ஆராசா பெண்களை பற்றி பிற்போக்காக ஆபாச கவிதை எழுதுகிறார்
TR பாலு தெக்கத்தி காரங்க அருவாள் இல்லாம வர மாட்டாங்கன்னு பேசுறார்
RS பாரதி கோவணம் கட்டிணவன் எல்லாம் முதல்வர் ஆயிடுவான் என்கிறார். தேர்தலில் தோற்றால் பாதி மீசை எடுப்பேன் என்கிறார்
இதெல்லாம் வெறும் ஒரு மாதத்தில் பேசிய பேச்சுக்கள்.
ஒரு பண்ணைச் சமூகத்தை தாண்டிய சிந்தனை வராத இவர்களை எப்படி இவ்வளவு நாள் முற்போக்கு என்று நம்பிக் கொண்டிருந்தோம்?
40 ஆண்டுகால தீண்டாமை தடையை உடைத்த மக்கள் ஒற்றுமை!
கோவை மாவட்டம் கெம்பனூர் – அண்ணாநகர் பகுதியில் நீண்ட காலமாக நிலவி வந்த தீண்டாமை நடைமுறைக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI), தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஜனநாயக இயக்கங்கள் தொடர்ந்து நடத்திய போராட்டம் வரலாற்றுச் சாதனையாக வெற்றி பெற்றுள்ளது.
தீண்டாமை காரணமாக மறுக்கப்பட்ட அரசு பேருந்து எண் 21 இன்று அண்ணாநகர் வரை சென்று சேவையை வழங்கியுள்ளது.
இது வெறும் பேருந்து இயக்க வெற்றியல்ல…
✊ சமூக நீதியின் வெற்றி!
✊ சமத்துவத்தின் வெற்றி!
✊ மனித மரியாதையின் வெற்றி!
போராடிய மக்களுக்கும், ஆதரவு அளித்த பொதுமக்களுக்கும், இந்த வெற்றியை சாத்தியமாக்கிய அனைத்து தோழர்களுக்கும் புரட்சிகர வாழ்த்துகள்!
🔥 தீண்டாமை தோற்கும் – சமத்துவம் வெல்லும்!
🔥 மக்கள் ஒன்றுபட்டால் மாற்றம் சாத்தியம்!
#DYFI #தீண்டாமை_ஒழிப்பு #TNUEF #சமூகநீதி #சமத்துவம் #அண்ணாநகர் #கெம்பனூர் #மக்கள்_போராட்டம் #Coimbatore #SocialJustice #Equality #PeoplePower #EndUntouchability
நாம் எதிர்பார்த்த முடிவுகள் வரவில்லை, நாம் ஆதரவுளித்த கட்சி தோற்று விட்டது என்பதால்
"அடுத்த 5 வருடம் மக்கள் பல கொடுமைகளை அனுபவிக்க வேண்டும் (குறிப்பாக மாற்றி ஓட்டு போட்ட பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர்) அந்த கொடுமைகளுக்கு பின் அவர்கள் நம் காலில் வந்து விழுந்து பாவ மன்னிப்பு கேட்க வேண்டும்; பிறகு நாம் நமக்கு தேவையான அரசை தேர்ந்தெடுத்து நல்லாட்சி வழங்க வேண்டும்"
என்பது போன்ற கீழ்தரமான ஆசை கொண்ட பதிவுகளை பார்க்க முடிகிறது.
Gotham நகரத்தின் Joker கள் தன்னை போன்றே எல்லாரையும் ஜோக்கர் என்று நினைப்பது தவறு.
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும், வணக்கம்.
அரசியல் என்பது ஏதோ அசகாய சூரர்களுக்கானது மட்டுமே. அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே. பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே. இப்படி அரசியலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைத்தவர்களின் மாயாஜாலக் கணக்குகள், சாதாரண வெகுஜன மக்களால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன.
அரசியலைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்று இதுவரை அனுமானிக்கப்பட்ட இளைஞர்களும் பெண்களும் அரசியல் பேசத் தொடங்கிய அதிசயமும் அவசியமும் நிகழத் தொடங்கிவிட்டது. இது எப்போது இருந்து தொடங்கியதென நடுநிலை மனம்கொண்டோர் அனைவரும் உணர்வர்.
இதுவரை பெருமளவிலான குறிப்பிட்ட சதவிகித வாக்குகள், வாக்குச்சாவடி பக்கமே வராமல் இருந்தன. ஆனால், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வரலாற்று நிகழ்வாகப் பதிவாகி உள்ளது.
85% வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று.
வாக்குச்சாவடிகள் எங்கும் கோவில்களில் காணப்படும் கூட்டம்போல, குடும்பம் குடும்பமாகக் குழந்தை குட்டிகளுடன் வந்து வாக்களித்ததைக் கண்டு வியக்காதோர் எவரும் இருக்கவே வாய்ப்பில்லை. அது மட்டுமா?. வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வாக்களிப்பதற்காகவே பெரும்பொருள் செலவு செய்து வந்த ஜனநாயகர்களை இருகரம் கூப்பி வணங்காமல் இருக்க முடியுமா?
தேர்தல் திருவிழா என்றும் ஜனநாயகத் திருவிழா என்றும் சொல்லப்படுவதன் அர்த்தம் சுகப்பட்டதே நேற்றுதான். இந்த 2026 ஏப்ரல் 23 தான். எனினும் இது ஒரு தொடக்கம் மட்டுமே.
தமிழகத் தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தமிழ்நாட்டு மக்களாகிய, என் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், என் தாத்தா, அப்பா, அண்ணன், தம்பிகள், என் குடும்ப உறவுகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியறிதலைக் காணிக்கையாக்குகிறேன்.
குறிப்பாக, நம் குடும்பத்தினரை வழிநடத்திய என் குட்டி நண்பா நண்பீஸ்க்கு என்னுடைய - உங்கள் விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும்.
குறிப்பாக, நான் நன்றி செலுத்த வேண்டியது, நம் வாக்குச்சாவடி முகவர்களுக்கும் நம் கழகத் தோழர்களுக்கும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும்தான். இவர்களுக்கெல்லாம் என்ன அரசியல் தெரியும்? எப்படித் தாக்குப் பிடிப்பார்கள் என்று ஏளனம் பேசியோருக்குச் செயல் மூலம் பதிலடி தந்த தோழர்களே…உங்களுக்கு என் மனம்நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும். கழகத் தோழர்களுக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் நன்றி.
நம்பிக்கையோடு இருப்போம்.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
I Repeat...
எனது கணிப்பு...
திமுக கூட்டணி - 210 ( +- 20 )
அதிமுக கூட்டணி - 24 ( +- 20 )
நாதக - 0
தவெக - 0
1991, 1996 அல்லது 2011 போலான ஒரு தேர்தல் முடிவு தான் இந்த தேர்தலிலும்...
Mark my words... னு சொல்ல மாட்டேன்... ஏன்னா, எப்படியும் bookmark பன்னி வெச்சிட்டு வெயிட் பன்ன போறீங்க... பேசுவோம்...