இரவு 2:13 — சில்வர் ஓக் ரெசிடென்சி
பாதுகாப்பு காவலாளியான ராம்கிஷன், பிரதான நுழைவாயிலில் உள்ள பாதுகாப்பு அறையில் அமர்ந்திருந்தபோது அறியாமலே ஒரு கணம் தூங்கிவிட்டார்.
அவர் பணியில் இருந்தபோது, தவறுதலாக கூட தூங்கியது இதுவே முதல் முறை.
அதுவும் வெறும் மூன்று நிமிடங்கள் மட்டுமே.
அதே நேரத்தில், குடியிருப்பு சங்கத் தலைவரின் மகன் காரில் அங்கு வந்தார்.
ராம்கிஷன் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்த அவர், ஏளனமாக சிரித்தபடி தனது மொபைல் போனை எடுத்து வீடியோ எடுக்கத் தொடங்கினார்.
வீடியோ பதிவு செய்யும்போது அவர் கூறினார்:
“இவரைப் பாருங்கள்… நமது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியவர், நம்மிடம் இருந்து சம்பளம் வாங்கிக்கொண்டு இங்கே தூங்கிக்கொண்டிருக்கிறார்!”
உடனே அந்த வீடியோவை குடியிருப்பு வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்தார்.
காலை ஆகும் முன்பே கருத்துக்கள் குவியத் தொடங்கின:
❌ “இவரை உடனடியாக வேலையில் இருந்து நீக்க வேண்டும்.”
❌ “இது மிகப்பெரிய அலட்சியம்.”
❌ “இப்படிப்பட்டவர்களுக்கு இந்த வேலைக்கு தகுதி இல்லை.”
இவ்வாறு 150-க்கும் மேற்பட்ட கருத்துக்கள் அந்த வீடியோவின் கீழ் பதிவானது.
ஆனால், அவர் ஏன் தூங்கிவிட்டார் என்று ஒருவர்கூட ராம்கிஷனிடம் கேட்கவில்லை.
காலை 6:05
ராம்கிஷன் குடியிருப்பு அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
மேசையை கோபமாகத் தட்டியபடி தலைவர் கேட்டார்:
“உனக்கு இந்த வேலை வேண்டுமா வேண்டாமா?”
ராம்கிஷன் அமைதியாக தனது தொப்பியை கழற்றினார்.
அவரது கண்கள் கடும் சோர்வால் சிவந்திருந்தன.
பின்னர் மெதுவாக அவர் கூறினார்:
“சார், நேற்று மதியம் 2 மணிக்கே நான் பேலைக்கு வந்துவிட்டேன்.”
“மற்றொரு காவலாளிக்கு உடல்நிலை சரியில்லாததால், அவருடைய ஷிப்டையும் நான் பார்க்கும்படி ஏஜென்சி கேட்டது. அதற்காக கூடுதலாக ₹300 தருவதாகவும் சொன்னார்கள்.”
“இரவு ஒரு மணியளவில், பின்புறச் சுவரைத் தாண்டி உள்ளே வர முயன்ற மூன்று இளைஞர்களை நான் விரட்டியடித்தேன்.”
“பிறகு 1:45 மணிக்கு, ஒரு குடியிருப்பாளர் தனது நாய் புரூனோவுக்கு பால் சூடாக்கித் தரும்படி என்னிடம் கேட்டார்.”
“2:10 மணிக்கு தான் ஒரு நிமிடம் அமர்ந்தேன்… அப்போதுதான் என் கண்கள் தானாக மூடிக்கொண்டன.”
அவரது வார்த்தைகளைக் கேட்டதும் அறை முழுவதும் அமைதியாகிவிட்டது.
“என் மாத சம்பளம் ₹12,000.”
“அதில் ₹4,000 வீட்டு வாடகைக்கு செல்கிறது.”
“₹2,000 என் கிராமத்தில் இருக்கும் பெற்றோருக்கு அனுப்புகிறேன்.”
“மீதமுள்ள தொகையில் என் மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.”
“என் மகன் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான்.”
“நான் தினமும் அவனிடம் சொல்வேன் — ‘நன்றாகப் படி மகனே… இல்லையென்றால் ஒருநாள் வாழ்க்கை உன்னையும் மற்றொருவரின் வாசலில் தூக்கமின்றி நிற்க வைக்கும்’ என்று.”
தடுமாறிய குரலில் இதைச் சொல்லிவிட்டு அவர் ஒரு கணம் நின்றார்.
பிறகு தலைநிமிர்ந்து கூறினார்:
“என் பலவீனத்தின் மூன்று நிமிடங்களை நீங்கள் பதிவு செய்தீர்கள்.”
“ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த குடியிருப்பைப் பாதுகாக்க நான் தூக்கமின்றி கழித்த ஆயிரக்கணக்கான இரவுகளை யாரும் பதிவு செய்யவில்லை.”
“மனிதர்கள் ஒருபோதும் சோர்வடையக்கூடாது என்று கடவுள் நினைத்திருந்தால்… நம்மை இயந்திரங்களாகவே படைத்திருப்பார்.”
அவர் பேச்சை முடித்தார்.
அறையில் இருந்த யாராலும் அவரது கண்களை நேராகப் பார்க்க முடியவில்லை.
அன்றைய மாலை, குடியிருப்பின் அறிவிப்பு பலகையில் ஒரு புதிய அறிவிப்பு தோன்றியது:
✔️ ஒவ்வொரு ஷிப்டிற்கும் இரண்டு காவலாளிகள்
✔️ அதிகபட்சம் 8 மணி நேர பணி
✔️ சம்பளம் ₹18,000 ஆக உயர்வு
✔️ கூடுதல் நேரப் பணிக்கு தனி ஊதியம்
ஒவ்வொரு வீட்டிற்கும் கூடுதல் செலவு: மாதம் ₹200
அறிவிப்பின் கீழே ஒரு வரி:
“பாதுகாப்புச் சேவையை நாம் வாடகைக்கு எடுக்கலாம்; ஆனால் ஒரு மனிதனின் வாழ்க்கையை வாங்க முடியாது.”
இரவு 10:00
நீண்ட நாட்களுக்குப் பிறகு, ராம்கிஷன் சீக்கிரமாக வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
வாசலருகே வந்தபோது, தலைவரின் மகன் அவரை நிறுத்தினார்.
ஹெல்மெட்டை கழற்றியபடி மெதுவாகக் கூறினார்:
“அங்கிள்… நான் அந்த வீடியோவை நீக்கிவிட்டேன்.”
“நாளை முதல் இரவு தேநீர் என்னுடைய செலவு.”
ராம்கிஷன் புன்னகைத்தார்.
இந்த சம்பவம் நமக்கு ஒரு பெரிய பாடத்தை கற்றுத்தருகிறது.
முன்கூட்டியே தீர்ப்பு வழங்கி யாரையும் மதிப்பிடக்கூடாது. ஒவ்வொருவரின் பின்னாலும் நமக்குத் தெரியாத ஒரு பெரிய வாழ்க்கைக் கதை இருக்கும்.
நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களிடம் கருணையுடனும், புரிதலுடனும், மனிதநேயத்துடனும் நடந்து கொள்ள பழகுவோம்… ❤️
-படித்ததில் பிடித்தது
முன்னோர்கள் முன்னோடி அரசியல் அமைப்புக்கள்(நமக்கானவர்கள் தான் அது admk dmk ஆட்சியில் இருந்ததால் ) கலைஞர் ஐயா, எம்ஜிஆர், ஐயா, ஜெயலலிதா அம்மா, எடப்பாடி யார் அவர்கள், அனைவரின் உழைப்பு இல்லாமல் தமிழகம் இந்த நிலையில் இருக்குமா. இப்போது உள்ள நமது முதல்வர் அவர்களின் உழைப்பும் சேர்த்தும்.
The Bombay Sappers pay solemn tribute to Sapper Jadhav Arjun Rajendra, who laid down his life in the line of duty while serving in the Uri Sector of Jammu & Kashmir.
While deployed in one of the nation’s most challenging operational environments, he made the supreme sacrifice. His unwavering commitment to duty and service to the nation reflect the finest traditions of the Corps of Engineers and the Indian Army.
His supreme sacrifice will forever remain etched in the proud legacy of the Bombay Sappers.
We honour his service to the nation and extend our deepest condolences to the bereaved family.
Duty. Honour. Sacrifice.
#BombaySappers #IndianArmy #ForeverInOurHearts
Deeply saddened by the passing of veteran actor Shri Salim Kumar Ji. Over the course of a distinguished career, he made a mark with his versatility and memorable performances across a wide range of roles. My thoughts are with his family and countless admirers in this hour of grief. Om Shanti.
திமுகவின் போலி நாடகத்தை சுக்கு நூறாக உடைத்த @TamilJanamNews செய்தி ஊடகத்திற்கு, என் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கோபாலபுர ஊடகங்கள் ஒளிபரப்பும் பொய்களை ஊக்குவிப்பது, தமிழக முதல்வர் என்ற பதவிக்கு உகந்தது அல்ல என்பதை உணர்ந்தால் நன்று.
#StopTellingLies
அகீரா மியாவாகி என்ற ஜப்பானியத் தாவரவியல் நிபுணர் அடர்ந்த காடுகளை மூன்றே ஆண்டுகளில் உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்திருக்கிறார். மூன்றாண்டுகளுக்குப் பிறகு அந்தக் காடுகளைப் பராமரிக்கவேண்டிய அவசியமும் இல்லை. அது என்ன முறை? ஒரு பிரதேசத்தில் தானாக வளரக்கூடிய தாவர வகைகளை மிக நெருக்கமாக நட்டுவைத்தால் அந்தச் செடிகளும் மரங்களும் பத்து மடங்கு வேகமாக வளர்கின்றன என்பதை மியாவாகி கண்டறிந்திருக்கிறார். இந்த மியாவாகி முறையால் முப்பது மடங்கு அடர்த்தியான காடுகள் உருவாகின்றன. அந்த அடர்த்தி, மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாத்து மண்ணரிப்பையும் கட்டுப்படுத்துகிறது. காடுகள் ஒருபுறம் இருந்தால் தான் தோட்டங்களும் மறுபுறம் ஏற்படும்.
இந்த மண்ணில் ஆங்கிலம் இருந்தது. ஸமஸ்க்ருதம் இருந்தது. ஹிந்தி இருந்தது. கன்னடமும் மலையாளமும் களிதெலுங்கும் இருந்தன. தமிழும் ழகரமும் நன்றாக இருந்தன. எல்லா மொழிகளோடும் போட்டிபோட்டுத் தமிழ் செழிப்பாக வளர்ந்திருந்தது. ஆங்கிலப் பாடப் புத்தகங்களில் ஷேக்ஸ்பியரும் மில்டனும் இன்ன பிறரும் இடம் பெற்றிருந்தார்கள். ஆங்கிலத்தின் அடர்த்தியும் மண்ணை ஈரம் மாறாமல் காத்தது. இந்த மண்ணில் தானாக முளைத்த வள்ளுவரும் கம்பரும் சேக்கிழாரும் பிறஆழ்வார்களும் நாயன்மார்களும் தேம்பாவணி, சீறாப்புராணத் தமிழுக்கு உரம் சேர்த்து வைத்திருந்தார்கள். நான் சிறுமியாக இருந்தபோது தமிழ்ப்பாடப் புத்தகங்களில் மனப்பாடப் பகுதியில் இவையெல்லாம் ஒன்றிக்கலந்து மாணவ மனங்களைப் பண்படுத்தின.
மொழி மனங்களின் வெளிப்பாடு. பல மனங்கள் இணைந்து உறவாடி ஒன்றுபடும்போது தான் சமூகமும் வளரும். “எனக்குத் தெரியாது” என்று அரசியல் செய்பவர்கள் செய்துவிட்டுப் போகட்டும். அது அவர்களுடைய தொழில். அவர்களாவது பணத்துக்காகவும் பதவிக்காகவும் அதைச் செய்கிறார்கள். ஒரு பயனுமின்றி கூடச் சேர்ந்து பேசுபவர்கள் கொஞ்சம் யோசிக்கவேண்டும். கூட வளர்ந்த மரங்களையெல்லாம் வெட்டிப்போட்டுவிட்டு, இந்த ஒரே மரத்தின் பரவிக்கிடந்த வேர்களையும் கத்தரித்துவிட்டால் மரம் எப்படி உயிர்க்கும்? மரம் எப்படிச் சீறிச்செழித்து வளரும்? கல்வியாளர்கள் கல்வியிலும் மியாவாகி முறையைக் கொண்டுவர வேண்டும். மண் உலர்ந்து கிடக்கிறது.
(எழுதிய நாள் 8- 9- 2020)
#மொழி
#மும்மொழிக்கொள்கை