@MuthaleefAbdul கருணாநிதி என பெயர் சொல்லி விமர்சித்தவர் வேடசந்தூர் எம்.எல்.ஏ.வாக இருந்த வி.பி.பாலசுப்பிரமணியன் (2-வது முறை எம்.எல்.ஏ.வான போது பி.எச். பாண்டியன் சபாநாயகராக இருந்த போது துணை சபாநாயகர்). கருணாநிதி என சொல்லக் கூடாது என கண்டித்தவர் எம்ஜிஆர்.
மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு
திண்டுக்கல் மாநகரில் பழைய கரூர் சாலையில் ஜிடிஎன் கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இதன் அருகே நீண்ட ஆண்டுகளாக ஆர்.ஆர். நகர் பகுதியில் மக்கள் குடியிருப்பில் ஆதி திராவிடர் நலத்துறையின் கீழான அரசு மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. தற்போது சமூக நீதி விடுதி என அழைக்கப்படுகிறது. இது அமைந்துள்ள குடியிருப்பு பகுதியான பூர்வகுடியான பட்டியல் பிரிவு மக்கள் வசிப்பிடத்துக்குள் உள்ளது. பட்டியல் பிரிவு மக்கள் வசிப்பிடத்துக்குள்தான் பட்டியல் இன மாணவர் விடுதி இருக்க வேண்டுமா? ஜிடிஎன் கலைக் கல்லூரி எதிரே அரசுக்கான பூங்கா, சுகாதார மையம் உள்ளிட்டவை உள்ள இதர பிரிவு மக்கள் வசிக்கும் பொது இடத்தில் சமூக நீதி விடுதி இருக்கக் கூடாதா? என்பது எனக்கு நீண்டநாள் கேள்வி. இதை தங்களது மேலான பார்வைக்கு கொண்டு வருகிறேன். இது தொடர்பாக நான் இதுநாள் வரை பொதுமக்களிடமோ, மாணவர்களிடமோ கருத்துகளை கேட்டது இல்லை. மாண்பமை அமைச்சர் அவர்கள், இது தொடர்பாக ஆய்வு நடத்தி அனைத்து பிரிவு மக்கள் வசிப்பிடத்துக்குள் அரசின் நிலத்தில் சமூக நீதி மாணவர் விடுதியை அமைத்து கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என தெரிவித்து கொள்கிறேன்
மா.ச.மதிவாணன், ஊடகவியலாளர்
@VanniTamizhVCK
மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு,
CCA/Online/118057254/2025R/Vada madurai/Book1/2764/2015சொத்து ஆவணம்22-May-2026செலுத்தப்பட்டதுசமர்பிக்கப்பட்டது
- இது திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சார் பதிவாளர் அலுவலகத்தில் பழைய ஆவணம் கோரி கடந்த 22-ந் தேதி ஆன்லைனில் பணம் செலுத்தப்பட்ட எண். கடந்த காலங்களில் பழைய பத்திர ஆவணங்கள் அதிகபட்சம் 3 நாட்களில் கிடைத்து விடும். ஆனால் கடந்த 22-ந் தேதி பணம் செலுத்தப்பட்டும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. கடந்த காலங்களைப் போலவே தங்கு தடையின்றி பொதுமக்களுக்கான பத்திரம் சார் ஆவணங்களை “விரைந்து” வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.- மதிவாணன், திண்டுக்கல் @logintvk
கூட்டாட்சியும் கூட்டணி ஆட்சியும்
- ரவிக்குமார்
“ தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற குரல் காங்கிரஸ் , பாஜக ஆகிய தேசிய கட்சிகளிடமிருந்து எழும் இந்தச் சூழலில்
மத்தியில் நடக்கும் கூட்டணி ஆட்சியைக் கூட்டாட்சியாக எப்படி விரிவுபடுத்துவது ? அதற்கான முழக்கம் எது ? செயல்திட்டம் எது? என்பதை மாநிலக் கட்சிகள் சிந்திக்க வேண்டும். அதற்கான விவாதத்தை முன்னெடுப்பது அரசியல் செயல்பாட்டாளர்களின் கடமையாகும்.”
https://t.co/ifaHhVCw95