நம் உயிருக்கு நிகரான கலைஞர் அவர்கள் வாழ்ந்த கோபாலபுரம் மற்றும் சி.ஐ.டி. குடியிருப்பு இல்லங்��ளில், தலைவர் @mkstalin அவர்கள் மற்றும் கழக முன்னணியினருடன் சென்று கலைஞர் அவர்களின் பிறந்த ��ாளையொட்டி, அவர்களது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதைச் செலுத்தினோம்.
கலைஞர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்!
#KalaignarForever
செங்கல்பட்டு தொகுதியில் மாற்றுக்கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட சகோதரர் கஜேந்திரன் அவர்களின் தலைமையில் 1500 பேர் நமது தலைவர் @mkstalin முன்னிலையில் கழகத்தில் இன்று இணைத்துக் கொண்ட நிகழ்ச்சியில் நாமும் பங்கேற்றோம்.
திராவிடக் கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பதில் கழகமே உறுதியான இயக்கம் என்பதை உணர்ந்து நம்முடன் இணைந்துள்ள அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
உடன்பிறப்புகளாய்
ஒன்றிணைந்து செயலாற்றுவோம்!
#DMK @thamoanbarasan
ஆட்சி அதிகாரம் எந்தப் பக்கம் இருந்தாலும் கொள்கையில் உறுதிமிக்கோர் எப்போதும் தி.மு.க. பக்கம்தான்!
தமிழ்நாட்டின் உரிமைகளைத் தி.மு.க.தான் காப்பாற்றும் என்ற உறுதியோடு, செங்கல்பட்டு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. கஜேந்திரன் அவர்கள் தலைமையில் தாய்க்கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்ட அனைவரையும் வரவேற்கிறேன்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளான இன்று,
நம் @dmk_youthwing-ன் தலைமையகமான அன்பகத்தில், கழகத் தலைவர் @mkstalin அவர்கள் 75 அடி உயர கம்பத்தில் கழகத்தின் இருவண்ணக் கொடியை ஏற்றி வைத்து, தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் மார்பளவுச் ���ிலைகளைத் திறந்துவைத்தார்.
மேலும், அன்பகத்தின் புதுப்பிக்கப்பட்ட அலுவலகத்தைத் திறந்துவைத்து, இளைஞர் அணி மேற்கொண்டுவரும் ஆக்கப் பணிகளைப் பார்வையிட்டார்.
முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று- கழகத் தலைவர் தலைமையில் திராவிட இயக்க இலட்சியங்களை வென்றெடுக்க,
கழக இளைஞர் அணி என்றும் துணை நிற்கும்!
#KalaignarForever #Kalaignar103
தமிழ்நாட்டின் வளர்ச்சியை திராவிட இயக்கக் கொள்கை அடித்தளத்தில் கட்டி எழுப்பிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் சென்னை ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில், கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு அருகே அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதைச் செய்தோம்.
#KalaignarForever
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளையொட்டி கழகத் தலைவர் திரு @mkstalin அவர்களின் நிகழ்ச்சிகள்!
- தலைமைக் கழக அறிவிப்பு
#DMK#KalaignarForever
எதிர்க்கட்சியாக இருக்கும்போது கிண்ணத்தை எப்படி வேண்டுமானாலும் சுற்றலாம், ஆனால் ஆளுங்கட்சியாக இருக்கும் போது நெய் கரண்டியை நினைத்தபடி சுற்ற முடியாது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் இன்னும் தேர்தல் பிரச்சார மனநிலையிலேயே பேசிக்கொண்டிருக்கிறார்.
கழக மருத்துவர் அணிச் செயலாளர் திரு @Dr_Ezhilan அவர்கள்.
#TVKFails
தி.மு.ககாரன் சாதரணமா வரலடா..? அடிக்க அடிக்க இன்னும் வேகமாக எழும் இயக்கம் தி.மு.க..! இளைஞர்களின் இயக்கமாக இருந்து உதித்த கட்சி இது.. 75 ஆண்டுகளை கடந்த பின்பு இன்றும் எழுச்சியுடன் இந்த இயக்கம் இருக்க என்ன காரணம் தெரியுமா..? பல்லை கடித்துக்கொண்டு டி.ஆர்.பி.ராஜா ��ொன்ன காரணம்..
#Chennai | #TRBRaja | #DMK | #GenZDMK | #GenZ | #PolimerNews
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. அரசைப் பார்த்து மன்னராட்சி எனத் திமிர்ப்பேச்சு பேசினார் இன்றைய முதலமைச்சர்.
இன்றோ, மங்குனிகளின் ஆட்சியில் தமிழ்நாடு சிக்கித் தவிக்கிறது.
Volvo பேருந்து என்றால் இதுதான். முன்பின் செய்திகளைக் கூட பார்க்காதவர்கள் துறைக்கு அமைச்சர் ஆக்கப்பட்டுள்ளனர். பரிதாபம்...
#TVKFails
நடிகரும் நண்பருமான அஜித்குமார் அவர்களுடைய அன்பு தாயார��� திருமதி மோகினி மணி அம்மையார் அவர்கள் மறைந்த செய்திக் கேட்டு வருத்தமுற்றேன்.
அஜித் அவர்கள், வாழ்வில் பல்வேறு உயரங்களைத் தொட உறுதுணையாக இருந்தவர் அவருடைய தாயார்.
அவரை இழந்து வாடும் நண்பர் அஜித் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தி.மு.கழக இளைஞர் அணியின் மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம், கழகத் தலைவர் @mkstalin அவர்கள் சிறப்புரையில், கழக இளைஞர் அணிச் செயலாளர் - மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 04 :
இளைஞர் அணிக்கு வாய்ப்பளித்த கழகத் தலைவர் அவர்களுக்கு நன்றி
2026 சட்டமன்றத் தேர்தலில் கழகம் சார்பில் போட்டியிடுவதற்கு இளைஞர் அணியின் மீது நம்பிக்கை வைத்து, நமது நிர்வாகிகளுக்கு வாய்ப்பளித்த நம் கழகத் தலைவர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியையும், வெற்றிபெற்ற நிர்வாகிகளுக்கு பாராட்டுகளை��ும் இந்தக் கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது.
#கழக_இளைஞர்_அணி