விசிகவில் இருந்து தருமபுரி சட்டமன்ற உறுப்பினருக்கு கிடைத்த வாழ்த்து
விசிகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ் எஸ் பாலாஜி அவர்களின் துணைவியார் மருத்துவர் சர்மிளா அவர்கள் வெளியிட்டுள்ள காணொளியில்...
நேற்று சட்டமன்றத்தில் ஹீரோயின் யார் தெரியுமா முனைவர் Sowmiya Anbumani MLA அவர்கள் தான்
Hats Off to Sowmiya Anbumani - Doctor Sharmila
Video Courtesy: Sharmila Talkies
வாழ்த்துக் கூறிய மருத்துவர் சர்மிளா அவர்களுக்கு நன்றி 🙏
*எங்கள் மருத்துவர் அய்யாவின் நீண்ட நாள் கனவு ஒரு சொட்டு மது தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது ஒரு சொட்டு நீர் கடலில் கலக்கக்கூடாது காவிரியில் திறந்து விடப்படும் நீர் நேராக கடலில் யாருக்கும் பயன்படாமல் வீணாக கலக்கிறது. இதனை தடுக்கும் விதமாக காவிரியில் நூறு தடுப்பணையை கட்டுங்கள்
"கர்நாடக அரசால் புதிதாக கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள மேகதாது அணை கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கும் கீழாக, தமிழக எல்லைக்கு அருகில் அமையும். அந்த அணை மட்டும் கட்டப்பட்டிருந்தால் கபினி அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரும் கூட தமிழ்நாட்டுக்கு கிடைக்காது. ஹாரங்கி, ஹேமாவதி அணைகளில் இருந்து திறக்கப்பட்டு, கிருஷ்ணராஜ சாகர் அணை வழியாக காவிரியில் விடப்படும் தண்ணீரும் கூட மேகதாது அணையில் தடுக்கப்பட்டு விடும். மேகதாது அணையும் நிரம்பி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைப்பது என்பது எட்டாவது அதிசயமாகவும், குதிரைக் கொம்பாகவும் தான் இருக்கும்." - அன்புமணி ராமதாஸ்
#AnbumaniRamadoss | #PMK | #MekadatuDam | #Karnataka
@theeechatti யார்ரா இந்த கோமாளி உண்மை தானே அவர் சொல்லி இருக்காரு மேடம் சாதி புத்தி சாதி புத்தி என்று பேசினானே அப்ப எங்க போயிருந்தானுங்க ஏன் தலைவரே இப்படி எல்லாம் பேசுறீங்க எவனுமே கேட்கல அவனோட ட்விட்டர் அடியில போய் பார்த்தா ரிப்ளையே லாக் பண்ணி வைத்திருக்கிறான் அவன் எல்லாம் பேச வந்துட்டான்
🚨 ஊதியம் வழங்குவதற்குக் கூட பணமின்றி சி.எம்.டி.ஏ திவாலானது ஏன்?
சி.எம்.டி.ஏ செயல்பாடுகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!
— பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் நகர்ப்புற வளர்ச்சியை திட்டமிட்டு வழிநடத்தும் முக்கிய அமைப்பான சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA),
அடுத்த மாத ஊழியர்களின் ஊதியத்தை வழங்குவதற்குக் கூட நிதியின்றி தமிழக அரசிடம் ₹200 கோடி மானியம் மற்றும் நிதியுதவி கோரி கடிதம் எழுதியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
📌 முக்கிய தகவல்கள்:
🔸 சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் 5,904 சதுர கி.மீ. பரப்பளவில் நிலப்பயன்பாடு மற்றும் கட்டுமான அனுமதிகளை வழங்கும் அமைப்பே சி.எம்.டி.ஏ.
🔸 1972-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இவ்வமைப்பு 54 ஆண்டுகளாக தன்னிறைவு நிதி நிலையுடன் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.
🔸 தற்போது சி.எம்.டி.ஏ மீது சுமார் ₹3,500 கோடி கடன் பொறுப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
🔸 கட்டுமான அனுமதி கட்டணங்களே சி.எம்.டி.ஏ-வின் முக்கிய வருவாய் ஆதாரமாக இருந்த நிலையில், அதன் மீது ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான உட்கட்டமைப்பு பணிகள் சுமத்தப்பட்டதே இந்த நிதி நெருக்கடிக்குக் காரணம் என்ற கேள்வி எழுகிறது.
🔸 சென்னை மாநகரில் மேற்கொள்ள வேண்டிய உட்கட்டமைப்பு பணிகளை தமிழ்நாடு அரசும் சென்னை மாநகராட்சியும் மேற்கொள்ள வேண்டிய நிலையில், ஒழுங்குமுறை அமைப்பான சி.எம்.டி.ஏ மீது அந்தப் பொறுப்பை ஏன் சுமத்தினர்?
🔸 2025–26-ஆம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டும் செயல்படுத்தப்படாத திட்டங்களுக்கு, 2026–27 நிதியிலிருந்து சுமார் ₹2,000 கோடி ஒதுக்கி ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாக முன்பே குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.
❗ மக்கள் அறிய வேண்டிய கேள்விகள்:
✅ சி.எம்.டி.ஏ மூலம் உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டது யார்?
✅ எந்தெந்த ஒப்பந்தங்கள் யாருக்கு வழங்கப்பட்டன?
✅ அவற்றில் ஊழல் அல்லது முறைகேடுகள் நடந்தனவா?
✅ சி.எம்.டி.ஏ இன்று இந்த நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டதற்கான உண்மையான காரணம் என்ன?
📢 எனவே, சி.எம்.டி.ஏ-வின் நிதிநிலை, ஒப்பந்தங்கள், செலவுகள், கடன் பொறுப்புகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். அதே நேரத்தில், சி.எம்.டி.ஏ-வின் அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்படாமல் தொடர தேவையான நிதியையும் அரசு வழங்க வேண்டும்.
#PMK #பாமக #DrAnbumaniRamadoss #அன்புமணிராமதாஸ் #CMDA #சென்னை #Chennai #UrbanDevelopment #GoodGovernance #Transparency #WhitePaper #TamilNadu #தமிழ்நாடு #Accountability #CorruptionFreeGovernance #PeopleFirst #Development #PublicInterest #SaveChennai #GovernanceMatters
"சென்னையின் உயிர்நாடி பள்ளிகரணை சதுப்புநிலத்தை காப்பதற்கான மக்கள் இயக்கம்"
(Peoples Movement to Save Chennai's Lifeline Pallikaranai Wetland - Signature Campaign)
19.07.2026 ஞாயிறு காலை "சென்னையின் உயிர்நாடி பள்ளிகரணை சதுப்புநிலத்தை காப்பதற்கான மக்கள் இயக்கம் - கையெழுத்து இயக்கம்" சென்னை தி.நகர் பாண்டி பஜாரில் நடைபெறுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், நீரியல் வல்லுநர் எஸ். ஜனகராஜன், சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு, எக்ஸ்நோரா அமைப்பு, அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் பங்கேற்கிறார்கள்
நாள்: 19.07.2026 ஞாயிறு
நேரம்: காலை 10.00 மணி
இடம்: பாண்டி பஜார் (ரத்னா ஸ்டோர்ஸ் அருகில்), தி. நகர், சென்னை 17.
#SavePallikaranaiWetland
நம்ம கூட்டணி வெல்ல முடியாவிட்டாலும் நமது நோக்கம் தி.மு.க. ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பது தான்.. அதில் நாம் வென்று விட்டோம்.. த.வெ.கவிற்கு அதிக வெற்றி கொடுத்த மாவட்டம் சென்னை தான்.. அதை மனதில் வைத்து செயல்படுங்கள்.. தி.மு.க ஆட்சியில் நடந்த பல்வேறு ஊழல்களை சுட்டிக்காட்டி கோரிக்கை வைத்த அன்புமணி..
#Chennai | #Anbumani | #PMK | #Politics | #PolimerNews