என்பதை உலகிற்கு பறைசாற்றியுள்ளோம். இனப்படுகொலை இஸ்ரேல் அரசை பயங்கரவாத அரசாக அறிவித்துள்ளோம். #FreePalestine#Gazabombing#GazaWar#TamilsStandWithPalestine
பாலஸ்தீன குழந்தைகளை காக்க பேரணி!
இசுரேலே, குழந்தைகளை கொல்லும் போரை நிறுத்து!
அன்று ஈழத்தை அழித்தார்கள். இன்று பாலஸ்தீனத்தை அழிக்கிறார்கள்!
நாள்: அக்டோபர் 29, ஞாயிறு மாலை 3 மணிக்கு
இடம்: இராஜரத்தினம் ஸ்டேடியம், எழும்பூர்
பாலஸ்தீனம் மீதான இனப்படுகொலையை தடுக்க ஒன்றுகூடுவோம்!
கடந்த அதிமுக ஆட்சியின் போது தமிழ்நாடு அரசில் புகுத்தப்பட்ட RSS ஆட்கள் எல்லாம் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகும் அப்படியே நீடிக்கிறார்கள். நாகரீக அரசியல் என்ற பெயரில் திமுக அரசு அவர்களை களை எடுக்காமல் காத்து வருகிறது என்றே சொல்லலாம். ஆனால் அவர்கள் தான் திமுகவை அகற்றப் போகிறவர்கள்.
ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த குற்றப்பரம்பரை சட்டம் அல்லது ரேகைச் சட்டம், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில சமூகத்தினரின் முன்னோர்கள் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் என்று அடையாளப்படுத்தி, அவர்களின் வாரிசுகளும் குற்றவாளிகளே என்று முத்திரை குத்தியது. இவ்வாறு வகைப்படுத்தபட்டவர்கள், இரவில் வீட்டில் தங்காது, ஊரின் மத்தியில் உள்ளிட்ட காவல்துறையின் சாவடியில் தங்க நிரபந்திக்கப்பட்டனர். தங்கியதற்கு சான்றாக பதிவேட்டில் 'கைரேகையை' பதிவிடும்படி வலியுறுத்தப்பட்டதால் இது 'ரேகைச்சட்டம்' என்று அழைக்கப்பட்டது.
இத்தகைய கொடூர கருப்புச்சட்டத்தை எதிர்த்து மதுரை மாவட்டத்தின் பல கிராமங்களில் மக்கள் போராடத் தொடங்கினர். 1920, ஏப்ரல் 3-ம் நாள் ஆங்கிலேய அரசின் காவல்துறை உசிலம்பட்டி அருகிலுள்ள பெருங்காமநல்லூர் கிராமத்தை முற்றுகையிட்டது. அங்கு போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. காயம்பட்டவர்களுக்கு தண்ணீர் கொடுத்த மாயக்காள் என்பவரை துப்பாக்கி முனையில் உள்ள கத்தியால் குத்திக் கொன்றனர். இந்த தாக்குதலில் 17 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
தென்னகத்தின் ஜாலியன் வாலாபாக் என்று அறியப்படும் பெருங்காமநல்லூர் படுகொலை சம்பவம் ஒரு வரலாற்று நினைவுப் புள்ளியாகும். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறையை எதிர்த்தும், குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்தும் போராடி உயிர் தியாகம் செய்த 17 தமிழர்களுக்கு மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது.
இந்தப் படுகொலையின் 103-வது ஆண்டை நினைவுகூரும் விதமாக, வரும் ஏப்ரல் 7 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில், சென்னை எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை நினைவுகூரும் இந்த பொதுக்கூட்டத்திற்கு அனைவரும் வருமாறு அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
Today (28.2.23) MAY 17 MOVEMENT attempted to lay a siege of Sri Lankan High Commission condemning the recent attacks on Tamil fishermen, that's why these quick responses taken place 👇
High Commission has strongly taken up the recent attacks on #Indian fishermen with #SriLankan authorities. It has also asked the Goverment of #SriLanka to investigate the matter and ensure that use of force and violence in any form are not resorted to against the fishermen. (1/2)
தரங்கம்பாடி, காரைக்கால் மீனவர்களை எல்லை கடந்து தாக்கிய இலங்கை அரசை கண்டித்து, இலங்கை தூதரகத்தை இழுத்து மூடக் கோரி, சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள இலங்கை தூதரகத்தை இன்று (28-02-23 செவ்வாய்) காலை மே பதினேழு இயக்கம் முற்றுகையிட்டது!
தமிழ் மீனவர்களை எல்லை கடந்து தாக்கிய இலங்கை மீது
+
தமிழ்நாடு மீனவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இலங்கை அரசை கண்டித்து மே17ன் இலங்கை தூதரக முற்றுகை போராட்டத்தினைப் பற்றி ஆங்கிலஊடக செய்தி
Pro-Tamil group attempts to lay siege of SriLankan High Commission condemning the recent attacks on Tamil fishermen
https://t.co/PGQzdtLWws
மீனவர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் இனவெறி தாக்குதலை கண்டித்து மே 17 இயக்கம் நடத்திய இலங்கை தூதரக முற்றுகை போராட்டத்தின் ஊடக செய்தி..
https://t.co/hgqIbAXWNl
தரங்கம்பாடி, காரைக்கால் மீனவர்களை எல்லை கடந்து தாக்கிய இலங்கை அரசை கண்டித்து,
இலங்கை தூதரம் முற்றுகைப் போராட்டம்!
நாளை (28-03-2023 செவ்வாய்) காலை 10 மணிக்கு, சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒன்றுகூடுவோம்!
தமிழர்களே! நம் மீனவர்களுக்கு குரல் கொடுப்போம்!
தரங்கம்பாடி, காரைக்கால் மீனவர்களை எல்லை கடந்து தாக்கிய இலங்கை அரசை கண்டித்து,
இலங்கை தூதரம் முற்றுகைப் போராட்டம்!
நாளை (28-03-2023 செவ்வாய்) காலை 10 மணிக்கு, சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒன்றுகூடுவோம்!
தமிழர்களே! நம் மீனவர்களுக்கு குரல் கொடுப்போம்!
நம் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். பாஜக அதானி நலனுக்காக இலங்கையோடு கொஞ்சி குலாவுகிறது. இலங்கை ராணுவத்துடன் இந்திய ராணுவம் பயிற்சி செய்கிறது. ஈழத்தமிழர்களை படுகொலை செய்த இலங்கை மீதான த.நாட்டின் மென்மையான போக்கினால் தமிழ்நாட்டு மீனவர்களும் தாக்குதலுக்குள்ளாகிறார்கள். இனி+