நேத்து ஊருக்கு போயிட்டு வந்தேன். Train ah விட்டு வெளிய வந்ததும் வாங்க சார் போலாம், Auto வேணுமா, auto வேணுமா nu அவ்வளோ குரல். நான் முன்னாடியே Ra*ido ல railway station ல irundhu வீட்டுக்கு போக எவ்வளோ ஆகுமுன்னு பார்த்து வச்சிக்கிட்டேன்.
அதை மனசுல வச்சு சரி போலாம் அண்ணா, எவ்வளோ nu சொல்லுங்க nu சொன்னேன் Oru 3 பேரு கிட்ட கேட்டேன், 3 பேரும் சுமார் 700-800 ரூபாய் கேட்டாங்க. ரயில் நிலையத்தில் இருந்து எங்க வீடு 14-15kms தான். எனக்கு ராபிடோ ல காட்டிய தொகை 200 ரூபாய். அப்படி இருக்க, எதுக்கு இவங்க இவ்வளோ கேக்குறாங்க nu புரியல. இதுல, நான் 250rs தர்றேன் அண்ணா nu சொன்னதுக்கு, அடடா எவ்வளோ நல்ல மனசு nu கிண்டல் நக்கல் வேற, நானும் இந்த மாரி நல்ல மனசு உங்களுக்கு எப்போ அண்ணா வருமுன்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன். இவங்க மனசுல ராக்கெட் ஓட்டுறதா நினைச்சுக்கிறாங்களா nu தெரியல.
சும்மா கூட வெட்டியா இருக்காங்களே தவிர, நியாயமான விலைக்கு வரவே மாற்றாங்க. இதுல Ra*ido, U*er, O*a pondra நிறுவனம் இவங்க சோத்துல மண் அல்லி போட்டுட்டாங்க nu ஒப்பாரி வைப்பாங்க.. worst uh behaviour!
#Auto
ஆளுங்கட்சி எம்எல்ஏவா இருந்தா மட்டும்தான் தொகுதிக்கு நல்லது பண்ண முடியும்ன்னு ஆதவ் பேசுனத கட் பண்ணி ஏன் இன்னும் எந்த கட்சியும் வழக்கு தொடுக்கவில்லை? அது ஜனநாயகத்திற்கு எதிரானது இல்லயா..
சாத்தான்குளம் பென்னிக்ஸ்–ஜெயராஜ் காவல் மரண வழக்கில் உண்மையைத் துணிச்சலுடன் வெளிக்கொண்டு வர உறுதுணையாகச் செயல்பட்டவரும், தற்போது சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணியாற்றி வருபவருமான திருமிகு. ரா.ரேவதி அவர்கள், திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவான POCSO வழக்கு ஒன்றில் குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத்தரச் சிறப்பாகப் பணியாற்றியதற்காகப் பாராட்டுச் சான்றிதழ் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
அவரது அர்ப்பணிப்பும் துணிச்சலும் தொடர்ந்து பலருக்கும் முன்னுதாரணமாகத் திகழட்டும். ரேவதி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
Yesterday, I posted a screenshot from the Ismail Commission report and noticed that many were arguing MK Stalin was not arrested under MISA and he was merely a witness.
Here are a few more pages from the report. Clearly says 46 affidavits from MISA detainees and Chittibabu’s widow spoke to the Commission. Two other affidavits were from MR Radha and M Kumar who didn’t agree there was torture.
Surulirajan the chief warden lists out the MISA detainees.
Focus on today’s problems and on governance. Thanks.
I resigned from Anthropic today. I spent the last three years doing pretraining research at both OpenAI and Anthropic. Neither company is acting responsibly. They are racing straight to self-improving superintelligence and gambling with our lives. More thoughts below.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி அறிக்கை
நான் கடந்த 2016 முதல் 2026-ஆம் ஆண்டு வரையில் 10 ஆண்டுகள் பல்லாவரம் சட்டமன்ற திமுக உறுப்பினராக பணியாற்றியுள்ளேன் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க-வில் கழகப் பணியாற்றி வருகிறேன்.
எனது மூத்த மகன் ஆண்டோ மதிவாணன் எனது விருப்பத்திற்கு மாறாக பெசன்ட் நகரை சேர்ந்த திரு.அந்தோணி அவர்களின் இரண்டாவது மகள் மெர்லினா அன் அவர்களை காதலித்து வந்தார். அதன் பிறகு 20.012017 அன்று திருமணம் செய்து வைத்தேன்.
திருமணத்திற்கு பிறகு என் மகனும் மருமகளும் திருவான்மியூரில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார்கள் அந்த வீட்டிற்கு நான் நிகழ்ச்சிக்காக இரண்டு முறை மட்டுமே சென்று வந்தேன். மற்றபடி அவர்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த நிலையில் அந்த வீட்டில் பணி செய்த ரேகா என்ற பணிப்பெண்ணை மெர்லினா துன்புறுத்தியதாக 16-01-2024 அன்று நான் தொலைக்காட்சியில் பார்த்து அறிந்தேன். அடுத்த நாள் 17-01-2024 அன்று திருவான்மியூர் காவல் நிலைய அதிகாரிகள் இருவர் பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சென்று வாக்குமூலம் பெற்று, 18-01-2024ல் முதல் தகவல் அறிக்கை எண்15/2024 பதியப்பட்டது.
இந்த உண்மையை மறைத்துவிட்டு சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் அவர்கள், கடந்த 18.01.2024 அன்று சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வந்த பிறகுதான் 20.01.2024 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததாகவும் அதிலிருந்து ஐந்து நாட்கள் கழித்து 26-01-2026 அன்றுதான் கைது செய்யப்பட்டதாகவும் உண்மைக்கு மாறான தகவலை தெரிவித்திருக்கிறார்.
18.01.2024 அன்று காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். 24.01.2024 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதி அரசர் அவர்கள், மாவட்ட நீதிமன்றத்தில் 7 நாட்களுக்குள் சரணடைந்து ஜாமீன் பெற்றுக் கொள்ள உத்தரவு பிறப்பித்து இருந்தார். நீதிமன்ற உத்தரவு இருந்த பொழுதும் 25.01.2026 அன்று பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகில் காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். இந்த தகவலை எல்லாம் மறைத்து உண்மைக்கு மாறான தகவலை முதல்வர் சட்டமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார்.
எனக்கும் மெர்லினா அன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எந்த தொடர்பும் இல்லை. மெர்லினா அன் அவர்களும் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரன் அவர்களின் மருமகளுமான மார்சியா அன் அவர்களும் உடன்பிறந்த சகோதரிகள். அதனால் சபாநாயகர் குடும்பத்தில் மெர்லினா அன் நெருக்கமாக உள்ளார்.
திரு லாட்டரி மார்ட்டின் அவர்களின் மனைவியும் அதிமு.கவின் சட்டமன்ற உறுப்பினருமான லீமா ரோஸ் அவர்களின் உறவினர் என்று சொல்லி, அவருடைய உதவியாளர் போல் தற்பொழுது மெர்லினா அன் வலம் வந்து கொண்டிருக்கின்றார். இதனை அவருடைய சமூக வலைத்தளங்களில் மற்றவர்கள் பார்க்கும் விதத்தில் பதிவிட்டு வருகிறார்.
உண்மை நிலை இப்படி இருக்க சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் அவர்கள், இது சம்பந்தமான வழக்கு நிலுவையில் உள்ள போது என்னை தொடர்புபடுத்தி உண்மைக்கு மாறாக பேசியிருக்கிறார். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததும் அதைத் தொடர்ந்து துரிதமாக கைது செய்ததும் எவ்வித தாமதமும் இன்றி தி.மு.க ஆட்சியில் காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டதும் உண்மை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றேன்.