தமிழ்க் கைபிடித்து ஓர் ஆங்கில பயணம்.மிக அருமையான புத்தகம் எளிமையான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆயிரத்து நாற்பது பக்கங்கள் 11தொகுதிகள்.ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தரமான இந்த புத்தகங்கள் மக்கள் பதிப்பாக நன்செய் பிரசுரத்தில் மிகக்குறைவாக 300 ரூபாய்க்கு தருகிறார்கள். இந்த புத்தகத்தை எம்பள்ளி மாணவர்களுக்கு வாங்கி வழங்க உள்ளேன் முதற்கட்டமாக மூன்று மாணவர்களுக்கு வழங்க பணம் அனுப்பியுள்ளேன்.ஆர்வமுள்ள 50 மாணவர்களுக்கு வழங்கலாம் என எண்ணியுள்ளேன்.நீங்களும் ஓரிரு மாணவர்களுக்கு வழங்க எண்ணினால் எம்பள்ளி அல்லது உங்கள் அருகில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாங்கி, வழங்கி மகிழலாம். தேவையான தகுதி உள்ள மாணவர்களுக்கு இதனை வழங்கி வழிகாட்ட உள்ளேன் நன்றி🙏🙏
உங்களுக்கு தெரியுமா?
ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் எங்குள்ளது?
சென்னையிலோ, டில்லியிலோ, கொல்கத்தாவிலோ, டோக்யோவிலோ, சிங்கப்பூரிலோ இல்லை. #விருத்தாசலத்ததில் தான் இருக்கிறது...
கிடைத்தற்கரிய பழைய நூல்களைத் தேடி அலையும் தமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலையமாக விருத்தாசலத்தில் அமைந்திருக்கும் இந்த தமிழ் நூல் காப்பகமே.. ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் இது.
தம் வாழ்நாள் பணியாக இந்த நூலகத்தை நிறுவியுள்ளார் புலவர் பல்லடம் #மாணிக்கம்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலத்திலிருந்தே நூல்களைச் சேமித்து வைத்து இன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளார்.
இந்த நூலகத்தில் மிகப்பழமையான பல நூல்கள் உள்ளன. இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பெற்ற பெப்ரீஷியஸ் அகராதி, சங்க இலக்கியம் தொடங்கி சிற்றிலக்கியங்கள் வரை பல் தொகை நூல்களின் முதல் பதிப்புகள், தொல்காப்பியம் முதல் பதிப்பு, கம்பராமாயணத்தின் பத்துக்கு மேற்பட்ட பதிப்புகள் எனப் பல முதல் பதிப்பு நூல்கள் அமைந்திருப்பது தமிழ் நூல் காப்பகத்தின் தனிச்சிறப்பு. திருக்குறளின் அத்தனைப் பதிப்புகளோடு திருக்குறள் தொடர்பான 1500 க்கும் மேற்பட்ட நூல்களும் இங்கு உள்ளன.
கம்பன், இளங்கோ, பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகளின் பல்வேறு பதிப்புகளும் அவை பற்றிய அனைத்து ஆய்வு நூல்களின் தொகுப்பும் உள்ளன.
நான்கு வேதங்கள், உபநிடதங்கள், ஆங்கில, தமிழ்க் கலைக்களஞ்சியங்கள், பல்கலைக் கழகங்களின் வெளியீடுகள், சமைய நூல்கள், சித்தாந்த சாத்திரம், பன்னிரு திருமுறை, நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் எனப் பல பரிமாணங்களில் நூல்கள் வகைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மறைமலை அடிகள், தெ.பொ.மீ., வையாபுரி, மு.வ.,பாவாணர், ந.சி.கந்தையா, முதலிய ஆய்வு முதல்வர்களின் நுட்பமான ஆய்வு நூல்கள், காந்தியடிகள், காரல்மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார், அண்ணா முதலிய சமுதாய சிந்தனையாளர்களின் அரிய நூல்தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன.
ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வேடுகள் உலகின் தலை சிறந்த திரைப்படங்களின் குறுந்தகடுகள் இசைக் குறுந்தகடுகள் எனப் பல அரிய குறுந்தகடுகளும் அமைந்திருப்பது நூலகத்தின் கூடுதல் சிறப்பு.
தரைத் தளத்தில் நூலகமும் மேல் தளத்தில் கூட்டம் நடத்துவதற்கான அரங்கும் ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்வதற்கான அறைகளும் அமைந்த கலை நயம் மிக்க கட்டடமாகத் திகழ்கிறது இது.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதன்மைக் கட்டடத்தின் பெரிய தூண்களும், நேப்பாள மன்னர் அரண்மனையை நினைவூட்டும் மேல் முகப்பும் என, தன்னைக் கவர்ந்த வடிவமைப்புகளை பழனிவேல் என்ற பொறியாளரின் உதவியோடு வடிவமைத்துள்ளார் புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்கள்.
நூலகத்திற்கான தனி கட்டிடத்தை 50 இலட்ச ரூபாய் செலவில் 2000ஆம் ஆண்டில் கட்டி முடித்ததோடு நூலகத்தின் முன்புறம் கண்ணைக் கவரும் அழகிய பூங்காவையும் கலை நுணுக்கத்தோடு உருவாகி வைத்துள்ளார். இவரது முயற்சியைப் பாராட்டி பொள்ளாச்சி மகாலிங்கம், பதிப்புச்செம்மல் மெய்யப்பன், பொற்கோ, முனைவர் சுந்தரமூர்த்தி, க.ப.அறவாணன், கவிஞர் புரட்சிதாசன், த.பழமலை, க்ரியா ராமகிருஷ்ணன், விடியல் சிவா, ஆகியோர் தங்கள் சேகரிப்பிலிருந்து பல நூல்களை கொடையளித்துள்ளனர்.
பல்லடம் மாணிக்கம் அவர்கள், நிறங்கள் என்ற கலை இலக்கிய அமைப்பை ஏற்படுத்தி பல நூல்களை வெளியிட்டுள்ளார். வள்ளுவம் என்ற இதழை நடத்தியுள்ளார். 24 இதழ்களோடு அது நின்று போனாலும் இலக்கிய இதழ்களில் குறிப்பிடத்தகுந்ததாகும்.
தமிழுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள பல்லடம் மாணிக்கம் தமிழைக் காக்க வேண்டுமென்றால் தமிழ் நூல்களைக் காக்க வேண்டும், அவை தமிழறிஞர்களுக்குப் பயன்பட வேண்டும், அதன் மூலம் தமிழ் வளர்க்கவேண்டும் என்கிறார்.
பிரபஞ்சன், சிவகாமி, திலகவதி ஆகிய எழுத்தாளர்களுடனான இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சிகளும், பெண்கள் இலக்கியச் சந்திப்பு-2007 ஆகிய இலக்கிய நிகழ்வுகளும் தமிழ்நூல் காப்பகத்தில் தான் நடைபெற்றன. எல்லாவற்றுக்கும் மேலாக ஆசியாவிலேயே பெரிய தனிநபர் நூலகமும் இந்தத் தமிழ்நூல் காப்பகம் தான்.
thanks to perplexity. i found my inspirational childhood movie which i saw in theatre with our whole school. கிராமத்துக்கு வர்ற பணக்காரச் சிறுமி. அவங்க வீட்டாளுங்க open air ல பெயிண்ட் பண்ணுவாங்க. அவளுக்கும், அந்த ஊர்ப் பையனுக்கும் ஒரு நட்பு. அந்தப் பையன் , இதைப் பார்த்து படம் வரைய, பெயிண்டிங் பண்ணக் கத்துப்பான். கொஞ்சநாள் கழிச்சு, அந்தச் சிறுமி ஃபேமிலி அவங்க ஊருக்குப் போயிடும். அந்தப் பொண்ணோட கம்யூனிகேட் பண்ணமுடியாம இருப்பான் அந்தப் பையன். அப்புறம் சில பெயிண்டிங்ஸ் பண்ணி, அதை ஒரு சின்னப் பெட்டில போட்டு கங்கா நதில விட்ருவான். அது அந்தச் சின்னப்பொண்ணோட கைகள்ல எப்டிச் சேரும்ன்றதுதான் கதை.
என்னோட சின்னவயசுல , plein air painting with easal and brushes was a big fantasy. with tat, painting box reaches the girl through the rivers - ppa.... இன்னும் காட்சிகள் கண்ணுல இருக்கு.
இப்ப நான் இவ்வளவு ஸ்கெட்ச்சிங் பண்ணிட்டு இருக்கதுக்கு, என்னை அறியாம விழுந்த விதைதான் இந்தப்படம்.
உங்க வீட்டுக் குழந்தைகளோட பாருங்க. நான் இன்னிக்கு வெண்ணிலாவோட பாக்க உக்காரணும்..
கடந்த சில வருடங்களாத் தேடிட்டே இருப்பேன். பேரு, எதுவுமே தெரியாது. இன்னிக்குத்தான் கதையோட ப்லாட் கொடுத்து, அது children film society of india productionநு தெரிஞ்சிக்கிட்டேன். 'Jawab Aayeaga' movie name. available in youtube. link. https://t.co/59ni6ZaeSC
📚 ஒரு வாரக் கடைசியில் புத்தகங்களை அடுக்கும்போது, கண்ணில் பட்ட 'விவேக சிந்தாமணி' என்னும் குட்டி நூலை எடுத்துப் படித்தேன்.
இதில் வரும் ‘தண்டாமரையின் உடன் பிறந்தும் தண்டேன் நுகரா மண்டூகம்’ பாட்டு எங்களுக்கு மனப்பாடச் செய்யுளாக இருந்த காலத்திலிருந்தே பிடிக்கும். (குளிர்ந்த தாமரையின் கூடவே குளத்தில் பிறக்கும் தவளை அதன் தேனை உண்ணுவது இல்லை; ஆனால் எங்கேயோ இருக்கும் வண்டு இதைத் தேடி வருகிறது. கற்றவரைக் கற்றவர் தேடி வருவார், பக்கத்தில் இருக்கும் மண்டுக்களுக்கு இவர்களின் அருமை தெரியாது).
புத்தகத்தை மொத்தமாகப் படிக்கும்போது குப்பையே அதிகம் என்பதை உணர முடிந்தது. எக்கச்சக்கமாக ‘பெண்ணுக்குப் பேயே மேல்’ மாதிரியான பாடல்கள். இடைக்காலச் சடையர்களின் கசடு. 🗑️
ஆனாலும் சில முத்துகள் உண்டு. இந்த முறை என்னைக் கவர்ந்தவை இவை:
1️⃣
"வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்
தானொரு நெறிசொலத் தாண்டிப் பிய்த்திடும்
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனருக்கு உரைத்திடில் இடர்அது ஆகுமே."
(மழையில் நனையும் குரங்குக்கு அறிவுரை சொன்ன தூக்கணாங்குருவிக் கூட்டை குரங்கு பிய்த்துப் போட்டுவிடும். மூடருக்கு நல்ல விஷயங்களைச் சொல்லுவதும் துன்பத்தையே உண்டாக்கும். துஷ்டரைக் கண்டால் தூர விலகு.)
2️⃣
"குரங்கு நின்று கூத்தாடிய கோலத்தைக் கண்டு
அரங்கு முன்பு நாய் ஆடிக் கொண்டாடியது போல்
கரங்கள் நீட்டியே பேசிய கசடரைக் கண்டு
சிரங்கள் ஆட்டியே மெச்சிடும் அறிவிலார் செய்கை"
(பேசும் விஷயத்தைப் பற்றிய தெளிவு எதுவும் இல்லாமல் பேசும் முறையை மட்டும் சிலாகிப்பவர்களைப் பற்றிச் சொல்லியிருப்பது.)
இதெல்லாம் ரொம்ப காலமாக இருக்கும் பிரச்சனைகள் போல. 🤷♂️
#TamilLiterature #BookCleaning #Wisdom
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
பள்ளியில் படிக்கும் மாணவர்களை IIT & IIM போன்ற புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர தயார் செய்வது எப்படி?
🎯 School Student → IIT / IIM Roadmap
🏫 8th – 9th Standard (Foundation Stage)
இப்போது என்ன செய்ய வேண்டும்?
• Maths & Science basics strong ஆக்குங்கள்
• NCERT புத்தகங்கள் முழுமையாக படிக்கவும்
• Daily reading habit (English + Tamil)
• Mental maths practice
👉 இந்த stage-ல pressure வேண்டாம், concept clarity முக்கியம்
🏫 10th Standard (Decision Point)
🎯 10th முடிந்ததும் Stream தேர்வு
✔️ IIT Goal என்றால்:
• Maths + Physics + Chemistry (MPC) கட்டாயம்
✔️ IIM Goal என்றால்:
• Any stream (பாடப்பிரிவுகள்) OK (Science / Commerce / Arts)
• ஆனால் Maths basics & English strong இருக்க வேண்டும்
👉 IIT & IIM இரண்டிலும் சேர
Science (MPC - Maths/Physics/Chemistry ) safest option
🧪 11th – 12th (Critical Years)
🏛️ IIT Path (Engineering)
🎓 Exams:
• JEE Main
• JEE Advanced
படிக்க வேண்டியது:
• NCERT – Bible மாதிரி
• Concepts > Rote learning
• Daily problem practice
Time split:
• School syllabus + JEE preparation parallel
👉 11th waste ஆகிடக்கூடாது – IIT success 70% அங்கேயே fix ஆகும்
🏛️ IIM Path (Management)
🎓 Exams after 12th:
• IPMAT / JIPMAT (5 year Integrated MBA)
Subjects:
• Quantitative Aptitude (Maths)
• Verbal Ability (English)
• Logical Reasoning
Extra skills:
• Reading newspapers
• Public speaking
• Debates / Essay writing
👉 Engineer ஆகாமலே IIM போகும் golden chance 🔑
🧠 Daily Habits (Both IIT & IIM studentsக்கு common)
• 📖 1–2 hours self-study
• 📰 Newspaper reading (The Hindu / Indian Express)
• 🧮 Mental maths
• 🗣️ English speaking practice
• 📝 Weekly mock tests
🏆 Special Advantages (India)
• Reservation (SC / ST / OBC / EWS)
• Girls quota
• Free govt coaching schemes
• Scholarships
👉 Correct info தெரிந்தால் middle-class studentsக்கும் IIT/IIM possible
Best Path (உங்கள் விருப்பம்)
Maths + Science —> IIT
Business / Leadership —> IIM
Confused —> Science → Keep both options
இந்த பதிவு IIT/IIM நிறுவனங்களில் படிக்க உள்ள வாயப்புகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் பகிர்கிறோம். மேலும் தகவலுக்கு கலவியாளர்கள்/ஆசிரியர்களுடன் ஆலோசனை பெறலாம்.
முன்னதாக திட்டமிட்டு தொடர்ந்து சரியாக தயார்படுத்தினால் வெற்றி நிச்சயம்.
இது போன்ற பயனுள்ள தகவல்களை @KHByte ஐடியை பாலோவ் செய்து கொள்ளுங்கள்.
******************
கேன்சர் போன்ற உயிர்காக்கும் ஸ்பெஷாலிட்டி சிகிச்சைக்கான மருந்துகளை ஆன்லைனில் குறைந்த விலையில் பெற 👉https://t.co/NGrDtiJTm6 இணையதளத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
*******************
#KHbyte #Education #HigherEducation
ஆட்டிசம் குழந்தைகள் பள்ளியில் புரிதலில்லாத ஆசிரியர்களிடம் படும் சிரமம்.
என் பெரிய பையனுக்கு ஆட்டிசம் பட் மேனேஜபிள். நல்ல IQ இருப்பதால் படித்து விடுவான். ஆனால் சில க்ளாஸ்ரூம் பிகேவியர் உண்டு. போகஸ் வைப்பது, ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பது, சாப்பிடுவது, நோட்ஸ் எழுதுவதில் சிக்கல் உண்டு.
CBSE பள்ளியில் ப்ரீ கேஜி முதல் படித்து வருகிறான். தற்சமயம் 5ம் வகுப்பு.
ஒவ்வொரு வருடம் வகுப்பு மாறும்போது ஆசிரியர்களிடம் அவனைப் பற்றி சொல்லும்போது அவர்களுக்கு ஆட்டிசம், ADHD இதெல்லாம் புதிதாய் கேள்விப் படுகிறார்கள். அவர்களைப் பொறுத்த வரை படிக்கிற , படிக்காத , சேட்டை பசங்க இந்தளவில்தான் வகைப் படுத்துறாங்க. பிகேவியர் , மன நலன் சார்ந்து குழந்தைகள் வகைப்படுத்தத் தெரியவில்லை. அந்த ஏரியாவே எக்ஸ்போசர் இல்லை.
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மாதிரி தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் தொடர்ந்து ஆசிரியப்பணியிலும் ,ஒரே பள்ளியிலும் இருப்பதில்லை. ஒரு வருடத்திலேயே ஒரு பாடத்துக்கு 2 ஆசிரியர்கள் மாறி வரும் சூழல் இருக்கிறது.
என் பையன் தவிர்த்து அதே பள்ளியில் அவன் வகுப்பிலேயே 2 பசங்க ஹைபர் ஆக்டிவ் வகையில் இருக்காங்க. பெற்றோர்களுக்கும் அவர்களைப் பற்றிய புரிதல் இல்லாமல் படிக்கவில்லை என்ற வகையிலேயே எடுத்துட்டுப் போறாங்க.
அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய இடத்தில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் ஆட்டிசம் பற்றித் தெரியவில்லை. இதனாலே அந்தக் குழந்தைகள் சரியான நேரத்தில் சரியான கவனமின்மையால் பின் தங்கி போயிடுறாங்க. வளரும்போது கல்லூரி, வேலை என்று சமூகச் சிக்கலில் மாட்டுறாங்க.
கிளினிக்கல் சைக்காலஜி துறை வல்லுநர்கள் கொண்டு வருடம் 2-3 முறை வொர்க்ஷாப் அரசு, தனியார் என்று எல்லா ஆசிரியர்களுக்கும் நடத்தச் செய்தால் மாணவர் ஆசிரியர் புரிதல் சரியாகும். சிறப்புக் குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் சரியான வழிகாட்டுதல் கிடைக்கும்.
எனக்குத் தெரிந்த வட்டத்திலேயே 3 குழந்தைகளின் பெற்றோரிடம் என்னால் சொல்லி புரிய வைக்க முடியவில்லை. அவர்கள் குழந்தைகளிடம் இருக்கும் பிரச்சனை பற்றி படித்த பெற்றோர்களுக்கே புரிதல் இல்லை. இந்த இடைவெளியை அரசு ஆசிரியர்கள் மூலம் மட்டுமே சரி பண்ண முடியும்.
ஏற்கனவே தேர்தல் அறிக்கை தளத்திலும் இந்தக் கோரிக்கையை சேர்த்திருக்கிறேன். மீண்டும் உங்கள் பார்வைக்கு இங்கே
@CMOTamilnadu, @Udhaystalin , @KanimozhiDMK , @pudugaiabdulla ,@Anbil_Mahesh , @ptrmadurai , @TRBRajaa, @Dr_Ezhilan, @Govichezhian, @ksivasenapathy, @TamilarasiMLA
#TNDMKElectionmanifesto
உளவியல் மருத்துவப் பேராசிரியர் டாக்டர் ஜி ராமானுஜம் அவர்களின் பதிவு: போதைப் பொருட்கள் மட்டுமல்லாமல் வன்முறைக்கு முக்கிய காரணம் பெற்றோர், நண்பர்கள், பள்ளி வளரும் சூழல், திரைப்படங்கள் போன்றவைகளில் பார்க்கும் முன்மாதிரிகள் ( Role models).
வன்முறையோ, மனம் போன போக்கில் போவதோ , போதைப் பொருட்கள் எடுப்பதோ வீரம் அல்ல மனக்கட்டுப்பாட்டுடன் உந்துதல்களை அடக்கி படித்து, உழைத்து முன்னேறுவதே ஹீரோயிசம் என்பது ஆழமாக அவர்கள் மனதில் பதிய வேண்டும்.
அதே போல் லஞ்சம் வாங்குவது, சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது , விதிமீறல்கள் செய்வது, ஜாதி மதப் பெருமை பேசுவது, கும்பல் மனப்பான்மை போன்றவையும் ஹீரோயிஸம் அல்ல வெறுக்கப் பட வேண்டியவை என்பது இளம் மனங்களில் ஆழமாகப் பதிய வேண்டும்.
இதற்குப் பெற்றோர்கள், ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.
டாக்டர் ஜி ராமானுஜம்
"Linear Algebra"
This is the SECOND BEST book on linear algebra.
~1000 practice problems. Absolutely beginner friendly.
NEVER IGNORE if you are into AI & ML. Available FREE.
இந்த ஆண்டும் முடியப் போகுது. உருப்படிய என்ன பண்ணோம். ஒன்னும் இல்லனு கவலபடக் கூடாதுல...அதனால நாம சில புத்தகங்கள தேடி படிச்சு பெரும பட்டுக்குவோமா....
https://t.co/naW4gPU7zL