கொண்ட அரசியல் கொள்கைல இன விடுதலைக்க்குன்னு இருக்குற கடைசி எங்களின் இருதி ஆயதம் இந்த இனத்திற்கு அரசியல் வழி தான்... வெறி கொண்டு நாங்கள் ஓடிக்கிட்டு இருக்கும்போது குறுக்க மறுக்க நானும் வந்து இங்க அரசியலில் விளையாட்டு காட்டுறேன்னு வந்தா...
நாட்டின் எல்லையில் நின்று மண்ணையும், மக்களையும் பாதுகாத்த இராணுவ வீரர்!
சாதிய இழிவையும், தீண்டாமைக் கொடுமைகளையும் ஒழிக்கப்போராடிய பெருந்தமிழர்!
ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காக இயக்கம் கண்ட பெருந்தகை!
சாதிய தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக மாநாடுகள் நடத்திய புரட்சியாளர்!
நம்முடைய தாத்தா இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவைப் போற்றும் இந்நாளில், வழிவழி வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகள் நாம் தமிழர் என்ற ஓர்மையுடன் ஒன்றுபட்டு, சாதிய ஏற்றத்தாழ்வற்ற சமத்துவச் சமூகம் படைப்போம் என உறுதியேற்போம்!
சமூகநீதிப் போராளி தாத்தா இமானுவேல் சேகரனார் அவர்களுக்குப் பெருமிதத்தோடு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்!
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
'நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்!' மாபெரும் பொதுக்கூட்டம்
நாள் 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: நகர அரங்கம், இராஜவீதி தேர்நிலை திடல், கோயம்புத்தூர்
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
திரள்நிதிப் பங்களிக்க: https://t.co/LoQJOp7stp
நான் இறப்பது நிச்சயம். அப்படி இறந்ததும் வானத்திலிருந்து என் தோழர்களுடன் சேர்ந்து நமது இலட்சியத்திற்காக உழைப்பேன்
தியாக வேள்வியில் 10 ஆம் நாள்
#திலீபன்_மாதம்
இன்று நமக்கு ஏற்பட்டுள்ள இந்த இழி நிலையை நாம் புரிந்துகொள்ளவில்லை என்றால் நாளை நம்முடைய வரலாறு மிக மோசமானதாக இருக்கும்.
மாவீரன் திலீபன்
#தியாகதீபம்_திலீபன்#திலீபன்_மாதம்
மனமும் குணமும் மாறாதது
திராவிடம்.
--------------------
நேற்று
"என் மீனவனை அடித்தால்
இங்கே இருக்கும் உன் மாணவனை திருப்பி அடிப்பேன்" என்று சொன்ன சீமானை சிறையில் அடைத்தார் முத்துவேல் கருணாநிதி.
இன்று
"எட்டு பேர் சுத்து போட்டு கொலை முயற்சியோடு தாக்க வந்த கும்பலை,
தன் உயிர்காக்க திருப்பி தாக்கினேன் " என்ற ஏர்போர்ட் மூர்த்தியை சிறையில்
அடைப்பேன் என்கிறார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
மனமும் குணமும் மாறாதது
திராவிடம்.
அதற்கு தமிழன் ஒன்றுமை பேசினாலே ஆகாது. அப்படியானவர்களை,
எதையாவது சொல்லி போட்டுத் தள்ளும்.
எதையாவது சொல்லி சிறை வைக்கும்.
இவர் நிரபராதி.
ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் தாக்கப்பட்ட போது, ஆடு மேய்ப்பதற்காக டிஜிபி அலுவலகம் முன்பாக கம்பியுடன் சாரி கம்புடன் நின்று கொண்டிருந்த நல்ல மேய்ப்பர் !
புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் அன்பிற்குரிய அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களைக் கைதுசெய்திருக்கும் திமுக அரசின் செயற்பாடு அடாவடித்தனமானது. காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு புகார்கொடுக்கச் சென்ற அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி மீது அதன் வாசலிலேயே வைத்து குண்டர்கள் தாக்குதல் தொடுத்ததும், தனியொரு ஆளாக நின்றவர் தற்காத்துக் கொள்ளவே முயன்றார் என்பதுமான காட்சிகள் காணொளிப்பதிவுகளாக ஊடகங்களில் வெளியானபோதும் பொய்வழக்கைப் புனைந்து, பாதிக்கப்பட்டவர் மீதே வழக்குத் தொடுத்துச் சிறைப்படுத்துவது அதிகார அத்துமீறலின் உச்சம்; வெளிப்படையான பாசிச வெறியாட்டம்! இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிகாரத்திமிரிலும், பதவிப்போதையிலும் ஆட்டம்போடும் ஆட்சியாளர் பெருமக்களே! உங்களுக்கான நாட்கள் எண்ணப்படுகின்றன. உங்கள் அரசும், அதிகாரமும் வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை.
@CMOTamilnadu@mkstalin
@Inbhadoss@PandiGa52935464@kalamani4kovai 2026 தேர்தலின் பிறகு உன் கூத்தாடி பய கட்சி எங்க இருக்குனு கூட தெரியாம போகுற அளவுக்கு தான் இருக்கும் இதான் உங்க நிலைமை எழுதி வைத்துக்கொள்...🥲
@Inbhadoss@PandiGa52935464@kalamani4kovai ஏதாவது புதுசா சொல்லி பழகு😒
இந்த கதையெல்லாம் நாங்கள் இயக்கத்தில் இருந்து கட்சியாக மாற்றி இத்தனை வருடமாக கேட்டு கேட்டு எங்களுக்கு புளிச்சு போச்சு இதுவரை எங்கள் வாக்குகள் கொள்கைக்காக,விழுந்தவை, அது எங்கும் எப்போதும் போகாது, குறையாது இனி எவனும் கூத்தாடி பயனு அரசியல் வரவே முடியாது...
தனிப்பட்ட ஒரு முதலாளியின் வளர்ச்சியை ஒரு நாட்டின் வளர்ச்சியாக எப்படி கட்டமைக்கிறீர்கள்
எந்த தொழிற்சாலை அரிசி பொறுப்பை உற்பத்தி செய்யும்
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
@Seeman4TN
அட திருட்டுத்***** சிறுத்தை குட்டிஸ்...அண்ணன் @airportmoorthy அவர்களுக்கு எதிராக உங்கள் கூலிப்படை நடத்திய கொலைமுயற்சி தாக்குதல் எல்லாம் எல்லா ஊடகத்திலும் காணொளி ஆதரமாக செய்தி ஆகிடுச்சுடா..
திராவிடியா கூட்டத்தையே மிஞ்சும் அளவுக்கு ட்ரைனிங்க கொடுத்து வச்சுஇருக்க💦
@thirumaofficial
”ஏர்போர்ட் மூர்த்தி தான் வி.சி.க.வினரை தாக்கினார் என பேட்டியளித்த வி.சி.க. வழக்கறிஞரிடம், வி.சி.க.வினர் தான் ஏர்போர்ட் மூர்த்தியை தாக்கியது போல் வீடியோவில் தெரிவதாக செய்தியாளர் கேள்வி எழுப்பியதும், நீ யார்..? உனக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்று ஆவேசமாக பேசிய வி.சி.க. வழக்கறிஞர்களால் பரபரப்பு
#Chennai | #VCK | #Thirumavalavan | #Youtuber | #PolimerNews
புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர், பெருமதிப்பிற்குரிய அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநர் அலுவலக வாசலியே நடைபெற்ற இத்தாக்குதல், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிவிற்கான மற்றுமொரு சான்றாகும். அண்ணன் ஏர்ப்போர்ட் மூர்த்தி அவர்கள் மீதான தாக்குதலை தடுக்காது அங்குள்ள காவலர்கள் வேடிக்கைப்பார்த்தனர் என்பது கொடுமையின் உச்சம். இதன்மூலம் காவல்துறை கலவரம் நடைபெறுவதையும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவதையும் விரும்புகிறதா? அதற்கு துணைபோகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
கருத்தினை கருத்தால் எதிர்கொள்ள துணிவற்ற கோழைகளாலேயே இக்கொடுந் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.
விமர்சனங்களை எதிர்கொள்ள துணிவற்று வன்முறைத்தாக்குதல் தொடுப்பதுதான் அரசியல் அறமா?
பகுஜன் சமாஜ் கட்சியின்
மாநிலத்தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலை முதல் நேற்றைக்கு ஆடுதுறையில் பாமக மாநில நிர்வாகி ஐயா ம.க.ஸ்டாலின் அவர்களின் மீது வெடிகுண்டு வீசி கொலைவெறித் தாக்குதல் நடைபெற்றதுவரை தமிழ்நாட்டில் மக்கள் பணியாற்றும் அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பில்லாத கொடுஞ்சூழல்
நிலவுகிறது. அதன் உச்சமாக இன்றைக்கு தலைநகரில், தமிழ்நாடு காவல்துறையின் அதி உயர் அலுவலக வாசலில், காவல்துறையினர் கண் முன்னேயே புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பொதுவாழ்வில் ஈடுபடும் மக்கள் பிரதிகளுக்கே உரிய பாதுகாப்பில்லாத திமுக ஆட்சியில் பாமர மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்? திமுக ஆட்சியில் அரசியல் தலைவர்கள், அப்பாவி பொதுமக்கள் வரை நாள்தோறும் நிகழும் படுகொலைகள் தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா? அல்லது சமூகவிரோதிகளின் ஆட்சியா ? என்ற ஐயத்தை எழுப்புகிறது. சட்டம் ஒழுங்கை சீரமைக்க திமுக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்பதுதான் நாள்தோறும் நடைபெறும் கொடுங்குற்றங்களுக்கு அடிப்படைக் காரணமாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக அண்ணன் ஏர்ப்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தியவர்களை விரைந்து கைது செய்து கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@airportmoorthy
திராவிடம், தலித்தியம் என்று இனியும் போலி அரசியல் பேசி தமிழர்களை ஏமாற்ற முடியாத காரணத்தினால். உன் கூலிப்படை சிறுத்தை குட்டிகளை வைத்து தமிழனுக்கு எதிராக,நேரடியாக சில்லுண்டி வேலையும் பார்க்க அரம்பிச்சுட்டயா? இனி நீ வாங்குற நாலு சீட்டிலும் நக்கிட்டு தான் போகணும்...@thirumaofficial
பாமக மாநில நிர்வாகி ஐயா ம.க.ஸ்டாலின் அவர்கள் மீது வெடிகுண்டு வீசி கொலை முயற்சி; சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சம்!
@CMOTamilnadu@mkstalin
தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில்,
பாமக மாநில நிர்வாகியும், ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ஐயா ம.க.ஸ்டாலின் அவர்கள் மீது, ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் நுழைந்த முகமூடி அணிந்த கும்பல், நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்ய முயன்ற நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது;
திமுக ஆட்சியில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் அடுத்தடுத்து படுகொலை செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது வன்மையான கண்டனத்துக்குரியது.
கடந்த 2024 ஜூலை மாதம் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2024 ஆம் ஆண்டு மே மாதம் காங்கிரசு கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே ஜெயக்குமாரும்,
ஜூலை மாதம் 3 ஆம் நாள் அதிமுக கொண்டாலம்பட்டி பகுதிச்செயலாளர் சண்முகமும், ஜூலை 16 ஆம் நாள் நாம் தமிழர் கட்சி மதுரை வடக்கு தொகுதி துணைச்செயலாளர் சி.பாலசுப்ரமணியமும்,
ஜூலை 27 ஆம் தேதி சிவகங்கை மாவட்ட பாஜக கூட்டுறவு அணிச் செயலாளர் செல்வகுமாரும்
வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இவையெல்லாம் கடந்த 2024 முதல் ஓராண்டிற்குள் நடந்த படுகொலைகள் மட்டுமே. நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரசு, கம்யூனிஸ்ட், விசிக பிரமுகர்களும் தொடர்ச்சியாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த அளவிற்கு சட்டம் ஒழுங்கு மிக மோசமாக சீரழிந்துள்ளது.
பொதுவாழ்வில் ஈடுபடும் மக்கள் பிரதிகளுக்கே உரிய பாதுகாப்பில்லாத திமுக ஆட்சியில் பாமர மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்? திமுக ஆட்சியில் நேர்மையான அரசு அதிகாரிகள் முதல் அரசியல் தலைவர்கள், அப்பாவி பொதுமக்கள் வரை நாள்தோறும் நிகழும் படுகொலைகள் தமிழ்நாட்டில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? அல்லது சமூகவிரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா? என்ற ஐயத்தை எழுப்புகிறது.
கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியவில்லை. கஞ்சா உள்ளிட்ட
போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பட்டப்பகலில் நடைபெறும் படுகொலைகளை தடுக்க முடியவில்லை. மக்கள் சாலைகளில் நிம்மதியாக நடமாடக்கூட முடியவில்லை. இதெற்கெல்லாம் காவல்துறையை தமது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்கள் என்ன பதில் கூறப்போகிறார்? இதுதான் இந்தியாவே திரும்பிப்பார்க்கும் திராவிட மாடலா? இதுதான் முதலமைச்சர் கூறிய எந்த கொம்பனும் குறைசொல்ல முடியாத ஆட்சியா? என்ற கேள்விகள் ஒவ்வொரு சாமானியன் மனதிலும் எழுகிறது.
ஆகவே, பாமக மாநில நிர்வாகி ஐயா ம.க.ஸ்டாலின் அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற கும்பலை விரைந்து கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள் முதல் அப்பாவி பொதுமக்கள் வரை படுகொலை செய்யப்படும் கொடூரங்கள் தொடராது தடுத்திட, இனியாவது காவல்துறையை முடுக்கிவிட்டு கடும் நடவடிக்கை எடுத்து, சட்டம் ஒழுங்கை விரைந்து சீர்செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி