கழகத் தோழர்களே உங்களுடைய தொகுதியில் எந்த பூத்தில் எந்த கட்சி எவ்வளவு வாக்கு வாங்கியது என்பதை கீழே உள்ள லிங்க் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த லிங்கில் "AC wise Form 20 details" என்ற ஆப்ஷனை பயன்படுத்திக் கொள்ளவும்
https://t.co/88rGaXtwVa
🚨 “ஒரு வருடம் தங்கம் வாங்காதீர்கள்” — மோடி சொன்னதற்கு பின்னால் பெரிய காரணம் இருக்கிறதா?
99% பேருக்கு புரியாத விஷயம் இது.
இது சாதாரண அறிவுரை இல்லை.
இந்திய பொருளாதாரத்தின் ஆபத்து சிக்னல். 🧵👇
22 வருட உறவு இன்றோடு முடிவடைந்தது! ஒரு சிறிய ஃப்ளேஸ்பேக்:
அப்பொழுது 2004 ஆம் வருடம் ஜனவரி மாதம் முதல் வாரம். டெல்லியில் எனது இல்லத்தில் அமர்ந்து சன் டிவியில் சினிமா பார்த்துக் கொண்டிருந்தேன். எனது கைப்பேசியில் அமைச்சர் ஆ. ராஜா அவர்கள் (@dmk_raja) அழைத்தார். அப்போது அவர் சென்னையில் தலைவருடன் அறிவாலயத்தில் இருந்தார். அதற்கு முந்தைய மாதம் அவர் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருந்தார். அவருக்கு கூடவே இருந்து பணி செய்யும் பொருட்டு எனது அரசுப் பணியில் இருந்து 6 மாதம் விடுமுறை எடுத்து இருந்த காலம் அது.
அலைபேசியில் பேசிய அமைச்சர் ராஜா, டெல்லியில் இருந்து ஒரு முக்கியமான VVIP சென்னை வர வேண்டி இருப்பதாகவும், அந்தப் பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறும் எனக்கு உத்தரவிட்டார். யார் அந்த VVIP ? என்று நான் கேட்டேன். தான் தலைவருடன் இருப்பதாகவும் பிறகு சொல்கிறேன் என்றும் சொல்லி விட்டு அலைபேசியை துண்டித்தார். அரை மணி நேரம் கழித்து என்னை தொடர்பு கொண்டவர், சென்னை வரவிருக்கும் அந்த முக்கிய நபர் டாக்டர் மன்மோகன் சிங் என்றும், அவருடைய பயணத் திட்டத்தை ஒருங்கிணைக்க அவருடைய வீட்டுக்கு செல்லுமாறும் கூறினார். அப்போது மன்மோகன் சிங் அவர்கள் டெல்லியில் சஃப்தர் ஐங் சாலையில் வசித்து வந்தார். நான் உடனே அங்கு சென்று அவரை சந்தித்தேன். அவருடைய பயண ஏற்பாடுகள் அனைத்தும் மிகவும் ரகசியமாக நடைபெற்றது.
சென்னை சென்ற டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் தலைவரை சந்தித்தார். அமைச்சர் ராஜா மற்றும் திரு. தயாநிதி மாறன் உடன் இருந்தனர். அந்த சந்திப்பில் திமுக- காங்கிரஸ் இணைந்து பயணிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. வாஜ்பாய் அவர்களின் ஆட்சிக் காலத்தில் காங்கிரஸ் கட்சியோடு துணை செல்ல யாருமே தயாராக இல்லாத தருணம் அது. நாடு முழுவதும் பா.ஜ.க.வின் பிரமோத் மகாஜன் அவர்களின் வழிகாட்டுதலில் "இந்தியா ஒளிர்கிறது" அதாவது India shining என்ற Campaign நடைபெற்றது. தான் ஜெயித்து விடுவது உறுதி என்ற நம்பிக்கையில், 2004 செப்டம்பர் மாதம் நடக்க வேண்டியிருந்த தேர்தலை முன் கூட்டியே நடத்த முடிவு செய்தார் பிரதமர் வாஜ்பாய் .
2004 ஏப்ரல் மாதம் பொதுத் தேர்தல் நடைபெற்றது. திமுகவை தவிர காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைக்க நாட்டில் எந்தவொரு கட்சியும் முன்வரவில்லை. எதிர்ப்புறம் வாஜ்பாய் அவர்களின் தலைமையில் மிகப்பெரிய கூட்டணி. மிகப் பெரிய அளவில் நாடு முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் திரு. வாஜ்பாய். அதே சமயம் நாடு முழுமைக்கும் சோனியா காந்தியின் காங்கிரஸ் கட்சியோடு பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் தலைவர் மட்டுமே. தேர்தல் முடிவுகள் வந்தது. பாஜக கூட்டணி நாடு முழுவதும் தோல்வியடைந்தது. தமிழ்நாட்டில் 40க்கு 40 சீட்டுக்கள் (பாண்டிச்சேரி உட்பட ) திமுக- காங்கிரஸ் வென்றது. ஆனால், மத்தியில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு போதுமான இடங்கள் காங்கிரஸ் கட்சி பெறவில்லை.
அடுத்து என்ன நடக்கும் என்று புரியாத சூழலில் டெல்லிக்கு கிளம்பினார் தலைவர். தாஜ் மான்சிங் ஹோட்டலில் தங்கினார். ஆட்சி அமைக்க முடியுமா என்ற சந்தேகத்தில் மனம் தளர்ந்து போய் இருந்த சோனியா காந்தியை சந்தித்தார். "நான் இருக்கிறேன். நீங்கள் பயப்படாதீர்கள். நாம் ஆட்சி அமைப்பது உறுதி " என்று ஆறுதல் கூறினார். தோழர் ஹர்கிஷன் சுர்ஜீத் மற்றும் தோழர் ஏ.பி. பரதன் ஆகியோரை நேரில் சந்தித்தார். இன்னும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தலைவரின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் அனைவரும் ஒரு கூட்டணியில் இணைவதற்கு ஒப்புக் கொண்டனர்.
அரசு அமைக்க உரிமை கோருவது என்று முடிவு செய்யப்பட்டது. தலைவரை பார்க்க சோனியா காந்தி வந்தார். அமைச்சர் ராஜா, T.R. பாலு, தயாநிதி மாறன் மற்றும் நானும் அங்கு இருந்தோம். யாருமே தங்களை கூட்டணிக்கு சேர்க்காத நிலையில், நாட்டிலேயே முதல் முறையாக காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்ததற்காக தலைவரின் கைகளை எடுத்து தனது கண்களில் வைத்து ஒற்றிக் கொண்டு உணர்ச்சி பெறுக கண்ணீரோடு நன்றி கூறினார் சோனியா காந்தி. புன்முறுவலோடு அந்த நன்றியை ஏற்றுக் கொண்ட தலைவர் புதியதாக உருவாக்கப்பட்ட கூட்டணிக்கு பெயர் ஒன்று வைக்கப்பட வேண்டும் என்று சொன்னார். அந்த புதிய பெயரையும் தலைவரே சொல்ல வேண்டும் என்று சோனியா காந்தி கூறினார். சிறிது நேர அமைதிக்கு பிறகு, என்னை அழைத்து தான் கூற இருக்கும் பெயரை அழகாக கணினியில் டைப் செய்து எடுத்து வரச்சொன்னார். என்ன பெயர் சொல்லப் போகிறார் என்று சோனியா காந்தி உள்பட அனைவரும் ஆவலோடு அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தோம். "ஐக்கிய முற்போக்கு கூட்டணி" என்று சொன்னவர், இந்தப் பெயர் நன்றாக இருக்கிறதா? என்று அமைச்சர் ராஜாவை பார்த்து கேட்டார். …..1/2.
திமுக ஒரு தொகுதி கூட வெல்லாத மாவட்டங்கள :
1,செங்கல்பட்டு -7-0
2,தர்மபுரி -5-0
3,ஈரோடு- 8-0
4,காஞ்சிபுரம் -4-0
5,நாமக்கல் -6-0
6,ராணிப்பேட்டை -4-0
7,சேலம்-11-0
8,திருவள்ளூர் -10-0
9,வேலூர்-5-0
10,சிவகங்கை -4-0
அதிமுக ஒரு தொகுதி கூட வெல்லாத மாவட்டங்கள்:
1,சென்னை-14-0
2, காஞ்சிபுரம் -4-0
3,மதுரை-10-0
4, மயிலாடுதுறை 3-0
5,பெரம்பலூர்-2-0
6, இராமநாதபுரம் -4-0
7, சிவகங்கை -4-0
8, தஞ்சாவூர் -8-0
9,தேனி-4-0
10, தூத்துக்குடி -6-0
11, விருதுநகர் -7-0
தவெக ஒரு தொகுதி கூட வெல்லாத மாவட்டங்கள்:
1,அரியலூர்-2-0
2, கன்யாகுமரி -6-0
3, நாகப்பட்டினம் -3-0
4,தென்காசி-5-0
5, நீலகிரி -3-0
6, திருவாரூர் -4-0
7, விழுப்புரம் -7-0
8, மயிலாடுதுறை -3-0
Approximate final vote share of #tamilnaduassembly
TVK : 34.90% | 108
DMK+: 31.40% | 73
ADMK+: 24.22% | 53
NTK : 4% | 0
Others : 4.94%
(Others Vote-share also include parties like AMMK, can't derive exact Vote-share though)
A four-cornered contest has shown that around 35% vote share is enough to reach a majority (slightly less in this case)
#tamilnadulegislativeassemblyelection2026
காங்கிரஸ்காரன் ஆட்சியில பங்கு கேட்குறான்..
விசிக ல சில தொகுதியில எவனும் வேலை பாக்கலைனு திருமா அண்ணன் சொல்றாரு..
அண்ணியார் பிரேமலதா ரிசல்ட் வரட்டும் பேசலாம்னு சொல்றாங்க..
இப்போ சிபிஎம் காரங்க அங்கீகாரம் தரலைனு சொல்றாங்க..
118 இருந்தால் கம்பீரமா ஆட்சி புரிவோம்..
கூட்டணி கட்சிகளை வைத்து ஆட்சி நடத்தினால் 2031 நமக்கானதாக அமையாது தொங்கு சட்டப்பேரவை நமது கனவிலும் நடத்தக்கூடாது..
கொற்றக் கொடையா? கொள்கையா? கொள்கையை விற்று பிழைக்க வேறு நபர் பாரென்போம்
ஆட்சி வரும் போகும் நிலையல்ல
அய்யா, அண்ணா வகுத்த கொள்கை போகாது வாழும் நிலையாகும்...
- #கலைஞர்
கழகத்திற்கு கூப்பு புதிதல்ல எதிர்கட்சி வரிசையில நாம கம்பீரமா அமர்வோம் அதிகாரம் செலுத்துவோம் @arivalayam@mkstalin@Udhaystalin@DMKITwing
எதிர்க்கட்சிகளே இல்லாத சட்டமன்றம் அமையுமோ என்று யாரும் கலங்க வேண்டாம். திமுகவின் கூட்டணிக் கட்சிகளே அந்த வேலையைத் திறம்படச் செய்யும் அறிகுறிகள் தென்படுகின்றன.