மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசின் 2026–2027 ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்பாக சந்தித்து வாழ்த்துப் பெற்றேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
#TNBudget2026 #TVK #CMVijay #TNGovt #TNAssembly #NMarieWilson
இடமாற்றத்திற்கு இனி லஞ்சம் வேண்டாம்
மின்வாரியத்தில் இடமாற்றத்திற்காக ரூ.10 லட்சம், ரூ.20 லட்சம் வரை பணம் கொடுத்ததாக புகார்கள் வந்துள்ளன,
இனி வெளிப்படையான ஆன்லைன் முறையில் மட்டுமே இடமாற்றம்.
– அமைச்சர் C.T.R.நிர்மல் குமார்
நம்பிக்கையூட்டும் நிதிநிலை அறிக்கை
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை
~~~~~~~
இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். குறிப்பாகக் கல்விக்கு அதிக கவனம் கொடுக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கதாகும்.
மாணவர்களுக்கு நவீன மிதிவண்டிகள்; பத்தாயிரம் அரசு பள்ளிகளில் சூப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ் என்ற திட்டம்; மாணவர் விடுதிகளின் கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பு; காமராசர் பெயரில் சிறப்புப் பள்ளிகள்; அரசுப் பள்ளிகள் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பள்ளி நிறைவுத் திட்டம், அதற்காக 300 கோடி ரூபாய் இந்த ஆண்டில் நிதி ஒதுக்கீடு; பாடத்திட்டங்களை சீரமைப்பதற்காக 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு; உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஒரு லட்சம் நவீன படுக்கை வசதிகள் கொண்ட 200 மாணவர் விடுதிகள் கட்டப்படும் என்ற அறிவிப்பு; மதுரையில் சட்டக் கல்லூரி; இவையாவும் பாராட்டத்தக்க அறிவிப்புகள் ஆகும்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு 1051 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன மாணவர்கள் அயல்நாடுகளில் சென்று கல்வி கற்பதற்காக 131 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. ஆதிதிராவிடர் குடியிருப்புகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அயோத்திதாசப் பண்டிதர் வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்திற்கு 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல பழங்குடியினர் குடியிருப்புகளின் மேம்பாட்டுக்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் வீடு கட்டுவதற்கு ஒதுக்கப்பட்டு வந்த நிதியை உயர்த்தி வீடு ஒன்றுக்கு ஐந்து லட்சம் ரூபாயாக இந்த அரசு அறிவித்து இருப்பது பாராட்டுக்குரியது. இதற்கென 3500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அதில் 70 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் ஒரு லட்சம் வீடுகள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வீட்டுக்கான தொகை உயர்த்தப்பட்டாலும் வீடுகளின் எண்ணிக்கைக் குறைக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
மாநிலத்தின் வருவாய் பற்றி குறிப்பிடும்போது ஒன்றிய அரசிடமிருந்து கிராமப்புற வேலை உறுதித் திட்டத்துக்காக வரவேண்டிய 7586 கோடி ரூபாயும் நிலுவையில் உள்ள 3461 கோடி ரூபாயும் சேர்த்து மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஒன்றிய அரசு முறைப்படி வழங்கினால் தான் நமக்கு கிடைக்கும். இடைக்கால நிதி நிலை அறிக்கையில் மதிப்பிடப்பட்டதை விட இந்த திருத்திய வரவு செலவு திட்டத்தில் கூடுதலாக 5452 கோடி ரூபாய் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதை நாம் எந்த அளவுக்குப் போராடுகிறோமோ அந்த அளவுக்குத்தான் வாங்க முடியும். அதுவே கடந்தகால படிப்பினை.
2023-24 மற்றும் 2024-25 ஆண்டுகளில், ஒன்றிய அரசின் நிதியுதவியின் மூலம் தமிழ்நாட்டுக்குக் கிடைத்துவந்த வருவாய் குறைந்தது; ஜிஎஸ்டி இழப்பீடு நிறுத்தப்பட்டதே அதற்கு முக்கிய காரணம். மாநிலத்தின் சொந்த வரி வருவாய் உயர்ந்தாலும், பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப அதிகரிக்காமல், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) அதன் பங்கு 8.3%-இலிருந்து 5.8%-ஆக சரிந்தது. இதேவேளை, மாநிலக் கடன் ₹1.92 லட்சம் கோடியில் இருந்து ₹8.57 லட்சம் கோடியாக உயர்ந்து, கடனுக்கும் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதம் நாட்டிலேயே அதிகமான நிலையை எட்டியது. வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை மற்றும் வட்டிச் செலவுகள் தீவிரமாக உயர்ந்துள்ளன.
இந்நிலையில் ஏற்கனவே இருக்கும் நலத்திட்டங்களைத் தொடர்ந்துகொண்டு தான் தேர்தல் வாக்குறுதியாகத் தந்த புதிய நலத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையில் தவெக அரசு உள்ளது. மாநிலத்தின் நிதிநிலையைச் சீர்செய்வதற்கு சொந்த வருவாயை வேகமாக அதிகரிப்பதே தவெக அரசின் முன்னால் உள்ள முக்கிய சவாலாக உள்ளது. அதற்கான நம்பிக்கை வெளிச்சத்தை இந்த நிதிநிலை அறிக்கை அளிக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்
தொல்.திருமாவளவன்
நிறுவனர் - தலைவர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (5.8.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்பாக மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.நெ.மரிய வில்சன் அவர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
#CMJosephVijay
செங்கிப்பட்டியில் செய்தியாளர்கள் மீது தாக்குதல்! திமுகவினருக்கு கண்டனங்கள்!
உதயநிதியிடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊடகப் பணியாளர்கள் மீது சிலர் மது போதையில் தாக்குதல் நடத்தி உள்ளது மனிதத் தன்மையற்ற செயல்!
இந்தச் சம்பவத்தில் நியூஸ் தமிழ் 24×7 செய்தியாளர்கள் சுப்புராமன், அஜய் மற்றும் வாகன ஓட்டுநர் அபிலாஷ் தாக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும் பாலிமர் செய்தியாளர் பிரகாஷ், ஒளிப்பதிவாளர்கள் பாபு மற்றும் பாஸ்கர் உள்ளிட்டோர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர்.
இவர்களை திமுகவினர் ஆபாச வார்த்தைகளால் இழிவாகப் பேசியதுடன், அந்தக் காட்சிகளைப் பதிவு செய்ய முயன்ற ஒளிப்பதிவாளர்களையும் தாக்கியிருப்பது ஊடகச் சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்.
செய்தியாளர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவது திமுகவிற்கு புதிதில்லை. இதுபோன்ற சட்டவிரோத மற்றும் அராஜகச் செயல்களுக்கு இனி எந்தவித நியாயமும் கற்பிக்க முடியாது.
இந்த வன்முறைச் சம்பவத்தில் தொடர்புடைய திமுக நபர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதி செய்வோம்.
ராஜ்மோகன்