காதல் என்பது இயல்பான உணர்வு.காதலை இயல்பாக மலர்வதற்கு நாம்அனுமதிக்க வேண்டும்.காதலைமறைத்து வைக்கவும்,வெளிப்படுத்தினா லே குற்றம் என்று சொல்லக்கூடிய ஒழுக்கப்பார்வை என பல விஷயங்கள் காதல் இயல்பாக மலர்வதற்கான தடையாக இருக்கிறது.அப்படி இருக்கக்கூடாது.காதல் மலர்வதற்குநாம்அனுமதிக் வேண்டும்
சாதிய ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச்சட்டம் தமிழக அரசு உடனடியாக கொண்டுவர வேண்டும் என்பதை சட்டப்பேரவையில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்!
@CMOTamilnadu#VCK
நீளும்
சாதிய அருவருப்பின்
அட்டூழியம் …
சாதிய பெருமைவாதத்திற்கு எதிரான
நடவடிக்கைகளை அரசு இன்னும் துரிதமானதாகவும் கடுமையானதாகவும் நிச்சயம் செயல்படுத்தியே ஆகவேண்டும்.
@CMOTamilnadu@mkstalin@Udhaystalin
திருநெல்வேலியில் மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் சாதி ஆணவக் கொலை:
உடந்தையாக இருந்த பெற்றோரைக் கைது செய்ய வேண்டும்!
ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக மாநில அரசு உருவாக்க வேண்டும்!
@thirumaofficial#AloorShanavas#VCK
திருமணம் என்பது அன்பை பற்றி அல்லாமல், ஒருவரிடம் இருந்து ஒருவர் எப்படி பணத்தை சுரண்டி பணக்காரர் ஆவது என்பது பற்றி என்ற பார்வை இருக்கும் வரை சிக்கல் தீராது!
ஒரு ஆண் பெண்ணிடம் இருந்து எவ்வளவு வரதட்சணை வாங்கலாம் என்று பார்க்கிறார். ஒரு பெண் எப்படி பணக்காரரை திருமணம் செய்து பணக்காரராக வாழ்வது என்று பார்க்கிறார்.
ஆனால் திருமணம் அன்பை பற்றியது, காதல்தான் திருமணத்திற்கு அடிப்படையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் செலவு உழைப்பு பொறுப்பு இரண்டையும் இருவரும் சமமாக எடுத்து கொள்ள வேண்டும்.
காமராசர் மறைவுக்கு பேரறிஞர் அண்ணா அழுதாரா?
அண்ணா இறப்பு: 1969
காமராசர் இறப்பு : 1975
இவனத்தான் பிடிச்ச அரசியல்வாதின்னு ஒரு ஆஃப்பாயில் எழுதிகிட்டு உக்காந்துகிட்டுருக்கு..
சமூகவலைத்தளங்களில் விஜய்யை கேள்வி கேட்கும் பெண்களை குறி வைத்து அப்யூஸ் பண்ற கேடுகெட்ட கும்பலுக்கு விர்ச்சுவல் வாரியர்ஸ் னு பெயர் வைத்திருக்கான் தவுட்டு தற்குறி @TVKVijayHQ 🤮💦
#ஆபாச_விஜய்_கழகம்
முருக பக்தர் மாநாட்டை நடத்துவது 'இந்து முன்னனி'. இது தேர்தல் அமைப்பல்ல, கலவர அமைப்பு.
இந்த அமைப்பு பாஜகவிற்காக நேரடியாக பிரச்சாரம் செய்தெல்லாம் நாம் கேள்விப்பட்டதில்லை. விநாயகர் சதூர்த்திக்கு கட்டாய வசூல் ரவுடித்தனம் செய்வதை ஒவ்வொரு ஆண்டும் கேட்கிறோம். கோவையில் தன் அமைப்பில் இருந்த 20 வயது சதீஸ் எனும் இளைஞர், இந்துமுன்னனியின் மதவெறி போக்கு பிடிக்காமல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்தார் என்பதற்காக அவரை வீடுபுகுந்து வெட்டிப்படுகொலை செய்தனர். இது சில ஆண்டுகளுக்கு முன் நடந்தது. கடந்த ஆண்டு இந்து முன்னனி பொறுப்பாளர்களுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. அந்த நபர்களும் இந்துமுன்னனி பார்ப்பானுக்காக கொலை செய்துவிட்டு வாழ்நாளை இழந்துவிட்ட சூத்திர சமூகத்தை சேர்ந்தவர்கள்.
இப்படியான புகழ்பெற்ற அமைப்பு நடத்தும் நிகழ்வுக்காக ஒட்டுமொத்த பாஜகவும் உழைக்கிறது. பாஜக தன் கூட்டணி தலைவர்களை அழைத்து வருகிறது. கூட்டணி தலைவர்களை அறிக்கை விட வைக்கிறது. வழக்கை நடத்தி அனுமதி பெற்று கொடுக்கிறது.
இந்து முன்னனிக்கு ஆயிரக்கணக்கிலெல்லாம் தொண்டர்கள் இல்லை, சில நூறு குண்டர்கள் உண்டு. இந்த அமைப்பிற்கென அறியப்பட்ட தலைவர்கள் இல்லை. பெரியார் தி.கவினரிடம் அடிவாங்கி ஓடிய ராமகோபாலன் மட்டுமே, அடிவாங்கியே புகழ் பெற்றவராக இருந்தார். அவரும் இறந்து ஆண்டுகளாகிறது.
இந்நிலையில் பிரம்மாண்டமாக முருகன் மாநாட்டை நடத்த நிதியை பாஜகவை தவிர யார் அளித்திருப்பார்கள். கூட்டம் திரட்டும் பொருட்செலவை கூட்டணி கட்சியை கொண்டு நடத்தும் அழுத்தத்தை பாஜக தானே தந்திருக்க இயலும். பெருமளவிலான வண்டி, மாநாட்டு திடல் வாடகை என இந்த செலவுகளுக்கான நிதி எங்கிருந்து கிடைத்திருக்கும்?
இந்து முன்னனிக்காக பாஜகவின் ஐ.டி விங் இரவுபகலாக இயங்குகிறது. பொய் செய்திகளை பரப்புகிறது. முற்போக்காளர்களை ட்ரோல் செய்கிறது, மிரட்டுகிறது.
அதிகாரத்தை பெறுவதற்கு, தனக்கான சங்கபரிவார் அமைப்புகளை பாஜக வளர்த்தெடுக்கிறது. பெரும்பொருட்செலவு செய்து அந்த அமைப்புகளை விரிவாக்குகிறது. சட்ட பாதுகாப்பு தருகிறது. இவர்கள் மீதான கிரிமினல் வழக்குகளை நடத்துகிறது. தனது ஒட்டுமொத்த அதிகாரத்தையும், எதிர்கட்சி ஆளுகின்ற மாநிலத்திலும் செலுத்துகிறது.
இப்படியான எந்தவிதமான கட்டமைப்பு உதவிகளை திராவிட இயக்கங்களுக்கு, சனநாயக அமைப்புகளுக்கு கடந்த 50 ஆண்டுகளில் திமுக பங்களித்திருக்கிறது என்பதை சிந்திக்கும் காலமிது. எத்தனை பெரியாரிய அமைப்புகள், தோழர்கள் மீதான வழக்குகளை களைந்திருக்கிறது? எத்தனை அமைப்புகளுக்கு நிற்பதற்கான இடத்தையாவது உருவாக்கி கொடுத்து இருக்கிறது? எத்தனை மாநாடுகள் நடத்த தனது கல்லூரி-பள்ளி-திருமண மண்டபங்களை கொடுத்து உதவி இருக்கிறது? திமுகவின் ஐ.டி விங் எத்தனை முற்போக்கு பெரியாரிய நிகழ்வுகளுக்காக பிரச்சாரம் செய்திருக்கிறது? முற்போக்காளர்களை ட்ரோல் செய்யும் சங்கிகளை என்றாவது கையாண்டிருக்கிறார்களா? தனது ஊடகங்களில் அறிமுகம் கொடுத்து வளர்த்திருக்கிறார்களா?
இந்து முன்னனி, இந்து மக்கள் கட்சி, விசுவ இந்து பரிசத் என நீளும் RSSஇன் கிளை அமைப்புகள் வளர்வதை திமுக தடுக்கவும் இல்லை, இந்த வளர்ச்சியை தடுக்க போராடும் சனநாயக அமைப்புகளை வளர்த்துவிட்டதும் இல்லை. தனது அதிகாரத்திற்காக 'பெரியார், திராவிடம்' என அனைத்தையும் பயன்படுத்திக் கொள்வதை தவிர வேறெதையும் செய்ததில்லை.
'பாஜகவை எதிர்த்து போராட்டத்தை நடத்துவதால் அவர்களை வளர்த்துவிடாதீர்கள்' என்று சொல்லியே சங்கிகள் வளர வாய்ப்பினை உருவாக்கி கொடுத்ததே மிச்சம்.
திமுகவினருக்கு கள எதார்த்தம் தெரியாது, அடித்தட்டு மக்களிடம் தொடர்புகள் கிடையாது ஆனால் 'போராடாதே' எனச் சொல்லியே தனது அதிகார நலனை பாதுகாத்து கொள்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் திமுக உதவியால் வளர்ச்சியடைந்த முற்போக்கு இயக்கம் என ஏதேனும் உண்டா?
முற்போக்கு இயக்கங்கள் தமக்கான தனித்துவத்தை கடைபிடிக்கவில்லையெனில், திமுகவின் அதிகார நலனுக்காக பலியிடப்படுவார்கள். பாஜக மற்றும் சங்பரிவார் கும்பலின் கொட்டத்தை அடக்கும் பாசிச எதிர்ப்பு அரசியலில் அதிகாரவர்க்க கட்சிகள் நிழலில் 'கொள்கைசார் இயக்கங்கள்' இயங்க இயலாது என்பதை மே17 இயக்கம் தொடர்ந்து பேசியும் இயங்கியும் வருகிறது.
சுயாதீனமான-போராட்ட குணமுள்ள இயக்க தோழமைகளின் கூட்டியக்கமே பாஜக பாசிசத்தை பின்னுக்கு தள்ளும், இந்துத்துவத்தை வீழ்த்தும். இதை கடந்த 4 ஆண்டுகளாக மே17 இயக்கம் கடைபிடித்து இயங்குகிறது. இவ்வாறான சுயாதீனமான பாசிச எதிர்ப்பு இயக்கம் சாத்தியம் என்பதையே எங்கள் அனுபவங்களும் உணர்த்தியுள்ளன. தொடர்ந்து போராடுவோம்.
படம்: சிபிஎம் கட்சி தோழர்களால் பாடம் கற்பிக்கப்பட்ட சங்கி