#Maharajan is the best example of police attitude. If he could speak about someone judiciary then what will be the plight of common people 😤🤬 it may seems I'm stereotyping all the police, but sometimes it's hard to accept the fact
#JusticeForJayarajandBennicks#PoliceReformNow
11 Years of Arappor - Get together
ஊழல் ஒழிப்பு, மிக ஏழ்மையில் உள்ளவர்கள் அடிப்படை பிரச்ச்னைகளை தீர்க்க வேலை செய்வது, மோசமான தரம் இல்லாத சாலைகள் போன்ற குடிமைப் பிரச்சினைகளை தீர்க்க வேலை செய்வது, அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்கவும் அதன் நெறிமுறைகளான சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சுதந்திரம் நோக்கி வேலை செய்வது போன்ற பல செயல்பாடுகளின் 11 ஆண்டு பயணம் சாத்தியமானது தன்னார்வலர்கள் உங்களால் ! ஆதரவாளர்கள் உங்களால் !
வாங்க சந்திப்போம்! Register here if you are coming! வர விரும்புபவர்கள் இங்கே பதிவு செய்யலாம் !
https://t.co/4zzSZWSBtW
Date: 30.08.2026, Sunday
Time: 5 Pm to 7 Pm
Venue: Arappor office, Nungambakkam, Chennai
டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழக செய்யத் தவறியது:
முதல் முறையாக டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழக, தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்கள் மற்றும் சுகாதாராக் கல்விப்பயிற்சி நிறுவனங்களில் பணிபுரியும் பேராசிரியர் விவரங்களை வெளியிட்டுள்ளதை அறப்போர் இயக்கம் வரவேற்கிறது. அதே சமயம் பேராசிரியர்களின் பெயர்களை மட்டுமே வெளியிட்டு, பொது மக்களையும், மருத்துவ கல்வி பயிலும் மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றியதற்கு அறப்போர் இயக்கம், கண்டனத்தை பதிவு செய்கிறது.
முழுமையான அதாவது, பேராசிரியர்களுக்கான Unique ID, கல்வித்தகுதி, பணி அனுபவம், மேற்கொண்ட ஆராய்ச்சி கட்டுரை விவரங்கள் முக்கியமாக புகைப்படம் ஆகியவற்றை வெளியிட வேண்டும் என அறப்போர் இயக்கம் கோருகிறது. மருத்துவ கல்வி பிரிவுகளுக்கான பேராசிரியர்கள் (Faculty) விவரங்கள் வெளியிடப்பட்டுள்ள இணையதள முகவரி : https://t.co/IRJxGimEQH
அறப்போர் இயக்கம் மக்களிடம் கோருவது: முன்னாள் இந்நாள் மாணவர்கள், பெற்றோர்கள், சக பேராசிரியர்கள் தங்களுக்கு தெரிந்த போலியான பேராசிரியர்கள் விவரங்கள் இருந்தால் இணைப்பில் வழங்குக: https://t.co/HNjSdvyRhT
காணொளி : https://t.co/yBhV19OTDS
எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகத்தின் (Dr. M.G.R. Medical University) இணைவு அங்கீகாரம் பெற்ற, தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் சுமார் 13,000 பேராசிரியர்கள் விவரங்கள். பல்கலைக்கழகங்களின் வெளிப்படைத்தன்மை செயல்பாட்டிற்கு மற்றும் ஓர் மைல் கல்!
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பேராசிரியர்கள் மோசடியை தொடர்ந்து, நூற்றுக்கணக்கான மருத்துவ கல்வி மற்றும் சுகாதாரக் கல்வி பயிற்சி நிறுவனங்களுக்கு இணைவு அங்கீகாரம் வழங்கும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இணைவு அங்கீகாரத்திலும் மோசடி நடைபெற்றுள்ளதா?
என அறிய 10.08.2024 அன்று RTI தொடுக்கப்பட்டது. உரிய தகவல்கள் வழங்காத நிலையில் 29.10.2024 அன்று தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த தமிழ்நாடு தகவல் ஆணையம் 13.07.2026 அன்று விரிவான விசாரணை மேற்கொண்டது.
விசாரணையின் போது, RTI இல் கோரப்பட்ட தகவல்கள் எவ்வளவு அவசியமானது என எடுத்துரைக்கப்பட்டது. இதனை கேட்டுக்கொண்ட தமிழ்நாடு தகவல் ஆணையம், RTI இல் கோரப்பட்ட அனைத்து தகவல்களையும் 20.08.2026இக்குள் வழங்கவேண்டும் எனவும், பேராசிரியர் விவரங்கள் இணையத்தில் வெளியிடப்படவேண்டும் எனவும் 13.07.2026 அன்று உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழக நிர்வாகம், தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு ஆய்வுக்கு சென்றோர் பட்டியல் மற்றும் ஆய்வுக்கு சென்ற தேதி போன்ற விவரங்கள் அடங்கிய சுமார் 903 பக்கங்கள் கொண்ட தகவலை, கடிதம் வழியாக அறப்போர் இயக்கத்திற்கு அனுப்பியது.
மேலும் பல்கலைக்கழகத்தால் ஆய்வுக்கு அனுப்பட்ட ஆய்வுக்குழு, மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு ஆய்வு சென்ற போது, ஆய்வின் போது நேரில் பார்வையிட்டு அங்கீகரிக்கப்பட்ட சுமார்13,000 பேராசிரியர் விவரங்களையும் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 1.மருத்துவம் (Medical), 2.பல் மருத்துவம் (Dental), 3.ஆயுஷ் (AYUSH), 4.சார்ந்த சுகாதார அறிவியல் (Allied Health Sciences), 5.செவிலியர் பணி (Nursing), 6.மருந்தியல் (Pharmacy), 7.இயன்முறை மருத்துவம் (Physiotherapy), 8. தொழில்முறை மருத்துவம் (Occupational Therapy), 9. முனைவர் பட்டத்திற்குப் பிந்தைய ஆய்வுப் பயிற்சி (Post-Doctoral Fellowship) உள்ளிட்ட 9 மருத்துவ கல்வி பிரிவுகளுக்கான பேராசிரியர்கள் (Faculty) விவரங்கள் வெளியிடப்பட்டுள்ள இணையதள முகவரி : https://t.co/IRJxGimEQH
அறப்போர் இயக்கம் மக்களிடம் கோருவது: முன்னாள் இந்நாள் மாணவர்கள், பெற்றோர்கள், சக பேராசிரியர்கள் தங்களுக்கு தெரிந்த போலியான பேராசிரியர்கள் விவரங்கள் இருந்தால் இணைப்பில் வழங்குக: https://t.co/HNjSdvyRhT @CMOTamilnadu@arunraajkg
இது பற்றிய விரிவான காணொளி :
These vehicles parked for days on Rangaswamy Street, Adjacent to Pothys, Chromepet causing inconvenience to residents and parking of two wheelers along the wall of Pothys by its customers, aren't removed even after repeated complaints. @CMOTamilnadu@tnpoliceoffl@tnpdial100@COPTBM
இன்றுடன் 11 ஆண்டு நிறைவடைந்து அறப்போர் இயக்கம் 12வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். இந்த தருணத்தில் அறப்போர் இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு முக்கிய காரணமான அறப்போரின் தன்னார்வலர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் பொது மக்களுக்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஊழல் ஒழிப்பிலும் மிக ஏழ்மையில் உள்ள மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பதிலும் தகவல்களுடன் கேள்வி கேட்கும் சமூகத்தை அமைப்பதிலும் வெளிப்படைத்தன்மை பொறுப்புடைமை உள்ள அரசாங்கத்தை அமைப்பதற்கும் தொடர்ந்து பயணிப்போம்.
அறப்போருடன் இணைந்து தன்னார்வலாக செயல்பட இங்கே பதிவு செய்யவும்
https://t.co/KVQcgSspyw
அறப்போர் செயல்பாடுகளுக்கு நன்கொடை கொடுக்க விரும்புபவர்கள் இந்த லிங்கில் செய்யலாம்
https://t.co/FFlMQ9vT7R
அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் உண்மையில் அந்தந்த கல்லூரிகளில் தொடர்ந்து பணியாற்றுகிறார்களா என்பதை உறுதி செய்யும் நோக்கில், மாதந்தோறும் Online Biometric Verification கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
குறிப்பாக, கல்லூரிகளில் “Ghost Faculty மற்றும் Paper Faculty” போன்ற முறைகேடுகளைத் தடுக்க இந்த கண்காணிப்பு முறை மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
ஆனால், கடந்த சில மாதங்களாக Aadhar Based Biometric Authentication - Online நடைபெறவில்லை. இந்த மாதத்திற்கும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் திரு.விஸ்வநாதன் அவர்களுக்கும் @Viswanathan_INC , அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் திரு. குமரேசன் அவர்களுக்கும் @auvcochennai சில நேரடியான கேள்விகள்:
🔴 கடந்த சில மாதங்களாக மாதாந்திர Aadhar Based Biometric Authentication - Online ஏன் நடத்தப்படவில்லை?
🔴 இந்த மாதத்திற்கான Biometric Verification அறிவிப்பு இதுவரை ஏன் வெளியிடப்படவில்லை?
🔴 இந்த தாமதத்திற்கான காரணம் என்ன? இதற்கு யார் பொறுப்பு?
🔴 Biometric Verification நடைபெறாத இந்த காலகட்டத்தில், இணைப்பு கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் உண்மையான பணிநிலையை அண்ணா பல்கலைக்கழகம் எந்த முறையில் கண்காணித்தது?
🔴 Aadhar Based Biometric Authentication - Online பற்றிய தகவல்கள் RTI இல் கேட்கப்பட்டதற்கு, அவை மறைக்கப்படவேண்டிய அவசியம் என்ன?
🔴 பெரும்பாலான கல்லூரிகள் திமுக, அதிமுக போன்ற கட்சி சார்ந்தோர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நிர்வகிக்கின்றனர். எனவே அவர்கள் கொடுத்த அழுத்தத்திற்கு பயந்துவிட்டீர்களா ?
அமைச்சர் திரு.விஸ்வநாதன் அவர்களும், பதிவாளர் திரு. குமரேசன் அவர்களும் இதற்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். Ghost Faculty மற்றும் Paper Faculty போன்ற முறைகேடுகளைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட கண்காணிப்பு அமைப்பு, இடைவெளியின்றி தொடர்ந்து செயல்பட வேண்டும்.
@CMOTamilnadu@TVKPartyHQ
#AnnaUniversity #OnlineBiometric #BiometricVerification #GhostFaculty #Transparency #ArapporIyakkam
சட்ட விரோதமாக கல் எடுக்க பெஞ்சிக் செய்யாத அடைமிதிப்பாங்குளம் குவாரியில் ஏற்பட்ட நில சரிவால் 6 பேர் உயிர் இழந்தார்கள். 4 ஆண்டுகள் கழித்து இன்றும் தமிழ்நாடு முழுக்க இதே நிலை தான்.
வேடிக்கை பார்க்கிறதா தமிழ்நாடு அரசு ?
Dr சுரேஷ் தலைமையிலான அறப்போர் இயக்கம் நியமித்த தன்னிச்சை நிபுணர் குழு திருநெல்வேலி மற்றும் சுற்று வட்டாரங்களில் சட்டவிரோத கல் குவாரிகளால் மக்கள் எதிர்கொள்ளும் பாதிப்பு குறித்த ஆய்வறிக்கையை இங்கே படிக்கலாம் https://t.co/fJu1u7aHwh சட்டவிரோத கல் குவாரிகள் மூடப்படுமா?
@CMOTamilnadu@prabhusean7
அமைச்சர் வெங்கடரமணன் அவர்கள் @AdvocateVenkatP இன்று கிறிஸ்டி நிறுவன ஊழல் குறித்து சட்டசபையில் பேசியுள்ளார். கிறிஸ்டி நிறுவனத்தின் 992 கோடி ரேஷன் போக்குவரத்து ஊழல் குறித்து அறப்போர் இயக்கம் அனைத்து ஆதாரங்களுடன் அமைச்சருக்கு ஜூலை 13ஆம் தேதி அனுப்பியுள்ளது. அதன் மீது உடனடியாக FIR பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அமைச்சர் பேசும் இந்த ஊழல் குறித்தான அறப்போரின் விரிவான வீடியோவை இந்த லிங்கில் பார்க்கலாம்
https://t.co/4KoCoaag45
FIR நடவடிக்கை எடுப்பதற்கான முதல் படி! FIR பாயுமா ? அல்லது சட்டசபை பேச்சுடன் நடவடிக்கைகள் நின்று விடுமா?
இன்று லஞ்ச ஒழிப்பு துறையால் சோதனை செய்யப்படும் காசி டிரான்ஸ்பார்மர் , கண்டக்டர் போன்ற ஊழல்கள் நடக்கும் பொழுது ஒரு பைனான்சியல் கண்ட்ரோலர். ஒரு Middle லெவல் பொது ஊழியர். அவர் தினமும் TNEB அலுவலகத்தில் இருந்து தான் வேலை செய்ய வேண்டும். அவர் டெண்டர் முடிவு செய்யும் ஆய்வு குழுவில் இருப்பவர். காசி அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளரும் இல்லை. ஆனால் தினமும் அவர் தற்பொழுது ரெய்டு செய்யப்படும் தேனாம்பேட்டை வீட்டில் இருந்து காலை 10.40 மணிக்கு கிளம்பி 10.50 முதல் 11 மணி அளவில் அப்போதைய மின்சார துறை அமைச்சர் வசிக்கும் கிரீன்வேய்ஸ் சாலை செந்தில் பாலாஜி வீட்டிற்கு சென்று அங்கு தான் முழு நாளும் செலவு செய்வார்.
அதற்கான இங்கே பார்க்கும் ஆதாரங்களை அறப்போர் இயக்கம் விசாரணை அமைப்புகளுக்கு கொடுத்தும் உள்ளது. டெண்டர் அதிகாரி காசி TNEB அலுவலகத்தில் வேலை செய்யாமல் அமைச்சர் வீட்டில் இருந்து வேலை செய்து தான் பல டெண்டர்களை முடிவு செய்தார். இதனால் தான் டிரான்ஸ்பார்மர் போன்ற ஊழல்களில் அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜியும் விசாரிக்கப்பட வேண்டியவர்!
Finally the audit statement of PMCARES Fund for 2024-25 has been made public! Key highlights-
-Utilised only 0.01% of available ₹ 8,452 crore! Why is the PMCARES Fund keeping such large sums of money idle?
-324 crore was refunded by implementing agencies- but no info on what these payments were for and why these were refunded? Which agency refunded? Were refunds done to evade accountability for faulty equipment?
-Why have accompanying notes to the audit report not been uploaded?
சட்ட விரோத கல் குவாரிகள்.
தன்னிச்சைக்குழு அறப்போர் இயக்கத்திற்கு கொடுத்த அறிக்கை வெளியீடு.
https://t.co/fJu1u7aHwh
Benching - விதிமீறல்
Blasting - விதிமீறல்
Quantum of mining - விதிமீறல்
Usage of village roads for transit - விதிமீறல்
And many more
தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா? Chief Minister of Tamil Nadu
https://t.co/KAMAO5aY9V
திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் கல் குவாரிகளால் ஏற்படும் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதார பாதிப்புகள் குறித்த அறிக்கையை நிபுணர் குழு அறப்போர் இயக்கத்திடம் வழங்கி பொதுமக்கள் மத்தியிலும் வெளியிட்டது
முதல்வர் விஜய் உள்பட அனைவருக்கும் இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. உடனடியாக சட்ட விரோத குவாரி வேலைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Don't know why all my complaints which has been forwarded to Commissioner Tambaram Corporation from Mudhalvarin Mugavari has not been acted upon. My complaints to CM cell, CMDA, MAWS HUDD & DMA have been forwarded to Commissioner Tambaram Corporation, but no action taken. Followed by e mails to cmcell. Will the concerned officials rein in the Tambaram Corporation Commissioner who cares too hoots for Official or Court orders. @CMOTamilnadu@Chief_Secy_TN@imrajmohan@CTR_Nirmalkumar@MawsTamilNadu@CMDA_Official@GSBediIAS@rnadh #HUDD @CMAChennai@Tambaram_Corp