ஒரு அரசனாக தோத்துட்டீங்க ஸ்டாலின் சார்....
இன்னைக்கு எழுதினாதான் அது ரொம்ப சரியா இருக்கும்...
கரூரில் இன்னைக்கு விஜய் பேசிய பேச்சை கேட்டேன்...
கடந்த ஐந்து ஆண்டுகளில் முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் மிகச் சிறப்பாக ஆட்சி நடத்தினார்...
இந்த கரூர் சம்பவத்தின் போது கூட எந்த ஒரு அரசியல் தலைவரும் தான் தொண்டர்கள் இறப்பதை விரும்ப மாட்டார்கள் என்று நாகரீகமாக இந்த விஷயத்தை கையாண்டார்....
ஆனால் இந்த ஐந்து வருடத்தில் ஸ்டாலின் செய்த மிகப்பெரிய ஒரு தவறு இருக்கிறது... அதை இன்றைக்கு சொல்ல வேண்டும் சுட்டிக் காட்ட வேண்டும் என்று காத்து இருந்தேன்...
எல்லா குழந்தைகளும் என்னுடைய குழந்தைகள் எல்லோருக்கும் நான் அப்பா ஸ்தானத்தில் இருக்கிறேன் என்று முன்னாள் முதலமைச்சராக இருந்த முக ஸ்டாலின் அவர்கள் சொன்னார்... காலை உணவு நான் முதல்வன் திட்டங்கள் மூலமாக அதை செயல்படுத்தியும் காட்டினார் அதில் எந்த மாற்றமும் இல்லை...
ஆனால் விஜய் தாமதமாக வந்த கரூர் கூட்ட நெரிசலில், 11 குழந்தைகள் உட்பட 41 பேர் இறந்து போனார்கள்....
செந்தில் பாலாஜியிலிருந்து தமிழக அரசு எவ்வளவு நடவடிக்கை எடுத்து பல உயிர்களை காப்பாற்றினார்கள்...
ஆனால் தாமதமாக வந்ததோடு மட்டுமல்லாமல், வேனில் இருந்த விளக்குகளை ஆன் ஆப் செய்து, விஜய் வந்ததால் அங்கே காத்திருந்த மக்கள் முண்டியெடுத்து ஏற்கனவே காத்திருந்த மக்கள் கூட்டத்தோடு சேர, காலையிலிருந்து தண்ணீர் இல்லாமல் காத்திருந்த மக்கள் திடுமென கூட்டமும் சேர 41 உயிர் பலிகள்.... அதில் குழந்தைகள் 11 பேர்....
எவ்வளவு சிறப்பாக ஆட்சி செய்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் ஒரு மனிதன் சறுக்கி விடுவான் என்பதற்கு உதாரணமாக ஸ்டாலின் அவர்கள் அந்த பதினோரு குழந்தைகளுடைய மரணத்திற்கு மிக முக்கிய காரணமான விஜய் அவர்களை முதல் குற்ற பத்திரிக்கையில் அவர் பெயரை இடம் பெற செய்யவில்லை...
41 பலிக்கு மிக முக்கிய காரணி ... அன்றைக்கு தாமதமாக வந்த விஜய் அவர்கள்... ஆனால் FIR இல் பெயரை சேர்க்கவே இல்லை....
ஒரு நேர்மையான அரசன் வீழ்ந்த இடம் அது தான்.... அதற்கு என்ன காரணம் வேண்டுமானாலும் இருக்கட்டும், எவ்வகை அழுத்தங்கள் வேண்டுமானாலும் இருந்திருக்கட்டும்...
ஒரு அரசனாக 41 உயிருக்கு மிக முக்கியமாக 11 குழந்தைகள் உட்பட அந்த மரணத்திற்கு காரணமான விஜய் அவர்களின் பெயரை சேர்க்கவில்லை...
மு க ஸ்டாலின் எனும் முதலமைச்சர் ஆட்சி செய்த ஐந்து ஆண்டுகளில் தோற்றுப் போன இடம் அதுதான்.
அன்று பெயர் சேர்க்காத காரணத்தினால் தான் இன்று
திரு விஜய் அவர்கள்... என்னைப்போல ஓப்பனாக பேச முடியுமா? தில் இருக்கா?திராணி இருக்கா? என்று சொல்லிவிட்டு ஒரு பெரிய கேப் விட்டு இருக்கிறார்.....
இதில் திராணி என்பது முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பயன்படுத்தும் சொல்...
உங்க நாகரிக அரசியலுக்கான விலையை நீங்க அனுபவிக்கிறீங்க... நீங்க மட்டும் அனுபவிக்கல... தமிழக மக்களும் அனுபவிக்கிறார்கள்....
மிக முக்கியமாக 65% மக்கள்...
அப்பாவி மக்கள் 41 பேர்...
அவங்களுக்கு நீங்க உண்மையா இல்ல... இன்றைக்கு மட்டுமல்ல ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதிரடி அரசியலை தான் விரும்பினார்கள்...
ஸ்டாலின் சார். கரூர்ல 11 குழந்தைகளுக்கு நீங்கள் உண்மையாக இல்லை....
அதற்கான பலனை நீங்கள் அனுபவிக்கிறீர்கள்... அப்ப அதுக்கு காரணமானவங்க?
ஜெயலலிதாவின் முடிவு எல்லோரும் அறிந்தது தான்.
எல்லாத்துக்கும் ஒரு எதிர்வினை உண்டு....Dot
"நான் தெளிவா தான் இருக்கேன்" என்று விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் ஒரு மேடையில் பேசியதை பார்த்தேன். அவர் சொன்ன கருத்துக்கு நான் உடன்படுகிறேன்!
@thirumaofficial
1999 ல் திருமாவை தேர்தல் அரசியலுக்கு கொண்டு வந்தவர் அய்யா மூப்பனார். தனது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் திருமாவை வேட்பாளராக நிறுத்தியவர் மூப்பனார். அரசியலில் தனக்கு முதல் வாய்ப்பு தந்த மூப்பனாரை இரண்டே ஆண்டுகளில் முதுகில் குத்திவிட்டு பாஜக அங்கம் வகித்த திமுக கூட்டணியில் சேர்ந்துவிட்டார். பாஜக தன்னுடைய கொள்கை எதிரி என்று வீரவசனம் பேசிய திருமா ஒரு எம்எல்ஏ சீட்டுக்காக அங்கே ஒட்டிக்கொண்டார். திமுக தயவில் எம்எல்ஏ ஆகிவிட்டு மூன்று ஆண்டுகளில் வந்த நாடாளுமன்ற தேர்தலில் உடனே எம்பி ஆக வேண்டும் என்ற ஆசையில் முத்தமிழறிஞர் கலைஞரிடம் சீட்டு கேட்டார். திருமாவளவனை போன்ற எத்தனை "தெளிவான" ஆட்களை கலைஞர் பார்த்திருப்பார். எம்பி சீட்டு கிடைக்கவில்லை என்றவுடன் தான் வகித்த மங்களூர் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு 2004 நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்து 2006 தேர்தலுக்கு ஜெயலலிதாவிடம் சரண்டராகிவிட்டார். தேர்தல் அரசியலுக்கு வந்த 7 ஆண்டுகளில் 4 கூட்டணி தாவிய தெளிவான மனிதர் திருமா! தமிழ்நாடு அரசியலில் இந்த record ஐ யாரும் break பண்ணல!
அடுத்து 2009 நாடாளுமன்ற தேர்தலில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைந்தார். தன்னை தீவிரமான விடுதலைப்புலிகள் ஆதரவாளராக காட்டிக்கொண்டவர் தானே திருமா! அடங்க மறுப்பவர் தானே, அத்து மீறுபவர் தானே பிறகு எப்படி காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்தார்? ஒரே ஒரு எம்பி சீட்டுக்கு தானே!
அப்படினா தேர்தல் அரசியலை லாப கணக்கில் தனது சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்திய தெளிவானவர் திருமா!
திருமாவின் சந்தர்ப்பவாத உச்சம் என்பது 2016 மக்கள் நலக்கூட்டணி தான். திமுக வெற்றி பெற்றுவிடக்கூடாது என்ற நோக்கத்தில் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட மக்கள் நலக்கூட்டணியில் main bowler ஆக திகழ்ந்தார். கழகத்தலைவரை விமர்சித்து ஆனந்த விகடனில் பேட்டி எல்லாம் கொடுத்திருப்பார். பிறகு 2019 ல் மீண்டும் எம்பி ஆசை துளிர் விட திமுக கூட்டணியில் இணைந்து எம்பி ஆனார். அந்த தேர்தலில் திருமாவளவனை எப்படியாவது வெற்றி பெற வைத்தே ஆகவேண்டும் என்று கழகத்தலைவர் கட்டளையை ஏற்று கடுமையாக உழைத்தவன் திமுக தொண்டன். பிறகு 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு நான்கு எம்எல்ஏக்கள் கிடைத்தது. இதன் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களான சிந்தனை செல்வன், ஆளூர் ஷாநவாஸ், எஸ்எஸ் பாலாஜி, பனையூர் பாபு போன்றவர்களுக்கு தமிழ்நாட்டில் political recognition கிடைத்தது. இதனை ஏற்கும் பக்குவமோ அரசியல் முதிர்ச்சியோ திருமாவுக்கு கிடையாது அதனால் இவர்களின் அரசியல் வாழ்க்கைக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் தாய் சிறுத்தை முடிவுரை எழுதியது. எவ்வளவு தெளிவானவர் திருமா என்பது புரியும்! இங்கே நீங்கள் இன்னொரு கேள்வி கேட்கலாம் இத்தனை சிறுத்தைகளின் எதிர்காலத்தை முடித்த திருமா ஏன் ரவிக்குமாரை அவ்வாறு செய்யவில்லை என்று! அதற்கு காரணம் ரவிக்குமார் ஆர்எஸ்எஸ் ஆட்களோடு நல்ல தொடர்பில் இருப்பவர். டெல்லி அரசியலுக்கு அவரது தேவை முக்கியம் என்பதால் அவரை கைக்குள்ளே வைத்திருப்பார்!
விஜயை ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த குழந்தை என்று 2026 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிவிட்டு தேர்தலில் திமுக கூட்டணிக்கு வேலை செய்யாமல் தேர்தல் முடிவு வந்தவுடன் ஆதவ் அர்ஜுனா என்ற கள்ள லாட்டரி காட்டிய SOFA க்காக ஓடியவர் திருமா! தனது கட்சிக்கு மாநில அரசியல் கட்சி என்ற அந்தஸ்து கிடைக்க காரணமான திமுகவை விட்டு கேவலம் SOFA க்காக ஒடிவிட்டார் தெளிவான திருமாவளவன்!
எப்போதும் தனது பேச்சில் புரட்சியாளர் அம்பேத்கரை மேற்கோள் காட்டியே பேசும் திருமா அவர்களே, நேரு போன்ற பெரிய ஆளுமையை தனது உறுதியான கொள்கை நிலைப்பாட்டிற்காக எதிர்த்து ஒன்றிய சட்ட அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்தவர் புரட்சியாளர் அம்பேத்கர். நேருவோடு உடன்பட்டிருந்தால் சட்ட அமைச்சராக இருந்திருக்கலாம், நேருவோடு அனுசரணையாக நடந்திருந்தால் பின்னாளில் குடியரசு தலைவர் ஆகியிருக்கலாம்! ஆனால் அவர் அப்படி செய்யவில்லை! இந்திய சட்ட அமைச்சர் இந்திய குடியரசு தலைவர் போன்ற உயர்ந்த பதவிகளையே தனது கொள்கைக்காக தூக்கி எறிந்தவர். அடங்க மறுத்தவர், அத்துமீறியவர் அதனால் தான்
அவர் புரட்சியாளர். நீங்கள் யார்? வெறும் SOFA மற்றும் ஒரு மாநில அமைச்சர் பதவிக்காக ஆர்எஸ்எஸ் குழந்தைக்கு தாய்மாமனாக ஓடியவர். அரசியலை சுயலாபத்திற்கு பயன்படுத்தும் நீங்கள் எப்போதும் தெளிவானவர் தான்!
@sinthanaivck@PanaiyurBabu@aloor_ShaNavas@VckBalaji
திமுக இனி எந்த காலத்திலும் நம்பிக்கை துரோகிகளை கூட்டணி கட்சியில் சேர்த்து விடாதீர்கள்.குறிப்பாக காங்கிரஸ்,விசிக,மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,கம்யூனிஸ்ட்
வெற்றியோ தோல்வியோ கழக உடன்பிறப்புகளை நம்பி மட்டும் களத்துல இறங்குங்க!
இதுக்கு ஆதரவு கொடுக்குற தோழர்கள் இந்த பதிவை RT 🔁 பண்ணுங்க..