தமிழ்நாட்டில் தீப ஒளி திருநாளில் காவவர் உள்பட 10 பேர் படுகொலை: சட்டம் - ஒழுங்கை காப்பதில் சமரசமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தீபஒளி திருநாளில் சென்னை முதல் தேனி வரை பல்வேறு நிகழ்வுகளில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் உள்பட 10 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியிருப்பது கண்டிக்கத்தக்கது.
சென்னை வியாசர்பாடியில் முன்பகை காரணமாக தனுஷ் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூரில் மேகலா என்ற இளம்பெண்ணும், திருச்சியில் மூவரும் கொல்லப்பட்டுள்ளனர். கடலூர், சிவகங்கை மாவட்டங்களில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய மூவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். பெரம்பலூரில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தேனி மாவட்டம் சாலையை மறித்து பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்தவர்களை தட்டிக் கேட்ட காவல்துறை சிறப்பு உதவியாளர் செந்தில்குமாரை, மதுபோதையில் இருந்த இளைஞர்கள் அடித்துக் கொன்றுள்ளனர்
தீப ஒளி திருநாளில் நடைபெற்ற பெரும்பாலான குற்றங்களுக்கு மது தான் காரணம் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு தான் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் வரை திருவிழா காலங்களில் ஒரு வாரத்திற்கு மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழக அரசு அதை கண்டு கொள்ளாததன் விளைவு தான் இந்த படுகொலைகள் ஆகும். ஒரே நாளில் நடந்த 10 கொலைகளுக்கும் ஏதோ ஒரு வகையில் முன்பகை தான் காரணம் ஆகும். இத்தகைய நிகழ்வுகளை காவல்துறை முன்கூட்டியே கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் சட்டம் - ஒழுங்கு தான் மிகவும் முக்கியமானதாகும். இதே நிலை நீடித்தால் தமிழ்நாடு குறித்து வெளி உலகில் தவறான பெயர் ஏற்பட்டு விடும். இதைத் தடுக்க தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் விஷயத்தில் தமிழக அரசும், காவல்துறையும் சமரசமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்னொருபுறம், திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதியில் குடிநீர் மற்றும் குப்பை பிரச்சினைகள் குறித்து புகார் அளிப்பதற்காக வந்த கார்த்திக் குமார் என்பவரை அத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும், பேரவைத் துணைத் தலைவருமான ரவிசங்கர் தாக்கி விரட்டியடிக்கும் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு குறித்தும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். @CMOTamilnadu
கர்நாடகத்தில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடும் கர்நாடக அரசை கண்டித்தும், இத்திட்டத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தியும், பிலிகுண்டுவில் இருந்து பூம்புகார் வரை நடைபெறும் நான்கு நாட்கள் பயணத்தில், சேலத்தில் துண்டு பிரசுரங்கள் வழங்கி, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி உரையாற்றிய போது.
#காவிரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #MekadatuRally #CauveryRights #TamilNadu #PMK
முதலமைச்சர் விஜய் @CMOTamilnadu அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து!
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் அவர்களின் 52-ஆம் பிறந்தநாளில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து, பொதுவாழ்க்கையில் மக்களுக்கு பணியாற்ற வாழ்த்துகிறேன்.
@TVKVijayHQ
திரைப்படத் தயாரிப்பாளர் கே.இராஜன் மறைவுக்கு இரங்கல்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகருமான கே.ராஜன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
தமிழ்த் திரையுலகில் சிறிய முதலீட்டில் திரைப்படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்களின் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்கப் போராடியவர். பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய சமூகநீதிப் போராட்டங்களில் பங்கேற்று ஆதரவளித்தவர்.
தயாரிப்பாளர் இராஜன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் பாமகவின் வாழ்த்துகள்: சமூகநீதி, நல்லாட்சிப் பாதையில் புதிய அரசு நடை போடட்டும்!
தமிழ்நாட்டின் 12-ஆம் முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் அவர்களும், அவருடன் 9 பேர் கொண்ட அமைச்சரவையும் இன்று பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறது. புதிய முதலமைச்சருக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்திருப்பது எந்தக் கட்சியாக இருந்தாலும், ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் நோக்கமும், எதிர்பார்ப்பும் ஒன்று தான். எந்த வகையான போதையும் இல்லாத, பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் வாழக்கூடிய, இளைஞர்களுக்கு தரமான கல்வியும், வேலைவாய்ப்பும் வழங்கக்கூடிய, உழவர்களின் வருமானத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தக் கூடிய, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தக் கூடிய, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடிய, இவை அனைத்துக்கும் மேலாக சமூகநீதியை பாதுகாக்கக் கூடிய அரசு அமைய வேண்டும் என்பது தான் அது. இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற புதிய அரசு தீவிரமாக முயல வேண்டும்.
த.வெ.கவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முதல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான ஆணையில் புதிய முதலமைச்சர் முதல் கையெழுத்திட வேண்டும்; மற்ற வாக்குறுதிகளையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும். மக்கள் நலன் காப்பதற்கான விஜய் அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அதன் முழு ஆதரவை அளிக்கும்; அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவதிலும், அந்தத் தவறை திருத்தச் செய்வதிலும் பொறுப்புள்ள, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக பா.ம.க. செயல்படும்.
தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள த.வெ.க.வின் தலைவர் விஜய் அவர்களுக்கு
வாழ்த்து!
தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. இதற்காக தவெக தலைவர் விஜய் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@TVKVijayHQ
உங்களுக்காக நான் இருக்கிறேன்... எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை. நாம் அனைவரும் இணைந்து 10.5 வன்னியர் இட ஒதுக்கீட்டு பெறுவோம்
பாமக தலைவர் மருத்துவர்அண்ணன்
அன்புமணிஇராமதாஸ் அவர்கள்
#வன்னியர்இடஒதுக்கீடு#VanniyarReservation
தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலை நிறுத்துவதற்காக, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியதன் தேவை குறித்தும், அதனடிப்படையில் அனைத்து சமூகங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தும் பரப்புரைப் பாடல் 👏👏👏
#VanniyarReservation#வன்னியர்இடஒதுக்கீடு
திமுக ஆட்சியில் அருந்ததியர்களுக்கு ஆணையம் அமைத்து 352 நாட்களில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
ஆனால், #வன்னியர்இடஒதுக்கீடு ஆணையம் அமைத்து 1208 நாட்கள் ஆன பின்னரும், இன்னமும் அறிக்கை கூட பெறவில்லை!
வன்னியர்களுக்கு துரோகம் செய்யும் திமுகவை வீழ்த்துவோம்!
#VanniyarReservation
மாநிலங்களுக்கான வரி வருவாய்ப் பகிர்வில் ரூ.35,000 கோடியை குறைக்கத் துடிப்பதா? மாநிலங்களுக்கான பங்கை 50% உயர்த்த வேண்டும்!
மத்திய அரசின் வரி வருவாய் மாநிலங்களுக்கு வழங்கப்படும் பங்கின் அளவை இப்போதுள்ள 41 விழுக்காட்டில் இருந்து 40% ஆக குறைக்க வேண்டும் என்று 16-ஆம் நிதி ஆணையத்தைக் கேட்டுக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மத்திய அரசின் முடிவால் மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியின் அளவு ரூ.35,000 கோடிக்கும் அதிகமாக குறையக்கூடும். மாநிலங்களின் நலன்களுக்கு எதிரான மத்திய இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.
மார்ச் மாத இறுதியில் நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும், அதன்பின் மத்திய அரசின் முடிவு அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-ஆம் நிதி ஆணையத்திற்கு தெரிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மத்திய அரசின் வரு வருவாயில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் பங்கு போதுமானதல்ல என்று கூறப்படும் நிலையில், மத்திய அரசின் இந்த முடிவு மாநிலங்களின் நிதி நெருக்கடியை மேலும் அதிகரிக்கும்.
மத்திய அரசுக்கு மிக அதிகமாக வரி செலுத்தும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். ஆனால், மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் பங்கு மிகவும் குறைவாகும். எடுத்துக்காட்டாக, மத்திய அரசுக்கு வரிகள் மூலம் ரூ.100 வருமானம் கிடைத்தால், அதில் இதுவரை 41 ரூபாய் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தது. அவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் 41 ரூபாயில் தமிழகத்திற்கு வெறும் 4.09% மட்டுமே, அதாவது ரூ.1.64 மட்டுமே கிடைக்கிறது. மத்திய அரசின் வரி வருவாய்க்கு தமிழ்நாடு ரூ.7 முதல் 8 வரை பங்களிக்கும் நிலையில், அதில் நான்கு அல்லது ஐந்தில் ஒரு பங்கு மட்டும் தான் தமிழகத்திற்கு கிடைக்கிறது.
வரி வருவாய் பகிர்வில் மாநிலங்களின் பங்கு 40% ஆக குறைக்கப்பட்டால், இப்போது தமிழகத்திற்கு கிடைத்து வரும் ரூ.1.64 இனி ரூ.1.60 ஆக குறைந்து விடும். இது தமிழகத்தை கடுமையாக பாதிக்கும். மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கான பங்கை இப்போதுள்ள 41 விழுக்காட்டில் இருந்து 50% ஆக உயர்த்த வேண்டும் என்று பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளும், பல்வேறு மாநில அரசுகளும் வலியுறுத்தி வரும் நிலையில் அதை 40% ஆக குறைக்க மத்திய அரசு முயல்வது நியாயமல்ல.
மத்திய அரசுக்கான வருமானம் முழுவதும் மாநிலங்களில் இருந்து தான் கிடைக்கிறது. அவ்வாறு இருக்கும் போது மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய பங்கை குறைக்கக் கூடாது. எனவே, வரிப் பகிர்வில் மாநிலங்களுக்கான பங்கை 40% ஆக குறைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். ஒருவேளை மத்திய அரசு அத்தகைய பரிந்துரையை அளித்தாலும் அதை நிதி ஆணையம் ஏற்கக் கூடாது. மாறாக, மாநிலங்களுக்கான பங்கை 50% ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
@PMOIndia@nsitharaman
ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் சிங்களப் படையினரால் கைது: முடியாமல் தொடரும் அத்துமீறலுக்கு முடிவு கட்டவேண்டும்!
வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் அவர்கள் மீன்பிடிக்கச் சென்ற 5 விசைப்படகுகள் சிங்கள கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டு மீனவர்கள் வங்கக் கடலில் எல்லைத் தாண்டி மீன்பிடிக்கும் விவகாரத்தை வாழ்வாதாரம் சார்ந்த மனிதநேய பிரச்சினையாகத்தான் பார்க்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 29ஆம் தேதி நடைபெற்ற இந்தியா - இலங்கை மீனவர் நலனுக்கான கூட்டுப்பணிக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அண்மையில் இந்தியா வந்த இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் நடத்திய பேச்சுக்களின் போது இதே நிலைப்பாடுதான் எடுக்கப்பட்டது. ஆனால், சிங்கள கடற்படையினர் இவற்றை மதிக்காமல், தமிழ்நாட்டு மீனவர்கள் ஏதோ எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டதைப் போன்று கைது செய்து சிறையில் அடைப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்படும் சவால் ஆகும்.
தமிழக மீனவர்கள் மீதான சிங்களப் படையினரின் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கையை தடுத்து நிறுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் தமது கடமை முடிந்துவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். இந்த நிலைப்பாடு தவறு. மத்திய அரசை வலியுறுத்தி மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வுகாண தமிழக அரசுதான் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மத்திய அரசும் இந்த விவகாரத்தை இந்தியாவின் இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதி, இலங்கை அரசை கடுமையாக எச்சரிக்க வேண்டும். இந்தியா - இலங்கை மீனவர் நலனுக்கான கூட்டுப் பணிக்குழு கூட்டத்தை உடனடியாக மீண்டும் கூட்டி அதில் தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அவசர, அவசிய தேவை குறித்த அனைத்து சமுதாய தலைவர்கள், அமைப்புகள், கட்சிகள் கலந்தாய்வு தற்போது நடைபெறுகிறது.
மு.க. ஸ்டாலினின் அப்பட்டமான சமூகநீதித் துரோக பொய்களை இந்த நிகழ்வு அம்பலமாக்குகிறது.
'சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை' மற்றும் 'பிகார் மாநில சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையிலான இடஒதுக்கீட்டை நீதிமன்றம் தடைசெய்தது' என்கிற அயோக்கியத்தனமான கட்டுக்கதைகளை இந்த கருத்தரங்கம் தகர்க்கிறது.
#CasteCensus #socialjustice
சென்னை - அக்கார்டு ஹோட்டலில் நடைபெற்ற "தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அவசர, அவசிய தேவைகள்" குறித்து கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்ற போது.
இந்நிகழ்ச்சியில் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி MLA, இந்திய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் ரவி பச்சமுத்து, புதிய நீதிக்கட்சி பொதுச் செயலாளர் கோ.சமரசம் Ex.M.L.A ,
தென்னிந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனத் தலைவர் கே.சி.திருமாறன் ஜி, கொங்கு மக்கள் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் சி.ஆறுமுகம், தமிழர் தேசம் கட்சி தலைவர் கே.கே.எஸ்.செல்வக்குமார், வெள்ளாளர் முன்னேற்ற கழகம் தலைவர் சரவணன், தமிழ்நாடு நாடார் சங்கம் தலைவர் முத்து ரமேஷ், யாதவர் மகா சபை செயலாளர் சேது மாதவன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இணை பொதுச்செயலாளர் தமிழரசன், நாடார் மகாஜன சங்கம் துணை பொதுச்செயலாளர் மாரிமுத்து, வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் கே.பாலு அவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.