எப்போதும் நம் மனது அலை பாய்ந்து கொண்டே தான் இருக்கும்.. அது அமைதியாய் இருக்கும் நேரம் மிக உன்னதமானது.. அப்போது மனதை ஒரு முகப்படுத்தி, இதுவரை நடந்த எல்லா நிகழ்வுகளும் அது கெட்டதாகவே இருந்தாலும், அது நல்லதிற்காகத்தான் நடந்தது என்று அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.. யாா் மீதும் கோபம் கொள்ளாமல், அவ்வப்போது புத்தி சறுக்கினாலும், எல்லாரிடமும் ஸ்நேகமாய் அன்பாய் இருக்க முயற்சி செய்ய வேண்டும்..
காவிரியின் கதை..
- செந்தில் ஆறுமுகம்
பகுதி 1:
1892 மற்றும் 1924 ஒப்பந்தம்:
FLASH BACK : 136 ஆண்டுகளுக்கு முன்பு...
1890களில் மைசூர் சமஸ்தான அரசு தங்களுடைய பாசனப் பகுதிகளை விரிவாக்க சில முயற்சிகள் எடுத்தபோது அது தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட மக்களுக்கு, பாசனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சென்னை மாகாணம் எதிர்ப்பு தெரிவித்தது. இரு அரசுகளுக்கும் இடையே இரண்டாண்டு பேச்சுவார்த்தை நடந்தது. 1892ல் ஒரு ஒப்பந்தம் உருவானது. இதன்படி மைசூர் அரசு, பாசனத்தை விரிவாக்க விரும்பினால் அதற்கு சென்னை மாகாண அரசின் ஒப்புதலைப் பெறவேண்டும். இந்த விரிவாக்கத்தால், தங்கள் பகுதிக்குப் பாதிப்பு இல்லையெனில் சென்னை அரசு அனுமதி தரவேண்டும். இதுதான் ஒப்பந்தம்.
20 ஆண்டுகள் உருண்டோடின. 1910 வாக்கில் மைசூர் மன்னரான கிருஷ்ணராஜ உடையார் கண்ணம்பாடி என்ற கிராமத்தில் ஒரு அணை(கிருஷ்ணராஜ சாகர் - KRS Dam) கட்டத் திட்டமிட்டார்.சமஸ்தான திவானும், புகழ்பெற்ற பொறியாளரு மான விஸ்வேஸ்வரய்யா இதற்கான தொழில்நுட்ப ஆலோசனை வழங்கினார். இதற்கு சென்னை அரசு எதிர்ப்பு தெரிவித்தது. 1892 ஒப்பந்த விதிமுறைகளின் படி இரு அரசுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை 8 ஆண்டுகளுக்கு மேல் நடந்தது. 1924 ஒப்பந்தம் உருவானது. இதன் அடிப்படையில், கண்ணம்பாடி அணைகட்ட அனுமதி வழங்குவது என்றும்; அதேபோல் சேலம் அருகே மேட்டூர் அணை கட்ட சென்னை அரசுக்கு அனுமதி அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும், இரு அரசுகளும் தங்களுடைய பாசனப்பரப்பை அப்போதைய நிலையிலிருந்து அதிகரிக்கக் கூடாது என்றும் முடிவானது. ( அப்போது மைசூர் அரசின் பாசனப் பரப்பு 1,10,000 ஏக்கர். சென்னை அரசின் பாசனப் பரப்பு 3,01,000 ஏக்கர்) இந்த ஒப்பந்தம் 50 ஆண்டுகள் செல்லுபடியாகும் என்றும், அதற்குப் பிறகு அப்போதைய நிலவரங்கள், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் ஒப்பந்தத்தை மறுவரையறை செய்துகொள்ளலாம் என்று ஒத்துக்கொள்ளப்பட்டது.
நான் என்னுடைய எண்ணங்களையும், வாழ்க்கை அனுபவங்களையும் மட்டுமே சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்கிறேன். எனது பயணத்தில் வந்த வில்லன்களை தவிர வேறு எவரையும் குறிப்பிட்டு அல்லது குறை கூறி பதிவிடுவது என் நோக்கம் அல்ல.
வாழ்க்கையில் நான் சந்தித்த வெற்றிகள், தோல்விகள், அனுபவங்கள் மற்றும் தினமும் பல்வேறு துறைகளில் உள்ளவர்களுடன் நடக்கும் கலந்துரையாடல்கள் எனக்கு சில சிந்தனைகளை உருவாக்குகின்றன. அந்த எண்ணங்கள் மனதில் தோன்றும் போது அவற்றை என் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
என் பதிவுகள் யாரையும் தனிப்பட்ட முறையில் குறிக்கவில்லை. அது என் இயல்பும் இல்லை. என் மனதில் தோன்றும் கருத்துகளை மரியாதையுடனும் நேர்மையுடனும் பகிர்வதே என் நோக்கம்.
#ksrpost
19-6-2026
பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதலமைச்சர் விஜய் என்ற செய்தியைப் பார்த்து விட்டு ஊப்பீக்கள் நக்கலடிக்கின்றனர்.
அதானே.. உண்மையான விளையாட்டு வீரர்களைப் பாராட்டினால் ஊப்பீஸ்களுக்கு எப்படிப் பிடிக்கும்?!
திமுகவுடனான எங்கள் உறவு தேர்தலைத் தாண்டிய கொள்கை உறவு. தமிழகத்தின் நலனைக் காக்க தொடர்ந்து திமுகவுடன் இணைந்து களமாடுவோம் - மனித நேய மக்கள் கட்சி ஜவாகிருல்லா
வேற வழி?! 😂
மருத்துவ சிகிச்சை நிதி உதவிக் கோரிக்கை.
கோவையில் கூரியர் நிறுவனமொன்றில் பணி புரியும் முகமது யாசர் என்ற 29 வயது இளைஞர். அவருக்கு Hippocampal tumour giloma என்ற நோய் கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார்.
மூளையின் நினைவாற்றல் மையமான 'ஹிப்போகாம்பஸ்' பகுதியில் உருவாகும் ஒரு வகையான புற்றுநோய் கட்டி இது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நரம்பு மண்டலத்திற்கு ஆதரவளிக்கும் கிளைல் செல்களிலிருந்து வளர்கிறது. இது பொதுவாக மூளை நரம்பு செல்களை பாதிக்குமாம்.
குடும்பத்தை அவருடைய சொற்ப சம்பளத்தில் காப்பாற்றி வருகிறார். மருத்துவக் காப்பீடு இல்லை. இந்த நோய் குறித்த ஆரம்பக் கட்ட சிகிச்சைகளுக்கு அவருடைய முழுச் சேமிப்பும், நண்பர்களுடைய நிதி உதவியும் பெருமளவில் செலவாகி விட்டதாம்.
இப்போது கோவை ராயல் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இப்போது அடுத்தக் கட்ட சிகிச்சைக்காக சுமார் நான்கரை லட்சம் ரூபாய்க்கு மேல் தேவைப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனக்கு இந்த இளைஞரை நேரடிப் பழக்கம் இல்லை. ஆனால் அவருடைய உறவினரில் ஒருவர் எனக்குப் பல்லாண்டுப் பழக்கம்.
சிரமப்படும் குடும்பத்திலிருந்து ஒரு இளைஞரின் கோரிக்கைதான்.
உதவ நினைப்போர் அறியத்தந்தால் மருத்துவமனையின் வங்கிக் கணக்கை அனுப்பி வைக்கிறேன். நேரடியாக வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கலாம்.
அல்லது அடுத்த ட்வீட்டில் அவருடைய நண்பரொருவர் உருவாக்கியுள்ள Milaap Fundraiser சுட்டியிலும் சென்று தொகை செலுத்தலாம். (நேரடியாக மருத்துவமனை வங்கிக் கணக்குக்கு அனுப்புவதைத்தான் நான் எப்போதும் பரிந்துரைப்பது வழக்கம். ஆனாலும் பலரும் அதில் உள்ள சில சிக்கல்களைக் கருத்தில் கொண்டு இது போன்ற fund raiser சுட்டிகளையும் கேட்பதால் இதைத் தந்துள்ளேன்).
உங்களின் சிறு உதவித் தொகை கூட அந்தக் குடும்பத்திற்குப் பேருதவியாக இருக்கும்.
தொகை அனுப்பியவர்கள் அவர்களுடைய விபரங்களை பின்னூட்டத்திலோ அல்லது தனித்தகவலிலோ அறியத் தந்தால், இந்தப் பதிவிலேயே சேர்க்கிறேன். உங்கள் பெயரைப் பொதுவில் பகிரலாமா என்பதையும் கூறி விடவும்.
முன் கூட்டிய நன்றி.
அண்ணே சும்மா இருண்ணே...
உங்க ஆட்சியில அரசு திட்ட கட்டிடங்களுக்கு எல்லாம் பார்ப்பனர்களை கூப்ட்டு பூசை, புணஸ்காரம் என பண்ணிட்டு... நீ இதெல்லாம் கேட்கலாம என வாயிலைய்யே மிதிப்பாங்க ஆளும் கட்சி.
தம்பி நல்லதுக்கு சொல்றேன் அப்புறம் உங்க விருப்பம் 😎
ஆட்சி குறித்து எதைச் செய்தியாகப் போட்டாலும் தவெகவினர் வைரலாக்கி விடுவார்கள் என்பதைப் புரிந்து கொண்ட இன்னமும் திமுக விசுவாசத்தில் இருக்கும் ஊடகக் கும்பல் வேண்டுமென்றே பழைய செய்திகளைத் தூசி தட்டி புதிது போலப் பரப்புகின்றனர்.
தவெகவினரும் கொஞ்சம் கூட யோசிக்காமல் “அடடே.. எங்கள் அரசு எப்படி செயல்படுகிறது பாருங்கள்” என்று விழுந்தடித்து அதைப் பரப்புகிறார்கள்.
பின்னாடியே, “இது ஏற்கனவே உள்ளதுதானே” என்று யாரும் கண்டுபிடித்துச் சொன்னால், ஊப்பீக்கள் அதைக் கையிலெடுத்துக் கொண்டு ‘ஸ்டிக்கர் ஒட்டிட்டாங்கய்யா’ என்று கிளப்பி விடுகின்றனர். ஸ்டிக்கர் ஒட்டுவதைப் பற்றியெல்லாம் அவர்கள் சொல்லலாமா என்பது வேறு விஷயம்!
ஆக மொத்தம் இரண்டு தரப்பும் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல!
கொற்றவையைத் தேடி.. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 40க்கும் மேற்பட்ட ஊர்களுக்குப் பயணித்து இருக்கிறேன். நேற்றைய பயணத்தில் கண்டறிந்த இக்கொற்றவைச் சிற்பம் நான் நேரில் பார்த்த 98வது சிற்பமாகும்! விரிவான விவரங்கள் விரைவில்...