தலித் மக்களின் விடுதலைக்காகவும், சமூக சமத்துவத்திற்காகவும், கல்வி, அரசியல் உரிமை மற்றும் மனித மாண்பிற்காகவும், தலித் மக்களின் உரிமைக் குரலாக வாழ்நாள் முழுவதும் போராடிய மாவீரன் அய்யன்காளியின் பிறந்தநாளில், அவரது போராட்டத்தையும் சமத்துவக் கனவையும் நினைவுகூர்வோம். 💐 @beemji
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம் இயற்றப்படும் என தோழர் மாண்புமிகு சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அவர்கள் தவெக அரசின் சார்பாக அறிவித்திருக்கிறார் . இவ்வறிவிப்பை வரவேற்கிறேன். எனது மகிழ்ச்சியை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்கிறேன். இதற்கு ஒப்புதல் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன்!
கண்ணகி முருகேசன் தொடக்கம் அல்ல தையூர் பிரவீன் முடிவும் அல்ல. ஒவ்வொரு ஆணவக் கொலை நடக்கும் போதும் என் மனம் வெட்டுப்பட்ட சங்கர் முன் நடுத்தெருவில் நான் நின்றபோது இருந்த மனநிலை எனக்கு வந்து சேர்ந்துவிடும். பதற்றப்படுவேன். தவிப்பேன். மனம் கனக்கும். தூங்காமல் கிடந்திருக்கிறேன். கொலையுண்ட களத்திற்குப் போய் பாதிக்கப்பட்டவர்களோடு என்னை இணைத்துக் கொள்வேன். அப்படி நடக்கிற ஒவ்வொரு முறையும் தனிச்சட்டம் கோரியிருக்கிறேன். சங்கரின் ஒவ்வொரு நினைவு நாளிலும் இந்தக் கோரிக்கைக்காகவே மக்கள் இயக்கங்களை மாநாடாக, கருத்தரங்குகளாக, பொதுக் கூட்டங்களாக முன்னெடுத்து வந்திருக்கிறேன். கடைசியாக சங்கர் நினைவேந்தலில் ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்டவர்களை முடிந்தவரை ஒருங்கிணைத்து அவர்கள் வலிகளை மக்கள் முன் பேசச் செய்தேன். ஒவ்வொருவரும் அழுதபடியேதான் பேசினார்கள். அந்த நிலையிலும் அவர்கள் தனிச்சட்டம் வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்கள். ஒரு கொலை நடக்கும் போது இனியொரு ஆணவக் கொலை வரை காத்திருப்பதா? தனிச்சட்டம் இயற்ற ஏன் தயங்குகிறார்கள்? இதிலும் அரசியல் கணக்கு வேலை செய்கிறதா? என்றெல்லாம் கோபமுற்றிருக்கிறேன். இப்போது மனதுக்கு ஒரு ஆறுதலும் ஊக்கமும் கிட்டியிருக்கிறது. இதற்காக முதலமைச்சரை... தவெக அரசை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
திமுக ஆட்சியில் நிதிபதி கே.என்.பாட்ஷா தலைமையில் இதற்கென ஒரு ஆணையம் அமைத்தார் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ஆணையத்தின் முன் நானும் சாட்சியமளித்திருக்கிறேன். எவிடென்ஸ் கதிர் அவர்கள் பாதிக்கப்பட்டோரை நேரில் அழைத்துக் கொண்டு போய் அவர்கள் குரலைக் கேட்கச் செய்தார். நானும் உடன் இருந்திருக்கிறேன். இன்று அமைச்சர் வன்னியரசு அவர்கள் ஆணையத்தின் பரிந்துரைக்கான கால நீட்டிப்பு கொடுக்கப்பட்டுள்ளதைத் தெரிவித்து... பரிந்துரை வந்தவுடன் தனிச்சட்டம் இயற்றப்படும் என அறிவித்துள்ளார். திமுக அரசு அமைத்த ஆணையமென்றாலும் அதைத் தொடரச் செய்து அதன் தொடர்ச்சியாக தனிச்சட்டம் கொண்டு வர முடிவெடுத்தது தவெக அரசின் முதலமைச்சரின் நல்ல நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, பெரியாரிய ,அம்பேத்கரிய , மார்க்சிய, தமிழ்த் தேசிய இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து போராடி வந்திருக்கின்றன. எல்லோரும் இதை வரவேற்கிறார்கள். பாராட்டுகிறார்கள்.
தவெக அரசு... முதல்வர் ச.ஜோசப் விஜய் அவர்கள் இதில் உறுதியாக இருந்து நிறைவேற்றித் தர வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். சாதி சமூகத்தின் சாபக்கேடு! சாதி மத மறுப்புத் திருமணங்கள் பெருகச் செய்வதே மெய்யான தேச ஒற்றுமைக்கு வழிவகுக்கும். தவெக அரசு இதற்குச் சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளது.
ஆணவக் கொலை மட்டுமல்ல ஆணவக் குற்றங்களும் தடுக்கப்பட வேண்டும். கொலையும் குற்றம்தான். குற்றங்களைத் தடுக்காமல் கொலைகளைத் தடுக்க முடியாது. ஆணவக் கொலைகள் எனக் குறிப்பிட்டிருந்தாலும் தனிச்சட்டம் குற்றங்களுக்கு எதிராகவும் அமையும் என்பதில் ஐயமில்லை. அமைச்சர் வன்னியரசு அவர்கள் தொடர்ந்து இக்களத்தில் ரத்தமும் சதையுமாக நின்றவர். போராடியவர்.
ஆணவக் குற்றங்களுக்கு எதிரான தனிச்சட்டம் இயற்றுகிற அறிவிப்பைச் செய்த... அதற்காக முனைப்போடு முயற்சிகள்எடுத்த மாண்புமிகு
சமூகநீதித்துறை அமைச்சர் தோழர் வன்னியரசு அவர்களுக்கும் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கும் மீண்டும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன். மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன்.
அன்புடன்
கௌசல்யா
சங்கர் சமூகநீதி அறக்கட்டளை
சட்டப்பேரவையில் தனது பதிலுரையின்போது, தனது தேர்தல் வெற்றிக்குத் துணைநின்ற மரியாதைக்குரிய திமுக தலைவர், சட்டமன்ற மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழகத்தின் அனைத்து முன்னணியினரையும் நன்றியுடன் நினைவுகூர்ந்த, மாண்புமிகு சமூகநீதித்துறை அமைச்சர் தம்பி திரு. @VanniTamizhVCK அவர்கள், மறைந்த என் தந்தையார் திரு. வே. தங்கப்பாண்டியன் அவர்களின் சமூகநீதிப் பணிகளையும், சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அவர் முன்னெடுத்த உறுதியான போராட்டங்களையும் பேரவையில் பதிவு செய்ததற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
@arivalayam
"யோவ் #தவெக.. ! எங்க இருந்துயா இது போன்று எம்எல்ஏ கேண்டிடேட் தேர்வு செஞ்சீங்க...???"
குடியாத்தம் தொகுதியின் TVK MLA சிந்து அவர்களுடைய பேச்சும், தமிழ் உச்சரிப்பும் மெய்சிலிர்க்க வைக்கிறது.
"எனக்கு வரும் கடிதங்கள் முதற்கொண்டு தனி என்று எழுதப்படுவதன் மூலம் ஏதோ தனிமைப்படுத்துவதை போல் உள்ளது.. எனவே தனி என்ற சொல்லை நீக்கிவிட்டு உரிமை, சிறப்பு என்பதாக மாற்றலாம்" என்று தோழர் சிந்து அவர்கள் கூறியது எப்பேர்பட்ட தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய கோரிக்கை...!
தமிழக வெற்றிக் கழகம் தோழர் சிந்து அவர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். சிறப்பானதொரு களப் பணியாளராக நிச்சியம் வலம் வருவார்..!
மகாத்மா அய்யன்காளியின் பிறந்தநாளை முன்னிட்டு, கேரளாவில் அவரது நினைவிடத்தில் நமது நிறுவனத் தலைவர் @beemji அவர்கள் மரியாதை செலுத்தினார்.💐
சமத்துவத்திற்காகப் போராடிய மகாத்மா அய்யன்காளியை நினைவுகூரும் இன்றைய நாள், வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக அமைந்தது.❤️#JaiBhim
தேர்தல் களத்தில் தனது வெற்றிக்காக பங்களித்த கழகத்தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்ற குழுத்தலைவர் உள்ளிட்ட அனைத்துக் கழக முன்னணியினரின் அரும்பணிகளுக்கு சட்டப்பேரவையில் தனது பதிலுரையில் நன்றி தெரிவித்ததுடன், மறைந்த என் தந்தையார் திரு. வே. தங்கப்பாண்டியன் அவர்களது சமூகநீதிப் பணிகளையும் சாதிய கொடுமைகளுக்கு எதிராக அவரது பங்களிப்புகளையும் எடுத்துரைத்த மாண்புமிகு சமூகநீதித்துறை அமைச்சர், மதிப்பிற்குரிய அண்ணன் திரு. வன்னி அரசு அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@VanniTamizhVCK
For your Friday Night 🕺💃
Here's a glimpse of what we call...
'The Raaja Trance' 💥💥
Your weekend is gonna get better !
#Muthumani music video from 12 pm tomorrow, Aug 29th.
Maestro @ilaiyaraaja sir 🔥🔥
#RaajaTrance#Dorothy
சமூக நீதித்துறையின் 2026-2027ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை மற்றும் துறை சார்ந்த அறிவிப்புகளை சட்டமன்றப் பேரவையில் வெளியிட்டதை தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
@CMOTamilnadu@TNDIPRNEWS@ADWDtamilnadu@TN_Tribal_WD@tahdco
'பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படும்' என்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மண்ணின் மைந்தர்களை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்று (25.08.26) பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் தலைமைச் செயலகத்தில் சந்தித்து, விமான நிலைய திட்டத்துக்கு எதிரான போராட்ட களத்தில் எமது தலைவர் எழுச்சித்தமிழர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களும், தலைவரின் வழிகாட்டுதலில் நாமும் நேரில் பங்கெடுத்து மக்களுக்கு துணை நின்றதை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்து நன்றி தெரிவித்தனர்.
@CMOTamilnadu@thirumaofficial
எங்களைப் போன்றவர்கள் பலமுறை வற்புறுத்தியதற்கு பிறகும் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்ய திரு. மச்சேந்திர நாதன் ஐஏஎஸ் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை திமுக ஆட்சிக்காலம் முழுவதும் வெளியிடாமல் மூடி மறைத்தது ஏன்?
இந்த விஷயத்தில் திமுக வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை. அந்த அறிக்கையை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு ஏன் ஏற்பட்டது என்பதை வெளியிடத் தயாரா?
ஆட்சிக்கு வரும்முன் போராட்டக்காரர்களை அழைத்து போட்டோ எடுத்துக் கொண்ட @TVKVijayHQ க்கு இப்போது 6 நாளாக போராடும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் கண்ணுக்கு தெரியவில்லையா? தொழிலாளர் விரோத #தவெக அரசே #தூய்மைப்_பணியாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்று..
"The bonfire of Manusmriti was quite intentional. We made a bonfire of it because we view it as a symbol of injustice under which we have been crushed across centuries." — Dr. B.R. Ambedkar (25 December 1927)
பரந்தூர் விமான நிலையத்தின் மொத்த பரப்பளவு 5,746 ஏக்கர்கள். அதில் இதுவரை 1,700 ஏக்கர் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இது 90% ஆகுமா என்பதனை கற்றறிந்தவர்கள் சொல்லவேண்டும்.
@VijayFansTrends#Paranthur