தோழர் கொண்டல்சாமி தமிழ்நாடு அவர்களின் பதிவு
இந்த பெண் சாமியார் பொய் சொல்கிறார் என்பது தமிழ்நாட்டில் இருக்கும் முற்போக்காளர்கள் பாதி பேருக்கு தெரியும். ஆனால் இதை வைத்து மிகப்பெரிய அரசியல் இந்நேரம் கட்டமைக்கப்பட்டிருக்கும். அவர்கள் இந்த பொய்யை பரப்பியது போலவே உண்மையை
இருநாட்கள் நடக்கும் தமிழ்த்தேசியப் பெருவிழாவின் இறுதி நிகழ்வாக விருது விழாவும், 'வெல்க தமிழ்த்தேசியம்' எனும் தலைப்பில்
மாநாட்டுப் பொதுக்கூட்டமும் நிகழ்கிறது. அனைத்துக்கட்சி, இயக்கத் தோழர்கள் பங்கேற்கும் 'விருது வழங்கல்' மற்றும் 'வாழ்த்தரங்கம்' நிகழ்வில் பங்கேற்க அழைக்க��றோம்.
மே பதினேழு இயக்கத்தின் 15ம் ஆண்டு நிகழ்வில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.
இருநாள் நிகழ்ச்சி நிரல் விவரம்:
1.அறிஞர் அவையம் - 24 பிப் காலையில் துவங்கி 25 பிப்ரவரி பிற்பகலில் நிறைவு பெறுகிறது. இது உள்ளரங்க நிகழ்வாக வி.கே.எம் மகாலில் நடக்கிறது. இந்த அரங்கு சைதாப்பேட்டை-மேற்குமாம்பலம் அருகில் உள்ள மேட்டுப்பாளையம் மார்க்கெட் பகுதியில், பிரதான சாலையில் அமைந்துள்ளது( சாலையி��் பெயர் கோடம்பாக்கம் சாலை)
2. 'விருது விழா, வெல்க தமிழ்த்தேசியம்' ஆகிய இரு நிகழ்வுகளும் பொதுக்கூட்ட மேடையில் திறந்தவெளியில் நடக்கிறது. இது வி.கே.எம் மகால் அருகில் உள்ள காரணீஸ்வரர் கோவில் தேரடியில் நடக்கிறது. சைதை ரயில் நிலையத்தின் அருகே தேரடி உள்ளது. உள்ளரங்க மாநாடு முடிந்த பின்னர் பொதுவெளி மாநாடு துவங்குகிறது.
குடும்பத்துடன் பங்கேற்க வாருங்கள்.
நீங்கள் அவசியம் அறிய வேண்டிய உண்மை:
நேற்று அனகாபுத்தூர் மக்களை சந்தித்தேன். தொடர் கூட்டங்களில் இருந்த காரணத்தினாலும், உடல் நல குறைவாலும் சென்னை திரும்ப இயலாத நிலையில் அனகாபுத்தூர் மக்களுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை குறித்து சந்தித்து பேசினோம்.
டோபிகானா தெருவை முழுவதுமாக இடித்துத் தரைமட்டமாக்கியிருந்தனர். இடிப்பதற்கு முன்பு காவல்துறையை குவித்துக்கொண்டிருந்த போதிலிருந்தே தாம்பரம் ஆணையாளரிடம் பேச முயன்ற பொழுதில் அவர் தவிர்த்தார். இடிக்கப்பட்ட வீடுகளை ஆக்கிரமிக்கப்பட்டதென்றோ, நீர்நிலை பகுதியென்றோ சொல்வதற்கு அவரிடம் ஆதாரம் ஏதுமில்லை. நேரடியாக கேள்விகேட்டவர்களை கைதுசெய்து முடக்கினார்கள். தோழர்.முத்தரசன், தோழர��.கே.பாலகிருஷ்ணன், தோழர் ஜவாஹிருல்லா என அனைவரையும் தொடர்புகொண்டு தகவலை கொண்டு சேர்த்து அவர்களும் அமைச்சர் பெருமக்களிடம் இடிப்பை நிறுத்த தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். நான்கு பகுதிகளை இடிக்க வந்தவர்கள் ஒரு பகுதியை இடித்துவிட்டு சென்றிருக்கின்றனர். இபகுதியை நீர்நிலை ஆக்கிரமிப்பு என சொல்வதற்கு உங்களிடம் ஆதாரம் ஏதுமில்லையே என நான் கமிசனரிடம் கேட்ட பொழுதில் அவர் நீர்நிலை அதிகாரிகளிடம் செல்பேசி கொடுத்துவிட்டு, பதில்சொல்��ாமல் அகன்றார். அந்த அதிகாரியிடத்தில் பதில் இல்லை. ஆயினும் முறைப்படி செய்கிறோம் என்றார். ஆனால் உடமைகளை எடுக்க அனுமதி கொடுக்காமல் வீடுகள் இடிக்கப்பட்டன. ஞாயிறு காலை 10 மணிக்கு பிரார்த்தனை முடித்த உடன் சர்ச்சும் இடிக்கப்பட்டது. இயேசு நாதரோடு அந்த சர்ச் பாலஸ்தீன கட்டிடங்கள் போல புழுதிக்காடாக கிடக்கிறது.
இப்பகுதிக்கு அடுத்துள்ள சர்வேக்கள், இவர்களது பகுதியைப் போல ஆற்றிலிருந்து தொலைவில் அமைந்திருந்தாலும் அது இடிக்கப்படவில்லை. இடிக்கப்படும் பட்டியலில் உள்ள வீடுகளுக்கு 10 ஆண்டுகளுக்கு முன் பட்டா தருவதாக அரசு சொல்லி இருக்கிறது. இது குடியிருப்பு பகுதியென சி.எம்.டி.ஏ குறித்திருக்கிறது. இப்பகுதி மக்கள் சிறிதுசிறிதாக சேர்த்த பணத்தில் வீடுகளை கட்டியிருக்கிறார்கள். தற்போதுதான் முதல் தலைமுறை பள்ளிக்கூடம் செல்கிறது. இவ்வாறாக கிட்டதட்ட 600 குழந்தைகள் பள்ளிகளில் உள்ளவர்களை வீதிக்கு தள்ளியிருக்கிறார்கள்.
இப்பகுதியை ஒட்டி சற்று தள்ளி காசா க்ராண்ட், அமர் பிரகாஷ், ��ி ஸ்கொயர், ஒலிம்பியா ஆகியன ஆற்றின் கரையை ஆக்கிரமித்து ரியல் எஸ்டேட் வேலைகளை செய்திருக்கிறார்கள். இதில் குறிப்பாக காசா க்ராண்ட் நிறுவன நிலத்திற்கு அகலமான பாதை கிடையாது. அனகாபுத்தூரிலிருக்கும் இந்த நான்கு குடியிருப்புகளை அகற்றி சாலை அமைக்க முயல்கிறது தாம்பரம் மாநகராட்சி. இத்தனை அப்பட்டமாக, வெளிப்படையாக அதிகார வர்க்கம் ஏழைகளின் வீடுகளை இடிக்கிறார்கள், அம்மக்களை குப்பையை ப��ல வெளியேற்றுகின்றனர். இப்பணியை தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் திருமதி அழகுமீனா எவ்வித குற்ற உணர்ச்சியுமின்றி, ஈவிரக்கமில்லாமல் செய்து கொண்டிருக்கிறார். அனைத்து மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வசதி, கழிவுநீர் வெளியேற்றம், சாலை வசதி செய்யாமல் 'மாநகராட்சி' செத்துகிடக்கும் போது, அனகாபுத்தூர் பகுதிகளை அகற்றுவதன் மூலம் ரியல் எஸ்டேட்டுகளின் கைக்கூலியாக செயல்படுகிறது தாம்பரம் மா���கராட்சி என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை. இதுபோன்ற அக்கிரமங்களுக்கு திமுக அரசு எவ்வித தடையுமில்லாமல், அதிகாரிகள் வசம் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு நகர்ந்துவிடுகிறது. அதனாலேயே கூட்டணிக் கட்சி தலைவர்கள் சாம��னிய ஏழை மக்களுக்காக அரசிடம் போராடுகிறார்கள். இறுதியாக சொல்ல வேண்டுமெனில் இடிபடும் இப்பகுதி மக்கள் இல்லையெனில் இத்தொகுதியில் திமுக வெற்றி பெற்றிருப்பது சாத்தியமல்ல. இந்நிலை தொடருமெனில் சென்னைக்குள்ளாக திமுக தோற்கடிக்கப்பட எதிர்க்கட்சிகள் தேவைப்படாது. தனது அரண்மனை ஜால்ராக்களின் யூட்யூப் வீடியோக்களை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தால் காலடி நிலம் நழுவிச்சென்றுவிடும். அன்றாட வாழ்வில் சனாதனம், இந்துத்துவ கும்பல் ஏற்படுத்தும் துயரத்தைவிட அதிகாரவர்க்கமும், செயல்படாத மக்கள் பிரதிநிதிகளும் ஏற்படுத்தும் துயரம் மிக மோசமானது, நேரடியானது.
எந்நிலையிலும் மே17 இயக்கம் மக்களுடன் நிற்கும். தாம்பரம் மாநகராட்சியின் அராஜகத்திற்கு எதிரான எமது போராட்டத்தில் உங்களது ஆதரவை எதிர்பார்க்கிறோம்.
பாலஸ்தீன இனப்படுகொலைக்கு எதிரான பேரணி. அவசியம் பங்கேற்க வருக.
இனப்படுகொலையை சந்தித்தத் தமிழினம், பாலஸ்தீனத்தில் நடக்கும் இனப்படுகொலையின் வலியறியும்.
எளியவர்களை ந���ுக்கும் வலியவருக்கு எதிராக நம் கரங்கள் ஒன்று சேரட்டும். கட்சி, சாதி, மதம் கடந்து படுகொலையாகும் பாலஸ்தீன குழந்தைகளுக்காக குரல் கொடுப்போம்
#Gaza_Genocide #Palestine #PalestinianGenocide #tamil #tamileelam
குஜராத்துக்கு வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கிட்ட 'ஜெய்ஸ்ரீராம்' சொல்ரது இருக்கட்டும், இந்திய எல்லைக்குள் கொட்டாய் போட்டிருக்கும் சீனாக்காரன்கிட்ட போய் காதுல கேட்கர மாதிரி சொல்லுங்க சங்கிகளா!
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராடக்கூடாது என பிரஞ்சு அரசு உத்திரவிட்டது, அதற்கு பதில் சொல்லும் விதமாக லட்சக்கணக்கான பிரஞ்சு மக்கள் வீதிக்கு வந்துள்ளனர். அரசு சொல்வதற்கெல்லாம் செவி கொட���க்க வேண்டுமென்றால் ஆளவது அரசர் என்பதாகும். மக்கள் விருப்ப��ே ஆட்சி, மக்களே அரசர். #Palestine #PalestineResists
3000 ஆண்டுகளாக மரபுத் தொடர்ச்சி கொண்ட தமிழ் மொழிக்கு, உயர் நீதிம���்றத்தில் இருக்க தகுதி இல்லையா? இது தமிழர்களை தமிழ் மொழியை அவமதிக்கும் டெல்லி பார்ப்பனியத்தின் ஆணவப்போக்கு.
#Tamil_In_Highcourt
அனகாபுத்தூர் கரை ஆக்கிரமிப்பை அகற்றுகிறோமெனில், ஆற்றிற்குள் கட்டிடம் கட்டிய மாதா கல்லூரியை என்ன செய்வீர்கள் தாம்பரம் மாநகராட்சியே?
கேள்வியோடு திரண்ட மக்கள். மாதா பொறியியல் கல்லூரிக்கா��� அடையாறு ஆற்றின் கரையை திருத்தி, சம்பந்தமில்லாத பொதுமக்களை பலியிடும் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் பதில் சொல்வார்களா? உங்கள் நேர்மையற்ற அடக்குமுறை, அகற்றத்தை தொடர்வதை நிறுத்துவீர்கள் என நம்புகிறோம்.
@tambaram_corp @chennaicorp
@KarunanithiMla
நீட் தேர்வை இரத்து செய்ய மறுக்கும் இந்திய ஒன்றிய அரசை கண்டித்தும், அனிதா தொடங்கி ஜெகதீஸ்வரன் வரை, 23 தமிழக மாணவர்களின் உயிரை பறித்த, சமூகநீதிக்கு எதிரான நீட் தேர்வுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கும் ஆளுநர் ரவியை கண்டித்தும், மே பதினேழு இயக்கம் நடத்தும் ஆர்ப்பாட்டம்!
இந்திய ஒன்றியரசு தமிழ்நாட்டிடமிருந்து ஈட்டிய இலாபத்தில் தமிழர்களுக்கு என்ன வந்துச்சு?
இந்தியம் கொடுத்த விட தமிழ்நாடு அதிகமாவே கொடுத்தாச்சு.
அப்படியிருந்தும் நான் தின்னும் அரிசி உனக்கு உறுத்துதுன்னா அது எவளோ பெரிய அ��ோக்கியத்தனம்?
#மே17இயக்கக்குரல்
ஹிஜாப் என்பது பற்றிய முடிவை பெண்கள் எடுக்கவேண்டுமே ஒழிய இந்துத்துவ பாஜக பயங்கரவாதிகள் அல்ல.
நமது கல்விக்கூட நுழைவினை தடுப்பதை பார்ப்பனிய இந்துத்துவம் காலந்தோறும் செய்துவந்திருக்கிறது.
போர்க்குணத்தோடு புரட்சிகர எழுச்சியோடு துணிந்து வீதியில் எதிர்கொள்வோம் பாஜக ரவுடிக்கூட்டத்தை!