മണ്ണും മനുഷ്യരും ഒന്നായി ജീവിച്ച ഒരു കാലത്തിന്റെ ഓർമ്മ പുതുക്കലാണ് #ഓണം.
ജന്മം കൊണ്ട് ആരും ഉയര്ന്നവരോ താഴ്ന്നവരോ അല്ല. എല്ലാവർക്കും എല്ലാം എന്നതാവട്ടെ നമ്മുടെ ലക്ഷ്യം. മാവേലിയെ വീഴ്ത്തപ്പെട്ടവനായി അല്ല, ജനങ്ങളുടെ ഉള്ളിൽ കുടികൊള്ളുന്ന, സമൃദ്ധിയുടെയും സന്തോഷത്തിന്റെയും മന്നനായി ആഘോഷിക്കാം.
മാവേലിയുടെ മണ്ണിൽ തുല്യത പൂക്കട്ടെ. ഏവർക്കും ഹൃദയം നിറഞ്ഞ #ഓണാശംസകൾ!
#Onam #HappyOnam #OnamWishes
மண்ணும் மக்களும் ஒன்றாக வாழ்ந்த ஒரு காலத்தின் நினைவைப் புதுப்பிப்பதே ஓணம்.
பிறப்பால் எவரும் உயர்ந்தவரும் அல்லர், தாழ்ந்தவரும் அல்லர். எல்லார்க்கும் எல்லாம் என்பதே நம் இலக்காகட்டும். மாவேலியை வீழ்த்தப்பட்டவராக அல்லாமல், மக்களின் உள்ளங்களில் வாழும், வளமும் மகிழ்ச்சியும் நிறைந்த மன்னனாகக் கொண்டாடுவோம்.
மாவேலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும். அனைவருக்கும் உளம் நிறைந்த ஓணம் வாழ்த்துகள்!
தே.மு.தி.க நிறுவன தலைவர் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் இன்று!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீது அளவற்ற அன்பும் - கழகத்தலைவர் @mkstalin அவர்களுடன் நெருங்கிய நட்பும் கொண்டிருந்தவர்.
ஏழை எளிய மக்களின் நலனுக்காக களத்தில் இறங்கி உழைத்த மனிதநேயர் அண்ணன் கேப்டன் அவர்களின் பணிகள் என்றென்றும் நிலைத்திருக்கும்!
அவர் புகழ் ஓங்கட்டும்!
#CaptainVijayakant
ஏழை மக்களின் மேல் கொண்ட அளவற்ற அன்பால் அவர்களின் நெஞ்சத்தில் நீங்காத நினைவாய் வாழும் எனது அருமை நண்பரும் தே.மு.தி.க. நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் இன்று!
அவரின் கனவுகளை நனவாக்க உழைக்கும் தே.மு.தி.க. தோழர்களுக்கும் அவர்களை வழிநடத்தும் அன்புச் சகோதரி திருமதி @PremallathaDMDK அவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கேப்டன் அவர்களின் புகழ் நீடுவாழ்க!
ஆட்சியில் இருந்தாலும் - இல்லாவிட்டாலும் என்றைக்கும் மக்களோடு மக்களாக நிற்பது திராவிட முன்னேற்றக் கழகம்!
அந்த வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்டக்கழகம் சார்பில் துறைமுகம் தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் இன்று பங்கேற்றோம்.
கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி - அன்னை தயாளு அம்மாள் தொண்டு நிறுவனத்தில் பயிற்சி முடித்த மகளிர் - மாணவர்கள் - விளையாட்டு வீரர்கள் - மாற்றுத்திறனாளிகள் - திருநர் உள்ளிட்டோருக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினோம்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வளர்த்தெடுத்த தமிழ்நாட்டை - கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் சென்றது.
முன்னோக்கிச் சென்ற தமிழ்நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்லும் சர்க்கஸ் கூட்டத்தின் ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்தோம்.
கலைஞர் அவர்கள் காட்டிய வழியில் - தலைவர் அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டை மீட்கும் பணியில் கழகம் என்றும் முன் நிற்கும்.
கலைஞர் புகழ் ஓங்கட்டும்!
@PKSekarbabu@Dayanidhi_Maran@PriyarajanDMK
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை ரத்து செய்திருக்கும் Sofa Model அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சென்னையில் பெருகி வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமான சரக்கு போக்குவரத்து - எதிர்காலத் தேவை போன்றவற்றின் அடிப்படையில், சென்னைக்கு 2-ஆவது விமான நிலையம் அவசியம் என்பதை உணர்ந்து, பரந்தூர் விமான நிலையத் திட்டம் கழக அரசால் உருவாக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு Airports Authority of India, Union Civil Aviation Ministry உள்ளிட்டவை ஆய்வு செய்து, அனுமதி தந்துவிட்டன.
இத்தகைய கடினமான அனுமதிகளைப் பெறுவது, கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குச் சந்தை மதிப்பை விட 3 மடங்கு அதிகமான இழப்பீடு, மறு குடியமர்வு போன்ற முக்கியமான பணிகள் அனைத்தும் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் முதலமைச்சராக இருந்த போதே நடைபெற்றன.
இதற்காக அரசுத் தரப்பில் பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவையெல்லாம் நடந்த பிறகு, அற்ப அரசியல் காரணங்களுக்காக திட்டத்தையே கைவிடுகிறேன் என்று சொன்னால், அது அரசிற்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்துவதால், சென்னையை சுற்றியுள்ள தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களை நோக்கி வெளியேறும் அபாயமும், புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வர தயங்கும் சூழலும் எழுந்துள்ளன.
ஆகவே, தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தையும் - தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, பரந்தூர் விமான நிலைய பணிகளைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். #ParandurAirport
தஞ்சை தெற்கு மாவட்டக்கழக வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் அண்ணன் வெங்கடேசன் - ஸ்ரீதேவி ஆகியோரின் அன்பு மகன் V.ராம்பிரசாத் – V.நந்தினி (எ) கற்பகவள்ளி இணையரின் திருமணத்தை பட்டுக்கோட்டை கொண்டிக்குளம் பகுதியில் இன்று நடத்தி வைத்தோம்.
இல்வாழ்வில் இணைந்துள்ள இணையர், தந்தை பெரியாரும் - பகுத்தறிவும் போல, பேரறிஞர் அண்ணாவும் - தமிழ்நாடும் போல, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் - கழகமும் போல, கழகத்தலைவர் அவர்களும் – உழைப்பும் போல பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம்!
@durai944@Anbil_Mahesh@TRBRajaa@Murasoli_tnj@KannaduraiDMK@peraiashok #PalanivelDMK @ilaiyadmk
தஞ்சை தெற்கு மாவட்டக்கழக தொண்டரணி துணை அமைப்பாளர் சகோதரர் பொன்.ரமேஷ் - முன்னாள் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் உஷாராணி இணையர், பட்டுக்கோட்டை நயினாங்குளம் பகுதியில் கட்டியுள்ள புதிய இல்லத்தை இன்று திறந்து வைத்தோம்.
புதிய இல்லத்தில் அவர்களின் வாழ்வு மென்மேலும் செழித்தோங்க வாழ்த்தி மகிழ்ந்தோம்.
@Anbil_Mahesh@KannaduraiDMK
#PalanivelDMK
இப்பதான் பார்க்க ஆரம்பிச்சேன். AI வச்சு கலைஞரோட வாழ்க்கை வரலாற ஒரு படம் மாதிரி அசத்தலா சொல்றாப்டி. வசனம்லாம் தெறிக்குது. அடுத்த எபிசோட் எப்ப வரும்னு ஆர்வத்த தூண்டுது!
Vignesh Krishnan கலக்குங்க 🔥
Link: https://t.co/FrRpc0Tisz
அடுத்த நூறு ஆண்டுகளுக்குக் கழகத்தின் பயணம் தொடர்வதற்கான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது செயற்குழு!
Bore அடிக்கிறது என அரசியலுக்கு வந்தவர்களல்ல நாம்; போராட வந்தவர்கள்!
Comeback கொடுப்பதில் Specialist-ஆன நாம், திரும்ப வருவோம்; வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்போம்!
முன்னாள் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அவர்களை
நட்பின் நிமித்தமாய்
நலம்கேட்கச் சென்றேன்;
பொன்னாடை அணிவித்தேன்
ஞானபீடத்தின் பெருமையறிந்து
வீட்டுக்கே வந்து வாழ்த்திய
அந்நாள் முதலமைச்சர்,
பெற்றுவந்த விருதுக்காக
மீண்டுமொரு
பொன்னாடை அணிவித்தார்
பொன்னாடைக்குப்
பொன்னாடை
“எதைக் கொடுக்கிறாயோ
அதையே பெறுவாய்”
என்ற முதுமொழி
என் மூளைக்குள் ஓடியது
ஒருவரை ஒருவர்
கொண்டாடிக் கொண்டோம்
சட்டமன்ற நேரடி ஒளிபரப்பை
முக்கால் மணிநேரம்
இருவரும் கண்டுகொண்டிருந்தோம்
"ஜே.சி.டி பிரபாகர்
சிறப்பாக நடத்துகிறார்
சட்டமன்றத்தை" என்றார்
தி.மு.க தலைவர்
"சட்டமன்றத்தின்
ஆட்ட நாயகன்" என்று
சமூக ஊடகங்கள்
சபாநாயகரைப் பேசுகின்றன
என்றேன்
"அப்படியா" என்றார்
ஓர் அழகான காஃபி
குடித்து முடித்து
வாழ்த்தி விடைகொண்டேன்
@mkstalin
இருப்போர், இலார் என எல்லோரையும் அரவணைத்து ஏற்றம் தரும் அன்னையான சென்னைக்கு வயது 387!
101 அடி பாலத்தின் மேல் நின்று குனிந்து பார்த்தாலும், விமானத்தில் அமர்ந்துகொண்டு எட்டிப் பார்த்தாலும், தரையில் இருந்து பார்த்தாலும், சாலைக்கு அடியில் ஓடும் வடிகால்களைப் பார்த்தாலும் சென்னையில் எங்கும் எங்கெங்கும் தி.மு.க.வின் சாதனைகள் இருக்கும்; தி.மு.க.வின் சாதனைகள் மட்டும்தான் இருக்கும்!
மேம்பாலங்கள், கோட்டங்கள், பூங்காக்கள், நவீன பேருந்து முனையங்கள், மெட்ரோ இரயில், IT Park, FinTech Tower, வானுயர்ந்து நிற்கும் மருத்துவமனை - நூலகக் கட்டடங்கள் எனக் கடந்த 60 ஆண்டுகாலச் சென்னை வரலாற்றை இரசித்து இரசித்துச் செதுக்கியவர்கள் நாங்கள்.
சட்டமன்ற உறுப்பினராக, மாநகரத் தந்தையாக, துணை முதலமைச்சராக, முதலமைச்சராக என அத்தனை நிலைகளிலும் சென்னையை வளர்த்தெடுத்தவன் என்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்!
தருமமிகு அன்புமிகு சென்னை வாழ்க!
#ChennaiDay #MadrasDay
விடுதலைப் போரில் பங்கேற்று வீரப்போர் புரிந்த ஒண்டிவீரன் அவர்களின் நினைவு நாள் இன்று!
அந்நியர் ஆதிக்கத்திற்கு எதிராகத் துணிச்சலுடன் போராடி, தமிழ் மண்ணின் வீர வரலாற்றில் அழியாத தடம் பதித்த மாவீரர் ஒண்டிவீரனின் புகழைப் போற்றுவோம்.
பூலித்தேவரின் படைத்தளபதியாக தென் தமிழ்நாட்டில் விடுதலைக்கான எழுச்சியை உருவாக்கிய ஒண்டிவீரன் அவர்களின் வீரமும் - தியாகமும் என்றும் நிலைத்திருக்கும்.
#ஒண்டிவீரன்
18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே ஆங்கிலேயப் படைகளுக்கு அடிபணிய மறுத்து, அவர்களை அடித்து விரட்டிய ஒப்பிலா வீரத்துக்குச் சொந்தக்காரரான ஒண்டிவீரன் அவர்களின் நினைவுநாள்.
பூலித்தேவரின் சிறந்த போர்ப்படைத் தளபதியாகவும் தென்னகத்தின் விடுதலை உணர்ச்சியை வெளிப்படுத்திய தென்மலைப் போர் நாயகனாகவும் திகழ்ந்த அப்பெருந்தீரரின் புகழ் அழியாது மக்கள் மனங்களில் வாழும்!
தி.மு.கழகத்தின் கடைக்கோடி உடன்பிறப்புக்கும் வாளும் - கேடயமுமாக திகழும், கழக சட்டத்துறையின் வடக்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்ற போது அதில் பங்கேற்றோம்.
கழகத்தினர் ஆளுங்கட்சிக்கு எதிராக பேசினால் கைது செய்வது; அதுவே, டெல்லி ஓனர்கள் பேசினால் கண்டுகொள்ளாமல் இருப்பது என பம்மி நிற்கும் டம்மி அரசின் தோல்விகளை மக்கள் மன்றத்திலும் - நீதிமன்றத்திலும் கழக வழக்கறிஞர் அணி அம்பலப்படுத்த வேண்டும் என்று உரையாற்றினோம்.
தமிழ்நாட்டு நலனுக்காகவும் - கழகத்திற்காகவும் பல வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளைப் பெற்றுத் தந்துள்ள கழக வழக்கறிஞர் அணியின் பணிகள் மென்மேலும் வேகமெடுக்கும் வகையில் உற்சாகமூட்டினோம்.
வழக்கறிஞர் அணியின் பணிகள் சிறக்க வாழ்த்தினோம்!
@DMKLegalWing@RSBharathiDMK@nrelango_dmk@PWilsonDMK
Wishing my dear friend @ArvindKejriwal a very happy birthday. India’s future will be built by those who have the resolve to look beyond the present and the determination to transform aspirations into lasting change.
May you continue to advance that larger vision with courage, purpose and an abiding faith in the promise of our people.
சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக்கேட்டதால், அரசுப்பள்ளியில் +2 படித்து வந்த மாணவர் தனுஷ், 30 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.
கோவையில் போதை கும்பலை தட்டிக் கேட்டதற்காக கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட, அடுத்த சில தினங்களில் சென்னையிலும் இத்தகைய கொடூரம் நடந்திருக்கிறது.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் இந்த அரசு எந்த அளவுக்கு தோற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கு தமிழ்நாட்டிலே தொடரும் கொலைகளே சாட்சி.
போதைப் பொருள் பயன்படுத்துவதையோ – விற்பதையோ அம்பலப்படுத்தினால், அவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்பது, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் விடப்படும் எச்சரிக்கை.
நிர்வாகத்திறனற்ற இந்த கோமாளி சர்க்காரை கண்டு சமூக விரோதிகளுக்குத் துளியும் பயமில்லை என்பதே இதற்கு காரணம்.
குறிப்பாக, பள்ளிகளில் – கல்லூரிகளில் இத்தகைய சம்பவங்கள் நடப்பதை அரசு கண்டும் காணாமல் வாயை மூடிக் கொண்டு இருப்பது வெட்கக்கேடு.
மாணவர் தனுஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்.
இத்தகைய தொடர் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி கல்லூரிகளில் போதைப் பொருள் பயன்பாடு இருக்கிறதா? அதற்கு என்ன காரணம்?
இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் உரிய முறையில் விசாரித்து இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், வன்முறை எதற்கும் தீர்வல்ல என்பதை உணர்த்தும் வகையில் மாணவர்கள் மத்தியில் Counselling வழங்கி போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
#சட்டம்_ஒழுங்கு
இந்தியத் திருநாட்டின் 80-வது விடுதலை நாள் இன்று!
விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய அனைத்து தியாகிகளையும் இந்நாளில் போற்றுவோம்.
பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள், இனங்களைக் கொண்ட மக்களின் ஒற்றுமையே நமது இந்தியாவின் பெருமை. இந்த பன்மைத்துவத்தை என்றும் பாதுகாப்போம்.
இந்திய ஜனநாயகத்தை மேலும் வலிமைப்படுத்தி, சமத்துவமும் சகோதரத்துவமும் நிறைந்த தேசத்தை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம்.
அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துகள்.
#IndependenceDay