இன்று அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள். கழகத்தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களால் சமத்துவநாள் என்று அறிவிக்கப்பட்ட நன்னாள்.
'என்னைவிட உயந்தவரும் கிடையாது; என்னைவிட தாழ்ந்தவரும் கிடையாது" என்ற அண்ணல் அம்பேத்கரின் வார்த்தைகளை நனவாக்க உழைத்துவரும் இயக்கம் நம் திராவிட முன்னேற்றக்கழகம்.
மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும் அரசியல் சட்டத்தின் அடிப்படைகளை சீரழிக்கத்துடிக்கும் பா.ஜ.க - அதன் அடிமையான அ.தி.மு.கவின் தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தி அம்பேத்கரின் சமத்துவத்தை உறுதிசெய்யும் #திராவிடமாடல் அரசு தொடர உறுதியேற்போம்.
#Ambedkar #EqualityDay #சமத்துவ_நாள்
ஆலந்தூர் தொகுதி வாக்காளர்கள் வழங்கிய அன்பு நிறைந்த வரவேற்பபை ஏற்று கழக வெற்றி வேட்பாளர் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @thamoanbarasan அவர்களுக்கு இன்றைய தினம் வாக்கு சேகரித்தோம்.
பாசிசவாதிகளால் வடக்கிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் ஆபத்தையும்,அதற்கு அடிபணிந்து துணை போகும் அடிமைகளையும் நிராகரிக்க வேண்டுமென எடுத்துரைத்தோம்.
ஐந்தாண்டுகால #திராவிடமாடல் ஆட்சியில் ஆலந்தூர் தொகுதி அடைந்துள்ள வளர்ச்சியை மனதில் கொண்டு அந்த வளர்ச்சி தொடர மீண்டும் உதயசூரியனுக்கே வாக்களிக்க வேண்டும் என ஆலந்தூர் மக்களிடம் கேட்டுக் கொண்டோம்.
வெல்வோம் ஒன்றாக! #DMK4TN #VoteForDMK
கடலூர் மாவட்டம், திட்டக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @cvganesan1 அவர்களுக்கு ஆதரவாக, இன்றைய தினம் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்க, நமக்கான நிதியைத் தர மறுக்கும் பாசிச பா.ஜ.க. அரசின் வஞ்சகத்தையும் அவர்கள் சொல்படி கேட்கும் அடிமைக் கூட்டத்தின் துரோகத்தையும் எடுத்துக்கூறினோம்.
தடைகளையெல்லாம் தகர்த்து, மகத்தான திட்டங்களை நிறைவேற்றி உள்ள மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆட்சி தொடர்ந்திட, கழகத்திற்கு ஆதரவளிக்குமாறு திட்டக்குடி மக்களிடம் கேட்டுக்கொண்டோம்.
தலைவர் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்!
#DMK4TN #VoteForDMK
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், விழுப்புரம் மற்றும் வானூர் தொகுதிகளின் வெற்றி வேட்பாளர்கள், அண்ணன் @DrRLakshmanan அவர்களுக்கும் சகோதரர்
@PRock1244486 அவர்களுக்கும் 'உதயசூரியன்' சின்னத்தில் வாக்குகள் சேகரித்தோம்.
மக்கள் நலத் திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டை No.1 மாநிலமாக மாற்றிய மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான ஆட்சி தொடர்ந்திட, 'உதயசூரியன்' சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டோம்.
தமிழ்நாட்டைச் சூழ வரும் பாசிசவாதிகளையும் அவர்களின் முகமூடிகளையும் வீழ்த்துவோம்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் அண்ணன் @GingeeMasthan அவர்களுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
திராவிட மாடல் அரசின் திட்டங்கள் குறித்தும்,செஞ்சி தொகுதியின் வளர்ச்சிக்கு அண்ணன் மஸ்தான் ஆற்றிய பங்களிப்புகளை எடுத்துரைத்தோம்.
ஒவ்வொரு குடும்பத்தின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு திட்டங்களை நிறைவேற்றி வரும் மாண்புமிகு முதலமைச்சருக்கு தான் எங்கள் வாக்கு என்பதில் உறுதியாக உள்ளனர் செஞ்சி தொகுதி மக்கள்.
தலைவர் தொடரட்டும்,தமிழ்நாடு வெல்லட்டும்!
#DMK4TN #VoteForDMK
கடலூர் மாவட்டம், நெய்வேலி சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் @sabasrajendran அவர்களுக்கு ஆதரவாக, இன்றைய தினம் வாக்கு சேகரித்தோம்.
#திராவிடமாடல் அரசின் திட்டங்களால், தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றங்களை எடுத்துக்கூறி உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு நெய்வேலி மக்களிடம் அன்புடன் கேட்டுக்கொண்டோம்.
டெல்லியின் கட்டளைகளை, தமிழ்நாட்டில் நிறைவேற்ற துடிக்கும் பழைய,புதிய அடிமைகளை வீழ்த்தி #வெல்வோம்_ஒன்றாக!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
நாகை மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் கழகம் சூடப் போகிறது வாகை எனுமளவுக்கு , உற்சாக வரவேற்புடன் நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தோம்.
நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய தொகுதிகளில், திராவிட மாடல் அரசு நிறைவேற்றியுள்ள நல திட்டங்களை, மக்களின் பெரும் ஆரவாரத்திற்கு இடையே எடுத்துரைத்தோம்.
அண்ணன் @jawahirullah_MH, தோழர் லதா தங்கமணி, அண்ணன் @PugazhendiMaa ஆகியோரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டோம்.
தலைவர் தொடரட்டும்! தமிழ்நாட்டு வெல்லட்டும்!
#DMK4TN #VoteForDMK
செங்கல்பட்டு தொகுதி கழக வெற்றி வேட்பாளர் அன்புச் சகோதரர் கார்த்திக் தண்டபாணி அவர்களுக்கு ஆதரவாக இன்றைய தினம் வாக்கு சேகரித்தோம்.
10 ஆண்டுகாலம் இருளில் மூழ்கிய தமிழ்நாட்டிற்கு 2021-ல் விடியல் தந்த மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் செய்த திட்டங்களை எடுத்துக்கூறினோம்.
மக்கள் நலத்திட்டங்கள் மூலம் மகத்தான சாதனைகள் புரிந்த திராவிட மாடல் ஆட்சி மீண்டும் தொடர்ந்திட உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொண்டோம்.
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
#DMK4TN #VoteForDMK
திண்டிவனம் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் வி.சி.க. சார்பில், போட்டியிடும் வெற்றி வேட்பாளர் அண்ணன் @VanniTamizhVCK அவர்களுக்கு ஆதரவாக, பானை சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் செயல்படுத்திய திட்டங்களால், தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டி உரையாற்றினோம்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வெல்லச் செய்து #NDA எனும் பேராபத்திலிருந்து தமிழ்நாட்டைக் காப்போம்.
வெல்வோம் 200, படைப்போம் வரலாறு!
#DMK4TN #VoteForDMK
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதியில் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் அமைச்சர் அண்ணன் @MRKPanneer அவர்களுக்கு ஆதரவாக இன்றைய தினம் வடலூர் வள்ளலார் பேருந்து நிலையம் அருகே பிரச்சாரம் மேற்கொண்டோம்.
#திராவிடமாடல் ஆட்சியில் வேளாண் துறை அமைச்சராக மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிக்காட்டலில் அண்ணன் அவர்கள் செய்த சாதனைகளையும், தொகுதியின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பணிகளையும் எடுத்துக்கூறினோம்.
தமிழ்நாட்டின் அனைத்து துறைகளையும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் திராவிட மாடல் அரசு தொடர உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொண்டோம்.
கடலென திரண்டு வரவேற்பு வழங்கிய குறிஞ்சிப்பாடி வாக்காளர்களுக்கு அன்பும் நன்றியும்!
#VoteForDMK #DMK4TN
மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களே,
"நெல்லுக்குத் தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையால் விளைச்சல் பெருகிக் கொண்டே போகிறது. எனவே, இந்த ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும்" எனத் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளருக்குத் தங்களின் அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் மிகத் தெளிவாகவே உள்ளது.
கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை. அப்படி, பேசவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை.
எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், தற்போது மாநில அரசால் தரப்படும் ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்யுமாறும், நெல்லுக்கு இத்தகைய ஊக்கத்தொகை வழங்குவதை நிறுவத்துவது தொடர்பாகப் பரிசீலனை செய்யவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். தங்களுடைய இந்தப் பதிவில், "குறைந்தபட்ச ஆதார விலையைத் தாண்டி ஊக்கத்தொகை வழங்குவது மாநில அரசின் முடிவு எனவும், அதனை யாரும் பறிக்கவில்லை" என்றும் கூறியிருக்கிறீர்கள்.
தங்களது கூற்று உண்மைதானென்றால், அந்தக் கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா?
Hon'ble Tmt. @NSitharaman,
In the letter your Ministry sent to the Chief Secretary of Tamil Nadu, it is clearly stated that since the State’s additional bonus for paddy has led to bumper production, the State government should consider discontinuing the bonus.
I have not stated anything that is not present in that letter. Nor is there any need for me to.
While you have stated in your tweet that it is up to the State Governments to consider bonus above MSP to paddy farmers and nobody has taken away such rights, the letter sent to us clearly asked us - to review the existing bonus policy of the State Government and consider discontinuing the bonus on paddy.
If your current claim is true, will you place that letter in the public domain?