நீ வாழாத வாழ்க்கையை
யாரேனும் ஒருவர் வாழ்ந்துக்
கொண்டிருப்பர்..!
உன்னை போல் வாழவும் யாரேனும் ஒருவர் ஏங்கிக்
கொண்டிருப்பர்..!
கிடைத்ததும் கிடைப்பதும் சொர்க்கம் என கடந்து போ..!!
பழனி கோயில் நில முறைகேட்டில் அரசை விமர்சித்துப் பொதுவெளியில் எழுதியவர்களை எல்லாம் கைதுசெய்யும் தவெக அரசு, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாரையும் இன்னும் ஏன் கைதுசெய்யவில்லை?
நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அறப்போராளி சோனம் வாங்சுக்குடன் உடனே பேச்சுவார்த்தை நடத்தி அவரது உடல் நலனை உறுதி செய்வதோடு மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்.
@narendramodi@AmitShah@dpradhanbjp@EduMinOfIndia
தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில், கடந்த 18 நாட்களுக்கும் மேலாக உணவு உட்கொள்ளாமல் தனது உடலை வருத்தி, சாவின் விளிம்பில் நின்று அறப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார் லடாக் மண்ணின் கல்விப் புரட்சியாளரும், சூழலியல் அறிஞருமான மதிப்புக்குரிய சோனம் வாங்சுக் அவர்கள். ஒரு நாட்டின் எதிர்காலமாகத் திகழக்கூடிய கோடிக்கணக்கான ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பத்து மாணவர்களின் கல்வி உரிமையைக் காப்பதற்காக, தன்னுயிரைத் துச்சமென மதித்து அவர் மேற்கொண்டு வரும் இந்த உண்ணாநிலை அறப்போர், ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்தின் ஆன்மாவையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த நாட்டின் ஆளும் வர்க்கமோ எவ்வித சலனமும் இன்றி, ஒரு மனிதனின் உயிர் போகும் நிலையைக் கண்டும் காணாமல் மௌனம் சாதிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஒன்றிய பாசக அரசு கொண்டு வந்த இந்த 'நீட்' (NEET) போன்ற ஒற்றைச் சாளரத் தேர்வு முறையானது, தகுதி, திறமை என்ற பெயரால் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் ஒரு பெரும் பகற்கொள்ளை என்பதை நாம் தொடக்கம் முதலே எச்சரித்து வருகிறோம். இந்த ஆண்டு அரங்கேறிய வினாத்தாள் வெளியீடுகளும், முறைகேடுகளும் நமது எச்சரிக்கையை முற்றிலும் உண்மையாக்கியுள்ளன. மாதக்கணக்கில், ஆண்டுகணக்கில் தூக்கத்தைத் தொலைத்து, படித்த லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் ஒரு மாபெரும் கல்விச் சந்தையாக இந்தத் தேர்வு வாரியம் மாறியிருக்கிறது. இது வெறும் நிர்வாகத் தோல்வி அல்ல, இந்த நாட்டின் ஒட்டுமொத்தக் கல்வி அமைப்பின் மீதும், எதிர்காலத் தலைமுறையின் மீதும் நடத்தப்பட்ட ஒரு வன்முறை.
இந்த அநீதிக்கு எதிராகவும், வினாத்தாள் வெளியீட்டிற்குப் பொறுப்பேற்று ஒன்றிய பாசக அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும்தான், டெல்லியில் போராடும் இளம்தலைமுறையினரோடு கைகோர்த்து சோனம் வாங்சுக் களம் கண்டுள்ளார். 18 நாட்களைக் கடந்த உண்ணாநிலையின் காரணமாக அவரது உடல் எடை 9 கிலோவுக்கும் மேல் குறைந்து, தசை இழப்பு ஏற்பட்டு, இதயம் பலவீனமடைந்து கவலைக்குரிய நிலையில் உள்ளார். அவருடைய வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட '3 Idiots' திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, "கல்வி என்பது மனப்பாடம் செய்வதல்ல, அது சிந்தனையைத் தூண்டுவது" என்று கைதட்டி இரசித்த இந்த நாடு, உண்மை வாழ்க்கையில் அதே சிந்தனைக்காக ஒரு மாமனிதன் சாவின் விளிம்பில் போராடும்போது, தொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்றிக் கொண்டு வேடிக்கைப் பார்ப்பது பெரும் அவமானம். அதே படத்தின் தமிழாக்கத்தில் நடித்து வெற்றிகண்ட முதலமைச்சர் விஜய் அவர்கள் பாசக அரசின் கொடுங்கோன்மைக் குறித்து அமைதி காப்பதும், சோனம் வாங்சுக் குறித்து குரல் எழுப்பாததும் பெரும் வருத்தமளிக்கிறது.
ஒன்றிய அரசு இனியும் காலங்கடத்தாமல், ஜந்தர் மந்தரில் போராடி வரும் சோனம் வாங்சுக் மற்றும் மாணவர் பிரதிநிதிகளுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நீட் போன்ற ஆதிக்கத் தேர்வு முறைகளை முற்றிலும் கைவிட்டு, வினாத்தாள் வெளியீட்டிற்குக் காரணமானவர்கள் மீதும், அதற்குப் பொறுப்பான கல்வி அமைச்சகத்தின் மீதும் கடுமையான சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.
கல்வி என்பது வர்த்தகப் பண்டமல்ல அது எளிய மக்களின் வாழ்வாதார உரிமை! உண்ணாநிலை போராட்ட முறையை கைவிட வேண்டும் எனும் கோரிக்கையோடு நம் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் காக்கப் பாடுபடும் சோனம் வாங்சுக் அவர்களின் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தனது முழுமையான ஆதரவை வழங்குகிறது.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
இவர்தான் ' சோனம் வாங்சுக் '
இவரை நிஜவாழ்க்கையை தழுவி தான் நண்பன் திரைப்படத்தின்
'கொசக்சி பசப்புகழ்' கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது ..
நீட் தேர்விற்கு எதிராக தற்போது கடுமையான உண்ணாவிர போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்.. நாளுக்கு நாள் இவரின் உடல்நிலை மோசமாகி வருகிறது.. இருந்தும் போராட்டத்தை கைவிடாது போராடுகிறார்..
இவரின் கதாப்பாத்திரத்தில் நடத்து பணம் சம்பாதித்து .. அந்த நடப்பு புகழை வைத்து ஆட்சியில் அமர்ந்துள்ள நடிகர் விஜய் ஏன் நீட் தேர்விற்கு எதிரான இவரின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கவில்லை..?
ஒரு டிவிட் கூட போடவில்லை..
( நடிகர் பிரகாஷ்ராஜ் கூட இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்துள்ளர்)
அரசியலுக்கு வரப்போகிறோம் என்றதும் தங்கை அனிதா வீட்டிற்கு சென்ற நடிகர் விஜய்.. முதல்வர் ஆனதும் ஏன் நீட் தேர்வு குறித்து பேசுவதில்லை..
ஏன் சோனம் வாங்சுகின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை..?
விஜயோடு சேர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு முட்டு கொடுத்து தமிழ் தேசியத்தை படைக்கப் போகும் நண்பர்களே, எதிரிகளே, துரோகிகளே அனைவருக்கும் வாழ்த்துகள்!
#Betrayal
இந்த கூத்தாடிய பாருங்க மக்களே கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம அள்ளி விடுறான்
அறுபது எழுபது பேர அடிக்கிற மூஞ்சா இது
சினிமா உலகத்திலேயே வாழ்ந்தா நாடு நாசமா தாண்டா போகும்.
தம்பி நம்ம ஆட்சில யார் தப்பு பண்ணுனாலும் கைது பண்ணிருவோம், நேத்து கூட 1.30 லட்சம் லஞ்சம் வாங்குன எங்க கட்சி மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீராவை கைது பண்ணிட்டோம்ல !
அப்படியாண்ணே ?
அட ஆமா தம்பி... அவ்வளவு ஏன் பழநி 100 கோடி கோவில் நிலத்தை தனியார் நபருக்கு பத்திரபதிவு பண்ணுன சார்பதிவாளர் , மாவட்ட பதிவாளரை பணியிடை நீக்கம் பண்ணிட்டோம்ல..
ஆட ஆமாண்ணே.. சூப்பர்னே 100 கோடி மதிப்பு பழநி கோவில் நிலத்தை எழுதிகொடுத்தவனுகளையும் எழுதி வாங்குனவங்களையும் கைது பண்ணிருப்பீங்களே?
~ தம்பி , அதை விடுங்க, எங்க தலைவர் நேத்தி எவ்வளவு ஸ்டைலா நடந்து வந்தார் பாத்திங்களா?
'போதையை விடு! விளையாட்டை எடு!' என மாரத்தானில் ஓடிய முதல்வர் விஜய் அவர்களின் ஆட்சியில், டாஸ்மாக் நிறுவனமானது, 54 வகை புதிய வகை மது வகைகள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும், உணவோடு கூடிய மதுக்கூடத்தைத் திறக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன.
இதுவல்லவோ போதை ஒழிப்பு !
முதல்வர் விஜய் பதிலளிக்கும்வரை சபரிவர்மனின் உடலை வாங்கமாட்டோம் என அவருடைய குடும்பத்தினர் 4 நாட்களுக்கு மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமைச்சர்கள் அளிக்க முன்வந்த நிவாரணத்தையும் ஏற்க மறுத்துவிட்டனர்.
கல்லுளிமங்கன் போல வாய்திறக்க மறுக்கலாமா முதல்வர் விஜய்?
Dear @suzuki2wheelers
During my recent bike service, I noticed that my invoice includes a charge for Teflon Coating, even though I never requested or approved this service. When I questioned the service advisor, I was informed that this charge was actually (1/4)
ஒரு மீன்வளத்துறை அமைச்சர் மீனவ மக்களின் குறைகளை கேட்க கூட அவருக்கு நேரமில்லை...
வெயில் அடிக்கிறதாம் அதனால அவரால் இங்கே இருக்க முடியாதாம்...
எப்படிப்பட்ட ஆளுங்களை மக்கள் தேர்வு செஞ்சிருக்காங்க பாத்தீங்களா?