விஜய் அதிர்ஷ்டசாலி
அல்லது
மக்கள் ஏமாளி….. ( முழுவதும் படிக்கவும் )
சொந்தக் கட்சித் தொண்டருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் அமைச்சர்
பவுடர் நுணுக்கிய அமைச்சர்
செய்தியாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய எம் எல் ஏ
பெண்களை பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கும் தவெக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்,
பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான எம் எல் ஏ.,
அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் கேட்ட அமைச்சர்
போதைப் பொருள் கடத்தும் நிர்வாகிகள்
படுகொலை செய்யப்படும் சிறுமிகள்
இவற்றிற்கு மத்தியில் ,
பின்னுக்குத் தள்ளப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து
மெட்றோ விற்கு அனுமதி மறுப்பு
திருப்பரங்குன்றம் ஆவணப்படத்திற்கு அனுமதி மறுப்பு
வந்தே மாதரம் பாடல் கட்டாயம்
காவிரியில் வராத தண்ணீர்
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகா
அதற்கு துணை போகும் ஒன்றிய அரசு
விண்ணை முட்டும் மின் கட்டணம்
பல மணி நேர மின் தடை
கட்டுக்கடங்காத ஆணவப் படுகொலைகள்
அடுத்தடுத்த லாக்கப் டெத்
3 மாதத்தில் 20 ஆயிரம் கோடி கடன்
இத்தனைக்குப் பிறகும் இது எது குறித்தும் வாயே திறக்காத ஒரு முதலமைச்சர் எனில்,
ஒன்று அவர் அதிர்ஷ்டசாலி
அல்லது மக்கள் ஏமாளி….
22 வருட உறவு இன்றோடு முடிவடைந்தது! ஒரு சிறிய ஃப்ளேஸ்பேக்:
அப்பொழுது 2004 ஆம் வருடம் ஜனவரி மாதம் முதல் வாரம். டெல்லியில் எனது இல்லத்தில் அமர்ந்து சன் டிவியில் சினிமா பார்த்துக் கொண்டிருந்தேன். எனது கைப்பேசியில் அமைச்சர் ஆ. ராஜா அவர்கள் (@dmk_raja) அழைத்தார். அப்போது அவர் சென்னையில் தலைவருடன் அறிவாலயத்தில் இருந்தார். அதற்கு முந்தைய மாதம் அவர் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருந்தார். அவருக்கு கூடவே இருந்து பணி செய்யும் பொருட்டு எனது அரசுப் பணியில் இருந்து 6 மாதம் விடுமுறை எடுத்து இருந்த காலம் அது.
அலைபேசியில் பேசிய அமைச்சர் ராஜா, டெல்லியில் இருந்து ஒரு முக்கியமான VVIP சென்னை வர வேண்டி இருப்பதாகவும், அந்தப் பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறும் எனக்கு உத்தரவிட்டார். யார் அந்த VVIP ? என்று நான் கேட்டேன். தான் தலைவருடன் இருப்பதாகவும் பிறகு சொல்கிறேன் என்றும் சொல்லி விட்டு அலைபேசியை துண்டித்தார். அரை மணி நேரம் கழித்து என்னை தொடர்பு கொண்டவர், சென்னை வரவிருக்கும் அந்த முக்கிய நபர் டாக்டர் மன்மோகன் சிங் என்றும், அவருடைய பயணத் திட்டத்தை ஒருங்கிணைக்க அவருடைய வீட்டுக்கு செல்லுமாறும் கூறினார். அப்போது மன்மோகன் சிங் அவர்கள் டெல்லியில் சஃப்தர் ஐங் சாலையில் வசித்து வந்தார். நான் உடனே அங்கு சென்று அவரை சந்தித்தேன். அவருடைய பயண ஏற்பாடுகள் அனைத்தும் மிகவும் ரகசியமாக நடைபெற்றது.
சென்னை சென்ற டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் தலைவரை சந்தித்தார். அமைச்சர் ராஜா மற்றும் திரு. தயாநிதி மாறன் உடன் இருந்தனர். அந்த சந்திப்பில் திமுக- காங்கிரஸ் இணைந்து பயணிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. வாஜ்பாய் அவர்களின் ஆட்சிக் காலத்தில் காங்கிரஸ் கட்சியோடு துணை செல்ல யாருமே தயாராக இல்லாத தருணம் அது. நாடு முழுவதும் பா.ஜ.க.வின் பிரமோத் மகாஜன் அவர்களின் வழிகாட்டுதலில் "இந்தியா ஒளிர்கிறது" அதாவது India shining என்ற Campaign நடைபெற்றது. தான் ஜெயித்து விடுவது உறுதி என்ற நம்பிக்கையில், 2004 செப்டம்பர் மாதம் நடக்க வேண்டியிருந்த தேர்தலை முன் கூட்டியே நடத்த முடிவு செய்தார் பிரதமர் வாஜ்பாய் .
2004 ஏப்ரல் மாதம் பொதுத் தேர்தல் நடைபெற்றது. திமுகவை தவிர காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைக்க நாட்டில் எந்தவொரு கட்சியும் முன்வரவில்லை. எதிர்ப்புறம் வாஜ்பாய் அவர்களின் தலைமையில் மிகப்பெரிய கூட்டணி. மிகப் பெரிய அளவில் நாடு முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் திரு. வாஜ்பாய். அதே சமயம் நாடு முழுமைக்கும் சோனியா காந்தியின் காங்கிரஸ் கட்சியோடு பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் தலைவர் மட்டுமே. தேர்தல் முடிவுகள் வந்தது. பாஜக கூட்டணி நாடு முழுவதும் தோல்வியடைந்தது. தமிழ்நாட்டில் 40க்கு 40 சீட்டுக்கள் (பாண்டிச்சேரி உட்பட ) திமுக- காங்கிரஸ் வென்றது. ஆனால், மத்தியில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு போதுமான இடங்கள் காங்கிரஸ் கட்சி பெறவில்லை.
அடுத்து என்ன நடக்கும் என்று புரியாத சூழலில் டெல்லிக்கு கிளம்பினார் தலைவர். தாஜ் மான்சிங் ஹோட்டலில் தங்கினார். ஆட்சி அமைக்க முடியுமா என்ற சந்தேகத்தில் மனம் தளர்ந்து போய் இருந்த சோனியா காந்தியை சந்தித்தார். "நான் இருக்கிறேன். நீங்கள் பயப்படாதீர்கள். நாம் ஆட்சி அமைப்பது உறுதி " என்று ஆறுதல் கூறினார். தோழர் ஹர்கிஷன் சுர்ஜீத் மற்றும் தோழர் ஏ.பி. பரதன் ஆகியோரை நேரில் சந்தித்தார். இன்னும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தலைவரின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் அனைவரும் ஒரு கூட்டணியில் இணைவதற்கு ஒப்புக் கொண்டனர்.
அரசு அமைக்க உரிமை கோருவது என்று முடிவு செய்யப்பட்டது. தலைவரை பார்க்க சோனியா காந்தி வந்தார். அமைச்சர் ராஜா, T.R. பாலு, தயாநிதி மாறன் மற்றும் நானும் அங்கு இருந்தோம். யாருமே தங்களை கூட்டணிக்கு சேர்க்காத நிலையில், நாட்டிலேயே முதல் முறையாக காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்ததற்காக தலைவரின் கைகளை எடுத்து தனது கண்களில் வைத்து ஒற்றிக் கொண்டு உணர்ச்சி பெறுக கண்ணீரோடு நன்றி கூறினார் சோனியா காந்தி. புன்முறுவலோடு அந்த நன்றியை ஏற்றுக் கொண்ட தலைவர் புதியதாக உருவாக்கப்பட்ட கூட்டணிக்கு பெயர் ஒன்று வைக்கப்பட வேண்டும் என்று சொன்னார். அந்த புதிய பெயரையும் தலைவரே சொல்ல வேண்டும் என்று சோனியா காந்தி கூறினார். சிறிது நேர அமைதிக்கு பிறகு, என்னை அழைத்து தான் கூற இருக்கும் பெயரை அழகாக கணினியில் டைப் செய்து எடுத்து வரச்சொன்னார். என்ன பெயர் சொல்லப் போகிறார் என்று சோனியா காந்தி உள்பட அனைவரும் ஆவலோடு அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தோம். "ஐக்கிய முற்போக்கு கூட்டணி" என்று சொன்னவர், இந்தப் பெயர் நன்றாக இருக்கிறதா? என்று அமைச்சர் ராஜாவை பார்த்து கேட்டார். …..1/2.
எழுத்தாளர் சாரு நிவேதிதா எழுதிய நீண்ட கட்டுரை.. 👇👇
பெரியாரை எதிர்ப்பவர்கள் இதை படித்து பார்த்து சிந்திக்கவேண்டும்..
சுயநலம் பிடித்தவர்களும் அவர்களைப்பின்தொடரும் முட்டாள்களும் சிந்திப்பதற்கு வாய்ப்பேயில்லை..
"பெரியாரின் கோபமும் ஆவேசமும் எனக்குப் புரிந்தது"
-எழுத்தாளர் சாரு நிவேதிதா..
பெரியார்மீது எனக்குக் கொஞ்சம் மனஸ்தாபம் இருந்தது..
மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காக தன் வாழ்நாள் முழுவதும் அவர் நடத்திய போராட்டத்தில் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட பல செழுமையான பகுதிகளும் அடித்துக் கொண்டு போய் விட்டனவே என்பதுதான் என் மனஸ்தாபத்திற்குக் காரணம்..
உதாரணமாக, பிராமணீயத்தை எதிர்ப்பதற்காக சமஸ்கிருத மொழியை எதிர்த்தார்..
அதனால் காளிதாசன் எழுதிய அதி அற்புத காவியங்களை நாம் படிக்க முடியாமல் போயிற்று..
வருணபேதத்தை முன்னிறுத்துகின்றன என்பதால் புராணங்களையும் இதிகாசங்களையும் எதிர்த்தார்..
அதனால் உலக இலக்கியங்களிலேயே தலைசிறந்த காவியம் என்று உலக எழுத்தாளர்களால் போற்றப்படும் மகாபாரதத்தைப் படிக்காமல் விட்டோம்..
இப்படியெல்லாம் இவ்வளவு காலம் நினைத்துக் கொண்டிருந்தேன்..
அதனால் சமஸ்கிருதத்தில் உள்ள முக்கிய நூல்களை நானே படிக்க ஆரம்பித்தேன்..
அப்போதுதான் பெரியாரின் கோபமும் ஆவேசமும் எனக்குப் புரிந்தது..
முக்கியமாக வேதத்தைப் படித்தபோது. ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களே இந்து மதத்தின் பெரிய புனித நூல்களாகக் கருதப்படுபவை..
வேதம் படித்தவனே அறிஞனாகக் கருதப்படுகிறான்..
மேலும், சூத்திரனோ அல்லது நான்கு வருணங்களுக்கு அப்பாற்பட்ட விளிம்பு நிலையில் தள்ளப்பட்டு, இழி தொழிலைச் செய்ய நிர்பந்திக்கப்பட்ட அடிமை மக்களோ வேதத்தைக் கேட்டாலே போதும், அவர்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றச் சொல்கிறது மனு தர்மம். வேதத்தை முற்றாக அறிந்தவன், வேதாந்தி என அழைக்கப்பட்டான். வேதத்தில் இல்லாததே இல்லையென்று இன்றளவும் கருதப்படுகிறது..
நான்கு வேதங்களையும் ஆரம்பத்திலிருந்து முடிவு வரையும், பின்னர் முடிவிலிருந்து ஆரம்பம் வரை தலை கீழாகவும் ஓதத்தெரிந்தவர்கள் கனபாடிகள் என்று அழைக்கப்படுகின்றனர்..
இக்காரணங்களால் வேதத்தை நான் மிகுந்த மரியாதையுடனேயே வாசிக்க ஆரம்பித்தேன்..
பிறகுதான் தெரிந்தது...
தெருவில் நடக்கும்போது காலில் அசிங்கத்தை மிதித்து விட்டேன் என்று..
ஆம்! வேதத்தில் அவ்வளவு அசிங்கமும் ஆபாசமும் உள்ளன..
இந்துக்களில் அவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர்கள் வீட்டில் எந்த சுப காரியங்கள் நடந்தாலும் அங்கே தவறாமல் அழைக்கப்படுபவர்கள் புரோகிதர்கள்..
`வாத்தியார்’ என்று பார்ப்பனர்களின் பேச்சு மொழியால் அழைக்கப் படும் அப்புரோகிதர்கள் அந்த சுப காரியத்தின் போது ஹோமம் வளர்த்து பல மந்திரங்களை மணிக்கணக்கில் ஓதுவார்கள்..
அந்த மந்திரங்களின் அர்த்தத்தைக் கேட்டால் நீங்கள் எல்லோரும் பயந்து ஓடி விடுவீர்கள்..
ஆம்...!
ஒரு சுப தினத்தின்போது `என்னை எதிர்ப்பவர்கள் நாசமாகப் போக; அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்க..
புல் பூண்டு இல்லாமல் அவர்கள் வம்சம் அழிந்து போக..
என்ற ரீதியில் மணிக்கணக்கில் ஒருவர் சாபம் விட்டால், அவ்வார்த்தைகள் அந்தச் சூழலை எவ்வளவு அரு வருப்பாக மாற்றும்?
வேதம் முழுக்கவும் இம்மாதிரி அருவருப்பான வசைகளே நிறைந்திருக்கின்றன..
இடையிடையே கவித் துவம் நிரம்பிய சில அற்புதமான பகுதிகளும் உண்டு..
உதாரணமாக:
`நான் தேனைவிட தேனாயுள்ளேன்..
மதுரத்தைவிட மதுவாயுள்ளேன்..
நீ என்னையே தேன் மிகும் சாகையாக விரும்பு’ `எனது சலனம் தேன் மயம்..
என் கமனம் தேன்மயம்..
நான் மொழியால் தேன் மயமாய் மொழிகிறேன்..
நான் தேன் தோற்றமாக வேண்டும்’
(அதர்வண வேதம்; காண்டம் : 1,34 தேன் மயம்)
ஆனால் இந்தக் கவித்துவத்தையும் மீறி வேதம் முழுக்கவும் நிரம்பியிருப்பது..
துவேஷம், எதிரிகள் மீதான துவேஷம்..
எதிரிகள் யார் என்று பார்த்தால் பார்ப்பனர்களுக்கு அடிமையாகத் தங்களை ஒப்புக்கொடுக்காதவர்கள்..
அவர்கள் மீதான சாபத்தைப் பாருங்கள்..
`இந்திரன் தனது வச்சிராயுதத்தால் அவர்களது சிரங்களைத் துண்டித்திடுக’
`எங்கள் பசுவை நீ இம்சித்தால் நாங்கள் உன்னைக் குத்திக் கொல்வோம்’
(அத்தியாயம்:சம்ஹாரம்)..
`எங்கள் எதிரிகளை ருத்திரன் நாசம் செய்க’
`சாபத்தால் சபிப்பவள், தன் மக்களையே புசிப்பாளாக’
`தனது மகனையும் சகோதரியையும் பெண்ணையுமே புசித்திடுக’
`அக்னியே! எங்களைத் துவேஷிப்பவனை உனது சுடரால் எரித்து விடு’
`இம்சை செய்பவனே! உங்களது புன்மைகள் மறுபடியும் பின்புறமே வீழ்க! உங்கள் தோழனைப் புசியுங்கள்;
உங்களது மாமிசத்தைப் புசியுங்கள்’..
`இந்திரா’ சத்துரு சேனையை மயக்கம் செய்க..'அதன் கண்களைப் பிடுங்கு’
`அவனைக் கொல்லு; அவனது விலா எலும்புகளை நொறுக்கு, அவன் சீவனற்றவனாகுக..
அவன் சுவாசம் நீங்குக இந்திரா!.
1/2
“உணவுலகின் புகையிலை: Trans Fat!”
Trans Fat என்றால் என்ன?
Trans Fat என்பது செயற்கையாக உருவாக்கப்படும் ஒரு கொழுப்பு வகை. பொதுவாக Partially Hydrogenated Oils மூலம் உருவாகிறது.
ஏன் ‘உணவுலகின் புகையிலை’ என்று சொல்கிறார்கள்?
ஏனெனில், புகையிலை போலவே இது:
1. மெதுவாக உடலை சேதப்படுத்தும்
உடனே பாதிப்பு தெரியாது. ஆனால் நீண்டகாலத்தில் பெரிய பிரச்சினை.
2. இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும்
Coronary Artery Disease அபாயம் அதிகரிக்கும்.
• கெட்ட கொழுப்பு (LDL) அதிகரிக்கும்
• நல்ல கொழுப்பு (HDL) குறையும்
• இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும்
3. நீரிழிவு மற்றும் அழற்சி பிரச்சினை
Type 2 Diabetes அபாயத்துக்கும் தொடர்பு உள்ளது.
4. சிறிய அளவும் ஆபத்தானது
பாதுகாப்பான அளவு என்றே பல நிபுணர்கள் கூற மாட்டார்கள்.
எந்த உணவுகளில் அதிகம் இருக்கும்?
பொதுவாக:
• பேக்கரி உணவுகள்-Bakery items (puffs, cakes, biscuits)
• பாக்கெட் திண்பண்டங்கள் (Packaged snacks)
• அதிகமாக வறுக்கப்பட்ட உணவுகள் (Deep-fried fast foods)
• வனஸ்பதி (Margarine / Vanaspati)
• சில சாலையோர கடைகளில் திரும்ப திரும்ப பயன்படுத்தப்படுகிற (street food oil reuse items)
Vanaspati முக்கிய குற்றவாளிகளில் ஒன்று.
Label-ல் எப்படி கண்டுபிடிப்பது?
பொருள் லேபிளில் இவை இருந்தால் கவனம்:
• Partially Hydrogenated Oil
• Hydrogenated Vegetable Fat
• Vanaspati
ஏன் இது மலிவாக இருந்தும் பயன்படுத்தப்படுகிறது?
• Shelf life அதிகம்
• சுவை, crispiness தரும்
• மலிவு
• repeated frying-க்கு சிலர் பயன்படுத்துவார்கள்
#KHByte #HealthyLife
எல்லா பிசினஸையும் நாங்க தான் கண்ட்ரோல் பண்ணுவோம்
அனைத்து உயர் பதவிகளும் எங்களுக்கு தான்
ஜீயர் பட்டர் சிவாச்சாரியார் உட்பட அனைத்தும் எங்களவாக்குத் தான் (திருப்பதி ஜீயரின் சம்பளம் ஒன்றரை கோடி)
ஏன்னா இந்த உலகமே எங்களவாக்குத்தான் படைக்கப்பட்டது. (மனு ஸ்மிர்தி 1 : 99, 100)
திராவிட மாடல் அரசின் முத்தான திட்டங்கள் ✔️ கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்
📷 மகளிர் விடியல் பயணம்
📷 புதுமைப்பெண்
📷 தமிழ்ப் புதல்வன்
📷 இல்லம் தேடிக் கல்வி
📷 எண்ணும் எழுத்தும்
📷 மக்களைத் தேடி மருத்துவம்
✔️ இன்னுயிர் காப்போம்
📷 நம்மைக் காக்கும் 48
📷 பாதம் காப்போம்
📷 இதயம் காப்போம்
📷 அன்புக் கரங்கள் திட்டம்
📷 அன்புச் சோலை திட்டம்
📷 குறு சிறு நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்
📷 கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்
✔️ கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்
📷 உங்களுடன் ஸ்டாலின்
📷 மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைத் திட்டம்
📷 உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகள் நேரடி நியமனம்
📷 அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்
✔️ தொல்குடி திட்டம்
📷 டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம்
📷 பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம்
📷 அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்
✔️ முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்
📷 முதலமைச்சரின் கிராமச்சாலை மேம்பாட்டுத்திட்டம்
#VoteForDMK #StalinWave2026 #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
#என்ன_சாதித்தார்_CMஸ்டாலின்
படுத்துத் தூங்கிட்டிருக்கீங்க. நட்ட நடு ராத்திரி மின் விசிறியை ஆஃப் பண்ணனும். எழுந்து போய் ஆஃப் பண்ண சோம்பலா?
ஏ.சி.யிலே குளிரைக் கூட்டிக் குறைச்சு வெக்கணுமா? ரிமோட் கையிலே இல்லையா?
குளிக்கப் போறதுக்கு முன்னாடி வாட்டர் ஹீட்டர் ஆன் பண்ணிட்டு சிறிது நேரத்துக்குப் பிறகு அதை ஆஃப் பண்ணனுமா?
உக்காந்த இடத்திலேருந்தே அந்த சுவிட்சுகளை ஆன் / ஆஃப் பண்ண உதவும் கருவிதான் fingerbot.
அமேஸானிலே தேடிப் பாருங்க. நம்மூரிலே நாலாயிரத்து சொச்ச ரூபாயுன்னு நினைக்கிறேன்.
வாழைப்பழ சோம்பேறியா இருந்தா வாங்கிப் பயன்படுத்திக்குங்க. மொபைல் செயலி வழியா இதை இயக்கிக்கலாம்.
மொபைல் போனை கையிலே எடுத்து செயலியைச் சொடுக்க எதுவும் கருவி இருக்கான்னு கேட்குறீங்க தானே?!
இது விளம்பரப் பதிவுமல்ல. அனுபவப் பகிர்வுமல்ல. கண்ணில் பட்டது. பகிர்கிறேன்.
போஸ்ட் ஆபிஸின் அசத்தலான திட்டம் : ஒரே ஒரு தடவை முதலீடு.. மாதம் தோறும் வருமானம்..!!
போஸ்ட் ஆபீஸ் மாத திட்டத்தில் நீங்கள் பணத்தை டெபாசிட் செய்தால், ஒவ்வொரு மாதம் வட்டித் தொகை மூலம் பென்சன் பெற முடியும்.
இதுமட்டுமல்லாமல், இத்திட்டம் மெச்சூரிட்டி அடையும்போது, நீங்கள் ஒருமுறை மட்டும் செலுத்திய தொகை திருப்பிச் செலுத்தப்படும். தபால் அலுவலக மாத வருமானத் திட்டத்துக்கு தற்போது ஆண்டுக்கு 7.4% வட்டி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வட்டித் தொகை உங்களுக்கு செலுத்தப்படும்.
மாத வருமானத் திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் டெபாசிட் செய்யலாம். ஒரு நபரால் அதிகபட்சமாக 9 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின் காலம் 5 ஆண்டுகள்.
இத்திட்டத்தில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 617 ரூபாய் பென்சனாக கிடைக்கும். ஆண்டுக்கு 7400 ரூபாய் பென்சன் கிடைக்கும். 5 ஆண்டுகளில் 37000 ரூபாய் கிடைக்கும்.
இந்த மாதாந்திர வருமானத் திட்டம் ஒரு பாதுகாப்பான திட்டமாகும். இது இந்திய அரசால் ஆதரிக்கப்படும் ஒரு சேமிப்புத் திட்டமாகும். இது முதலீட்டாளர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு நிலையான மாத வருமானத்தை வழங்குகிறது. இதில், 5 ஆண்டுகளுக்கு வட்டி விகிதம் ஒரே மாதிரியாக இருக்கும். இந்த திட்டத்தில் ஓய்வு பெற்றவர்கள், இல்லத்தரசிகள் அல்லது வழக்கமான மாத வருமானத்தை விரும்புவோர் முதலீடு செய்யலாம். நீங்கள் தனியாகவோ அல்லது இரண்டு நபர்களுடன் சேர்ந்தோ கணக்கைத் திறக்கலாம்.
ஒரே கணக்கில் அதிகபட்சம் ரூ.9 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். ஜாயிண்ட் அக்கவுண்ட்டாக இருந்தால், ரூ.15 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இந்த திட்டத்தில் நீங்கள் கணக்கைத் திறக்க குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு செய்ய வேண்டும். இந்த திட்டத்தில் உங்களுக்கு மாதந்தோறும் வட்டி வழங்கப்படுகிறது. உதாரணமாக, நீங்கள் ரூ.9 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால், உங்களுக்கு மாதத்திற்கு ரூ.5,550 வட்டி (ரூ. 9,00,000 × 7.4% ÷ 12) கிடைக்கும்.
நீங்கள் ரூ.3,00,000 முதலீடு செய்தால், உங்களுக்கு ரூ. 1,925 கிடைக்கும். நீங்கள் ஒரு கணக்கில் அதிகபட்சமாக ரூ.9,00,000 முதலீடு செய்தால், உங்களுக்கு ரூ.5,775 வட்டி கிடைக்கும். அதே கூட்டுக் கணக்கில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் முதலீடு செய்தால், உங்களுக்கு ரூ.9,250 (ரூ.15,00,000 × 7.4% ÷ 12 மாதங்கள்) மாதந்தோறும் வட்டி கிடைக்கும்.
மாநிலங்கள் வாரியாக 3- வது மொழி எதைப் படிக்கிறார்கள்
சமஸ்கிருதம் 10 மாநிலங்களில் உள்ளது. இந்தியை விட சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது.
ஆங்கிலம் பேருக்கு தான் சொல்லி தர்றாங்க ஆங்கிலம் தெரிஞ்ச வாத்தியார் கூட கிடையாது அங்கே
ஆனா தமிழ்நாடு ரெண்டு மொழி படிச்சாலும் சரியா படிக்கிறாங்க .
(தோழர் நல்லகண்ணு அவரது மனைவியை பற்றி கூறியது.}
💙❤💚🚩
என் மனைவிக்கு உடல்
சொகமில்லாம போச்சு.
ஆஸ்பத்திரியில வெச்சி மருத்துவம்
பாத்தோம். ஆனாலும் காப்பாத்த
முடியல. மாசங்கள்
உருண்டோடுனாலும் அவளோட
இழப்பை என்னால ஜீரணிக்க முடியல.
போராட்டம், பொதுக்கூட்டம்னு என்
உடல் எங்கெங்கயோ அலஞ்சுட்டு
இருந்தாலும், மனசு அவளை
நினைச்சுட்டேதான் இருக்கு. அந்த
வேதனையைச் சுமந்துட்டேதான்
திரியுறேன்.
என்னை, என்னைவிட முழுசா
புரிஞ்சிகிட்டவ என் மனைவி. என்
வாழ்க்கையில எல்லா வகையிலும்
அவளோட பங்களிப்பு இருந்துச்சு.
அவ அப்பாவும் கம்யூனிஸ்ட்
கட்சிகாரர்தான். அதனால என்னை
ஏத்துக்கிறது அவளுக்கு சுலபமா
இருந்திச்சி. டீச்சரா வேலை பாத்தா.
காசி பாரதி, ஆண்டாள்னு
எங்களோட ரெண்டு பொம்பளப்
புள்ளைகள வளர்த்து படிக்க
வெச்சது, ஆளாக்குனது
அவங்களோட எல்லா
தேவைகளையும் என்னை
எதிர்பார்க்காம அவளே
செஞ்சிருவா.
அரசியல் வாழ்க்கை, போராட்டம்,
காசு பணம் சேர்க்கத் துடிக்காத
மனசுனு என் போக்குக்கு என்னை
விட்டவ என் மனைவி. கட்சி
வேலைகள்ல திரிஞ்சிட்டு
வீட்டுக்குப் போகும்போது,
கூடடைஞ்ச திருப்தி கிடைக்குற
விதமா அந்த வீட்டை எனக்கானதா
வெச்சிருப்பா. இப்போ வீட்டுக்குப்
போனா, அவ இல்லாத அந்த
வெறுமையும் தனிமையும் ரொம்ப
கொல்லுது. தாங்கவே முடியாம
வருது. சுத்தி எத்தனையோ பேர்
இருந்தாலும், எனக்குனு யாரும்
இல்லைங்கிறதை உணரவெச்சிட்டே
இருக்கு அவளோட பிரிவு.
எந்த ராத்திரி வீட்டைக் விட்டுக்
கிளம்புவேன், எந்த ராத்திரி வீடு
திரும்புவேன்னு தெரியாத ஒரு
வாழ்க்கை என்னோடது.
உண்ணாவிரதம் இருக்கக்
கெளம்புனாலும், ஜெயில்ல இருக்க
வேண்டி வந்தாலும் ஒரு வார்த்தை
வருத்தமாவோ, மறுப்பாவோ
சொல்லாம அனுப்பிவைப்பா. என்
புள்ளைங்க, 'அப்பா உங்களுக்கு
வயசாயிருச்சு... அரசியல்
வேலைகளையெல்லாம் கொஞ்சம்
குறைச்சுக்கோங்கங்க'னு
சொன்னப்போகூட, என் மனைவி
அப்படி ஒருநாளும் எங்கிட்ட
சொன்னதே கிடையாது. ஏன்னா,
கட்சிப் பணிகள் இல்லாம என்னால
இருக்க முடியாதுனு அவளுக்குத்
தெரியும். ஆனா, 'நான்
இல்லாமயும் உங்களால இருக்க
முடியாது'ங்கிறதை இப்படிப்
பிரிவுல உணர்த்திட்டுப்
போயிட்டா.
எங்க கிளம்பினாலும், 'போய்
சேந்துட்டீங்களா?'னு ஒரு போன்
பண்ணுவா. 'சாப்புட்டீங்களா?'னு
கேட்பா. 'எங்க இருக்கீங்க?'னு ஒரு
போன் வரும். இப்போ எதுவுமே
இல்ல. கண்ண மூடுனா முழுக்க
ரஞ்சிதம் நெனப்பாதான் இருக்கு.
முன்னாடி நான் அசைவம்
சாப்பிடுவேன். இப்ப அஞ்சு வருசமா
சைவம்தான். அவ வைக்கிற மீன்
குழம்புல சோத்தை ஒரு பிடி
பிடிப்பேன். அவ வைக்கிற ரசம்
ரொம்ப நல்லா இருக்கும். எனக்குப்
பிடிக்கும்னு அடிக்கடி ரவா லட்டு
செய்வா. 'என்னை நீ எதிர்பார்த்து
இருக்கக் கூடாது, உனக்கு பசிச்சா
சாப்பிடு'னு என் கல்யாணத்தை
ஒட்டியே சொல்லிட்டேன். அதனால
நாங்க சேர்ந்து சாப்பிடுவதே
குறைவுதான். ஆனாலும் நான்
சாப்பிடும்போது கூட உட்கார்ந்து
பேசிட்டு இருப்பா.
ஒரு சுவாரசியம் என்னனா நான்
ஜெயில்ல இருந்து வந்த பிறகுதான்
எங்களுக்கு கல்யாணமே நடந்திச்சி.
புதுமணத் தம்பதியா நாங்க
பேசிக்கிட்ட விஷயங்கள்லாம்,
என்னோட ஜெயில்
அனுபவங்களாதான் இருந்துச்சு.
நிறைய கல்யாணத்தை தலைமை
தாங்கி நடத்திருக்கேன்.
அப்போவெல்லாம், 'மனைவியை
அதிகாரமா மிரட்டக் கூடாது.
அன்பா இருக்கணும், சமமா
நடத்தணும்'னு சொல்லித்தான்
ஆசிர்வதிப்பேன். என் வாழ்க்கையில
ரஞ்சிதத்துக்கு அப்படி ஒரு
சமத்துவத்தை நான் கொடுத்தாலும்,
அவ எனக்காக ரொம்ப
விட்டுக்கொடுத்து போயிருக்கா.
என்னைத் தேடி வர்றவங்களைப் பத்தி
அவளுக்குத் தெரியும். என் மனசு
நினைக்கிற மாதிரியே அவங்களை
உபசரிப்பா.
ரஞ்சிதம் நிறைய புத்தகங்க படிப்பா,
பேப்பர் படிப்பா. ஜெயகாந்தன்
சிறுகதைகள் பத்தி பேசுவா. நான்
எதையாவது படிக்காம
விட்டுட்டாலும், 'இதப் படிக்கலையா
நீங்க?'னு கேட்பா. திடீர்னு எதாவது
செய்தியைக் காட்டி, 'இதப்
பாத்தியளா?'னு கேட்பா.
'இல்லையே...'னு சொன்னா,
'இதக்கூடப் பாக்காம என்ன
படிக்கிய?'னு கேட்பா.
இப்போவெல்லாம் பேப்பர், புத்தகம்
படிக்கும்போது, 'எதையாச்சும்
படிக்காம விட்டுட்டா அதை
எடுத்துக்காட்ட அவ இல்லையே'னு
ரஞ்சிதத்தோட நினைவுகள் நான்
படிக்கிற ஒவ்வொரு எழுத்துலயும்
பின்னிக்குது.
நான் சம்பாதிச்சுது என்னனு
எல்லாருக்கும் தெரியும்.
வெளியே போகும்போது
செலவுக்கு அவகிட்டதான் காசு
வாங்கிட்டுப் போவேன். கொஞ்சம்
நிலம் இருந்து அதுல அரிசி வரும்.
மத்தபடி 'அது இல்ல இது இல்ல'னு
எதுவும் எங்கிட்ட சொல்லாம, அவளே
சமாளிச்சு குடும்பத்தக் கொண்டு
போனா. என் பிறந்தநாளுக்கு
துணிமணி எடுத்துக் கொடுப்பா.
அவளுக்கு, நான் வீட்டுல
இருந்தாலே பரிசுதான்னு
சொல்லுவா. எப்பவாச்சும்
டெல்லிக்குப் போனா அவளுக்கு
சேலை எடுத்துட்டு வருவேன்.
ரொம்ப சந்தோசப்படுவா. வெளிய
போயிட்டு நேரடியா வீட்டுக்கு
வர்றதா இருந்தா எதாவது பண்டம்
வாங்கிட்டு வந்து கொடுப்பேன்.
...1/2
மருத்துவ அளவீடுகள்
இரத்த அழுத்தம்
→120/80 mmHg
நாடித்துடிப்பு (இதயத் துடிப்பு)
- 60 - 100 والي
உடல் வெப்பநிலை
→ 98.6°F (37°C)
சுவாச வீதம்
→ 12 - 16 முறைகள்
ஹீமோகுளோபின் (ஆண்)
→13.5-17.5 g/dL
ஹீமோகுளோபின் (பெண்)
→12.0-15.5 g/dL
மொத்த கொலஸ்ட்ரால் (கொழுப்பு)
→ 200 mg/dL-க்கும் குறைவாக
பொட்டாசியம்
→3.5-5.1 mmol/L
சோடியம்
→135-145 mmol/L
A ட்ரைகிளிசரைடுகள் (இரத்தக் கொழுப்பு) →
150 mg/dL-க்கும் குறைவாக
மொத்த இரத்த அளவு
→ 4.5 - 5.5
சர்க்கரை அளவு (பெரியவர்)
→70-100 mg/dL
சர்க்கரை அளவு (குழந்தை)
→70-100 mg/dL
இரும்புச் சத்து (சீரம்)
→60-170 mcg/dL
வெள்ளை இரத்த அணுக்கள்
→4,500-11,000 cells/mcL
இரத்த தட்டணுக்கள்
→150,000-450,000 cells/mcL
சிவப்பு இரத்த அணுக்கள் (ஆண்)
→4.76.1 million cells/mcL
சிவப்பு இரத்த அணுக்கள் (பெண்)
→4.25.4 million cells/mcL
E கால்சியம் (மொத்தம்)
→8.5-10.5 mg/dL
வைட்டமின் D
→30-100 ng/mL
வைட்டமின் பி12
→200-900 pg/mL
பக்தியின் பெயரால் இந்து கோவில்களில் விடப்பட்ட தேவதாசிகளை மீட்டு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு மாற்று தொழில்களை அளித்து
அவர்களுக்கு பின்னாட்களில் திருமணமும் செய்து வைத்த அயர்லாந்தைச் சேர்ந்த
கிறித்தவமிஷனரி கனம்
ஏமி கார்மைக்கேல் அம்மையார்
1948ம் ஆண்டு தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் வருவதற்கு காரணமானவர் இவர் தான்!
இந்த மூன்று விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு பதிவை நீங்கள் படிக்கலாம்.
• ஆர் எஸ் எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு இந்தியா ஒரு இந்து நாடாக வேண்டாம். அவர்களுக்கு இது பார்ப்பனர்கள் ஆதிக்கத்தில் இருக்கும் நாடாக இருக்க வேண்டும். மேலும் பார்ப்பனர்கள் வெளிநாடுகளில் குடியேற வேண்டும். அதற்கு பணம் வேண்டும்.
• பாஜகவிற்கு மதம் வேண்டாம், ஜாதியும் வேண்டாம். அவர்களுக்கு உழைப்பு இல்லாத அதிகாரமும், சுலபமான பணமும் பெண்களும் வேண்டும்.
• வட இந்தியா முழுவதும். பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டும் சுமார் 3000கும் மேற்பட்ட இந்து கோவில்களை பாஜக கடந்த 12 ஆண்டுகளில் இடித்துள்ளது. மேலும் 1000கும் மேற்பட்ட பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்களை ஆக்கிரமிப்பு நிலப்பரப்பு என்று கூறி விரட்டி அடித்தது.
பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் கிடைக்க கூடியவை
குஜராத்
பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, லிக்னைட், பாக்சைட், டால்க்/சோப்புச்சூன், டாலமைட்.
மத்திய பிரதேசம்
வைரங்கள், மாங்கனீஸ், பாக்சைட், டாலமைட், கல் உப்பு, இரும்பு தாது, தங்கம், காப்பர்.
உத்தர பிரதேசம்
டாலமைட், ராக் பாஸ்பேட், கோல், வைரங்கள், மணல்,
உத்தரகாண்ட்
மேக்னெசைட், டால்க், சோப்புச்சூன், மைக்கா, ஜிப்சம்.
மகாராஷ்டிரா
மாங்கனீஸ், பாக்சைட், இரும்பு, மாணிக்கம், ஃப்ளோரைட்.
ஒடிசா
இரும்பு தாது, பாக்சைட், குரோமைட், மாங்கனீஸ், நிக்கல், ஜிப்சம்.
அசாம்
பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, கிராஃபைட் , வெனாடியம், REE
அருணாச்சல பிரதேசம்
எண்ணெய் & இயற்கை எரிவாயு, டாலமைட், கிராஃபைட், வெனாடியம், REE, பேஸ் மெட்டல்ஸ், தங்கம்
மணிப்பூர்
குரோமைட், நிக்கல் & கோபால்ட், REE.
திரிபுரா
இயற்கை எரிவாயு, கண்ணாடி மணல்.
நாகாலாந்து
, குரோமைட், நிக்கல் & கோபால்ட், REE
மிசோரம்
கடினமான மணற்கல், உப்பு நீரூற்றுகள், எரிவாயு கசிவு.
இந்த 12 மாநிலங்களிலும் பொதுவாக
சுண்ணாம்புக்கல், நிலக்கரி, களிமண் கிடைக்கின்றன.
இந்த 12 மாநிலங்களில் இவ்வளவு வளங்கள் இருந்தும் மக்கள் வேலைக்காக வெளி மாநிலங்களுக்கு வருவதற்கு காரணம். இயற்கை வளங்களை சுரண்டி அந்த மக்களுக்கு எதுவும் செய்யாமல் அம்போ என விட்டு விடுகிறது பாஜக.
பாஜகவிற்கு தமிழ்நாடு ஏன் வேண்டும்?
தமிழ்நாடு
இலுமினைட், ரூடையில், ஸர்கான், மோனோசைட், கார்னெட், சிலிமனைட், வெர்மிக்குலைட், டியுனைட், மோலிப்டினம். போன்ற தாது பொருட்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. வேறு சில மாநிலங்களில் மிக மிக குறைவாக ஆங்காங்கே காணப்படுகிறது. மேலும் மேல்கண்ட மாநிலங்களில் கிடைக்கக்கூடிய தாது பொருட்கள் பெருமளவு தமிழ்நாட்டிலும் கிடைக்கின்றது.
பழனி மலை
டங்ஸ்டன் இங்கே மட்டும் தான் உள்ளது
குன்றத்தூர் மலை
குவார்ட்ஸ், பெல்ட்ஸ்பார், கிராபைட், க்னைஸ், கார்னெட், கலர் கிரானைட்.
இவை இந்த மலைகளிலும் இதன் சுற்றுப்புறத்திலும் மட்டுமே கிடைக்கக்கூடியது.
இவை அனைத்தும் பாஜகவிற்கு வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் 35,00,000 மக்கள் இருக்கும் வீடுகள் இடிக்கப்பட்டு அந்த இடங்கள் காலியாக்கப்பட வேண்டும். சுமார் 113 சிறிய பெரிய மலைகளை மொத்தமாக அதானே அம்பானி டாட்டாவுக்கு கொடுத்து தரைக்கு அடியில் வரை தோண்டி எடுக்கப்பட வேண்டும். இது நடந்தால் ஆர்எஸ்எஸ் பாஜக இவர்களை சார்ந்த 7 லட்சம் பேர் வெளிநாடுகளில் சுகமோகமாக 700 வருடங்களுக்கு வாழலாம்.
தமிழ்நாட்டில் பாஜகவிற்கு இடையூறாக இருப்பது
திமுக, நாத்திகம், தமிழர்களின் ஒற்றுமை, மதங்களின் ஒற்றுமை. மேலும் உலகத்திலேயே தமிழர்களின் குருதியில் மட்டும் காணப்படும் அரிய வகை வைட்டமின்களான திமிர், தெனாவட்டு, துணிச்சல், எகத்தாள மைறு, கொலைவெறி, நக்கல், நையாண்டி, காதல, அனைத்தையும் எதிர்க்கும் குணம், அனைத்தையும் கேள்வி கேட்கும் அறிவு.
இந்தி அரக்கி கடந்த 60 ஆண்டுகளில் படுகொலை செய்து, மண்ணிற்குள் புதைத்த மொழிகள்!
போஜ்புரி
மைதிலி
அவதி
பிரஜ்
பண்டேலி
கர்வாலி
குமாவோனி
மகாஹி
மார்வாரி
மால்வி
சத்தீஸ்கர்
சந்தாலி
அங்கிகா
ஹோ
காரியா
கோர்தா
குர்மலி
குருக்
முண்டாரி
& இது போல் இன்னும் பல மொழிகள்!
ஏனென்றால், அவர்கள் தங்கள் தாய்மொழியின் மீது ஒரு ஒற்றை இந்தி அடையாளத்தை அனுமதித்தனர்
#தமிழ்_வாழ்க
#பராசக்தி ! திரைப்படம்
தமிழ்நாட்டில் 1965-இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்டிருக்கிறது.
இந்தப் போராட்டத்தை ஒடுக்க காவல்துறையும் ராணுவமும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டனர்.
குறிப்பாக, பொள்ளாச்சியில் நடந்த துப்பாக்கிச் சூடு,
அதை ஜாலியன் வாலாபாக் உடன் ஒப்பிடலாம்
இந்த போராட்டத்தின் மிக மோசமான தருணமாகப் பார்க்கப்படுகிறது.
பொள்ளாச்சியில் அப்போது என்ன நடந்தது?
தமிழ்நாட்டில் 1930களின் பிற்பகுதியில் இருந்தே இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன.
1937-இல் இந்தித் திணிப்புக்கு எதிராக முதல் போராட்டம் நடைபெற்றது.
சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் ராஜாஜி தலைமையில் ஆட்சியமைத்தது.
முதலமைச்சராகப் பதவியேற்ற ராஜாஜி, சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில்,
மாணவர்கள் கட்டாயமாக இந்தி படிக்க வேண்டும் எனப் பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள்
முதலமைச்சருக்குக் கடுமையாக எதிர்வினையாற்றினாலும் அரசு பின்வாங்கவில்லை.
1938ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி மாணவர்கள்
கட்டாயம் இந்தி படிக்க வலியுறுத்தும் வகையில் ஒரு அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் கட்டாயம் இந்தி படிக்க வேண்டுமெனக் கூறப்பட்டது.
முதற்கட்டமாக 125 பள்ளிக்கூடங்களில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த போதே,
இரண்டாம் உலகப் போர் வெடித்தது.
அந்தத் தருணத்தில் நாடு முழுவதும் இருந்த காங்கிரஸ் அமைச்சரவைகள் ராஜினாமா செய்தன.
இதையடுத்து, 1939ஆம் ஆண்டு அக்டோபரில் ராஜாஜியும் தன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
பிப்ரவரி 21, 1940-இல் அப்போதைய மதராஸ் மாகாண ஆளுநர் ஜான் எர்ஸ்கின்,
இந்தி கற்பதை கட்டாயமாக்கும் அரசின் உத்தரவைத் திரும்பப் பெற்றார்.
அடுத்ததாக, இந்தியா சுதந்திரமடைந்த பிறகு 1948ஆம் ஆண்டில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதலமைச்சராக இருந்தபோது
பள்ளிக்கூடங்களில் மீண்டும் இந்தியைக் கற்பிக்கும் முயற்சிகள் துவங்கின.
1948ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் தேதி பள்ளிக்கூடங்களில் இந்தியைக் கட்டாயமாக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், இந்த முறை சென்னை மாகாணத்தில் இருந்த தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் பகுதிகளில்
இந்தி கட்டாயப் பாடமாகவும் தமிழ் பேசும் பகுதிகளில் விருப்பப் பாடமாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த முறையும் கட்டாய இந்திக்கு எதிரான போராட்டங்கள் துவங்கின.
இந்நிலையில், 1949ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதற்குப் பிறகு கட்டாய இந்தி திட்டம் திரும்பப் பெறப்பட்டது.
இதற்குப் பிறகு, 1965ஆம் ஆண்டு நெருங்கியபோது ..
இந்தி தொடர்பான அச்சம் தமிழ்நாட்டில் மீண்டும் உயிர்பெற்றது.
இதற்கு அடிப்படையாக அமைந்தது இந்தியாவின் அலுவல் மொழி தொடர்பான விவகாரம்.
இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்ட பிறகு, முதல் 15 ஆண்டுகளுக்கு மட்டுமே
இந்தியும் ஆங்கிலமும் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க அரசமைப்புச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருந்தது.
அதற்குப் பிறகு இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக நீடிக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.
அதன்படி, ஜனவரி 26, 1965க்குப் பிறகு இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கும்.
1965ஆம் ஆண்டு நெருங்க நெருங்க இந்தி பேசாத மாநிலங்களில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து, ஜவஹர்லால் நேரு தலைமையிலான மத்திய அரசு 1963ஆம் ஆண்டு
'அலுவல் மொழிகள் சட்டம்' ஒன்றைக் கொண்டுவந்தது.
அந்தச் சட்டத்தின் மூன்றாவது பிரிவில், 15 ஆண்டுகள் கெடு முடிந்தபின்னும்
(1965ஆம் ஆண்டுக்குப் பிறகும்) இந்தியுடன் சேர்த்து ஆங்கிலமும் இந்தியாவின் அலுவல் மொழியாகத் 'தொடரலாம்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதாவது, "Notwithstanding the expiration of the period of fifteen years from the commencement of the Constitution,
the English language may, as from the appointed day, continue to be used in addition to Hindi"
என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், அதை "the English language shall" என்று மாற்ற வேண்டும் என
அப்போது தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அண்ணா நாடாளுமன்றத்தில் வாதிட்டார்.
"may" மற்றும் "shall" ஆகிய இரு சொற்களுக்கும் ஒரே பொருள்தான் என்பதால்
சட்ட வரைவில் திருத்தம் தேவையில்லை என்று வாதிட்டார் பிரதமர் நேரு.
முடிவில், திருத்தம் எதுவும் இல்லாமலேயே சட்டம் நிறைவேறியது....1/3