#தமிழக அமைச்சரவை மாற்றம்...
வனத்துறை மற்றும் காதி துறை அமைச்சராக ஐயா @RRajakannappan அவர்கள் பொறுப்பு ஏற்க உள்ளார்...
நாளை ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. @mkstalin@arivalayam@DMKITwing நன்றி 👍
#ஆழ்ந்த இரங்கல்...😭
நடிகர் மற்றும் கராத்தே பயிற்சியாளர்,திருநெல்வேலி பாளையங்கோட்டையில் அமைந்துள்ள முதல் இந்திய சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்துக்கோன் சிலையை வடிவமைத்த ஷிஹான் ஹுசைனி காலமானார்..😭
#ShihanHussaini
உலக அளவில் புகழ்பெற்ற தற்காப்புக் கலைகள் பயிற்சியாளரும், வில்வித்தை பயிற்சியாளருமான திரு. ஷிஹான் ஹுசைனி அவர்கள் காலமான செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
இந்திய வில்வித்தை கழகத்தின் தேசியத் துணைத் தலைவராகச் சிறப்பாக பணியாற்றியவர். நவீன வில்வித்தை பயிற்சியின் முன்னோடியாக விளங்கியவர். சிற்பக் கலையிலும் நிபுணத்துவம் வாய்ந்தவர். தனது மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும், இறுதி வரை தைரியமாக, தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்ட திரு. ஷிஹான் ஹூசைனி அவர்கள் மறைவு, இந்திய விளையாட்டுத் துறைக்கு பேரிழப்பு. அவரது உறவினர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
கோடி அவதூறுகளை அள்ளி வீசினாலும், எம் தலைவன் கை காட்டும் திசையில்தான் வெற்றி வாகை சூடும்.....!!
ஓநாய்களின் சலசலப்புக்கு ஒருபோதும் அஞ்சிவிட மாட்டோம்....!
முதல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் #அழகுமுத்துக்கோன் அவர்களின் 267-வது பிறந்த நாள் விழாவிற்கான அழைப்பிதழை மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் திரு @EPSTamilNadu அவர்களிடம் இன்று காலை நேரில் சந்தித்து வழங்கிய தருணம்.
#மாவீரன்_அழகுமுத்துக்கோன்
நாளை பெரும்பாட்டன் முதல் சுதந்திர போரட்ட மாவீரர் #அழகுமுத்துக்கோன் அவர்களின் அரசு ஜெயந்தி விழா முன்னிட்டு அவரின் நுழைவு வாயில் புதிதாக @RRajakannappan ஏற்பாட்டில் #பிரபுராஜகண்ணப்பன் அவர்களால் இன்று சிறப்பாக திறக்கப்பட்டது 👑🔥💯 அனைவருக்கும் நன்றி 🙏🏻