இன்று ராயப்பேட்டை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் 25/07/26 காலை
10 மணி அளவில்….
அஇஅதிமுக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆய்வுக்கூட்டத்தின் போது…..
கழக பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் மாண்புமிகு #எடப்பாடியார் அவர்களிடத்தில் தேர்தலுக்குப் பிறகு எனக்கு பேச வாய்ப்பளித்து மாவட்ட கழக நிர்வாகிகள் மாநில நிர்வாகிகள் முன்னிலையில் ……
மூன்று கோரிக்கைகள் வைத்துள்ளேன்….
அது கட்டாயமாக நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு பொதுச் செயலாளர் அவர்களிடத்தில் வாழ்த்துக்களைப் பெற்றேன்..!!
🙏✌️🌱
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,
திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் கிழக்கு மற்றும் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டக் கழகங்களுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.
#AIADMK
விவசாயக் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் எனத் தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளை ஏமாற்றிய இந்த 'பொய்க்கால் குதிரை' அரசின் முதலமைச்சரைக் கண்டித்து, ஆயிரக்கணக்கான விவசாயிகள் இன்று சென்னையில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
"அடுத்த ஜென்மத்தில் விவசாயியாகப் பிறக்க வேண்டும்" என்று மேடையில் வசனம் பேசி உணர்ச்சிவசப்பட்ட முதலமைச்சர், தன் ஆட்சியில் தன்னால் ஏமாற்றப்பட்ட இந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளின் அவலநிலை குறித்து ஒரு வார்த்தையாவது வாய் திறப்பாரா?
#பொய்க்கால்_குதிரை_அரசு
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியில் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் வாரச் சந்தையில், ஏலம் குத்தகைக்கு எடுத்தவர்களிடம் பணம் கேட்டு ஸ்ரீவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. சரவணன் மிரட்டல் விடுக்கிறார்.
பணம் தர மறுத்ததால், இத்தனை ஆண்டு காலமாகச் செயல்பட்டு வந்த சந்தை மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையறிந்து வியாபாரிகளுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சியினரும் போராட்டம் நடத்தியதால், வேறு வழியின்றி சந்தை வழக்கம்போல் செயல்படும் தற்போது அறிவித்துள்ளனர். இதுதான் தூய ஆட்சியா??
- தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. S.P. சண்முகநாதன் அவர்கள்
ஒரு நாள் இல்ல இரண்டு நாள் இல்ல…
20 நாளாக மின்வெட்டு!
தொடரும் மின்வெட்டால் போராட்டத்தில் மக்கள்!
மாற்றம் என்பது எளிய மக்களுக்கு ஏமாற்றம் தானா?
#பொய்க்கால்_குதிரை_அரசு
தர்மபுரி பேருந்து நிலையம் போன்ற மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்திலேயே, இளம்பெண் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.
பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டது என்று தம்பட்டம் அடிக்கும் 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை' என்ன செய்து கொண்டிருக்கிறது?
#பொய்க்கால்_குதிரை_அரசு
தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படுவதால் ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையைப் போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தற்போதைய த.வெ.க. அரசு முற்பட வேண்டும்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாறுவதால் மாநில அரசுக்கு ஏற்படும் இட ஒதுக்கீட்டு இழப்பை சரிசெய்ய மத்திய அரசும், தமிழகத்தை ஆளும் த.வெ.க. அரசும் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாறுவதால் மாநில அரசுக்கு ஏற்படும் இட ஒதுக்கீட்டு இழப்பை சரிசெய்ய மத்திய அரசும், தமிழகத்தை ஆளும் த.வெ.க. அரசும் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கும் விந்தையான த.வெ.க. அரசுக்கு கண்டனம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்கள் தலைமையில்,
தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையில் உள்ளவாறு, மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
#AIADMK
மாத்திரையை ஐநூறு ரூபாய் தாளில் மறைத்து எடுத்து வந்து, செல்போன் ஸ்கிரீனில் வைத்து நுனுக்கி, ஏடிஎம் கார்டு வைத்து ஒன்றுசேர்த்து
தன் குழந்தைக்கு கொடுக்கும் இந்த அப்பாவை பாராட்டலாமே ப்ரண்ட்ஸ்
ஊரெல்லாம் ஒரே பேச்சு…
ஆட்சியாளர்கள் எப்போ தான் இதைப் பற்றி விடுவார்கள் மூச்சு ?
அமைச்சராக இருப்பவர் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு வந்திருக்கிறதே… நேத்து 3 கிலோமீட்டர் போதை ஒழிப்புக்கு ஓட்டம் பிடித்த முதல்வர் இதைப் பற்றி எப்போது பேசுவார்? என்ன நடவடிக்கை எடுப்பார்?
#பொய்க்கால் _குதிரை_அரசு
#SayNoToDrugs
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் வெளிவந்த தமிழக அமைச்சரின் "Thug Life Moment" வீடியோ - போதைப்பொருள் ஒழிப்புக்காகத் தனது முதல் கையெழுத்திட்ட முதலமைச்சர் இதற்கேனும் நடவடிக்கை எடுப்பாரா?
இன்றைய தமிழக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள், இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற IPL கிரிக்கெட் போட்டியின்போது தன்னுடைய "Thug Life Moment" வீடியோ ஒன்றை எடுத்து, தனது நெருக்கமான நண்பர்கள் மட்டும் பார்க்கும்படி அவரது INSTA பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் வெளியான அமைச்சரின் இந்த "Thug Life Moment" வீடியோவும், அதனைத் தொடர்ந்து அமைச்சர் அவர்கள் "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தனது உடல்நலக் குறைவான கைக் குழந்தையோடு IPL போட்டியில் பங்கேற்றதாகவும், குழந்தைக்கு தனது செல்போன் மீது வெள்ளை நிற மாத்திரையை வைத்து, ATM கார்டு மூலம் crush செய்து, பறக்காமல் இருக்க 500 ரூபாய் நோட்டை வைத்து மறைத்ததாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உடல்நிலை சரியில்லாத குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக ஐ.பி.எல் போட்டிக்கு அழைத்துச் சென்றதோடு, அக்குழந்தைக்கு மருந்து தயாரிப்பதையே Thug life Moment ஆக பெருமை கொண்டிருக்கும் அமைச்சர் அவர்களின் வீடியோ பதிவில் அவரின் மனைவியையும், உடல்நலக் குறைவு ஏற்பட்ட குழந்தையையும் எங்கே என்று மக்கள் சமூக வலைதளங்களில் எழுப்பும் கேள்விகளையும் அவ்வளவு எளிதாக புறந்தள்ள முடியாது. அதே நேரத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் என்பதால் இதனை விசாரிக்காமல் கடந்த கால ஆட்சியின் மீது பழி போட்டு கடந்து செல்வாரா தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
போதைப்பொருள் ஒழிப்புக்காக மூன்று கிலோமீட்டர் வரை ஓடி, தனது சக அமைச்சரை அவைப் புலவராக மாற்றிப் புகழ் பாட வைப்பதும், மற்றொரு அமைச்சருக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறைக்க குழந்தைகளைப் பயன்படுத்தி INSTA REELS-களை வெளியிடுவதன் மூலமாக மட்டும் போதைப்பொருள்களின் புழக்கத்தையும் பயன்பாட்டையும் மறைக்கவோ தடுக்கவோ முடியாது. போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்திட பாகுபாடற்ற நடவடிக்கையே அவசியம் என்பதை முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
எனவே, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகளை மேற்கொள்ளும் TNPSC உள்ளிட்ட மனிதவள மேம்பாட்டுத் துறையை வைத்திருக்கும் அமைச்சர் மீது எழுப்பப்பட்டிருக்கும் இந்தக் குற்றச்சாட்டை முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு முழுமையான விசாரணையை மேற்கொண்டு, அவர் பயன்படுத்தியது போதைப்பொருள்தான் என்பது உறுதியாகும் பட்சத்தில் அமைச்சர் மீது எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கையே போதைப்பொருள் ஒழிப்புக்கான ஆரம்பப் புள்ளியாக அமையும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
அது போதைப்பொருள் இல்லையாம்.. குழந்தைக்கு குடுக்க மாத்திரைய crush பண்ணாராம்... அங்க குழந்தையே frame ல இல்லங்குறது இருக்கட்டும்.. குழந்தைக்கு கொடுக்க மாத்திரைய போன்ல வச்சிதான் crush பண்ணுவீங்களா சார்?? அதுவும் ATM கார்டு வச்சி line போட்டுதான் குழந்தைக்கு மாத்திரைய குடுப்பீங்களா சார்? அதுவும் கைல 500ரூ நோட்ட வச்சிகிட்டுதான் குழந்தைக்கு மாத்திரைய குடுப்பீங்களா சார்??
உடம்பு சரியில்லாத குழந்தைய தூக்கிட்டு IPL போனிங்களா?
எந்த டாக்டர் குழந்தைக்கு மாத்திர குடுக்குறாங்க?
Paracetamol syrup தானே common?
கெத்து காட்டுறதுக்கு வீடியோ எடுத்து போட்டு இப்போ மாட்டியாச்சு .