அடிப்படை RTI சட்ட அறிவு கூட இல்லாமல் @TNPSC_Office@Chief_Secy_TN அதிர்ச்சிப் பதில்! 🚨
Group-I & II முதன்மைத் தேர்வு மதிப்பீட்டு முறை மாற்றம் என்ன "வணிக ரகசியமா (Commercial Trade Secret)"
🤯இரட்டை மதிப்பீட்டை (Double Valuation) ரத்து செய்து ஒற்றை மதிப்பீட்டிற்கு மாறிய தீர்மானம் மற்றும் 'டபுள் ஸ்கேலிங்' சூத்திரத்தைக் கேட்டால், RTI சட்டம் பிரிவு 8(1)(d)-ன் கீழ் தர முடியாது என TNPSC மறுத்துள்ளது. இது RTI சட்டத்திற்கு மட்டுமல்ல, தமிழ்நாடு அரசின் சொந்த உத்தரவுக்கே எதிரானது!
1️⃣ வணிக ரகசியப் பிரிவு (Sec 8(1)(d)) தவறான பயன்பாடு: பிரிவு 8(1)(d) என்பது தனியார் நிறுவனங்களின் வணிக மற்றும் வர்த்தக ரகசியங்களைப் பாதுகாப்பதற்கானது. பொதுத் தேர்வு விதிகளை "வணிக ரகசியம்" என்பது அடிப்படை RTI அறிவு கூட இல்லாத செயல்!
2️⃣ தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை மீறல்: பொதுத் தகவல் அலுவலர்கள் (PIOs) உரிய சட்டக் காரணமின்றி விண்ணப்பங்களை நிராகரிக்கக் கூடாது எனத் தமிழ்நாடு அரசின் P&AR துறை கடித எண். 23779/AR.III/2020-1 (நாள்: 27.08.2020) தெளிவாக உத்தரவிட்டுள்ளது. அதை TNPSC காற்றில் பறக்கவிட்டுள்ளது.
https://t.co/55y2E9kLlc
3️⃣ அரசியலமைப்பு அமைப்பு என்ற தவறான வாதம்: "Constitutional body" என்பதால் விலக்கு உண்டு என்பது பிரிவு 2(h)(a)-க்கு எதிரானது.
இலட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட இதில், சட்டவிரோதப் பிரிவுகளைக் காட்டித் தப்பிக்க முடியாது. முதல் மேல்முறையீடு (First Appeal) செய்யப்படுகிறது! @sattapanchayath
தவறான தகவல்களைக் கொண்டு, செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கப்பட்டப் போலி நூல்களைக் கொள்முதல் செய்வதா? அறிவுலகத்திற்கு நூல்கள் வாங்குவதிலேயே மிகப்பெரும் மோசடியா?
@CMOTamilnadu@TVKVijayHQ
கோவையிலுள்ள பெரியார் அறிவுலக நூலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுத்தாளர் பெருமாள்முருகன் அவர்கள் சிந்தை இணையதளத்தில் எழுதியுள்ள கட்டுரையின் வாயிலாக சான்றுகளுடன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பேரதிர்ச்சி தருகின்றன. மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட அறிவுத்தேடலுக்கான இடமான நூலகத்திலேயே, தவறான தகவல்கள் அடங்கிய போலி நூல்கள் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு, முறைகேடு நடைபெற்றுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
ஏறத்தாழ 1,800 நூல்கள் ஒரே பதிப்பகத்தின் பெயரில் இடம் பெற்றிருப்பதாகவும், முந்நூறு பக்க நூல்களுக்கு 1,395 ரூபாய், 1,445 ரூபாய் என விலை குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதியிருக்கும் அக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. இந்த நூல்களின் உள்ளடக்கத்தை ஆய்வு செய்தது யார்? அவற்றின் விலையை ஏற்றுக்கொண்டது யார்? கொள்முதலுக்கு ஒப்புதல் வழங்கியது யார்? நானூறு வெண்பாக்களின் தொகுப்பான நாலடியாரை ஒரு கவிஞராகச் சித்தரிப்பதும், மதுரைக்காஞ்சியை எழுதிய மாங்குடி மருதனாருக்குப் பதிலாக இல்லாத பெயர்களையும், வரலாற்றையும் முன்வைப்பதும் எத்தகைய அபத்தம்? தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றையே தவறாக எழுதி வைத்துள்ள நூல்களை மாணவர்களும், போட்டித்தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்களும் படித்தால் என்ன ஆகும்? அறியாமையை அகற்ற வேண்டிய நூலகத்தில், அறியாமையையே அச்சடித்து அடுக்கி வைப்பதுதான் அரசின் சாதனையா? நூல்களின் பன்னாட்டுத் தரப் புத்தக எண்கள் போலியானவை என்றும், ஆசிரியர்களின் அடையாளங்கள் மற்றும் பதிப்பக முகவரி குறித்துச் சந்தேகங்கள் இருப்பதாகவும் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அரசு உடனடியாக விளக்கமளிக்க முன்வர வேண்டும். தவறான தகவல்களைக் கொண்டு, செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கப்பட்டப் போலி நூல்களைக் கொள்முதல் செய்வதில் நடைபெற்ற இம்மாபெரும் முறைகேடு ஆட்சியின் அவல நிலைக்கான சான்றாகும்.
ஒருபக்கம், பொழுதுபோக்குக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகாலை ஆறு மணிக்கே திரையரங்குகளைத் திறக்க ஏற்பாடு செய்கிறது தவெக அரசு. மற்றொரு பக்கம், அறிவுக்கண்ணைத் திறக்க வேண்டிய நூலகத்தில், புத்தகங்களிலேயே ஊழல் நடைபெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுமளவுக்கு நிர்வாகம் செய்கிறது. மக்களைப் பொழுதுபோக்கில் மூழ்கடித்துவிட்டு, அவர்களின் அறிவுத்தேடலையும் மோசடிபேர்வழிகளிடம் ஒப்படைக்க முனைவது பெரும் அவலம் இல்லையா? திரையரங்கத்தில் திரைப்படக்காட்சிகளை அதிகரிப்பதில் காட்டும் அக்கறையில் சிறிதளவையாவது நூலகங்களின் தரத்தை உறுதிசெய்வதில் காட்டியிருக்க வேண்டாமா? மக்கள் எத்தனை காட்சிகள் திரைப்படம் பார்க்க வேண்டும் எனச் சிந்திக்கும் அரசு, அவர்கள் எத்தகைய நூல்களைப் படிக்கிறார்கள் என்று சிந்திக்காதது ஏன்?
நூலகத்தின் பெருமை என்பது அதன் உயரமானக் கட்டிடத்திலும், பளபளப்பான அலமாரிகளிலும் இல்லை; அதற்குள் இருக்கும் நூல்களின் தரத்தில்தான் இருக்கிறது. தவறான தகவல்களை நூலகத்தின் வழியாக மக்களிடம் கொண்டுசேர்ப்பது, பண மோசடியையும் கடந்து ஒரு தலைமுறையின் அறிவு வளர்ச்சியையே பாதிக்கும் மாபெரும் முறைகேடாகும். முந்தைய திமுகவின் ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதைக் கூறி, இன்றைய அரசு தன்னுடையப் பொறுப்பிலிருந்து விலக முடியாது. அதேபோல, திட்டத்தை உருவாக்கிய பெருமையை உரிமைகோரும் முந்தைய திமுகவின் ஆட்சியாளர்களும், கொள்முதல் குறித்த கேள்விகளுக்கு விளக்கமளிக்க முன்வர வேண்டும். எந்தக் காலக்கட்டத்தில், யாருடைய ஒப்புதலுடன் முறைகேடுகள் நடந்திருந்தாலும், அனைத்தையும் வெளிச்சத்திற்கு வர வேண்டியது பேரவசியமாகும்.
ஆகவே, பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் தொடர்பான தேர்வுக்குழு விவரங்கள், பரிந்துரைகள், வழங்கல் ஆணைகள், நூல்களின் பட்டியல், விலை மற்றும் பணப்பட்டுவாடா விவரங்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு பொதுவெளியில் வெளியிட வேண்டும் எனவும், எழுத்தாளுமைகளைக் கொண்ட குழுவின் மூலம் நூல்களின் தரத்தை ஆய்வுசெய்து, தவறான தகவல்கள் கொண்ட போலி நூல்களை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், கொள்முதல் முறைகேடுகள் குறித்து நீதிவிசாரணையும், சிறப்புத் தணிக்கையும் நடத்தி, குற்றத்தில் தொடர்புடைய அதிகாரிகள், விநியோகிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுத்து கைதுசெய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
🚨 "தோல்வியடைந்த சமூகம் எப்படி இருக்கும்?"
இன்றைய சமூகம் இப்படித்தானா? 🤔
👇👇
"தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?" என்று கேட்டபோது, புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் சக்கோவ் இப்படி விளக்கினார்:
அங்கே பெரும்பான்மை, முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும்..
எந்த சமூகத்தில் அற்பமான விஷயங்கள் பெரும் தலைப்புகளாக மாற்றப்பட்டு, நல்லுணர்வான சிந்தனைகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவையாகத் தள்ளி வைக்கப்படுகின்றனவோ
Finally! Someone selling some nice-looking mechanical keyboards in India that doesn't cost an arm and a leg. 👌🏼
Looks fantastic, will order to try one out.
Banglore - Ooty via Masinagudi:
There’s something about this route — the towering mountains, the winding road, the silence between the trees…
Forward video & credits to respective owner