#Maridhas Speaks 👀
After #Vijay entered politics, Maridhas claims that negative campaigns against Tamil films declined, alleging coordinated online networks targeted films with negative reviews.
He highlights the impact such campaigns could have on Tamil cinema and its lakhs of workers. 🎬
#Jailer2
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தில் மலேசியாவில் ஆராய்ச்சி செய்து வரும் மாணவர் பாரதிதாசன் இன்று என்னைச் சந்தித்தார். #DravidianModel அரசும் கழகமும் செய்த உதவிகளுக்கு நன்றி சொல்லி மகிழ்ந்தார்.
இவரைப் போல இன்னும் பல முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவர்கள் இந்தத் திட்டத்தால் பயனடைந்து வருவதைக் கேட்டுப் பெருமை கொண்டேன்.
ஆண்டிப்பட்டியில் இருந்து உலகப் பல்கலைக்கழகத்தில் அவர் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சி குறித்து ஆர்வம் மேலிடக் கேட்டேன்.
பாரதிதாசன் போன்ற நம் மாணவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளைத் தற்போதைய அரசும் தொடர்ந்து வழங்கி ஊக்குவித்திட வேண்டும்.
🔥🔥🔥👏👏👏👏 @tnpoliceoffl@TNpolice_cz
Kudos to Tamil Nadu Police for taking swift action against the scam! 🙏 Thanks for hearing my earlier request and to the entire social media community for making this post viral. Together, we made a difference! ❤️ Thank you, everyone, and special thanks to our police! 👏
50,000 முதலீடு; ரூ.4 லட்சம் லாபம்...Forex Trading-ல் மோசடி - 3 பேர் அதிரடி கைது!
ஒரு வாடிக்கையாளர் சந்தித்த உண்மைச் சம்பவம்:
2016-ஆம் ஆண்டிலிருந்து ஒரு வாடிக்கையாளர் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை ஆன்லைன் மூலம் எடுத்து எந்தத் தவறும் இல்லாமல் தொடர்ந்து ஆண்டுதோறும் பிரீமியம் செலுத்தி வந்திருக்கிறார். பாலிசி வாங்கும்போதே தனக்கு இருந்த நீரிழிவு நோய் (Diabetes) மற்றும் ரத்த அழுத்தம் (Hypertension) போன்ற உடல்நலப் பிரச்சினைகளை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவரது மனைவி உடல்நலக் குறைவால் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் (Superspeciality Hospital) அனுமதிக்கப்பட்டார். அந்த இக்கட்டான சூழலில், பாலிசிதாரர் பணமில்லா சிகிச்சைக்காக (Cashless Facility) விண்ணப்பித்தபோது நிறுவனத்திடமிருந்து அதிர்ச்சிகரமான பதில் வந்தது.
அதாவது தற்போது உள்ள ஆவணங்கள் போதுமானதாக இல்லை, அதனால் பணமில்லா சிகிச்சையை வழங்க முடியாது எனவே பணத்தைக் கட்டிவிட்டுப் பின்னர் ரீஇம்பர்ஸ்மென்ட் (Reimbursement) மூலம் கோருங்கள் என்று கூறிவிட்டார்கள். எந்த ஆவணங்கள் விடுபட்டுள்ளன அல்லது தேவைப்படுகின்றன என்ற தெளிவான விளக்கத்தைக் கூட நிறுவனம் முறையாக அளிக்கவில்லை.
மனைவி மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் இருக்கும்போது, ஒருபுறம் குடும்பத்தினரின் மன உளைச்சல், மறுபுறம் திடீரென ஏற்பட்ட நிதி நெருக்கடி என அந்த வாடிக்கையாளர் பெரும் அவதிக்குள்ளானார். 8 ஆண்டுகள் நம்பிக்கையுடன் பிரீமியம் செலுத்தியும், ஆபத்து நேரத்தில் கிளைம் செய்ய யாரும் உறுதுணையாக இல்லாதது குறித்து அவர் தனது வேதனையை சொன்னார்.
யோசித்து பாருங்கள்
ஒரு வாடிக்கையாளர் 2016-லிருந்து BP, Sugar விபரங்களைச் சரியாகக் கூறி பிரீமியம் செலுத்தியும், மருத்துவமனையில் மனைவி அனுமதிக்கப்பட்ட அவசர சூழலில் ஆவணங்கள் போதாது என்று சொல்லி மருத்துவ காப்பீட்டு நிறுவனம் Cashless மறுத்துள்ளது.
எந்த ஆவணம் தேவை என்ற விளக்கமும் இன்றி ரீஇம்பர்ஸ்மென்ட் செய்யச் சொல்வது குடும்பத்திற்குப் பெரும் மனவேதனை.
மருத்துவமனை வாசலில் இத்தகைய அவசர நெருக்கடியில் நிற்கும்போது, நிறுவனத்திடம் பேசி ஆவணங்களைச் சரிசெய்து தர ஓர் அர்ப்பணிப்புள்ள இன்சூரன்ஸ் ஏஜென்ட் நம் பக்கம் இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது
#JUSTIN திருவேற்காட்டில் ஆன்லைன் டிரேடிங் மோசடி: 3 பேர் கைது
ஆன்லைன் டிரேடிங்கில் அதிக லாபம் பார்ப்பதாக வீடியோ வெளியிட்டு, அதற்கு பயிற்சி அளிப்பதாக கூறி சுமார் 40 பேரிடம் தலா ரூ.40,000 வசூலித்து மோசடி செய்த புகாரில் 3 பேரை கைது செய்த ஆவடி சைபர் கிரைம்
#Thiruverkadu #onlinetrading #CyberCrime #News18Tamilnadu | https://t.co/1SaYcEmmws
மக்களிடம் ஏற்கனவே பன்மடங்கு அதிகமாக மின்கட்டணம் வசூலித்து வரும் நிலையில், ஓர் அலகு மின்சாரம் 35 ரூபாய்க்கு தனியாரிடம் வாங்கினால் இன்னும் எத்தனை மடங்கு அதிகமாகக் கட்டணத்தை உயர்த்தப்போகிறீர்கள்? மீண்டும் தனியாரிடம் மின்சாரம் வாங்குவது கையூட்டிற்காகவா?
@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழ்நாட்டில் நிலவும் மின்பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காகத் தனியார் நிறுவனங்களிடமிருந்து ஓர் அலகு மின்சாரத்தைச் சுமார் 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய தவெக அரசு முடிவெடுத்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அரசின் சொந்த மின் உற்பத்தி திட்டங்களை வலுப்படுத்தாமல், அதிக விலை கொடுத்து தனியாரிடம் மின் கொள்முதல் செய்வது வன்மையான கண்டனத்திற்குரியது.
தவிர்க்க முடியாத அடிப்படைத் தேவையாக உள்ள மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் நீண்டகாலமாக பெரிய முதலீடு ஏதும் செய்யாமல் முந்தைய திமுக, அதிமுக அரசுகள் அதிக விலை கொடுத்து தனியாரிடம் மின்சாரம் வாங்கியதால் அரசுக்கு பல்லாயிரம் கோடிகள் இழப்பு ஏற்பட்டு, மின்வாரியம் 2 இலட்சம் கோடிகள் அளவிற்கு கடனில மூழ்கியுள்ளது. அதையே தவெக அரசும் தொடர்ந்தால் மேலும் மேலும் கடன்தான் அதிகமாகும். உற்பத்தியில் முதலீடு செய்வதுதானே நிலையான தீர்வை நோக்கி நகரும். ஒவ்வொரு முறையும் தனியாரிடம் மின்சாரம் வாங்குவதையே தீர்வாகக் கூறிக்கொண்டிருந்தால், தமிழ்நாடு மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைவது எப்போது? இந்தப் பிரச்சினைக்கு நிலையான தீர்வு எப்போது வரும்? அதற்கான திட்டமும் காலக்கெடுவும் எங்கே? மின் உற்பத்திக்கு அணு மின் திட்டமும், அனல் மின் திட்டமும் மட்டும்தான் உள்ளதா? சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத சூரிய ஒளி, காற்றாலை, கடல் அலை உள்ளிட்ட மாற்று மின்பெருக்கத் திட்டங்களே இல்லையா? அவற்றில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தாதது ஏன்?
கடந்த சட்டமன்றத்தேர்தல் பரப்புரையின்போது, மின் உற்பத்தியில் கவனம் செலுத்தாமல் கையூட்டுக்காக (கமிசன்) திமுக அரசு தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதாக குற்றஞ்சாட்டிய முதலமைச்சர் விஜய் அவர்கள், இன்று தனது ஆட்சியில் அதைவிட அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது யாரிடம் கையூட்டு (கமிசன்) வாங்க? தனியாரிடம் மின்சாரம் வாங்குவது ஊழல் முறைகேடுக்கு வழிவகுத்தது என்று குற்றஞ்சாட்டிய முதல்வர் விஜய் அவர்கள், அதைவிட அதிக விலை கொடுத்து மின் கொள்முதல் செய்வது ஏன்? அன்று தவறு என்று சொன்ன கொள்கை, இன்று ஆட்சிக்கு வந்ததும் சரியாகிவிட்டதா? 2021 முதல் 2026 வரை திமுக ஆட்சியில் மின்சாரம் ஓர் அலகு 4.85 ரூபாய் முதல் 5.85 ரூபாய் வரை அளவிற்குத் தனியாரிடம் வாங்கப்பட்டது. அவசரத் தேவைக்காக அதனை 21 ரூபாய் அளவிற்கு உயர்த்தி வாங்கிய பொழுது திமுக அரசை கடுமையாக எதிர்த்தோம். ஆனால், முந்தைய திமுக ஆட்சியின் கொள்முதல் விலையுடன் ஒப்பிடும்போது தற்போதைய தவெக அரசின் கொள்முதல் விலை பன்மடங்கு அதிகம் உயர்ந்துள்ளது எப்படி? அதற்கான நியாயத்தை மக்களிடம் விளக்க தவெக அரசு தயாரா?
தவெக ஆட்சிக்கு வந்து, கடந்த 5 மாதத்தில் மின்கட்டணம் பல மடங்கு அதிகமாக வசூலிப்பதாக அல்லல்பட்டு மக்கள் போராடி வரும் நிலையில், இப்பொழுது ஓர் அலகு 35 ரூபாய் கொடுத்து தனியாரிடம் மின் கொள்முதல் செய்தால், அதனை காரணமாக வைத்து மேலும் எத்தனை மடங்கு மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை வதைக்கப்போகிறீர்கள்? மின்தேவை அதிகரிப்பதை முன்கூட்டியே கணித்து, உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது அரசின் அடிப்படைக் கடமையல்லவா? பற்றாக்குறை ஏற்பட்ட பிறகு அவசரமாக அதிக விலைக்கு வாங்குவதற்கு அரசு எதற்கு? நிர்வாகம் எதற்கு? தனியாக மின்துறைதான் எதற்கு?
அரசினுடைய மின் நிலையங்களில் நிறுவப்பட்ட உற்பத்தித்திறன் எவ்வளவு? தற்போது பயன்படுத்தப்படும் திறன் எவ்வளவு? முழுமையாக உற்பத்தி செய்ய முடியாததற்கான காரணங்கள் என்ன? தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலகத்திலேயே, மின்வெட்டு ஏற்படும் அளவிற்குத் தமிழ்நாடு மிகமோசமான நிலையை எட்டியுள்ளது. அவற்றைச் சரிசெய்ய தவெக அரசு இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? அவற்றையெல்லாம் செய்யாமல் ஆய்வு என்ற பெயரில் மின்வாரிய தலைமை அலுவலகத்திற்கு முதலமைச்சர் சென்று வந்தது தங்கள் கட்சியின் விர்சுவல் வாரியர்ஸ் ரீல்ஸ் போடுவதற்கு மட்டும் தானா?
மின்வெட்டால் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அந்த அவசரத் தேவையைக் காரணமாக்கி எந்த விலையிலும் மின்சாரம் வாங்கலாம் என்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. குறைந்த செலவில் மின்சாரம் பெறுவதற்கான மாற்று வாய்ப்புகள் ஆராயப்பட்டனவா? கொள்முதல் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்பட்டது? எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து, எவ்வளவு மின்சாரம், எத்தனை நாட்களுக்கு வாங்கப்படுகிறது? இதனால் ஏற்படும் மொத்தக் கூடுதல் செலவு எவ்வளவு? ஒப்பந்தங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தூயசக்தி என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் தவெக அரசு வெளிப்படையாகப் பொதுவெளியில் அறிவிக்க வேண்டும்.
இந்தக் கூடுதல் செலவை எப்படியாயினும் நாளை மின்கட்டண உயர்வாக மக்கள் தலையில் சுமத்தப் போகிறீர்கள். ஆக அரசின் திட்டமிடல் குறைபாட்டிற்காக எளிய மக்களும் விவசாயிகளும் சிறு தொழில்முனைவோரும் கூடுதல் விலை கொடுக்க வேண்டுமா? தனியார் மின் நிறுவனங்களின் வருமானத்தை உயர்த்துவதற்கா மக்கள் உங்களுக்கு அதிகாரத்தை வழங்கினார்கள்? என்ற என்னுடைய கேள்விகளுக்கு தவெக அரசிடம் என்ன பதில் உள்ளது?
ஆகவே, அரசின் மின் நிலையங்களைச் சீரமைத்தல், நிலுவைத் திட்டங்களை நிறைவேற்றுதல், புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் மாற்று மின் உற்பத்தி திட்டங்களையும், மின்சேமிப்பு வசதிகளையும் விரிவுபடுத்துதல், மின் விநியோக இழப்புகளைக் குறைத்தல் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
அதிக விலையிலான மின் கொள்முதல் முடிவை உடனடியாக மறுஆய்வு செய்து, தடையற்ற மின்சாரத்தைக் குறைந்த செலவில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்வதோடு, கூடுதல் கொள்முதல் செலவை மக்கள்மீது சுமத்தக்கூடாது என்றும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
"மின்வெட்டு குறித்தும் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடந்த பல மாதங்களாக எச்சரித்து வந்தோம். அப்போதே சுதாரித்து உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். மின்துறை அமைச்சர் பஞ்சாபைக் காட்ட, முதலமைச்சரோ இலண்டன் பறந்துவிட்டார். இப்போது, கடைசி நிமிடத்தில் கதவைத் தட்டி, யூனிட்டுக்கு 35 ரூபாய் கொடுத்து வெளிச்சந்தையில் வாங்கப் போகிறார்களாம். இது யார் வீட்டுக் காசு சார்? அ.தி.மு.க.வில் இருந்து மேலும் 15 பேரை purchase செய்யப் போகிறோம் என்று வேறு வெட்கமே இல்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறீர்களே? அதற்குப் பணம் போதாமல்தான் மின்சாரம் வாங்குவதில் ஊழல் நடக்கிறதா என மக்கள் மனதிலும் கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன." - மு.க.ஸ்டாலின்
#MKStalin | #DMK | #TVK | #Vijay
திமுக ஒரு யூனிட் 20 ரூபாய்க்கு வாங்கிய மின்சாரத்தை, விஜய் அரசு 35 ரூபாய் என பில் போட்டு வாங்கியதன் மூலம் யூனிட்டுக்கு 15 ரூபாய் ஊழல் செய்திருக்கிறது.
ஒரு நாளைக்கு 3கோடியே 25 லட்சம் யூனிட் தேவைப்படுகிறது எனில் 3,25,00,000 * 15 = 48,75,00,000
கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 50 கோடி ரூபாயை ஊழல் பணமாக தூய ஆட்சியில் அமைச்சர் நிர்மல் குமார் சம்பாதிக்கிறார்.
இதை விட பெரிய வெடியை வைத்திருப்பது தவெக செய்தி தொடர்பாளர் அனந்தஜித் தான்.
அவர் ஒரு யூனிட், 5 ரூபாய் தான் வெளி சந்தையில் என பேசி இருக்கிறார். அதன்படி பார்த்தால் ஒரு யூனிட்க்கு 30 ரூபாய் ஊழல் செய்கிறது தவெக.
எனில் 3,25,00,000 * 30 =97,50,00,000
கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் ஒரு நாளைக்கு ஊழல் செய்கிறது தூய ஆட்சி…
இது எதையும் நான் சொல்லவில்லை… அமைச்சரும் தவெக செய்தி தொடர்பாளரும் கொடுத்த வாக்குமூலங்கள் இருக்கிறது.
35 ரூபாய் என Accurate ஆக விலைப்பட்டியலுடன் அமைச்சர் பேசியுள்ள பழைய வீடியோ இணைப்பு கீழே:
ஏற்கெனவே குறைந்த விலையில் மின்சாரம் வாங்கிய ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு, இப்போது ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35க்கு வாங்குவது நிர்வாகத் திறமையின்மையா அல்லது பெரும் ஊழலா? அல்லது இரண்டுமா? - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிவு
#PalanivelThiagaRajan | #CTRNirmalKumar | #CMVijay
Corporate சில்லறைகள்…
Layoff ஆகி பத்து மாசம் ஆயிடிச்சி. இதுவரை வேலை எதுவும் கிடைக்கல.
Market ரொம்ப மோசமா இருக்கு. வயசு, சம்பளம் - இந்த ரெண்டும் தான் காரணம் எனக்கு.
ரெண்டு மூணு நிறுவனங்கள் external consultant ஆ வரீங்களா ன்னு கேட்டாங்க. Discussions நடந்துது. அதுக்கப்புறம் எல்லாம் முடியுற நேரத்துல “உங்களுக்கு இவ்ளோ காசு குடுக்குறதுக்கு, நாங்க எங்க payroll லேயே ஒருத்தர வேலைக்கு வச்சிக்குறோம்”ன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க.
இத முன்னாடியே சொல்லியிருந்தா பரவாயில்ல. Problem statement பார்த்து, analyze பண்ணி, solution design எல்லாம் முடிச்சி submit பண்ண பிறகு இப்படி சொல்றாங்க. என்னதான் NDA sign பண்ணியிருந்தாலும் நான் குடுத்த solution அ தான் implement பண்ண போறாங்க. நல்லாவே தெரியும். தெரிஞ்சும் ஒன்னும் பண்ண முடியல.
எவ்ளோ பெரிய corporate பதவியில இருந்தாலும் இவ்ளோ சில்றத்தனமா நடந்துக்குறாங்க. என்ன பண்றது?
இதுக்கு முன்னாடி ஒருத்தர், first set of டிஸ்கஷன்ஸ் நடந்துக்கிட்டு இருக்கும்போது ஒரு sample problem ஒன்னு சொல்லி, இதுக்கு உங்க solution என்ன ன்னு கேட்டு அதுக்கு என்னோட பதிலை சொல்ல சொன்னார். நானும் சொன்னேன். அதுக்கப்புறம் அவங்க கிட்டேர்ந்து எந்தவொரு communication ம் வரல. 6 மாசம் கழிச்சி அந்த நிறுவனத்துல வேற ஒருத்தர் கிட்ட casual ஆ பேசிக்கிட்டு இருந்தப்ப, முன்னாடி மீட்டிங் ல நான் சொன்ன அந்த சொல்யூஷன் அ கேட்டவர், அத அவரோட idea ன்னு சொல்லி, அத implement பண்ணி, போனஸ், ப்ரோமோஷன் எல்லாம் வாங்கிட்டாரு. கிட்டத்தட்ட $2M in savings is what my solution gave them.
இதுவே வெளிநாடு ன்னா இந்த மாதிரியெல்லாம் செய்ய பயப்படுவாங்க. நம்ம நாட்டுல இதெல்லாம் சாதாரணம் ஆ இருக்கு. No legal documentation is preventing this from happening.
என்ன தான் பண்றது இதுக்கு???
🚨 "மோடி, அம்பானி பிரச்சனை இல்ல... இது பில்லியன் டாலர் சாட்டிலைட் கணக்கு!" - எலான் மஸ்க் இவ்வளவு பதறுவது ஏன் தெரியுமா? சாட்டிலைட் எகனாமிக்ஸின் நிஜமான பகீர் பின்னணி! 🛰️💰🇮🇳🇺🇸
இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கான அனுமதி தள்ளிப்போனதும், எலான் மஸ்க் ஆத்திரப்பட்டு ட்வீட் போடுவதையும் கூச்சலிடுவதையும் பார்த்துட்டு, "அட, இது ஏதோ அம்பானி-மஸ்க் மோதல்" அல்லது "அரசியல் ஈகோ" என்று பலர் மேலோட்டமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், இதற்குப் பின்னால் சர்வதேச ஊடகங்கள் பேசத் தவறிய பல பில்லியன் டாலர் 'சாட்டிலைட் எகனாமிக்ஸ்' (Satellite Economics) நிதி விவகாரம் ஒளிந்திருக்கிறது! அந்த அதிர்ச்சி தரும் கணக்குகளைப் பார்த்தால், எலான் மஸ்க் ஏன் தூக்கமில்லாமல் தவிக்கிறார் என்பது அப்பட்டமாகப் புரியும்!
பலரும் கவனிக்கத் தவறிய அந்த 'பில்லியன் டாலர்' நிதி கணக்கு! 📊📉👇
1. ⏳ 5 முதல் 7 ஆண்டுகளில் காலாவதியாகும் செயற்கைக்கோள்கள் (Perishable Assets):
ஸ்டார்லிங்க் இயக்குவது பூமியின் கீழ்வட்டப் பாதையில் (LEO) சுற்றும் லட்சக்கணக்கான கோடி மதிப்பிலான மூலதன நெட்வொர்க். இதில் உள்ள ஒவ்வொரு செயற்கைக்கோளின் ஆயுட்காலமும் வெறும் 5 முதல் 7 ஆண்டுகள் மட்டுமே!
அதன் பிறகு அவை வளிமண்டலத்தில் எரிந்து சாம்பலாகிவிடும்; புதிய சாட்டிலைட்டுகளை ஏவ வேண்டும்.
இந்தியாவில் சந்தை அனுமதி கிடைக்காமல் வீணாகும் ஒவ்வொரு மாதமும், இந்த மாபெரும் முதலீட்டில் கொட்டிக்கிடக்கும் வருவாயை எலான் மஸ்க் அநியாயமாக இழந்து கொண்டிருக்கிறார்!
2. 🛰️ அளப்பரிய இழப்பு (Unused Capacity is Lost Forever):
வானில் சுற்றும் செயற்கைக்கோள் இந்தியாவின் வான்பரப்பைக் கடக்கும்போது, அதை வாங்குவதற்கு இந்திய வாடிக்கையாளர் இல்லை என்றால், அந்த அலைவரிசைத் திறன் (Capacity) வீணாகிறது. பஸ் காலியாக ஓடினாலும் டீசல் செலவு ஆவது போல, சாட்டிலைட் சும்மா சுற்றினாலும் அதன் பராமரிப்புச் செலவு நின்றுகொண்டே இருக்கிறது!
3. 💸 இந்தியாவின் மெகா சந்தை வாய்ப்பு (Massive Cash Machine):
இந்தியாவில் சாட்டிலைட் பிராட்பேண்டிற்கு இருக்கும் வாய்ப்பு கற்பனை செய்ய முடியாதது:
>>> வெறும் 10 லட்சம் (1 Million) சந்தாதாரர்கள் மாதம் ₹2,000 செலுத்தினால் கூட, ஆண்டுக்குக் கிடைக்கும் வருமானம் ₹2,400 கோடி!
>>> அதுவே 50 லட்சம் (5 Million) வாடிக்கையாளர்களாக மாறினால், ஆண்டுக்குக் கொட்டப்போகும் வருமானம் ₹12,000 கோடி!
இந்த மாபெரும் தங்கச் சுரங்கத்தின் வாசல் இன்னும் திறக்கப்படாமல் இருப்பதே மஸ்க்கின் அவசரத்திற்குக் காரணம்.
4. 🚀 2030-க்குள் $1.9 பில்லியன் சந்தை:
2030-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் சாட்டிலைட் பிராட்பேண்ட் சந்தை மட்டும் சுமார் 1.9 பில்லியன் டாலராக (சுமார் ₹16,000+ கோடி) உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது வெறும் வீட்டு இணையதள இணைப்பு மட்டுமல்ல; இந்திய விமானப் போக்குவரத்து (Aviation), கப்பல் போக்குவரத்து (Maritime), பெருநிறுவனங்கள் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் கொட்டிக்கிடக்கும் அசுர வர்த்தகம்!
5. ⚖️ நிலைத்த செலவுகளும்... அளவிட முடியாத அழுத்தமும்:
ஏற்கனவே விண்வெளியில் கொட்டிவிட்ட மாபெரும் நிலையான செலவுகளை (Fixed Costs) மீட்டெடுக்க வேண்டுமானால், உடனடியாகப் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை எகிறியாக வேண்டும். அந்த வாடிக்கையாளர்கள் இந்தியாவில் மட்டுமே கொட்டிக்கிடக்கிறார்கள்!
இந்தியாவின் நிலைப்பாடு: "விதிமுறைகளில் சமரசம் கிடையாது!" 🛑🇮🇳
எலான் மஸ்க்கிற்கு இவ்வளவு அவசரம் இருக்கலாம்; ஆனால், ஒரு இறையாண்மை கொண்ட தேசமாக இந்தியாவின் நிலைப்பாடு மிகத் தெளிவாக உள்ளது:
>>> சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்:
ஸ்டார்லிங்க் ஆக இருந்தாலும் சரி, இந்திய நிறுவனங்களான ஜியோ (Jio) அல்லது ஏர்டெல்லின் ஒன்வெப் (OneWeb) ஆக இருந்தாலும் சரி — தேசியப் பாதுகாப்பு மதிப்பீடுகள் (Security Clearances) மற்றும் உள்ளூர் ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டுத்தான் ஆக வேண்டும். யாருக்கும் விசேஷச் சலுகைகள் கிடையாது!
>>> இறையாண்மை விற்பனைக்கல்ல:
எலான் மஸ்க்கிற்கு இந்திய சந்தை மிக அவசியமாகத் தேவைப்படலாம்; ஆனால், ஒரு கார்ப்பரேட் கோடீஸ்வரனின் வணிக அவசரத்திற்காகத் தனது நாட்டின் தேசியப் பாதுகாப்பையோ, தரவு இறையாண்மையையோ இந்தியா விட்டுக்கொடுக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை!
புவிசார் மற்றும் வணிகப் பார்வை:
இங்கு மோதிக்கொள்வது அம்பானியோ, மோடியோ அல்ல. ஒருபுறம், பில்லியன் கணக்கில் முதலீடு செய்துவிட்டு சாட்டிலைட் ஆயுள் முடிவதற்குள் லாபம் பார்க்கத் துடிக்கும் ஒரு தனியார் கோடீஸ்வரனின் வணிக அவசரம் (Commercial Urgency); மறுபுறம், நாட்டின் தகவல் தொடர்பையும் வான்வெளியையும் அந்நிய சக்திகளுக்குத் தாரைவார்த்துவிடக் கூடாது என்ற ஒரு தேசத்தின் உத்திசார் முன்னுரிமை (Strategic Priority)!
அமெரிக்காவில் வாஷிங்டனைத் தனது பண பலத்தால் மிரட்டுவது போல, இந்தியாவையும் மிரட்டிவிடலாம் என்று எலான் மஸ்க் தப்புக்கணக்குப் போட்டால், சட்டம் தன் கடமையைச் செய்யும் வரை அவரது சாட்டிலைட்டுகள் இந்திய வான்வெளியில் வருமானம் இல்லாமல் சும்மாதான் சுற்றிக்கொண்டிருக்க வேண்டும்!
உங்களுடைய கருத்து என்ன?💬
எலான் மஸ்க்கின் இந்த அவசரத்திற்குப் பின்னால் இருக்கும் 'சாட்டிலைட் எகனாமிக்ஸ்' இழப்புக் கணக்கை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? ஒரு கோடீஸ்வரனின் வணிக நலன்களுக்காக இந்தியா தனது கடுமையான பாதுகாப்பு விதிகளைத் தளர்த்தாமல் இருப்பது சரியா? கமெண்ட்டில் தட்டி விடுங்க! 👇
சர்வதேச கார்ப்பரேட் உலகமும் இந்தியப் பொருளாதாரமும் இணைந்த இந்த ஆழமான நிதிக் கணக்கை உடனே உங்க நண்பர்களுக்கும் வாட்ஸ்அப் குரூப்களுக்கும் SHARE பண்ணுங்க! தொடர்ந்து உலக நடப்புகளை எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் தெரிந்துகொள்ள பக்கத்தை FOLLOW பண்ணுங்க!🚀❤️
#ElonMusk #Starlink #SatelliteEconomics #SpaceX #LEOSatellites #TelecomIndia #RelianceJio #OneWeb #DigitalSovereignty #NationalSecurity #TechNewsTamil #GeopoliticsTamil #TamilNews #CurrentAffairsTamil #TrendingTamil #TamilInstagram #ViralNewsTamil