5 அடி ஒல்லியான உடல்வாகு , பழுப்பாகிப் போன திமுக கர வேட்டி , மஞ்சப்பையில் documents ஓட , Nokia 1100 போன்ல
"சரி சார் .. இதோ community certificate க்கு தேவையான documents கொண்டு வந்துருக்கேன் .. பாவம் sir , எப்படியாவது பண்ணி கொடுங்க “
நான் முதல் முறை அவரை சுமார் 15 வருடங்களுக்கு முன்னால் கவனித்தது ..
இந்த முறை இந்தியா vacation இல் , கண்டிப்பாக அவரை பார்த்து விட வேண்டும் என்ற முடிவோடு , அம்மாவும் நானும் ஏரல் நோக்கி பயணித்தேன் .
தாமிரபரணி ஆத்து வாய்க்கால் பின்னாடி அடர்த்தியான மரங்களோடூ அவர் வீடு இருந்த நியாபகம் ,இன்று முழுவதுமாக மாறிப் போயிருந்தது .
அவருடைய மாப்பிள்ளை வீட்டுவாசலில் நின்று கொண்டிருந்தவர் என்னை அடையாளம் கண்டு கொண்டு , வீட்டினுள் அழைத்து சென்றார் .
நான் இதற்கு முன்பு பார்த்ததை விட வீடு மிகவும் உடைந்து விடும் நிலையில் இருந்தது ..தண்ணி பட்டு உப்பிப் போன பலகைகள் ..
கிட்டத்தட்ட படுத்த படுக்கையா இருந்தார் , கர வேட்டிக்காரர் ..என்னையும் அம்மாவையும் பார்த்தவுடன் கட்டிலில் இருந்து எழுந்து உட்கார்ந்து , "எப்படி இருக்கீங்க , என்ன பார்க்கிறதுக்காக மெனக்கெட்டு வந்தீங்களா என்றார் "..
அவர் மகளிடம் டீ போட சொல்லிட்டு , கொஞ்ச நாளா உடம்பு சரியில்ல 30 நாளா வெளிய வர மாட்டிக்கிது .. இரண்டு நாள் முன்னாடி கை நிறைய கல் கிட்டினில இருந்து எடுத்தாங்க என்றார் .
அம்மாவ அவரிடம் பேச சொல்லிட்டு , நான் அவர் மாப்பிள்ளையிடம் விசாரிக்க தொடங்கினேன் .
ரொம்ப active இருந்த மனுஷன் , அவர் மனைவி இறந்ததுக்கு அப்புறம் ரொம்ப உடைஞ்சிட்டார் .
திமுக வுல பதவில இருந்தவரு , சொத்து பத்து சேர்த்து வைக்கலையா ? அட நீங்க வேற இவரு கிட்ட bank balance இருப்பதே 300 ரூபாய் தான ..30 வருஷமா அதே வாடகை வீடு ..
தூக்கி வாரி போட்டது ..
இது வரைக்கும் ஒத்த பைசா யார்கிட்டேயும் வாங்கியதில்ல ..இவர் சிபாரிசுக்கு போய் வேல , வாங்கி settle ஆன வங்க பல பேர் ..
இப்ப வந்த தாமிரபரணி வெள்ளத்துல வீடு பாதி மூழ்கிடுச்சு , அப்ப கூட யார்கிட்டேயும் எதயும் கேட்கல ..
அவருக்கு இருக்கிற ஓரே வருத்தம் , எந்நேரமும்
அந்த phone ring ஆகிட்டே இருக்கும்
"எதாவது உதவினு யாராவது கேட்டுட்டு இருப்பாங்க " ..இப்ப பத்து நாளா போன் வர்றதில்ல .. மனுஷன் ரொம்ப உடைஞ்சிட்டார்..
அவரிடமிருந்து விடை பெறும் போது திமுக துணை செயலாளர் போர்ட்-
துணை செயலாளர் கண்டிப்பாக தலித்தாக இருக்க வேண்டும் என்ற
By-law எவ்வளவு தொலை நோக்கு சிந்தனை யில் அமைக்கப்பட்ட சட்டம் என்று புரிந்தது .
ஆம் .., ஒத்த பைசா வாங்காமல் மக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்பணித்த இந்த கரவேட்டிக்காரர் , தலித்களால் ஒடுக்கப்படும் “புதிரை வண்ணார் " சமூகத்தை சார்ந்தவர்.
DKV பெரும்பாண்மையாக வசிக்கும் பகுதியில் , அவருக்கு துணை செயலாளர் அதிகாரம் .திமுக வால் மட்டுமே முடியும்🔥
வீடு திரும்புகையில் .."அன்னைக்கு அந்த community certificate க்கு அவர் மஞ்சப்பையோடு சுத்தலனா , இன்னைக்கு சாதி சாக்கடையில் சிக்காமல் என் குடும்பம் வாழும் அமெரிக்க குடிமகன் வாழ்க்கை வெறும் பகல் கனவு ஆயிருக்கும்லா"
குற்ற உணர்ச்சியுடன்...
@Ranjith_Rayappa@VasanthanVellai@VijayRaghavavan@HansScholl412@rocket_isro
தீராத தெருநாய் பிரச்சனை
மதிப்பிற்குரிய முதல்வர் @mkstalin ஐயா அவர்களே,
சமீபகாலமாக தெருநாய்கள் பிரச்சனை குறித்து பல awareness-threads எழுதி வருகிறேன்.சமீபத்தில் நீங்களும் இந்த தெருநாய் பிரச்சனையின் தீவிரத்தை அறிந்து நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்.ஆனால் அவைஅனைத்தும் longterm solutions
இந்தியாவில் முதன்முறையாக..
மீண்டும் சரித்திரம் படைத்தது ஓமந்தூரார் மருத்துவமனை..
Open heart surgery இல்லாமலேயே ரோபோடிக் கருவி மூலம் துளையிட்டு இருதய ஓட்டையை அடைத்து சாதனை புரிந்த அரசு மருத்துவர்கள்!
தந்தை இல்லாத..
17 வயது பிளஸ் டூ மாணவியின் உயிரைக் காப்பாற்றிய பெருமை!
#TNGovt
ஒரு வருசமாச்சு நான் கஷ்மிருக்கு பொழப்பு தேடி வந்து..!
இன்னைக்கு வர யாரும் “நீங்க இந்துவா முஸ்லிமான்னு” கேட்டதில்ல
மாறா என்கூட பழகுன கஷ்மீரிக்கள் வீடுகள்ல எனக்கு கெடச்ச உபசரிப்புதான் அதிகம்..!
1/n
வாழ்வில் ஓர் பொன்னாள், இந்நாள்!
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளிலும் மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் உன்னதச் சட்டத்தை இன்று சட்டமன்றத்தில் முன்மொழிந்தேன்!
12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் குரல்கள் உள்ளாட்சி மன்றங்களில் இனி ஒலிக்கும்! இதுதான் #DravidianModel!
#BREAKING Justice Pardiwala : Neither the concept of "absolute veto" or "pocket veto" finds a place in the Constitutional scheme. Whenever the Bill is presented to the Governor, he is under obligation to adopt one of the course of action provided in Art 200.
🧵1/3
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
2015 இல் வேளையில் இருந்து ராஜினாமா செய்தாகி விட்டது,
அதன் பிறகு எடுத்த UPSC தேர்வு முயற்சிகள் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின் ஏற்பட்ட அதிகார அமைப்புகள் மீதான வெறுப்பினால் கை விட்டாச்சு , ஆனால் வாழ்ந்ததாக வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் மட்டும் இருந்தது.
பின் புலம் எதும் இல்லை, யாருக்கும் என் மீது நம்பிக்கையும் இல்லை, சொந்தக்காரர்கள் எங்காவது டிரைவர் வேலைக்கு சேர்த்து விடவா என்று அக்கறையுடன் கேட்டு கொண்டு இருந்தார்கள்.
2018 , மாத வாடகை மின் கட்டணத்தோடு சேர்த்து 4000 ரூபாய் , 10× 12 அடி அளவுகளில் அறை என்று பெருங்களத்தூர் , விஷ்ணு நகரில் துவங்கப்பட்டது என் அலுவலகம் . காலை 10-6 வரை அது என் அலுவலகம் , மாலை ஆறு மணிக்கு பிறகு அதுவே நான் தங்கும் வீடு.
அதை start-up என்று கூட சொல்ல முடியாது, வாழ்வதற்கான ஒரு முயற்சி அவ்வளவுதான்.
நிறுவனர், ஊழியர், office boy எல்லாமே நான் தான். அவ்வப்போது உதவியாக நண்பர் திரு. விக்னேஷ். கடற் பொறியாளர், நான் சோர்வடையும் போது உடன் நிற்கும் நண்பன்.
எங்கிருந்து துவங்குவது , எப்படி செய்வது என எதுவும் தெரியாது. வழிகாட்ட யாரும் இல்லை.
தொழில் செய்வதற்கும், தொழில் நுட்ப அறிவோடு இருப்பதற்கும் இடையே நிறைய தூரம்.
கணினி, design softwares, soldering machines, pcb boards, micro controllers , electronic components, என நிறைய வாங்க வேண்டி இருந்தது. முதலீடு எதுவும் இல்லை.
ரிச்சி தெருவில், நண்பர்களுக்கு கணினி வாங்கி assemble செய்து தருவது, பழுது பார்பது, os , softwares installation என வேலைகளை செய்தேன்.
முதல் வருமானம் 150 ரூபாய் , பிரபாகரன் என்ற நபரிடம் இருந்து, அடுத்த வருமானம் 500 ரூபாய் என செய்து வந்தேன்
2 மாதத்தில்
ஒரு பழைய டெஸ்க்டாப் கணினி 8000 ரூபாய்க்கும், மத்த component சிலவும் வாங்கும் அளவிற்கு பணமும் அதனுடன் முன்பை விட கொஞ்சம் நம்பிக்கையும் கிடைத்தது.
மறுபடியும் ரோபோடிக்ஸ்.
இருக்கின்ற components வைத்து சிறிய சிறிய automation செய்தேன்.
அதை ஆர்வமுள்ள நபர்களுக்கு கற்று கொடுத்தேன்.
அதற்கு பணம் வாங்கினேன்.
மறுபடியும் தானியங்கு நீர் தெளிப்பான், தானியங்கு மீன் உணவு தரும் அமைப்பு என robotic உருவாக்கம், அதையும் கற்று கொடுத்து மீண்டும் பணம் வாங்கினேன்.
இப்படியாக நாட்கள் ஓடியது,
இன்னும் கொஞ்சம் அதிக ஆராய்ச்சி,
Automations தவிர்த்து iot, miniature humanoid என உருவாக ஆரம்பித்தேன்.
பின் offline GPS, man hole gas analyser என உருவாகி அதை பொது வெளியில் பகிர்ந்தேன். அப்படி ஒரு பதிவு 2018 இல் trending ஆனது , நியூஸ் 18 தொலைகாட்சியில் இருந்து பேட்டி கேட்டார்கள்.
தரலாமா வேணாமா என கூச்சம்.
திரை படங்களை TV யிள் பார்த்த நாம் ஒரு நாள் டிவி யில் வர போகிறோம் என்ற படபடப்பு ஆனாலும் கூச்சம்.
ஒரு நிமிடம் யோசித்தேன், பேட்டி கொடுக்க சம்மதம் சொன்னேன்.
நல்ல வரவேற்பு.அடுத்து big FM நிகழ்ச்சியில் அழைப்பு, அடுத்து விகடன், புதிய தலைமுறை , the ஹிந்து, jaya tv என பெரும்பான்மை ஊடகங்களில் அறிவியல் சார்ந்த நிகழ்சிகள், பேட்டிகள், கண்டு பிடிப்புகள் என பேச வாய்ப்புகள்.
அந்த அறிமுகத்தை பயன்படுத்தி புதிய மனிதர்களின் தொடர்புகள், அவர்கள் மூலம் புதிய புராஜெக்ட் என வாழ்க்கை நகர ஆரம்பித்தது.
அடுத்த இரண்டு வருடங்களில் ஓரளவிற்கு நல்ல நிலை அடைந்தேன்.
பின் குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களில் சேர்ந்த சில அரசியல் நண்பர்கள் தேர்தல் சார்ந்த சில தொழில் நுட்ப உதவிகளை கேட்க, முதல் முறை அரசியல் களத்தில் எனது தொழில் நுட்பத்தை புகுத்தினேன்.
அவர்களின் தேவை நிறைவேறியது. அவர்களின் நம்பிக்கை பெற்றேன் கூடவே கொஞ்சம் பணமும் கிடைத்தது.
மீண்டும் முதலீடு,தொழில்நுட்ப வடிவமைப்பு , புதிய மனிதர்கள் என வாழ்கை நகர ஆரம்பித்து சென்றது.
கல்வி என் வாழ்வை மாற்றிய விதம் என்னை என்னவோ செய்தது.
இந்த மந்திர கல்வியை , கல்வி எனும் மந்திர கருவியாய பற்றி பிறருக்கும் சொல்ல விரும்பினேன். அரசுப்பள்ளி மாணவர்களை சந்தித்தேன், தொழில் நுட்பம் குறித்தும், கல்வி குறித்தும் அது செய்யும் வாழ்வியல் மாற்றம் குறித்தும் பேச ஆரம்பித்தேன்.
நல்ல வரவேற்பு மாணவர்களிடம். அதை விட மேலாக மன நிறைவு. இப்படியா 6 வருடங்கள் ஓட விட்டது.
இன்று அலுவலகத்தில் எனது கேபின் மட்டும் 200 சதுர அடி,
தமிழகத்தில் மூன்று இடங்களில் அலுவலகம், பணியாளர்கள்,
மாதத்திற்கு 2 அரசு பள்ளிகளுக்கு உதவிகள் என வாழ்கை நன்றாக போய்கொண்டு இருக்கிறது.
எந்த ஒரு காரை காட்டி அதற்கு டிரைவர் ஆக சேர்த்து விடவா என சொன்னார்களோ, அதே நிறுவனத்தின் கார் என் வீட்டு வாசலில்.