SIR குளறுபடிகளை எதிர்த்து சென்னை பெசன்ட் நகரில் அமைதியான முறையில் போராடும் இளைஞர்களைக் காவல்துறை கைது செய்து வருகிறது.
இந்தப் போராட்டத்தில் எந்தத் தொடர்பும் இல்லாமல், துரைப்பாக்கத்தில் நடைபெறும் பேட்மிண்டன் (ஷட்டில்) போட்டியில் பங்கேற்கச் சென்ற 28 வயது சந்தீப் என்பவரையும் காவல்துறை கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
போராட்டத்தில் பங்கேற்காத சந்தீப்பை உடனடியாக விடுவிக்க வேண்டும்! @chennaipolice_
அதேபோல், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களின் உரிமைகளை மதித்து, கைது செய்யப்பட்டவர்களையும் விடுவிக்க வேண்டும்.
#sir_protest
அதிகாரம் இருக்கும்போது மட்டும் கழகத்தோடு நிற்பவன் #உடன்பிறப்பு அல்ல.
உலகமே எதிர்த்தாலும் கொள்கையையும் கொடியையும் விட்டுக்கொடுக்காமல் உறுதியாக நிற்பவன்தான் உண்மையான #திமுககாரன். 🖤❤️🌄
இந்த தேர்தலில் தாராபுரத்திலும் மதுராந்தகத்திலும் கழகத்தின் பக்கம் உறுதியாக நின்ற உண்மையான கழக உடன்பிறப்பின் நெஞ்சில் இருந்து,
எத்தனை பின்னடைவுகள் வந்தாலும்…
எத்தனை சோதனைகள் வந்தாலும்…
உதயசூரியனை யாராலும் பிரிக்க முடியாது🔥
பதவிக்காக அல்ல.பலனுக்காக அல்ல.
வெறும் தேர்தல் வெற்றிக்காக அல்ல.
சமூகநீதி. சுயமரியாதை. சமத்துவம். மாநில உரிமை. இதற்காகத்தான் இந்தப் பயணம்.
ஆட்சிகள் மாறலாம்.சூழல்கள் மாறலாம்.
ஆனால் கொள்கை மாறாது. கழகப் பற்று மாறாது. 🌄
அதனால்தான் நாம் வெறும் கூட்டம் அல்ல...
இயக்கம்...
தமிழ்நாடு மக்களுக்கான பேரியக்கம்🌄
நாம் சாதாரண கட்சிக்காரர்கள் அல்ல.
#உடன்பிறப்புகள்🖤❤️🔥
#திமுக #DMK #Ideology #RisingSun🌄
தஞ்சை ரயில் நிலையம் நுழைவாயில் முகப்பில் உள்ள பெரிய கோயில் கோபுரம் முன்பு இந்தி எழுத்துக்கள் உள்ளதை கண்டித்து தஞ்சை மத்திய மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழகச் செயலாளர் திரு @durai944 MLA அவர்கள் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது . உடன் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் திரு @Murasoli_tnj அவர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திரு து.செல்வம், திரு டி.கே.ஜி.நீலமேகம் Ex MLA, தஞ்சை மாநகர செயலாளர் திரு சண்.இராமநாதன், தஞ்சை மாநகராட்சி (பொ) மேயர் திருமதி.அஞ்சுகம்பூபதி, கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன் பிறப்புகள் கலந்து கொண்டனர்.
@TRBRajaa
#StopHindiImposition #தமிழ்வாழ்க #TVKFails #TVK
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் கழக வேட்பாளர் சகோதரி சுகன்யா அவர்களை ஆதரித்து, பல்வேறு பகுதிகளில் இன்று கழக இளைஞரணிச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான திரு. @Udhaystalin அவர்கள் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட நிகழ்வில் கலந்துகொண்டோம்.
இப்பரப்புரையின் போது அலைகடலெனத் திரண்டு தாய்மார்களும், இளைஞர்களும் அளித்த உற்சாக வரவேற்பு கழகத்தின் வெற்றியை இப்போதே உறுதி செய்துவிட்டது!
வாக்களிப்பீர்!
உதயசூரியன் சின்னத்திற்கு! ☀️
வெள்ளகோவில் கழக அலுவலகத்தில், மண்டலம் 5 இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, கழகப் பணிகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடினோம்.
@mkstalin#KEPrakash#DMK#Erode#ErodeMP
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் MISA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் கொடுமைகளை எதிர்கொண்ட வரலாற்றை திரித்து கொச்சைப்படுத்தும் வகையில் முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் பேசியதைக் கண்டித்து பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம்.
அன்றைய நெருக்கடி காலத்தில் கழகத் தலைவர் எதிர்கொண்ட அடக்குமுறைகளை கொச்சைப்படுத்தும் வகையில் பேசப்பட்டதற்கு எதிராக எனது கண்டன உரையை பதிவு செய்தேன்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக் கழகச் செயலாளர் தலைமையேற்று, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் பங்கேற்று முதலமைச்சர் விஜயின் பேச்சுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
#misa #emergency #dmk #mkstalin #arrest #assembly #tamilnadu #facts #udhayanidhi #arunnehru #perambalur
மிசாவில் என்ன நடந்ததென்று தெரியுமெனச் சொலும்போது இப்படி ஒரு சைகையைச் செய்வது எல்லாம் முதலமைச்சருக்கு அழகல்ல.
சிறைக்குள் காவல்துறை சித்தரவதைகளால்தான் அப்படி ஆனது என்பது உலகத்திற்கே தெரியும்.
இந்த உடல்மொழி காவல்துறையின் சித்தரவதைகளுக்கு அங்கீகாரம் தரும் ஒரு கேவலமான உடல்மொழி. இவரெல்லாம் காவல்துறைக்கு தலைமை தாங்கினால் அந்தக் காவல்துறை என்ன லட்சணத்தில் இருக்குமோ அந்த லட்சணத்தில் இருக்கிறது. மிசாவில் அடி உதைபட்டவர்களை கேலி செய்யும் ஒருவர் வரலாற்றறிவு இல்லாதவர். தாழ்வு மனப்பான்மையும் வன்மமும் காழ்ப்பும் கொண்ட மனதாலேயே இப்படியான சைகைகளை செய்ய முடியும்.
Shame on you Mr. CM!
கொடநாட்டில் தனது பட ரிலீஸுக்காக WATCH MAN வேலை பார்த்தவர்தான் இந்த முதலமைச்சர். இவருக்கு மிசாவைப் பற்றி, எங்கள் தலைவரைப் பற்றி பேச 1% கூட தகுதி இல்லை.
மாண்புமிகு சட்டப் பேரவை எதிர்க்கட்சி தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
திருச்சி கிழக்கு - மத்திய - வடக்கு மாவட்ட செயல்வீர்கள் கூட்டம் நாளை காலை 8.30 மணி அளவில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு நிகழ்ச்சி முன்னேற்பாட்டு பணிகளை இன்று நேரில் ஆய்வு செய்து, கூட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்து கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினேன்.
#DMKForever
“UGC WAPAS LO” என்பது முழுக்க முழுக்க சமூகநீதிக்கு எதிரான முழக்கம் என்பது தெரிந்தும் இந்த பதிவை வெளிப்படையாக நீங்கள் போடுவது உங்களது மனுவாத நிலைப்பாட்டை தெள்ளத்தெளிவாக காட்டுகிறது அல்லவா !
SC/ST/OBC மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சந்திக்கும் சாதிய பாகுபாட்டை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட UGC Equity Regulations-ஐ திரும்பப் பெறச் சொல்லும் முழக்கம் அது என்பது நன்கு தெரிந்தும் இப்படி ஒரு பதிவு. உங்கள் மனதில் எவ்வளவு சாதிய வன்மம் !
இன்று நாட்டின் பல பகுதிகளில் மனுவாத அமைப்புகள் கையில் எடுத்திருக்கும் இந்த முழக்கம் இனி காங்கிரஸின் முழக்கம் என்கிறீர்கள் அப்படித்தானே !
ஒருபக்கம் சாதிவாரிக் கணக்கெடுப்பு, இடஒதுக்கீடு, சமூகநீதி என்று பேசும் காங்கிரஸ்…
மறுபக்கம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர், சமூகநீதிக்கான பாதுகாப்பையே பின்னோக்கித் தள்ளக் கோரும் போராட்டத்தின் “UGC WAPAS LO” முழக்கத்தை பெருமையுடன் தூக்கிப் பிடிக்கிறார்!
அமித்ஷாவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக சமூகநீதியையே எதிர்க்கும் முழக்கத்திற்குத் துணை போவீர்களா?
UGC விதிகளில் குறைகள் இருந்தால் திருத்தச் சொல்லுங்கள்.
பாதுகாப்புகளை மேலும் வலுப்படுத்தச் சொல்லுங்கள்.
ஆனால் “WAPAS LO” என்று யாருக்காகக் குரல் கொடுக்கிறீர்கள்?
தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு எதிரான மனுவாத அரசியலின் பக்கம் நிற்கிறதா?
மாணிக்கம் தாகூர் விளக்க வேண்டும்.
Social Justice cannot be selective.
பெரம்பலூர் மாவட்ட மக்களின் 70 ஆண்டுகால கனவான நேரடி ரயில் இணைப்பை நனவாக்கும் முயற்சிகள் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன.
நாடாளுமன்றத்தில் நமது பெரம்பலூர் மக்களின் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தியதன் பயனாக, பெரம்பலூர்–நாமக்கல்–அரியலூர் புதிய ரயில்பாதைக்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கும் பணிகள் முன்னேற்றம் கண்டுள்ளன.
திட்டத்தின் அடுத்தடுத்த நிர்வாக நடவடிக்கைகள் விரைந்து நிறைவேறி, ரயில்பாதை அமைப்புப் பணிகளுக்கான இறுதி ஒப்புதல் விரைவில் கிடைத்து, திட்டம் நிறைவேறும் வரை, பெரம்பலூர் மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதியாக எனது தொடர் முயற்சிகள் என்றும் தொடரும்!
#perambalur #railways #parliament #development #transport #mp #indianrailways #DMK #MKStalin #Udhayanidhi #Trichy #ArunNehru #Perambalur
தெற்கில் தோன்றி, வடக்கில் ஒளிர்ந்த “கண்ணியத் தென்றல்” காயிதே மில்லத் அவர்களின் 131-ஆவது பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றுகிறேன்!
"தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும்" என அரசியல் நிர்ணய சபையில் முழங்கிய மாண்பாளர்; கல்வி வளர்ச்சிக்காக அரும்பணிகளைச் செய்த தகைமையாளர்.
பேரறிஞர் அண்ணா காலம் தொட்டு, தேர்தல் அரசியலைக் கடந்து உருவான உறவின் உரிமையோடு, இசுலாமியப் பெருமக்களுக்கு என்றும் துணை நிற்போம்! சமூக நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாப்போம்!
#உணரும்காலம்
"முதலமைச்சர் பதவி என்பது காலை
பத்துமணிக்கு வந்து மாலை ஐந்துமணிக்கு முடித்துக் கொள்ளும் அலங்கார உத்தியோகம் அல்ல..
அது
விழிப்போடும்
துடிப்போடும் இருந்து
இரவு பகல் பாராது
இமை சோராது மக்களுக்காக உழைக்கும் தன்னார்வச் சேவை...
ஒரு தாயுமானவராக
தகப்பஞ்சாமியாக தன்னை உணர்ந்து
தனக்கான நிழலை பிறருக்குத் தந்து பிறருக்கான வெயிலையும் தான் ஏற்கும் தியாகத் தொண்டூழியம்.
இதனை முகமலர்ச்சியோடு செய்தது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்...
இதனை வரப்போகும் ஒவ்வொரு
வினாடியிலும் மக்கள் உணர்வார்கள்...
#மருதுஅழகுராஜ்